கம்ப்யூட்டர் மவுஸை பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் மட்டும்தான் விமர்சனம் செய்ய வேண்டும்”
சொன்னவர், சுஹாசனி.
நடிகை, இயக்குனர், காமிராஉமன், பிலிம் இன்ஸ்ட்டியூட் அட்மிஷன்
இதெல்லாம் அடைய காரணமாக இருந்த அடையாளமான
கமல் அண்ணன் பெண்,
சாருஹாசன் மகள்
மற்றும் இன்றைய இண்டநேஷனல் அடையாளம் ஆன,
மணிரத்னம் பெண்டாட்டி.
சொன்ன இடம், அவரது கணவரும்,
தமிழ் சினிமாவின் GOD FATHER no..இல்லை “நாயகன்” என அவர் தம் குழுவால் சொல்லப்படும் MANI”RAT”NAM மணிரத்னம் பட விழாவில்.
இதை படித்து விட்டு , எங்க வாய் சும்மா இருந்தாலும், கை சும்மா இருக்க மாட்டேன் என்குது,
நீங்கள் எப்படி தயாரிக்கும் வலு இருப்பதால் , சினிமா எடுப்பது நிறுத்தாமல் சினிமா எடுத்துத் தள்ளுவதாலும்,
மார்கெட்டிங் தெரிந்ததால் கல்லா கட்டுவதாலும்,
அதிலும், GOD FATHER படத்தை காப்பி அடித்து , TIMES 100 Best Listல்
”நாயகன்”, இடம் பெறச் செய்யும் தந்திரம் தெரிந்ததாலும்
தொடர்ந்து படம் எடுப்பது போல்,
மவுஸ் பிடிக்கத் தெரிந்தவன் விமர்சனம் பண்ணுவது,
அந்த மவுஸ் பிடிக்கத் தெரிந்ததால் தான், மேட்டுக்குடு நுனி நாக்கிற்கு சொந்தமாயிருந்த
ரோஷமன், ஃபெலினி, அக்ரா குருஷேவா, குருதத், பை சைக்கிள் தீவ்ஸ் சில்ரென் ஆப் ஹெவன், மஜ்ஜித் மஜ்ஜித் என்பதெல்லாம் எங்களுக்கும் பரிச்சயமானது.
அந்த காலத்தில் வேண்டுமானால் நாயகன் வந்தவுடன் வாய் பிளந்து ஆஸ்கார் உண்டுடா என்று கேனப்பய கூட்டமாய் ஃபீல் பண்ணியிருக்கலாம்,
ஆனால் இன்று,
உண்ட சோறு செறிக்காமல் கலைகளோ , விமர்சனப் படைப்புகளோ படைப்பவர்கள் அல்ல இவர்கள்,
இவர்கள், அக்கினி குஞ்சுகள்.
எந்த கமர்ஷியல் கல்லா கட்டும் எதிர்பார்ப்பும் இல்லா கனன்று குமையும் உள்ளங்கள்.
500 கோடி சொத்துக்களுடன், “டாட், மாம், ஐ வாண்ட் டு டரய் பியீங் எ கம்யூனிஸ்ட்” எனும் உங்கள் வாரிசு ரகமல்ல…
ஒரு வேளை சோறின்றி, வாய்ச் சொல் வீரர்களால் புரட்சி ஓங்குக என்று அழைத்துச் செல்லப்பட்டு , திக்குத் தெரியா காட்டில், தங்களை பஸ்மம் ஆக்கிக் கொள்ளும் அனாதைகளை மீட்டெடுக்க உண்மைக் குரல் கொடுப்பவர்கள்.
இவர்களுக்கு தங்கள் எண்ணங்களின் உண்மையே நண்பர்கள்.
யாரோடும் பசப்பு சிநேகமிருக்காது
அதனால்,
ஊரோடு ஒன்றி வாழாமல் போனாலும்
ஊருக்காக குரல் கொடுப்பவர்கள்.
அவர்களுக்கு மவுஸ் பிடிக்கத் தெரிந்ததால் தான்,
காசே முக்கியம் என்று சினிமாவை ரத்ன வியாபார கூடமாக பார்ப்பவர்களுக்கு பிடிக்காமல் போகிறது.
ஒரு வேளை MANI- ”RAT” – NAM என்பதால் தானோ இந்த மவுஸ் பிடிப்பவர்களிடம் மாட்டிக் கொள்கிறார், உங்க கணவர்.?
