பாலுமகேந்திரா விருது – (குறும்படங்களுக்கு மட்டும்)

author
0 minutes, 4 seconds Read
This entry is part 21 of 26 in the series 26 ஏப்ரல் 2015

http://thamizhstudio.com/shortfilm_guidance_awards_balumahendra_2.php

நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை வழங்க தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்திருக்கிறது. சென்ற ஆண்டு எளிமையாக நடந்த இந்த விருது விழா இந்த ஆண்டு பல்வேறு கலைவிழாக்களுடன் சிறப்பாக நடக்கவிருக்கிறது. பாலுமகேந்திரா விருது இந்தியா முழுக்க தயாரிக்கப்பட்டுள்ள குறும்படங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மொழி கடந்து அகில இந்திய விருதாக இந்த விருது வழங்கப்படவிருக்கிறது.

பரிசுத் தொகை:

முதல் பரிசு: 10,000 ரூபாய் & சான்றிதழ், பாலுமகேந்திரா கேடயம்.

இரண்டாவது பரிசு: BOFTA கல்வி நிறுவனத்தில் குறுகிய காலப் பயிற்சியில் பங்கேற்பதற்கான அனுமதி. (ஒருலட்சம் பெறுமானமுள்ளது குறுகியக் காலப்பயிற்சி) & சான்றிதழ், பாலுமகேந்திரா கேடயம்.

விதிமுறைகள்:

* பாலுமகேந்திரா விருதுக்கு குறும்படங்களை அனுப்ப நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை.

* குறும்படங்கள் (Short Films) எந்தக் கருப்பொருளிலும் எடுக்கப்பட்டிருக்கலாம்.

* குறும்படங்கள் 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

* குறும்படங்கள் டி.வி.டி அல்லது வி.சி.டி. யில் தரமாகப் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

* இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம், இணைத்து அனுப்பப்படுதல் வேண்டும்.

* குறும்படத்தின் கதைச் சுருக்கம் (Synopsis), முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Still Photos) மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

* முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள், திரைப்படக் கலைஞர்கள் முன்னிலையில் சென்னையில் திரையிடப்பட்டு விருதுக்குரிய குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

Series Navigationஒரு துளி கடல்ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2015 மாத இதழ்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *