நாங்கள் முஸ்லீம்கள் அல்ல, நாங்கள் இந்துக்கள் அல்ல. முற்றும் முதலாக நாங்கள் சிந்திகள். சிந்தி இந்துக்களை சிந்து மாநிலத்திலிருந்து துரத்த சதி நடக்கிறது. நாங்கள் அந்த தீய சதிவேலைகளை வெற்றிபெற விடமாட்டோம்”. பாகிஸ்தான் ஹைதராபாத் பிரஸ் கிளப்பின் முன்னே ஒரு அரசியல் சேவகர் முழக்கமிட்டுகொண்டிருந்தார்.
பெரும்பாலான தேசியவாதிகளைப் போல, அவரும் தன்னுடைய குரல் பாகிஸ்தானில் மட்டுமல்ல, உலகெங்கும் கேட்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்.
சோகமான உண்மை என்னவென்றால், இந்த போராட்டங்களுக்கெல்லாம் எந்த வித பயனும் இல்லை. இந்த செய்திகளெல்லாம் பயனற்றவை. இந்து சமூகத்தின் உறுதியான எதிர்ப்பை எல்லாம் மீறி, நேற்றைக்கு இருந்ததை போலவே இன்றும் நிலைமை இருக்கிறது என்பதுதான் உண்மை. இந்து சிறுமிகள் கடந்த காலத்தில் கட்டாய மதமாற்றம் செய்விக்கப்பட்டார்கள். இன்றும் செய்விக்கப்படுகிறார்கள். கடைசி இந்து சிந்து மாநிலத்தில் இருக்கும் வரைக்கும் இந்த சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுகொண்டே இருப்பார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.
சிந்து மாநிலத்தில் ஒரு சிந்து இந்து பெண் கடத்தப்பட்டாலோ அல்லது கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டாலோ, ஏராளமான சிந்தி இந்துக்கள், பயத்தின் காரணமாகவும், கையறு நிலை காரணமாகவும் இந்தியாவுக்கு ஓடி விட விரும்புகிறார்கள்.
தாஹார்க்கியை சேர்ந்த அஞ்சலி பாய் மேக்வார் கடத்டஹ்ப்பட்டபோதும், மதியாரி மாவட்டத்தை சேர்ந்த காஜல் பீல் கடத்தப்பட்டபோதும், நவாப்ஷா மாவட்டத்தை சேர்ந்த கரின் கடத்தப்பட்டபோதும், (இவர்களது பெயர்கள் பெரும்பான்மை மக்களுக்கு தெரியக்கூட தெரியாது) என்னுடைய அருமை நண்பன் அஜித் குமார் உட்பட ஏராளமான சிந்தி இந்துக்கள் இந்தியாவுக்கு சென்று விடுவதை தீவிரமாக சிந்திக்கிறார்கள் என்பது உண்மை.
சில நாட்களுக்கு முன்னால் அஜித் என்னிடம்,”தப்பிக்க ஒரே வழியாக இந்தியாவுக்கு சென்று விட முடிவு செய்திருக்கிறோம்” என்றான்.
“எங்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இங்கே இல்லை. எங்களது உடமைகள் அபகரிக்கப்படுகின்றன. அரசாங்கத்தில் இருப்பவர்கள் எங்கள் குரலை கேட்பதில்லை. எங்களது கோவில்கள் பட்டப்பகலில் தாக்கப்படுகின்றன. யாருமே எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எங்கள் பெண் குழந்தைகள் கடத்தப்படுகின்றன, கட்டாய மதமாற்றம் செய்விக்கப்படுகிறார்கள். நீதி கிடைக்கும் என்ற வெற்று வாக்குறுதிகள் மட்டுமே எங்களுக்கு கிடைக்கிறது”
“கடந்த 65 வருடங்களில் எதுவுமே நடக்கவில்லை. இனி வரும் காலத்திலும் எந்த விதமான முன்னேற்றமும் இருக்கும் என்று தோன்றவில்லை. இன்னும் நிலைமை மோசமடைந்துதான் போயிருக்கிறது”
எல்லா அரசியல்கட்சிகளும் 12 வயது அஞ்சலி கடத்தப்பட்டதையும் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு ஒரு இளைஞனுக்கு திருமணம் செய்விக்கப்பட்டதையும் கண்டித்தன. ஆனால், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ இது பற்றி ஒரு அறிக்கை விட்டதோடு சரி, அந்த கட்சியின் மற்ற தலைவர்கள் இதனை பற்றி கண்டுக்கொள்ளக்கூட இல்லை. இந்த நிலைமையை மாற்றமுடியாது என்று அறிந்தது போல வாயை மூடிகொண்டு சென்றுவிட்டார்கள். இந்த நாட்டில் மத சகிப்புத்தன்மை அற்ற நிலையில் பாதிக்கப்படுகிறவர்கள் இந்துக்கள் மட்டும் அல்ல. கிறிஸ்துவர்கள், அஹ்மதிகள், ஷியாக்கள் என்ற அனைவருமே பாதிக்கப்படுகிறார்கள்.