இப்ப வந்திருக்கும் படம் கூட,
பத்து ஆண்டுகள் முன் வந்த எஸ் ஜெ சூர்யாவின் அன்பே ஆருயிரே கரு தானே.. அதான் திருமணம் செய்யாமல் கூடி வாழ்தல்.
அவர் சொன்னதை நீங்க காக் டெயில் பாணியில் ஹை சொஸைட்டி கலாச்சாரத்துடன் சொல்லியிருக்கிறீர்கள்.
அதுவும் அல்ஜிமீர் ஜோடி என்ன சுயசிந்தனையா?
இளம் ஜோடி, வயதோக ஜோடி கம்பரீசனிலேயே நீங்கள் அவுட்.
ஒரே வய்து நிலையில், ஒத்த விஷயத்தில் மாற்றுக் கருத்து தானே காண்பித்தல் கடினம்.
மவுஸூக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டியிருக்கிறோம்
இல்லாவிட்டால் உங்க மவுஸூ தகுதிக்கு மீறி அறிவு ஜீவி ரகமாக இருந்திருக்கும்.
World top classics
World best film
100 best films of india
Films of Akira
Feleni
Anrew Robelov
An occurance in owl creek
Confession
Godard
Bergman
என்றெல்லாம் பிரவுஸ் பண்ண, கீ போர்டும், மவுஸும் தானே உதவுகிறது.
அதிலும் தவறிருந்தால் அதுவே சரி செய்து சரியானதை தருகிறது.
அதனால் தானே எங்கள் தரம் உயர்கிறது.
அதில் உங்கள் தரம் குறையும் என்றால் நாங்கள் என்ன செய்வது,
அப்படித் தடவிப் பார்த்த பின்னரும்,
சுப்ரமணியபுரம், அழகி, நான் கடவுள், பருத்தி வீரன், காதல் கொண்டேன், ஆரண்யகாண்டம், பீட்சா, விண்ணைத் தாண்டி வருவாயா, போன்ற படங்களை கொண்டாடுகிறோமே…
என்ன போலிகளை கண்டு இப்போதெல்லாம் ஏமாறுவது மிகக் குறைந்து விட்டது.
அதுவும் போக
நல்ல படங்களை தான் ரசிக்க முடியும்,
ஒரு நல்ல படம் தந்தார் என்பதற்காக அவர்தம் பிற கழிவுகளை கொண்டாட முடியுமா என்ன..
காசு கொடுத்தாலும் கள்ளத் தனமாக பார்த்தாலும் ரசிகன் ரசிகன் தான்,
அவன் விமர்சிப்பான்.
உலக சினிமாவை பூனே பிலிம் இன்ஸ்ட்டியூட் நாயர் போட்டுக் காண்பிக்க நீங்கள் சிலர் பார்த்தீர்கள்,
பின், தனி புரஜக்ட்டர், டெக், டிவிடி என்று இருந்தது..
இப்போது தனியாக மவுஸ் இருந்தது போய், இரு கட்டைவிரலும் பின் சில விரலும் மவுஸ் போல் ஸ்மார்ட் போனில் விளையாடும் காலம்,
இதில் தரம் தனித்திருந்தால், மரியாதை கௌரவத்திற்கு தவம் இருக்க வேண்டியதில்லை… யாரும்.
கடமையை கருத்தாய்ச் செய்தால் போதும்,
காலம் காலடியில்…
என்ன,
மன்னனின் காலடி எனினும்,
பிச்சைகாரன் காலடி எனினும்,
காலம் காலடியில் நிற்காது –
நழுவித்தான் செல்லும்..
அதில் காவியங்கள் கசடு தாண்டி நிற்கும்.
பாரதி தான் வாழ்ந்த காலத்தில் பத்து சினிமா பட்டு எழுதி தன்னை கவிகளின் அரசன் என்று பட்டம் சூட்டிக் கொண்டதில்லை..
ஆனால் காலம் கடந்தும் கொண்டாடப்படுகிறான்.
நீங்கள் போய் வந்த அந்த பிலிம் இண்ஸ்ட்டியூட்டில் பயின்ற ஆபாவாணனின் பாடல்,
”தோல்வி நிலையென நினைத்தால்..” –ஒரு இனத்திற்கே பூபாளமாக இருக்கிறது..
கரப்பான் பூச்சி பாடல்களாய் அவன் எழுதித் தள்ளவில்லை..
