சில்வியா ப்ளாத்: சாவின் கலையைக் கற்றுக் கொண்டவள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 25 of 26 in the series 26 ஏப்ரல் 2015

 நசார் இஜாஸ்

அதிகாலையின் நடுங்கும் குளிரிலும் வழமை போன்று சில்வியா ப்ளாத் படுக்கையை விட்டு எழுந்து கண்களை மெல்ல திறக்கிருக்கிறாள். பனிக் காற்றுக்கு சில்வியா ப்ளாத் மீதிருந்த அதீத காதலில் ஒரு கணம் கூட தாமதிக்காது கண்களை வந்து காதல் காற்று ஒட்டிக் கொள்கிறது. அதைக் கூட பொருட்படுத்தாதவள் போல், அறைச்சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் கடிகாரத்தைப் பார்க்கிறாள். அப்போது நேரம் நான்கு மணியைத் தாண்டி கடிகார முள் மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தது.
கட்டிலில் இருந்து எழுந்தவள் சமயலறைக்குச் சென்று பாலைச் சூடாக்கிக் கொள்கிறாள். பாலைச் சூடாக்கி இரு குவளைகளில் ஊற்றிக் கொண்டு மெல்ல அவ்விடத்தை விட்டு நகர்கிறாள். மிக நிதானமாக பால் நிரம்பிய அந்தக் குவளைகளை சுமந்த படி மேல் மாடியில் இருக்கும் தனது இரு பிள்ளைகளுக்கும் வழங்குவதற்காக ஒவ்வொரு படிகளிலும் மிக அவதானமாக அடியெடுத்து வைக்கிறாள். பின்னர் அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து குழந்தைகளுக்கென சூடேற்றிய பாலை அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் கட்டிலுக்கு அருகே உள்ள மேசையில் வைத்து விட்டு தனது இரு பிள்ளைகளையும் பார்க்கிறாள்.
சில்வியா ப்ளாத் அமெரிக்க நவீன கவிதையின் மிக முக்கிய குறியீடாகக் கருதப்படுபவர். தனது எட்டாவது வயதிலேயே கவிதை மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தியவர். இவரது எழுத்தாற்றலுக்கு முதன் முதலில் ‘தி போஸ்டன் டிராவலர்’ என்ற பத்திரிகை களம் கொடுத்தது. அப்படி அடியெடுத்து வைத்தவள் இன்று ஒட்டு மொத்த இலக்கிய உலகிலும் அடியெடுத்து முன்னுதாரணமாகத் திகழ்கிறாள்.
தனது வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்தேர்ச்சையாகத் தனிமையை சந்தித்து வருகிறாள் சில்வியா ப்ளாத். தனது தந்தை சிறு வயதிலேயே இறந்து போயிருந்தார். தனது தாயும் ஒரு நோயாளியாக படுத்த படுக்கையானார். வாழ்க்கையில் நாம் எதைப் பெற்றிருக்கிறோம், வாழ்க்கை எமக்கு எதைக் கொடுத்திருக்கிறது எனப் பின்னால் திரும்பிப் பார்த்தால் கடைசியில் வருத்தமே எஞ்சியது.
திருமணம் என்பது பெண்களைக் கட்டுப்படுத்தி அடக்கியாளும் ஒரு கருவியே. அப்படிப்பட்ட ஒரு கருவி என்னையும் இயக்கி விடுமோ எனப் பயந்தார் சில்வியா ப்ளாத். அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு, அடுப்படிப் பெண்களுக்குப் படைப்பெதற்கு என்று கடுப்பேத்தும் பத்தாம் வகுப்பு பசளித்தனம் இன்று காற்றுடைந்த பலூனாகிப் போனது. திருமணம் முடித்துக் கொண்டு தினசரி வேளைகளில் உணவு சமைத்தலும், வீட்டையும் சூழலையும் சுத்தப்படுத்தும் நிலை ஏற்பட்டுவிட்டால் என்னால் என்ன செய்ய இயலும். நான் எப்போதும் சுதந்திரமாகவே வாழ விரும்புகிறேன் என தனது கட்டிளமைப் பருவத்தின் முக்கிய கட்டத்தில் குறிப்பிட்ட சில்வியா ப்ளாதையும் காதல் என்ற ஒற்றைச் சொல் ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இணைந்து படித்த சில்வியா ப்ளாத் அங்கு பிரிட்டிஸ் கவிஞரான டெட்ஹ_க்ஸ் என்பவருடன் பழகி வந்தார். டெட் ஹ_க்ஸ_ம் அவரது நண்பர்கள் பலரும் இணைந்து வார இறுதி நாட்களை இசை வாத்தியக் கருவிகளோடு பாடல்களைப் பாடி மகிழ்வார்கள். அத்தோடு தாம் இயற்றிய புதுக்கவிதைகளையும் படித்து மகிழ்வுறுவார்கள். இப்படியானதொரு விழாவில் வைத்துத்தான் டெட் ஹ_க்ஸின் அறிமுகம் சில்வியா ப்ளாதிற்கு கிடைத்தது.
அவருடைய வாழ்வின் பல விடயங்களை அவருடன் பகிர்ந்து கொண்டார். ஆரம்பத்தில் தனது நண்பர் ஒருவரின் மூலமாக சில்வியா ப்ளாதின் கவிதைகளைப் படித்திருந்த டெட் ஹ_க்ஸிற்கு சில்வியா ப்ளாதிடம் அபூர்வமான திறமை இருப்பதை உணர்ந்தார். இருவரும் ஓன்றாக சேர்ந்து நடனமாடினார்கள், தனிமையில் பேசினார்கள், மது அருந்தினார்கள். இப்படியான முதல் சந்திப்பிலேயே சில்வியா ப்ளாதின் மனதில் டெட் ஹ_க்ஸ் குடி கொண்டிருந்தார். அவருடைய காதலை வெளிப்படுத்தும் வண்ணம் சில்வியா ப்ளாத் டெட் ஹ_க்ஸின் கன்னத்தைக் கடித்து பற்கள் பதிந்து இரத்தம் வரும் வரை கடித்து வைத்திருந்தாள். சின்னஞ் சிறு வயது தொடக்கமே வெறுமையைச் சுவைத்துக் கொண்டிருக்கும் சில்வியா ப்ளாதிற்கு டெட் ஹ_க்ஸின் காதலானது மகிழ்ச்சியையும், பாதுகாப்பையும் வழங்குவதாகவே சில்வியா ப்ளாத் நம்பினாள்.
டெட் ஹ_க்ஸ் தொழில் செய்து கொண்டிருந்தார். அப்போது சில்வியா ப்ளாத் படித்துக் கொண்டிருந்தாள். படித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே டெட் ஹ_க்ஸ் சில்வியா ப்ளாதை திருமணம் செய்து கொண்டார். வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் கட்டமைப்பது எமது கைகளில்தான் உள்ளது. அது ஆரோக்கியமானதா இல்லையா என்பதை எமது ஒவ்வொரு செயற்பாடுகளும் தீர்மானிக்கும். சில்வியா ப்ளாதின் படிப்பு முடியும் வரை காத்துக் கொண்டிருந்த டெட் ஹ_க்ஸ் படிப்பு முடிந்ததும் அவளையும் கூட்டிக் கொண்டு அமெரிக்காவுக்குப் பறந்தார்.
திருமண வாழ்வின் ஆரம்ப சில வருடங்கள் மகிழ்வாகப் பயணித்துக் கொண்டிருந்தது. சில்வியா ப்ளாத் இரு குழந்தைகளுக்குத் தாயானாள். நாட்கள் நகர நகர சில்வியா ப்ளாதின் வாழ்க்கையை வெறுமைகள் சந்தித்துக் கொண்டிருந்தன. ஒரு குழந்தை கர்ப்பத்திலேயே கலைந்தது. இதனால் அதிக மனச்சோர்வுக்கும் விரக்திக்கும் ஆளானாள். இப்படியே சில வருடங்கள் கடந்து போய்க் கொண்டிருந்தது.
