சூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை

This entry is part 2 of 19 in the series 19 ஏப்ரல் 2015

முனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர்-1 மனிதனைச் சூழ்ந்துள்ள சமூகம், பொருளாதாரம், உயிரியல் போன்றவற்றின் கூட்டுநிலையாகச் சுற்றுச்சூழல் விளங்குகிறது. உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள உறவுகளை விளக்கிக் கூறுவதாக சூழலியலை உணரமுடிகிறது. சுற்றுச்சூழலில் காணப்படும் பொருள்களின் தன்மைகளுக்கேற்ப அறிவியலாளர்கள் பல்வேறு சூழ்நிலை மண்டலங்களை வகுத்துள்ளனர். அவற்றுள் குளம், ஏரி, ஆறு போன்றவற்றை உள்ளடக்கியது நீர்ச்சூழ்நிலை மண்டலம் ஆகும். இயற்கையில் கிடைக்கும் இன்றியமையாத பொருள்களில் ஒன்றாக விளங்கும் நீர், உயிர்க்கூறுகளின் இயக்கத்திற்கு மூலமாகிறது. நீர் […]

ரா. ஸ்ரீனிவாசன் கவிதைகள்— ஒரு பார்வை

This entry is part 3 of 19 in the series 19 ஏப்ரல் 2015

    ” ரா.ஸ்ரீனிவாசன் கவிதைகள் ” என்ற இத்தொகுப்பிற்கு ஆர். ராஜகோபாலன் அணிந்துரை தந்துள்ளார். இதில் 50 கவிதைகள் உள்ளன. ” இயந்திர உலகைப் புறந் தள்ளி இயற்கைக்குத் திரும்புதல் ” என்பது ஸ்ரீனிவாசனின் குரல் என்கிறார். ராஜகோபாலன். இவரது கவிதைகள் உரைநடை இயல்பு கொண்டவை. மொழி நயங்களைப் புறந்தள்ளிவிட்டு நகர்கின்றன. ” வெயில் ” கவிதை ஏழ்மையைச் சொல்கிறது.   கீற்றின் கீழமர்ந்து பானையின் மேலும் படுத்திருக்கும் குழந்தையின் மேலும் காரை பெயர்ந்த தரையிலும் […]

மவுஸ் பிடிக்கும் விமர்சகனும், படமெடுக்கும் மணி – RAT – னமும், சுஹாசினியின் கட்டளையும்.

This entry is part 1 of 19 in the series 19 ஏப்ரல் 2015

புனைப்பெயரில்   கம்ப்யூட்டர் மவுஸை பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் மட்டும்தான் விமர்சனம் செய்ய வேண்டும்” சொன்னவர், சுஹாசனி. நடிகை, இயக்குனர், காமிராஉமன், பிலிம் இன்ஸ்ட்டியூட் அட்மிஷன் இதெல்லாம் அடைய காரணமாக இருந்த அடையாளமான கமல் அண்ணன் பெண், சாருஹாசன் மகள் மற்றும் இன்றைய இண்டநேஷனல் அடையாளம் ஆன, மணிரத்னம் பெண்டாட்டி. சொன்ன இடம், அவரது கணவரும், தமிழ் சினிமாவின் GOD FATHER no..இல்லை “நாயகன்” என அவர் தம் குழுவால் சொல்லப்படும் […]

சூட்டு யுகப் பிரளயம் வந்து விட்டது ! மாந்தர் செய்ய வேண்டிய கடமை என்ன ?

This entry is part 4 of 19 in the series 19 ஏப்ரல் 2015

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xcVwLrAavyA http://science.howstuffworks.com/environmental/global-warming-videos-playlist.htm https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WQ-urKdAsvs https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GyZDf3kMvwo http://video.nationalgeographic.com/video/101-videos/global-warming-101 http://video.nationalgeographic.com/video/greenhouse-gases http://study.com/academy/lesson/greenhouse-gases-and-the-enhanced-greenhouse-effect.html http://study.com/academy/lesson/fossil-fuels-greenhouse-gases-and-global-warming.html http://study.com/academy/lesson/global-warming-atmospheric-causes-and-effect-on-climate.html   பூகோளம் நோயில் .. ! நோய் பீடித்துள்ளது பூகோளத்தை ! குணமாக்க மருத்துவம் தேவை ! காலநிலை மாறுதலுக்குக் காரணங்கள் பல்வேறு ! கரங் கோத்துக் காப்பாற்ற வர வேண்டும் பல்லறிஞர் ! சிந்தனை யாளர் பங்கெடுப்பு, எரிசக்தி நிபுணர் ஒத்துழைப்பு, செல்வந்தர் நிதி அளிப்பு, புவிமாந்தர் கூட்டு ழைப்பு […]

இரு குறுங்கதைகள்

This entry is part 5 of 19 in the series 19 ஏப்ரல் 2015

1.    கண்காணிப்பு – சிறகு இரவிச்சந்திரன். 0 அவனுக்கு கொடுக்கப்பட்ட பணி கேட்கும்போது எளிதாகத்தான் இருந்தது. பள்ளி நாட்களில் இருந்தே மர்ம நாவல்களையும் சங்கர்லால் துப்பறியும் தமிழ்வாணன் கதைகளையும் படித்ததின் பாதிப்பு அவன் மனதில் ஆழமாக ஊறிக் கிடந்தது. பொருட்காட்சிக்குப் போனால், மற்ற பிள்ளைகளைப் போல அவன் திண்பண்டங்கள் கேட்ட்தேயில்லை. எப்போதும் கறுப்பு கண்ணாடி தான் வேண்டும். கூடவே ஒரு தொப்பி. அது அட்டையில் இருந்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகு அவன் சின்னதாக ஒரு மூங்கில் […]

அப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…

This entry is part 6 of 19 in the series 19 ஏப்ரல் 2015

        இரா.முத்துசாமி     பயிறு செழிக்கணு முன்னு நீங்க அமைச்ச குழாய் கிணறு – எங்க உயிரைப் பறிக்கு முன்னு கொஞ்சம் கூட நினைக்கலையே…   விளையாட போறமுன்னு வீசி வீசி நடந்து வந்தோம்… கண்மூடி திறக்குமுன்னே காணாமப்போனதென்ன…   அடி பாவி மக்கா! தண்ணியில்லாக் குழாய் கிணற மண் அணைச்சு வச்சுருந்தா… நெஞ்சணைச்சு வளர்த்த பிள்ளைங்க நெலம இங்கே மாறியிருக்கும்…   கள்ளமில்லா பிள்ளை நாங்க கதறி நின்னு அழுத மொழி… கடவுளுக்கும் கேட்கலையோ […]

இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் சமுதாயப் பணிகள்

This entry is part 7 of 19 in the series 19 ஏப்ரல் 2015

பத்மநாதன் கலாவல்லி முனைவர்பட்ட ஆய்வாளர் (சே.எண் – 2109) இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாëர். பல அங்கத்தவர்கள் தொகுப்பு குடும்பம், பல குடும்பங்களின் தொகுப்பு சமூகம். பல சமூகங்களின் தொகுப்பு சமுதாயம். ஒரு சமுதாயத்தில் வாழும் மனித இனம், அவ்வினத்தின் நாகரிகம், வளர்ச்சி, வரலாறு, பண்பாடு, கலை, கலாசாரம், வாழ்வியல், சமுதாயநிலை, பொருளாதாரம், கல்வி போன்ற அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்தும் முக்கியக் கூறு மொழி ஆகும். மேலும் மொழி ஒரு சமதாயத்திற்குள்ளும் […]

புறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்

This entry is part 8 of 19 in the series 19 ஏப்ரல் 2015

முனைவர் போ. சத்தியமூர்த்தி உதவிப்பேராசிரியர் தமிழியல்துறை தமிழியற்புலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை – 625 021. email: tamilkanikani@gmail.com கைபேசி: 9488616100     செம்மொழி இலக்கியமான சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் எனக் கூறப்படும். பாட்டு என்பது பத்துப்பாட்டு. தொகை என்பது எட்டுத்தொகை. எட்டுத்தொகையில் ஒவ்வொன்றும் பல உதிரிப் பாடல்களின் தொகுப்பு எனலாம். பத்துப் பாட்டு நெடும் பாடல்களின் தொகுப்பு ஆகும். குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு., கலித்தொகை என்ற ஐந்து தொகை நூல்களும் […]

தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு

This entry is part 9 of 19 in the series 19 ஏப்ரல் 2015

படிக்க: http://thamizhstudio.com/Koodu/index.htm நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழான கூடு ஏப்ரல் மாத இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. முன்னர் இணையதளமாக செயல்பட்டுக்கொண்டிருந்த கூடு இப்போது மாத இதழாக மாற்றப்பட்டுள்ளது. கதைசொல்லி, உள்ளிட்ட பகுதிகள் இனி தொடர்ந்து வெளியாகும். ஏப்ரல் மாத கூடு இணைய இதழ் முழுக்க முழுக்க சென்னை புத்தகக் காட்சி சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நண்பர்கள் படித்துவிட்டு அவசியம் தங்கள் கருத்துகளை பகிருந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். கூடு ஏப்ரல் மாத இதழில், பப்பாசி அமைப்பின் செயலாளர் […]

மிதிலாவிலாஸ்-10

This entry is part 10 of 19 in the series 19 ஏப்ரல் 2015

  தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com காலையில் எழுந்ததுமே அபிஜித் ஆஸ்பத்திரிக்கு போன் செய்தான். நம்பர் பிசியாக இருந்தது. அவன் பல்லைத் தேய்த்துவிட்டு வருவதற்குள் மைதிலி காபி தயாரித்து கோப்பையில் ஊற்றிக் கொண்டிருந்தாள். “இரவு போன் ஏதாவது வந்ததா?” கேட்டான. “இல்லை.” கோப்பையை நீட்டிக் கொண்டே சொன்னாள். “நன்றாக உறங்கி விட்டேன். நடுவில் விழித்துக் கொள்ளவே இல்லை.” கோப்பையை வாங்கிக் கொண்டே சொன்னான். “எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை. நடு நடுவில் முழிப்பு […]