கவிஞர்களின் அரசன், சக்ரவர்த்தி என்றெல்லாம் இறுமாப்பு கொண்டதில்லை.
ஆனால், அப்பாடல் சூரிய கீற்றுடன் கலந்தல்லவா ஒரு இனத்தின் விடியலுக்கான நம்பிக்கையுடன் புது நாள் மலர்ந்ததைச் சொல்கிறது.
எத்துனை படங்கள், எத்துனை இயக்குனர்கள், எத்தனை விழாக்காள்
ஆனால் நினறதென்ன…?
மணிரத்னம் ஒரு வித்தையும் வியாபாரமும் தெரிந்த நபர்.
மௌனராகம், அஞ்சலி, போன்ற தரமான படங்களையும்,
அலைபாயுதே போன்ற கமர்சியல் ஹிட் காதல் கதையும் தந்தவர்.
அலைபாயுதே படத்திற்க்கு, பிரபல அன்னக்கிளி ஆர்.செல்வராஜை நீங்கள் பயன்படுத்திய காரணத்தை தமிழ் கூறும் நல் உலகிற்குச் சொல்லலாமே..
ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற முயற்சி செய்ததுண்டா,
மவுஸ்ஸை கண்டு பயப்படும் நீங்கள்?
பேச்சால் கடித்துக் குதறினாலும் மிஷ்கின் கொண்டாடப்பட வேண்டிய கலைஞன் தானே..
இந்த அளவிற்கு உங்களின் படம் அலசப்படிருக்கிறதா.?
உங்கள் கூற்றுப்படி சினிமா கற்றவர்கள் தான் சினிமா எடுக்க வேண்டும் என்றால்,
தமிழ் சினிமாவை மீட்டெடுத்த பாரதிராஜா, இளையராஜா, ஆர்,செல்வராஜ், கங்கை அமரன் எல்லாம் சினிமாவே எடுத்திருக்க முடியாது…
துக்ளக்கில் போஸ்ட் மார்ட்டம், ஹலோ டாக்டர் என சினிமா விமர்சனம் எழுதித் தள்ளிய மகேந்திரனால் அடையாளம் காணப்பட்டு அவார்ட் வாங்கியவர் நீங்கள். அவர் எந்த இன்ஸ்ட்டியூட்டிலும் பயிலவில்லை.
ஒரு இனம் மரணத்தை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கன்னத்தில் முத்தமிட்டால் என்று வலி தெரியாமல் எடுத்தது பற்றி சொல்லக் கூடாதா?
அமிரோச் பரஸ் எனும் படத்தை காப்பி அடித்து படமெடுத்து மணியான இயக்குனர் என்று மார்தட்டினால்,
இந்த பாழாய் போன் மவுஸ் தானே உங்களைக் காட்டிக் கொடுத்தது.
நரைகளுக்கு டை அடித்து , உடல் எடை குறைத்து இளமையாய் ஃபீல் பண்ணி படுத்தாமல்,
வயதில் வரும் அனுபவித்தில் ஞானத்தில் படமெடுக்கலாமே.
சத்யஜிதெரேயுடன் காபி சாப்பிட வேண்டும் என்று டிவியில் சொல்லும் மணிரத்னம்,
காப்பி அடித்தாவது அவர் போல் ஒரு படம் தரலாமே..
இலக்கியங்களா இல்லை நிகழ்வுகளா இங்கில்லை?
எஸ்.ரா, ஜெயமோகன், வண்ணநிலவன், கி.ரா , என எத்தனை எத்தனை எழுத்தாளர்கள். பாலகுமாரன் கூட வசனத்திற்கு தானே வ்ந்தார். அவரின் மெர்க்குரி பூக்கள் எடுக்கலாமே..?
தமிழக்த்தின் ஒவ்வொரு குடிமகன் தலையெழுத்திலும் கையெழுத்து போட்ட கலைஞர் – எம்ஜிஆர் உறவுகளின் நிகழ்வுகளை நீங்கள் எப்படி எடுத்தீர்கள்,
என்ன சாப்பிட்டாச்சா , எனும் ஷாட் எம் ஜீ ஆரையும்
இன்னொரு பெண் காதல், கருணாநிதியையும் என்று தானே குறீட்ட்டு படம் எடுத்தீர்கள்.
அதனால், ஒரு இயக்கமே வலம் இடம் என்று பிய்த்து பீராயாப்பட்டது தொட முடியவில்லையே?
பம்பாயில், நீங்கள் அடித்த பாசாங்கு சம்த்துவம், காங்கிரஸிற்கே ஜல்லி அடிக்கும் கலை.
அதே சமயம், உங்களின் மௌனராகம், அஞ்சலி பாராட்டத்தானே செய்தோம்.
விமர்சனம் பண்ணுபவன் ஒன்றும் வேலை வெட்டி இல்லாதவன் இல்லை.
ஒரு கார்த்திக் மகன், ராதா மகள், மம்முட்டி மகன், என்று அறிமுகங்கள் நடத்தும் உங்களால் , சாதாரண சாமன்ய கலை ஆர்வலர்களை உருவாக்க முடிகிறதா?
வசதியும் வியாபார தந்திரம் தெரிந்ததால் தானே நீங்கள் படம் எடுக்கிறீர்கள்.
அல்ஜிமீர், டிம்னிச்யா படங்களான,
STILL ALICE
இல்லை வயோதிக பரஸ்பர காதல் பற்றியான AMOUR படம் என சுடவில்லையா?
ஒரு போஸ்டருக்கு கூட , சுடப்படுகிறது, உங்கள் கும்பலால்.
மாறி மாறி பாருங்கள் , எது உங்கள் படம் எனும் குழப்பம் உங்களுக்கே வரும்.
முனி படத்தில் ராகவா லாரன்ஸ் பேய் சொல்வது போல்,
“பேய்க்கும் பேய்க்கும் சண்டை, அதை ஊரெல்லாம் வேடிக்கைப் பார்க்குது”
அது தான் சினிமா எடுப்பவன் & விமர்சனுக்குண்டான் உறவு.
இரண்டு பேய் போடும் ஆட்டத்தால் தான் இன்னும் மீடியாவிற்கு உயிர் இருக்கிறது.
தமிழ் கூறும் நல் உலகு,
இணையத்தைப் பயன்படுத்தி,
இத்தாலி, ஜெர்மன், ஈரானியன், கொரியன் படங்களைப் பார்த்தால்
சினிமா கலையின் வெளிப்பாடுகளின் தளம் சந்தோஷிக்கலாம்.
”சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது” நல்லா இருக்காம்.
மோகன்லாலின், ஸ்பிரிட் படத்தை கட்டாயம் ஒவ்வொரு டாஸ்மாக், மற்றும் மேட்டுக்குடி குடிகாரன்கள் பார்க்க வேண்டும்.
மவுஸ் போனாலும், விமர்சகர்களின் மவுஸு போகாது.
புனைப்பெயரில் –
மவுஸே சரணம்
உன் வாலில் நழுவி செல்லும் எங்கள் தேடலுக்கு
கண்முன்னே விரிக்கிறாயே…
அதில் தான் எங்களின் கனவும் விரிகிறது.
கானல் நீர்களாய் எங்களை காய்ச்சி எடுக்கும் பிம்பங்கள் உடைத்து
உலகின் கடை மடை சென்று
நீர் பெற்று வந்து
எமது ஞான தோட்டத்தின் வெள்ளாமைக்கு வகை செய்யும்
மௌஸே உனக்கொரு நன்றி…
தொடும் கணணி முறையில்
நீ காணாமல் போனாலும்
கட்டைவிரல் நேற்று வரை உன்னை பிடித்து மேல் வந்தது
மறந்திட மாட்டோம்.
மவுஸை கொண்டாடுவோம்.
- மவுஸ் பிடிக்கும் விமர்சகனும், படமெடுக்கும் மணி – RAT – னமும், சுஹாசினியின் கட்டளையும்.
- சூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை
- ரா. ஸ்ரீனிவாசன் கவிதைகள்— ஒரு பார்வை
- சூட்டு யுகப் பிரளயம் வந்து விட்டது ! மாந்தர் செய்ய வேண்டிய கடமை என்ன ?
- இரு குறுங்கதைகள்
- அப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…
- இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் சமுதாயப் பணிகள்
- புறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்
- தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு
- மிதிலாவிலாஸ்-10
- தொடுவானம் 64. நான் ஒரு மருத்துவ மாணவன்
- வைரமணிக் கதைகள் – 12 கறவை
- மறுவாசிப்பில் வண்ணதாசனின் “மனுஷா………மனுஷா……..”
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் ” உரிய நேரம் ” தொகுப்பை முன் வைத்து…
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -2
- ஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. !
- வீடு பெற நில்!
- சென்னையில் ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலி
- ஜெமியின் காதலன்