குர்ஷீத் ஷா என்பவர் முஹாஜிர் என்ற வார்த்தையை உபயோகித்ததற்காக மத நம்பிக்கையை புண்படுத்திவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். பகத் சிங் என்ற இந்த பாகிஸ்தான் மண்ணில் பிறந்தவரது பெயரை ஒரு சாலைக்கு வைப்பதற்கு பெரும் பிரச்னை வருகிறது. மும்தாஜ் குவாதிரி என்ற கொலைகாரன் (தஸீர் என்ற பஞ்சாப் கவர்னரை கொன்றவன்) ரோஜா மலர்களால் வரவேற்கப்படுகிறான். இந்த சூழ்நிலையில், தங்களது மதத்தை விட்டுவிட்டு அச்சுருத்தும்படி நிற்கும் மதத்தில் சேர்வது வித்தியாசமாகவா இருக்கும்?
“இன்னும் சில மாதங்களில் எங்கள் தாய்நாட்டை விட்டு நாங்கள் சென்று விடுவோம்” என்று அஜீத் சொன்னான். “இவர்கள் இந்த நிலைக்கு எங்களை கொண்டுவந்துவிட்டார்கள். எங்களது மத நம்பிக்கையை விட வேண்டும் அல்லது நாட்டை விட்டு ஓடவேண்டும் என்று இவர்கள் கோருகிறார்கள்”
இந்த சூழ்நிலையில் என்ன செய்யமுடியும்? கட்டாய மதமாற்றம் என்ற செய்தி வரும் ஒவ்வொரு நாளும், பயத்தையும் கையறு நிலையையுமே அதிகரிக்க செய்யும். இந்த தாய்நாட்டை விட்டு ஓட வேண்டிய உணர்வையே தூண்டும். நல்ல வசதி படைத்தவர்கள் கூட வேறு வழியின்றி இந்தியாவுக்கு செல்வதை யோசித்துகொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் சிந்துமாநிலத்திலிருந்து சுமார் 5000 இந்துக்கள் இந்தியாவுக்கு சென்றுவிடுகிறார்கள் என்று தேசிய பாராளுமன்றத்தில் ரமேஷ் முகார் வங்க்வாணி தெரிவித்தார்.
சிந்து மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் 5 சதவீதமே இந்துக்கள் இருக்கிறார்கள். அவரது கணக்கின் படி, சுமார் 22.22 சதவீத இந்துக்கள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்கு ஓடுகிறார்கள்.
இன்னும் எவ்வளவு வருடங்களில் சிந்தி இந்துக்கள் முழுவதும் காலி செய்யப்படுவார்கள்?
சென்றவருடம் சிந்து மாநில அரசாங்கம் பாலிய விவாகத்தை தடை செய்து சட்டமியற்றியது.
ஆனால், அஞ்சலியை கட்டாய மதமாற்றம் செய்தவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையாவது இந்த அரசாங்கம் எடுத்ததா? இது வெறுமனே, குழந்தையாக இருந்த அஞ்சலியை கட்டாயபப்டுத்தி ஒருவருக்கு திருமணம் செய்துவைத்தது மட்டும்தான் பிரச்னையா?
அஞ்சலி மக்வாரின் அப்பா குந்தன் லால் அவளது பள்ளிக்கூட சான்றிதழ்களையும், பிறப்பு சான்றிதழையும் கோர்ட்டின் முன் அளித்தார். அதில் அவளது வயது 12 என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
முன்பு நடந்ததை போலவே இந்த விஷயமும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போகும் என்று நான் நினைக்கிறேன். மியான் மித்து (ரிங்கிள் குமாரி, அஞ்சலி மக்வார் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்) போன்றவர்களை பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்களாக வைத்திருக்கும் கட்சியிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?
சென்ற வருடம் ரிங்கிள் குமாரியை மதமாற்றம் செய்த அதே கும்பல்தான் இதிலும் ஈடுபட்டிருக்கிறது. போலீஸிலிருந்து, கோர்ட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகள் வரைக்கும் எல்லோரையும் சென்ற மதமாற்ற வழக்கில் சமாளித்துவிட முடியும் என்றால், இதிலும் அதேதானே? கோர்ட்டுக்குள்ளேயே ஆயுதங்களை காட்டி நீதிபதியை சென்ற வழக்கில் மிரட்டியதை காட்டிய வீடியோவே இணையத்தில் காணக்கிடைக்கிறது. சென்றமுறை குற்றமிழைக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒரு எம்பியும் ஒரு எம் எல் ஏவும் பேசவே இல்லை. இப்போதும் பேசவில்லை.
ஆகவே, அஜித் குமார் போன்றவர்கள் நிலைமை சீரடையும் என்ற எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டு பேசுவது சரியானதுதான். இன்னும் இந்து திருமண சட்டத்தை, இந்து திருமணத்தை அங்கீகரிக்கும் ஒரு சட்டத்தை பாகிஸ்தான் அரசு இயற்றவில்லை. அப்படியிருக்கும்போது அது அவர்களது உடைமைகளை எப்படி பாதுகாக்கும்? ஒரு பெண் கட்டாய மதமாற்றம் செய்யப்படும்போது எப்படி அதனை தடுக்கும். இதுதான் இந்த அரசின் கேவலமான நிலைமை.
“சிந்து மாநிலத்தை விட்டு செல்வது கஷ்டமானதுதான். இதுதான் எங்கள் தாய்நாடு. இதுதான் எங்களை பிறப்பித்தது. ஆனால் எங்களது மதத்தை விட்டும் வரமாட்டோம். ஆகவே வெளியேறுவதுதான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி”
குட்பை அஜித்
லார்க்கானாவில் மார்ச் 15 2014இல் எரிக்கப்படும் இந்து கோவில்
ஆயிரம் இந்து/கிறிஸ்துவ சிறுமிகள் முஸ்லீம்களுக்கு கட்டாய திருமணம்
இந்து திருமண சட்டம் இன்னும் இயற்றப்படாததை குறித்த டான் பத்திரிக்கை தலையங்கம்
அஞ்சலி வழக்கை பற்றிய டைலி டைம்ஸ் இதழ் தலையங்கம்
- ஹரணியின் ‘பேருந்து’ – ஒரு சன்னலோரப் பயணம்.
- காசு வாங்கியும் வாங்காமலும் ஓட்டுப் போட்ட விவசாயிகளுக்கு பெப்பே
- அபிநயம்
- ஆத்ம கீதங்கள் – 26 காதலிக்க மறுப்பு .. !
- தாய்மொழி வழிக்கல்வி
- நேபாளத்தில் கோர பூபாளம் !
- இமாலய மலைச்சரிவு நேபாளத்தில் நேர்ந்த ஓர் அசுரப் பூகம்பத்தால் மாபெரும் சேதம், உயிரிழப்பு
- தொடுவானம் 65. முதல் நாள்
- பனுவல் வரலாற்றுப் பயணம் 3
- இரு குறுங்கதைகள்
- “மதத்தை விட்டு வெளியேறு அல்லது நாட்டை விட்டு வெளியேறு “
- சாந்தா தத்தின் “வாழ்க்கைக் காடு” ஒரு பார்வை
- ஞானக்கூத்தன் கவிதைகள் “கடற்கரையில் சில மரங்கள்” தொகுப்பை முன் வைத்து…
- முக்காடு
- சொப்பன வாழ்வில் அமிழ்ந்து
- வைரமணிக் கதைகள் – 13 காலம்
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -3
- தலைப்பு:இந்த நெட் நியூட்ராலிட்டி வேண்டுமா?
- இரவீந்திர பாரதியின் “காட்டாளி” – யதார்த்தமான சம்பவங்களின் பின்னல்
- ஒரு துளி கடல்
- பாலுமகேந்திரா விருது – (குறும்படங்களுக்கு மட்டும்)
- ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2015 மாத இதழ்
- ஹியாம் நௌர்: துயரின் நதியில் நீந்துபவள்
- அருந்ததி ராய்: நிகழ் நிலையில் விதைந்தாடும் சொற்கள்
- சில்வியா ப்ளாத்: சாவின் கலையைக் கற்றுக் கொண்டவள்
- மிதிலாவிலாஸ்-11