அவள் நினைத்தது போல் அவளது வாழ்க்கை இருக்கவில்லை. டெட் ஹ_க்ஸ் சில்வியா ப்ளாதிற்குத் தெரியாமல் பல பெண்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார். இத்தருணத்தில் அவள் அதிகமாகத் தனிமையை உணர்ந்தாள். தனது குழந்தை தன்னை விட்டு கர்ப்பத்திலேயே கை நழுவியதாக பெரும் துயரமடைந்தாள். அத்தனையும் தாண்டி தனது கணவனின் செயற்பாடுகள்தான் அவளை அதிகமாக ஆட்பறித்துக் கொண்டிருந்தது.
டெட் ஹ_க்ஸின் செயற்பாடுகளும் கட்டு மீறிப் போகத் தொடங்கியதையடுத்து அவரை விட்டுப் பிரிந்து வாழத் தொடங்கினாள் சில்வியா ப்ளாத். இச்சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்ட டெட் ஹ_க்ஸ_ம் தன்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஆஸ்யா லெவில் என்ற பெண்ணுடன் இணைந்து வாழத் துவங்கினார்.
இந்தப் பிரிவுக்கு சரியான மருந்தாக தான் ஆரம்பத்திலிருந்தே நேசித்து வரும் கவிதையொன்றே தீர்வாக முடியும் எனக் கருதிய சில்வியா ப்ளாத் அதிகமாகக் கவிதைகளை எழுதத் துவங்கினார். தன்னைக் கவிதையின் பாடினியாக உரத்து அறிவித்தாள். கவிதை என்பது ஒரு அற்புத உணர்வு என வாதம் செய்தாள். ஆனபோதிலும் அக்கவிதை அவளுக்கு சரியான தீர்வைக் கொடுக்கவில்லை. இந்தப் பிரிவு அவளைத் தொடர்ந்தேர்ச்சையாகத் தற்கொலைக்குத் தூண்டிக் கொண்டேயிருந்தது.
அவளது கவிதைகளில் வலியும். விரக்தியும், துக்கமும் அதிகமாக நீந்தத் தொடங்கியது. சில்வியா ப்ளாத் தன் வாழ்வின் ஒட்டு மொத்த ரகசியங்களையும் கவிதைகளின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறாள் என்பதே உண்மையாகும். அவளது கவிதைகள் அத்தனையும் யதார்த்தத்தை உறுக்கமாக உற்பத்தி செய்து கொண்டிருந்தது.
தொடர்ந்தேர்ச்சையாக அவளுடைய மூளை சலவை செய்யப்பட்டு அவளைத் தற்கொலைக்குத் தூண்டிக் கொண்டேயிருந்தது. அவளாலேயே அவளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு மாறியிருந்தாள். அப்படியே தூங்கிப் போனவள் இன்று அதிகாலையில்தான் இம்முடிவை எடுத்திருக்க வேண்டும்.
சமையலறையில் பாலைச் சூடேற்றி குழந்தைகளுக்கு எடுத்துச் சென்றவள் அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் தனத குழந்தைகளையே அதிக நேரமாக பார்த்துக் கொண்டிருக்கிறாள். அப்படிப் பார்க்கையில் அவளது முகத்தில் சந்தோசத்தின் கீறல்களோ, கவலையின் கோடுகளோ, விரக்தியோ, கழிவிரக்கமோ தென்படவில்லை. இப்போதும் அவள் அந்த அறையில்தான் இருக்கிறாள்.
திடீரென தீர்க்கமான முடிவுக்கு வந்தவளாய் தனது இரு பிள்ளைகளின் கன்னத்திலும் அழுத்தமாக முத்தங்களைப் பதித்தவள் அறைக் கதவைச் சாத்தி விட்டு மெல்ல வெளியே வந்து விடுகிறாள். வழமையாக தனது அறையின் மேசையில் டைப்ரைட்டரில் கவிதைகளைத் தட்டச்சு செய்யும் அவள் இன்று அதைத் தொடவேயில்லை. நேரே சமையலறைக்குச் சென்றவள் சமயலறைக்குள் நுழைந்தவள் சமையலறையின் கதவுகளையும் இருக்க மூடுகிறாள். தொடர்ந்து ஜன்னல்களையும் இருக்க மூடிக் கொண்ட சில்வியா ப்ளாத் அந்த அறையைத் சுற்றியுள்ள அத்தனை துளைகளையும் தேடித் தேடி அடைத்து விட்டாள்.
இப்போது அவள் சாவின் கலையைக் கற்றுக் கொள்ளப் போகிறாள் என்பதை அவளது செயற்பாடுகள் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவளது உண்மையான காதல் அவளுக்குக் கொடுத்திருக்கும் பரிசு இதுதான் போலிருக்கிறது.
கீழே குனிந்தவள் கேஸ் அடுப்பின் சிலின்டரின் குழாயைப் பிடுங்கி விட்டாள். அதிலிருந்து வாயு வெளியாகிக் கொண்டிருக்கிறது. எதற்கும் துணிந்தவள் போல் அதை தனது மூக்கின் அருகே உட்செலுத்தி அதை மெல்ல சுவாசிக்கத் தொடங்குகிறாள். இப்போது அவளுக்கு அவளுடைய கடந்த காலங்கள் அத்தனையும் மீளவும் ஞாபகத்துக்கு வந்து கொண்டிருக்கலாம். முக்கியமாக தனது பெற்றோர்கள் அவளது மனக் கண்ணில் தோன்றி அவளது செயலைத் தடை செய்திருக்கலாம். அவள் அவளது தாயிடமே போக விரும்பியவளாக அதைத் தொடர்ந்தேர்ச்சையாக சுவைத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய உயிரை அந்த வாயுக்கள் மெல்ல உறிஞ்சிக் கொண்டது. அவளுடைய வெற்றுடல் மெல்ல கீழே சரிந்து கொண்டது. அந்த உடலிலும் தன் பிள்ளைகள் பற்றிய நினைவுகள் பூத்துக் கொண்டிருக்கிறது. முப்பதே வயதான நவீன கவிதையின் பாடினி தனது கவிதைகளின் பயணத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறாள்.
அவளது வாழ்வில் எத்தனை சோகங்களை மூட்டை மூட்டையாக கட்டி சேமித்து வைத்திருப்பாள். எல்லாக் கலைகளைப் போலவே சாவதும் ஒரு கலை. அதை நான் முழுமையாக நிறைவேற்றுவேன் என்று சில்வியா ப்ளாத் எங்கோ எழுதி வைத்த கவிதை இப்போது சாத்தியமானதொன்றாகிப் போனது.
பொழுதுகள் விடிந்து குழந்தைகள் எழுந்து அவளது தாயை அழைக்கின்றனர். அவளுடைய சத்தம் எதுவுமே அங்கு கேட்கவில்லை. மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து மீண்டும் அழைக்கின்றனர. அவள் எதுவுமே பேசாமல் உறங்கிக் கொண்டிருக்கிறாள். அந்தக் குழந்தைகளுக்கு அந்த விடயத்தைப் புரிந்து கொள்ள ரொம்ப நேரமாகவில்லை. சில்வியா ப்ளாத் தங்களது பிள்ளைகளுக்கெனத் தயார் செய்த பால் அறையில் சூடாறிக் கொண்டிருந்தது. அந்தப் பாலை அவர்கள் குடிக்கவேயில்லை.
சில்வியா ப்ளாதின் மரணத்தைத் தொடர்ந்து அவள் சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்களையும் டெட் ஹ_க்ஸ் எறித்து விட்டார். நாட்குறிப்பேடுகள், அவளுடைய முடிக்கப்பட்டாத நாவலின் பிரதிகளையும் கொழுத்தி விட்டார். சில்வியா ப்ளாதின் உண்மையான காதலே விரக்தியின் உணர்நிலையை உச்சகட்டத்துக்கு தூக்கிக் கொண்டு சென்றது.
தான் அடைந்த விரக்திக்கு தற்கொலையை வினையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட சில்வியா ப்ளாதின் தற்கொலை குறித்த தெளிவு இன்று வரைக்கும் தெளிவாக முன்னைக்கப்படவில்லை. சில்வியா ப்ளாத்தின் மரணத்தின் இரண்டாண்டுகளின் பின் டெட் ஹ_க்ஸின் இரண்டாவது மனைவியான ஆஸ்யா லெவிலும் தனது மகளோடு சேர்ந்து தற்கொலை செய்து கொண்டாள். இரு தற்கொலை நிகழ்வுகளும் டெட்ஹ_க்ஸின் பாலியல் வன்கொடூரத்தின் துர்நிலையை வெளிப்படுத்தி நிற்கிறது.
சில்வியா ப்ளாதின் மரணம் பெண்களுக்கெதிரான அடக்குமுறையின் அத்தாட்சியாக அமைந்தது. அவளின் மரணத்தின் பின்னர் பல்வேறு அமைப்புகள் கண்டனம் வெளியிட்டன. சில்வியா ப்ளாத்தின் கல்லறை மீது பொறிக்கப்பட்ட டெட் ஹ_க்ஸின் பெயரை அகற்ற வேண்டுமென பெண்கள் அமைப்புகள் பலத்த போராட்டங்களை நடாத்தியது.
சில்வியா ப்ளாதின் மரணம் குறித்த எந்தவிதமான தெளிவான கருத்து சரியாக முன்வைக்கப்படாத நிலையில் டெட் ஹ_க்ஸ_ம் எதுவுமே பேசவில்லை. சுமார் மூன்று தசாப்தங்களின் பின் தனக்கும் சில்வியா ப்ளாத்துக்குமிடையிலான நெருங்கிய அன்பை வெளிப்படுத்துபவராக ‘பிறந்தநாள் மடல்கள்’( டீசைவானயல டுநவவநசள) என்ற கவிதை நூலை வெளியிட்டார். இப்புத்தகம் பல இலட்சம் பிரதிகள் விற்கப்பட்டது. எனினும் இவருடைய கருத்துக்களை பலர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இவர் பூச்சாண்டி காட்டுவதாக சில பெண்ணிய அமைப்புகள் கூறின.
எது எவ்வாறாயினும் சில்வியா ப்ளாத் தனது கணவர் மீது வைத்திருந்த அன்பை அவளது கணவர் டெட் ஹ_க்ஸ் சிதைத்து விட்டார். அவளுடைய கனவுகளை சிதைத்து விட்டார். அவளுடைய எதிர்பார்ப்புகளை சிதறடித்து அவளை மரணத்தின் உச்சத்துக்குக் கொண்டு போய் சேர்த்து விட்டார் என்பதே இங்கு புலப்படும் தெளிவான உண்மையாகும். தனது பிள்ளைகளை தனியே விட்டு விட்டு சாவின் வழியைத் தேடிக் கொண்ட சில்வியா ப்ளாத் தனது இறந்து போன பெற்றோருடன் இப்போது மறுவுலகில் ஏதாவது செய்து கொண்டிருப்பார்.
ihதயளnஅ@பஅயடை.உழஅ

Series Navigationஅருந்ததி ராய்: நிகழ் நிலையில் விதைந்தாடும் சொற்கள்மிதிலாவிலாஸ்-11
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *