கோவையில் த.மு.எ.சங்க இலக்கியச் சந்திப்பு 158 ம் கூட்டத்தில்.: 3/5/15
தலைமையுரை : நாவலாசிரியர் சி.ஆர். இரவீந்திரன்
வாழ்க்கை ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களின் ஊடாக மனிதர்கள் உள்ளும் புறமுமாக உருமாறிக் கொண்டே இருக்கிறார்கள். இருப்புக்கும் மாற்றத்திற்கும் இடையில் வெளிப்படையான, மறைமுகமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் ஊடாக மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த மோதல்களில் ஆக்க ரீதியான விளைவுகளைப் பெறுபவர்களைப் போலவே அழிவிற்கும் உள்ளாகிறார்கள். ஆக்கமும் இல்லாமல் அழிவும் இல்லாமல் வாழ்க்கையை இன்னொரு தளத்திற்கு நகர்த்திச் செல்லும் மனிதர்களையும் அன்றாட வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. கடைசியாகக் குறிப்பிட்ட வாழ்க்கை முறைதான் பெருமளவிற்கு எல்லோருக்கும் சாத்தியமாகிறது. அதைத் துல்லியமாக, மனம் நெகிழும் படியாக, ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக, எதார்த்தத்தை மீறாத ஒன்றாகத் தன்னுடைய நாவலான ‘நீர்த்துளியை’ வடிவமைத்திருக்கிறார், சுப்ரபாரதிமணியன்.
நவீனத்துவம் அடையும் வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து வரும் இவர் தன்னைச் சுற்றிலும் உள்ள, இயங்கும் வாழ்க்கையை அக்கரையுடன் கூர்ந்து கவனித்து அதற்குத் தன்னுடைய இயல்பான மொரியின் வாயிலாக வடிவம் கொடுக்கிறார். அவர் காணும் உலகம் மாறுதல்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. அதனால், அவருடைய படைப்புக்களும் புதுமையாகவே வெளிப்படுகின்றன. பழைய வாழ்வின் மதிப்பீடுகளைக் களைந்துவிட்டு புதிய மதிப்பீடுகளை வாழ்க்கைக்கு அளிக்க முயலும் தவிர்க்க முடியாத வளர்ச்சிப் போக்கை அவருடைய படைப்புக்களில் இயல்பாகக் காண முடிகிறது. நெருக்கடிகளுக்குள் அகப்பட்டுத் தவிக்கும் மனிதர்கள் மௌனமாக அதைச் சகித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறிப் பெருமூச்சு விடுவதை அவருடைய பெரும்பாலான படைப்புக்களில் இயல்பாக இருப்பதை இனம் காணலாம்.
சாராம்சத்தில் இந்தத் தனித்தன்மையை இயல்பாகப் பெற்றிருக்கும் அவர் தன்னுடைய அனுபவ எல்லைகளைக் கடந்து சென்று வாழ்க்கையை மதிப்பீடு செய்து அதற்குக் கலை வடிவம் கொடுக்க முனைவதில்லை. தெளிவான நீரோட்டத்தை ஆர்வமுடன் கவனித்து மகிழ்ச்சியடையும் ஒருவரைப் போல அவர் வாழ்க்கையை ஒரு வித அக்கரையுடன் மௌனமாகக் கவனிப்பதை அவரின் படைப்புக்களின் வாயிலாக உணர்கிறோம். மனச்சிதைவுகளுக்கு உள்ளாகித் தவித்து விகாரமடையும் விசித்திரமான மனிதர்களின் மனப் போக்குகளுக்கு இடமளிக்கும் கலைக்கண்ணோட்டம் அவரிடம் இல்லையென்றே கொல்லலாம்.
வாழ்வதற்காகவே மனிதர்கள் பிறந்து, வளர்கிறார்கள். கால வெளியில் ஒளிக் கீற்றுக்களை விசிறிக் கொண்டே வாழ்க்கை குறித்த கேள்விகளே எழுப்பிவிட்டு மறைந்து போகிற மனிதர்களை அவருடைய படைப்புக்களில் வெளிப்படையாகக் காண முடிகிறது. இதுதான் அவருடைய தனித்தன்மை வாய்ந்த கலை வெளிப்பாடாக இருந்து வருகிறது. அடக்கமும், ஆழ்ந்த மௌனமும், இலேசான புன்னகையும் கலந்த தன்னுடைய கலை ஆளுமையை அவருக்கே உரிய தனி மொழியில் அவர் வெளிப்படுத்துகிறார்.
“ சப்பரம் “ நாவல் பற்றி கே. ஜோதி
ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தொழில் இருந்தது. ஆனால் எல்லா ஜாதிகளும் செய்யக்கூடிய தொழிலாகும் நெசவு என்பது. நெசவாளர்களில் செட்டியார்கள், கவுண்டர்கள்,முதலியார்கள், குயவர்கள், வண்ணார், நாவிதர் ., வலையர் என்று எல்லா ஜாதி பிரிவினரும் செய்த தொழிலாக ஜாதி வேற்றுமை இல்லாததாக இருந்த தொழில் நெசவு..கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் கூட நெசவில் ஈடுபட்டிருந்தனர். அது நசிந்து விட்டது. அந்த நெசவாள சமூகம் பற்றிய ஒரு நாவலை திருப்பூரை மையமாக வைத்து எழுதியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன். நெசவாள சமூகம் பற்றிய இன்னொரு நாவலை முன்பே எழுதியிருக்கிறார். ” தறிநாடா “ என்ற பெயரில். எழுதியிருக்கிறார். அதுவும் திருப்பூரை மையமாகக் கொண்டதே. இந்த நாவலில் திருமணமாகாத ஒரு முதிர்கன்னிப் பெண் தன் குடும்பத்திற்காக தானே நெய்து பிழைக்கிறாள். அப்பா குடிகாரன். சிறுவயது சின்னம்மிணி அவளுக்குத் தோழி. பகிர்ந்து கொள்ள சிறு ஜீவன். அவள் வேதகாரனான, கிறிஸ்துவனான ஜெயராஜிடம் நட்பு கொண்டிருக்கிறாள். ஆனால் கல்யாணம் என்று வரும் போது மதமாற்றம் அவசியமாகிறது . அவனிடமிருந்து பிரிந்து விடுகிறாள்.அவளின் திருமணத்திற்காய் தானே பட்டு சேலை நெய்கிறாள். குடிகார அப்பா அதை விற்று விடுகிறார். அதைத் தேடி ஜவுளி வியாபாரிகளிடம் செல்கிறாள். கிடைக்கவில்லை. அவள் நெய்த சேலையின் ஒரு பாகத்தை கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொள்கிறாள். சப்பரம் கடவுள் சிலைகளை கொண்டு செல்லும் வாகனம். இப்போது அவளின் பிணத்தை கொண்டு செல்வதையும் சப்பரம் என்றே சொல்கிறார் சுப்ரபாரதிமணியன். நெசவாளர் சமூகம் பற்றிய வறுமை தோய்ந்த சித்திரம், குடியால் அழியும் குடும்பம், முதிர்கன்னிப் பெண்ணின் அவல நிலை என்பதை நாவல் சொல்கிறது. பட்டு சேலை, நூல் சேலைக்கும் இடையிலான சில குழப்பங்கள் இதில் உள்ளன. நெசவுத் தொழில் பற்றிய பிரத்யேக வார்த்தைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நாவலின் வெகு எளிமையான கதை சொல்லும் முறை வசீகரமாயிருக்கிறது.. சில வர்ணனைகள் மனதை வெகுவாக்க் கவர்கின்றன. பாவு -மயில் தோகை போல் விரிந்து கிடந்த்து.கருவேலா மரத்து பிசின் பெண்ணின் கழுத்து நகை போல் மின்னியது.பூசப்படாத கல் சுவற்றில் நீட்டிக் கொண்டிருந்த கற்கள் இளம் வயது ஆணின் முகப்பரு போல இருந்தது. மீனின் செதில் போல் வீட்டின் ஓடுகள் இருந்தன,வீட்டு கேட் இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு நிற்கும் இளைஞனைப்போல் நிற்கிறது. இது போல் பலதைச் சொல்லலாம். ஒரு திரைப்பட்த்திற்காக நாவலாக எழுதப்பட்டு பின் அது வேறொரு படமாக வெளிவந்த திருட்டு அனுபவத்தை முன்னுரையில் வேதனையுடன் சொல்கிறார். நல்ல திரைப்படம் போல் இந்த நெசவாளர் பற்றிய நாவல் விரிந்து செல்கிறது.சவுண்டியம்மன் கோவில் விசேசங்கள், .அண்ணன்மார்சுவாமிகதை, நாட்டுப்புற வழக்குகள் மனதைக் கவர்கின்றன. நல்ல திரைப்படம் போல் இந்த நெசவாளர் பற்றிய நாவல் விரிந்து செல்கிறது.கடவுள் சிலைகளைச் சுமக்கும் கோவில் சப்பரங்கள் தோளில் பாரமாகக் கிடக்கும். இந்த நாவல் “ சப்பரம் “ மனதில் பாரமாய் கிடக்கிறது.
மாலு நாவல் பற்றி செ.நடேசன் :
மாலு.. நாவலே மாலுவாக அவதானித்திருக்கிறது. அதாவது அந்த மாலு மரத்தில். இந்த மாலு மனதில். மாலு ( மரத்தில் இடப்படும் கோடுகள்)
ஏகப்பட்ட தகவல்கள். புலம் பெயர்;ந்த தமிழர்களின் பிழைப்பு நிலையை உணர்த்தியவாறு கதைக்குள்.. ;. வுpசா காலம் கடந்ததாலோ கஞ்சா விற்றதாலோ பொய் வழக்கோ மெய் வழக்கோ வாழ்வை தொலைக்க போகும் இளைஞனின் அப்பா அப்பாதுரையின் புலம்பல்கள் ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும’;ங்கிற ; மாதிரி கலெக்டர் கிட்ட கதறிப்புடணும்ங்கிற மனவேகம், ஆத்தாமைக்கு யாரும் கிடைக்காத இயலாமை, திரும்ப வரவியலாத மேலும் மேலும் இளைஞர்களை அங்கேயே ஆழ்த்தும் குடும்ப சமூக அமைப்பு, எந்த காம்பவுண்ட் சுவரை கடந்தார்கள் என தெரியாமலே அடிப்பட்டும், சுடப்பட்டும் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டும் அவலப்படும் ஆயிரமாயிரம் மீனவர்களின் வலி போக்குவது தனது கடமை என்பதை உணர பிடிக்காமல் பெரிய உடம்பை உடுப்புகளால் மறைத்து நரைத்த தலைமயிரை சாயத்தால் மறைத்து சிரிப்பே கலக்காத புன்னகையை மெய் போல புரிந்து வழக்கம் போல கடிதம் (இப்போது எழுதியது 54 என நினைக்கிறேன்) (ஆமாம்.. ஏன் திராவிடத்தை முன்னேத்தறேன்னு வேட்டியை மடிச்சுக் கட்டுக்கிட்டு அலையறவங்களுக்கு ஏன் இன்னும் அட்வான்ஸ் டெக்னாலஜி அறிமுகமாகல…?) எழுதி;க்கிட்டும், கைக்கூப்பி படோடபங்களுக்கும், அன்றைய தின அதிகாரிகளின் பந்தாட்டத்துக்கும் மத்தியில் அடுத்த நாளை வரவேற்க முந்தைய நாளில் தூங்கி விடும் அரசி;ன் துரோகம், இதையெல்லாம் கடக்கமுடியாம திணறி கடைசியில டீக்கும், பன்னுக்கும் பலியாகி போகிற அப்பாவியின் சோகம் அப்படியே வார்த்தைகள்ல வந்துருக்கு.
குணசேகரன் மூலமா குறுக்கால சொல்லிக்கிட்டு வர்ற மலேசிய வரலாறு தகவல்ஆர்வலர்களுக்கு கரும்பு. கதை மட்டும் விரும்பறவங்களுக்கு கொஞ்சம் அலுப்பை கொடுத்தாலும் அதை அவங்க ஸ்கிப் பண்ண முடியாத அளவுக்கு ‘நாட்’ போட்டு படிக்க வைக்கும் இயல்பு. அவங்கள பொறுத்தவரைக்கும் கேப்சூல் மருந்து.(தகவல் மட்டும்)
விக்னேஷ் – அப்போதைக்கு (?) தப்பிச்சுக்கிட்ட ‘அக்யூஸ்ட்’. ஆனா மனசோட பயங்களுக்கு அவனால தப்பிக்க முடியல. வயசோட குறுக்கிடல்களுக்கும் சேர்த்து தான். அப்ப தான் உயிரோட மதிப்பு புரிஞ்சுக்க முடியுது- நமக்கும். நமது வாழ்வியல் சூழ்நிலைகள் எவ்வளவு பத்திரமானவை என உணர வைக்குது. ‘எத்தை தின்னா பித்தம் தெளியும்’ங்;கிற மனநிலையை விவரிச்ச விதம் அருமை. அழகான வார்த்தைகள், துண்டு துண்டான வர்ணிப்புகள், கள்ளமே இல்லாம சுத்தி சுத்தி வர்ற மனசோட எண்ணங்கள், உம் : காவல் துறை வாகனம் வந்துட்டு போனதை இந்தோனேஷியன் எப்படி சைகையில சொல்லுவான்? சான்ஸே இல்லீங்க… தமிழ்ப்பிள்ளைங்க இல்லாம தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும் சூழல் சில இடங்களில் தமிழினம் தமிழ் பேசாத இனமாகும் சூழல் விரிந்து வருகிறது. வார்த்தைகளின் அர்த்தத்தை மீறி அதிலிருக்கும் தமிழ் மனசை என்னவோ செய்கிறது..
நிச்சயமில்லாத வாழ்க்கைய புரிஞ்சுக்கிட்ட பற்றில்லாம வாழ்ற தமிழ் ஆளுங்களும், நிதர்சன வாழ்க்கைய புரிஞ்சுக்கிட்டு எத வேணும்னாலும்; புடிச்சுக்கிட்டு எந்திரிந்து நிக்கற சீனனும் எப்படி வேறுபடறாங்க, பார்வையோட கோணங்கள் வாழ்க்கையோட போக்கை மாத்தறது, அது காலங்காலத்துக்கும் தொடர்றது அதை இலக்கிய பதிவுகளாக்கி கொஞ்சமாவது ஆசுவாசிக்கிறது – எதை படிச்சு தெரிஞ்சுக்கறது..? மாலுவை போல…
தமிழனுக்கு தமிழன் உதவிக்கிறதுங்கிறது சாதாரண நிகழ்வுன்னாலும் நீலாவோட அண்ணன் கடும்பார்வை பாத்துக்கிட்டு பேதப்பட்டு நின்னாலும் விக்னேஷோட தங்கலுக்கான மௌன அங்கீகாரம் தர்றது தமிழன்ங்கிற உணர்வை தவிர வேறு என்னவா இருக்க முடியும்..?
இந்த நாவல் பயணம் கூட ஒரு விளிம்பு நிலை பயணம் தான். கொஞ்சம் தப்பியிருந்தாலும் பயணக்கட்டுரையாக மாறியிருக்கும் அபாயப்பயணம். ஆனா எடுத்துக்கிட்ட கதையோட ஆழம் கதையின் போக்கை கூர்ந்து கவனிக்க வைக்குது. தவிர, மனசோட ஆழ்நிலையிலைக்கு உண்மைகளோட தரிசனத்தை தருது. .
கதிரேசனோட கதிய அவன் சொல்லும் போது கூட அவனுக்கு மட்டுமே நடந்திருக்கிற அசம்பாவிதமாக நினைச்சுக்கிட்டு பயணப்படற நேரத்துல பாக்குற வேண்டாத சகுனமா (என்ன அழகான உதாரணம்… ) மனசுலேர்ந்து தட்டுவுட்டுக்கிட்ட கௌம்பறது அவநம்பிக்கையோட விளிம்புல பொறக்குற அசைக்க முடியாத நம்பிக்கை தானே.. அதாவது சொந்தக்காரங்க எளவுக்கு போயிட்டு அதோட கோரத்தை நேர்ல உறவுசனங்க மூலமா தரிசிச்சுட்டு மனுசன் உடம்பாயி போனத சுடுகாட்டுல போயி தெரிஞ்சுக்கிட்டு தலைக்கு ஒரு முழுக்கு போட்டவொடனே ‘பசிக்குது.. சோத்த போடு’ன்னு பொண்டாட்டிய ஏவிட்டு தட்டுக்கு முன்னாடி உக்கார்ற நம்பிக்கைத்தனம்… அழகா சொல்லப்பட்டிருக்கு…
கிணத்து மீனுன்னா வாங்குவாரு.. நொய்யல் மீனுன்னா இந்த தொந்தரவே வேணாம்னு நவுந்துடுவாரு.. குவைத்துக்கு வேலைக்கு போன கந்தசாமி திரும்பி வந்து பனியன் கம்பனியில வேலை செய்றது – கதாசிரியர் யாருன்னு பாக்காமயே சொல்லிடலாம். சிறு சேமிப்பு ‘ஐகான்’ யை சின்ன பூச்சின்னு சொன்னது, வாய்ப்பாடு தெரிஞ்சா தான் கலெக்டரை உள்ள வுடுவாங்கன்னு நெனைக்கிறது இப்டி ஏகப்பட்ட வர்ணனைகள். எல்லார் மனசுலயும் சடசடன்னு நான்ஸ்டாப்பா ஓடிக்கிட்டு இருக்குற எண்ணங்கள சட்டுன்னு இறுக்கக்கட்டி எழுத்துக்குள்ள கொண்டுக்கிட்டு வர்றது சாமார்த்தியம்… சட்டுனு மனசுல ஒட்டிக்குது. திரும்ப திரும்ப படிக்க வைக்குது.
மனசை காண்பிக்கிற சில சொற்கள் ‘முகம் கறுத்து இருட்டாகி வேறொருத்தர் முகமாகி விடுகிறது, உட்கார்றதுக்கு அறை மூலைகளை தேடுனான் – மனசோட ஒடுக்கத்தை சொல்றது இவ்ளோ இயல்பா வருது..? அலங்கரிப்பான வார்த்தை இல்லாமயே அலங்காரமாகுது அர்த்தங்கள். குச்சிகளை சேகரிச்சு சதைய ஒட்ட வைச்சு செஞ்ச உடம்பு அழகான வர்ணனை, ஆசாமிக்கு பாக்காத நதிமூலம் சாமிங்களுக்கு பார்க்கப்படுது.
கலெக்டர் ஆபிசுல செய்தி தாளை அப்பாசாமி படிக்கும் போது மகனை பற்றிய நினைவுகள், நினைத்த செய்தி வந்து விடாதா.? என்ற ஆதங்கம், அதனால சட்டுன்னு கெடைச்சுட்டு போற சந்தோஷம் அவரது ஒழுங்கு நடவடிக்கைகள் இப்படி ஒரு மனுசன வர்ணனையே இல்லாம அறிவிச்சுடுறீங்க… முh.சண்முகசிவாவோட தன்முனைப்பு பேச்சாளனை பத்தின எழுத்துகளை தேர்ந்தெடுத்து கொடுத்த பெட்டிச் செய்தி மனுசனோட இயலாமையோட வெளிப்பாடா பதிவு செஞ்சுருக்கீங்க..மலேசியா இலக்கிய பிரதிகளின் சுருக்கங்கள் நாவலின் மலேசிய களத்தைப் புரிஞ்சிக்க உதவுது.
எல்லாரும் வெளிநாடு போயி காசு சம்பாதிக்கிற ஆசை ஏர்போர்டை ரயில்வே ஸ்டேசனா மாத்திடுச்சு – வார்த்தையில சிக்கிக்கிட்டு நாலஞ்சு தடவை படிக்க வேண்டியதாக போச்சு.
மலேசிய ரப்பர் மரங்களுக்குள்ள புகுந்துக்கிட்டு கதையோட ஒன்றி போய் பயணம் பண்ணிக்கிட்டு இருக்கோம்… இப்ப. கடைசி அத்தியாயம் வந்தாச்சு. பார்லிமெண்டுல இறைச்சல் இல்லாம தனிமனித வாழ்வுரிமை காப்பாத்தப்படுது. திருச்செல்வம் தூக்குக்கு தப்பிச்சுக்கிட்டான். அப்பாதுரை கண் தானத்துக்கு பேரு குடுத்துடுறாரு. விக்னேஷ{க்கு கனவுகள் நின்னு போயிடுது. பாரமா இருந்த ஒடம்பு தக்கையா மாறிடுச்சு. நீலாவை கூட்டிக்கிட்டு தேனிலவுக்கு நிலாவுக்கு போனான். செகடத்தாளிக்கு வந்துட்ட திருச்செல்வத்துக்கிட்ட எலக்ட்ரானிக் பொருள்கள் எதிர்பார்க்கப்படல.. குணசேகரனுக்கு சொந்த ஊரே சொர்க்கமா தெரிஞ்சுது. இது எதுவுமில்லாம இயற்கையா முடிச்சுருந்தது இயல்பா… ரொம்ப இயல்பா இருந்துச்சு.
சத்யஜித்ரோவோட படத்துல வர்ற வீட்டின் ஒரே இயனிங் மெம்பரான இளம் பொண்ணு நைட் திரும்பி வர்ராம அடுத்த நாள் வந்து இயல்பா இருக்கறது… படத்துக்கு பின்னாடிய நிகழ்வாக அந்த பொண்ணு அப்டி எங்க தான் நைட் போனா..?ன்னு கேட்ட மீடியாவோட கேள்விக்கு ‘அது எனக்கு தெரியாது.. சமூகத்துல இளம்பெண்ணோட வெளித்தங்கல், வீட்ல அதை கட்டாயமாக்கலுக்குள்ளும், மற்றதுக்குள்ளுமாக எடுத்துக் கொள்ளும் பாங்கு இது மட்டுமே படத்தின் நோக்கம்’ என்ற வங்க கலைப்புலியோட விளக்கத்தை போல உங்க கதை கோடு போட்ட பாதையில – போக்குல பயணிக்கல.. விமரிசிக்கல… இயற்கையின் போக்க எதார்த்தமா சொல்லியிருக்கு… ;.
கதை செறிவானது. ஆழமானது. சின்ன சின்ன வார்த்தைகள் வாசிப்பை அலுப்பாக்கவில்லை. ரப்பர் தோட்ட வர்ணனைகள் விஸா இல்லாமல் மலேசியாவுக்கு கூட்டிக்கிட்டு போச்சு. நல்லவேளை.. இந்த மெத்தெட்ல விசா காலாவதி ஆகாது.. அது டூரிஸ்ட் விசாவா இருந்தாலும்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆங்காங்கே அங்கீகாரம் இல்லாமல் முகமழிந்து நிக்குறாங்க. இதை பற்றிய ஒட்டு மொத்த இலக்கிய பதிவு நேரும் போது ; இந்த நாவல் ரெஃரன்ஸ் நாவலாக மாறும். சந்தேகமில்ல… தகவல் பொக்கிஷம்..
சில பாடல்கள்ல வரிகளை மீறி இசை டாமினேட் செய்யும். அது மாதிரி ரெண்டொரு எடத்துல தகவல்கள் உடனுக்குடன் பகிர்ந்துக்கிற நோக்கத்துல கதைய டாமினேட் செய்யுது. ஆனா ஆயாசம் எங்கையுமே வர்ல. ஏன்னா அதுக்குள்ளேயே கதையோட ஆழமும், கதை சொல்ற விதமும் இழுத்து இழுத்து கதையில போட்டுக்குது. (; கலைச்செல்வியின் விமர்சனத்திலிருந்து )
“ தறிநாடா “ பற்றி கோவை காமு
. திருப்பூரில் நடைபெற்ற நாற்பதாண்டுகளும் முந்திய நெசவாளர் போராட்டம் ஒன்றினை இந்நாவல் மையமாகக் கொண்டுள்ளது. கூலி உயர்விற்காக கூட அவர்கள் போராடவில்லை. குறைத்த கூலியை சீராக்கக் கோரிதான் அப்போராட்டம் நடைபெற்றது. தொழிற்சஙக ரீதியாக நெசவாளர்கள் போராடினார்கள் என்பதை விட ஜாதிய ரீதியில் ஒன்றுபட்டது அந்தப் போராட்டத்தின் பலவீனமாகும். நெசவாளர் சமூகம் சார்ந்த தொன்மக்கதைகள் இந்நாவலில் விரவிக் கிடக்கின்றன. தொனம மனிதர்களின் பிரதிகளான அவர்கள் வாழ்க்கை நிகழ் காலத்தில் விரிகிறது. ஜாதீய வன்முறைகளைக் கண்டு ஒடுங்கிப்போகிறார்கள். அரசின் அலட்சியமும் அவர்களை அந்நியமாக்குகிறது. பனியன் தொழிலுக்கு இடம் பெயர்கிறார்கள் சிலர். கேரளாவிற்கு அரிசி கட்த்தவும் செல்கிறார்கள். போராட்டங்களும் சிறை வாழ்க்கையும் அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது. அச்சமூகத்திலிருந்து வரும் இளைஞன் ஒருவனின் வாழக்கை மீதான பார்வையும் அவனின் எதிர்கால லட்சியமும் மாறுவதை இந்நாவல் சித்தரிக்கிறது. “ இதென்ன் எம்.ஜி. ஆர் வாளா. கையில் எடுத்த்தும், பிரச்சினை தீர்ந்து போறதுக்கு. கொல்லன் பட்டறையிலே இருக்கறது, தட்டித்தட்டிதா செழுமையாக்க முடியும். தானே செழுமையாகும் “ என்ற இயங்கியல் அவனின் வாழ்க்கையில் வித்தாகிறது.போராட்டமும் பொதுவுடமை இயக்க வாழ்வும் அவன் ஏற்றுக் கொள்கிறதாகிறது.
உலகமயமாக்கல் சூழலில் தொழிற்சங்க இயக்கங்கள் வலுவிழந்து கொண்டிருக்கும் நிலையிலும், இளைஞர்களின் கவனம் அரசியலுக்கு மாறாத நுகர்வுச் சூழலிலும் இந்நாவலுக்கு முக்கியத்துவம் இருக்கிறது.
தொழிற்சங்கங்கள் அரசியலுக்குள் வரவேண்டும்.அரசியல் அதிகாரம் இல்லாமல் தொழிற்சங்கங்கள் செயல்பட முடியாது. தொழிலாளர்களைப் பாதுகாக்க முடியாது. பொருளாதார இயல்பில் எல்லாம் மாறும், வளரும். ஒடுக்குமுறை, ஏற்றத்தாழ்வுகளின் எல்லா வடிவங்களையும் எதிர்த்துப் போராடுவது புதிய சமூகத்தை நிர்ணிக்கும் என்பதை வாழ்வியல் மூலம் இந்நாவல் முன்வைக்கிறது.
புத்து மண் நாவல் பற்றி பேரா. செல்வி :
படைப்பாளியின் ஏக்கம் பரந்துபட்டது. விரிந்துகொண்டிருக்கின்ற சுற்றுச்சூழல் சீர்கேட்டின் முடிவற்ற தன்மை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஈவு இரக்கமின்றி ரம்பமாய் குறுக்குவெட்டில் சர் சர் என வெட்டுகின்ற அடாவடி தொழிற்சாலைகளின் மூர்க்கம், ஆத்திக மூட நம்பிக்கைகள், அரசு, அதிகாரிகளின் அத்துமீறல், அடாவடி, விட்டேத்தி, கையறு என்ற பன்முக நிலைகள், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கின்ற செயல், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விரும்பத்தகாத நிலைகள், இன்னபிற இழிசெயல்கள் போன்றவற்றின்பால் தாக்குண்டு தாளாது, இந்த இனிய தேசமானது வெளியேற்றுகின்ற ஈன சத்தம் அத்தகைய படைப்பாளியான சுப்ரபாரதிமணியின் காதுகளில் ஊடுறுவியதை அரியதொரு எழுத்தாக்கி, தனக்கே உரியதான நடையில், புதிய பாணியில் சுட்டிக்காட்டி இடித்துரைத்திருக்கின்றார் இந்த “புத்துமண்” என்ற அழகிய சிறு நாவல் வாயிலாக.
மலை வளம் எத்தனை அரிதானது, எத்தனை அத்தியாவசியமானது என்பது தெரிந்தும் அரசு இயந்திரங்கள் அற்ப பணம் பெறும் பொருட்டு அதனைச் சூரையாட பகாசுர நிறுவனங்களுக்கு காட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்ப்பவர்களின் நிலை கேள்விக்குறி. மலை வளம் மாத்திரமல்ல, ஒட்டுமொத்த இயற்கை வளமே பாதுகாக்கப்பட்டு, அது தன்னைத்தானே மீண்டும் தகவமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் இந்த விநாடித் தேவை. “புத்துமண்” அந்த அவசரத்தை மிக நேர்த்தியாகவும், “நறுக்” என்றும் கோடிட்டுக் காட்டுகின்றது. சுற்றுச்சூழல் குறித்து பல கட்டுரைகள், கதைகள் வந்துகொண்டிருக்கின்ற வேளையில் தனது “புத்துமண்” நாவலில் சற்று வித்தியாத்தையும், கற்றுக்கொடுத்தல் தன்மையையும், பூமியின்பாலான தனது ஏக்கத்தையும் குழைத்தளித்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.
நாவலெங்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பல விவரணைகளை மிகத் தெளிவாகவும், பொருத்தமாகவும் மாத்திரமல்ல, சிலேடையுடனும் வைத்திருப்பது பாராட்டுக்குரியது. மணியனின் மனைவி சிவரஞ்சனியின் மனநிலையை ஒத்துதான் பெரும்பாலும் எல்லோருடைய வீட்டிலும் மனைவிமார்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். “நம்பிக்கையோடும், விளைவு என்னவாகும் என்ற பயம் இன்றியும் ஒரு காரியத்தில் இறங்குவதுதான் துணிவு. கோழைத்தனம் இருக்குமிடத்தில் துணிவு இருக்காது. நமது மக்கள் கோழைகளாக இருக்கிறார்கள். இந்தக் கோழைத்தனத்துடன் வெற்றியைப் பற்றிப் பேசுவது முரண்பாடான செயல். துணிச்சலான உள்ளமும் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் அபாயத்தை எதிர்கொள்ளும் திறனும் வேண்டும். போர்க்களத்தில் வேறு வழியின்றி அபாயத்தைச் சந்திக்கிறார்கள். ஆனால் நமது போராட்டத்தில் விரும்பியே அபாயங்களைச் சந்திக்க வேண்டும்” என்ற மகாத்மா காந்தியின் கருத்தை உள்வாங்கி இன்றைய தலைமுறைகள், பகாசுர நிறுவனங்களிடமிருந்து நமது இயற்கையின் சூழலைக் காக்கப் புறப்பட வேண்டும் என்ற உந்துதலை இந்த நாவல் படிக்கும்போது ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ( விசாகனின் விமர்சன்க்குறிப்புகள்)
தமுஎகச மாவட்ட செயலாளர் ஆனந்தன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். பியூசிஎல் மாநிலசெயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன், கலைஇலக்கிய பெருமன்ற மாநில செயலாளர் ப.பா ரமணி,குறும்பட இயக்குனர் பேரெழில் குமரன், கோவை இலக்கிய சந்திப்பு அமைப்பாளர் இளஞ்சேரல், ஓசை அமைப்பைச் சார்ந்த கவிஞர் அவை நாயகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கலைவாணன் நாட்டுப்புற, கானா பாடல்களைப் பாடினார்.
- ஏமாற்றம்
- கிரீன்லாந்தின் பனித்தளம் விரைவில் ஆறுகளாய் உருகி ஓடிக் கடல் நீர் மட்டம் உயர்கிறது
- மணல்வெளி மான்கள் – 1
- மலேசியா தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார்
- ஆனந்த்—தேவதச்சன் கவிதைகள் அவரவர் கைமணல்–தொகுப்பை முன் வைத்து…
- இடைத் தேர்தல்
- சாவு விருந்து
- சுப்ரபாரதிமணியனின் நான்கு நாவல்கள் : ஆய்வரங்கு
- மிதிலாவிலாஸ்-19
- தொடுவானம் 68 – நான் இனி வேலூர் வாசி
- மூன்று குறுங்கதைகள்
- நெருடல்
- “ ப்ரோஜேரியா சிண்ட்ரோம்………..”
- முழுக்கு
- பல்லக்கு
- தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் ‘ பறையொலி ” தொகுப்பை முன் வைத்து…
- சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா
- கடந்து செல்லும் பெண்
- மே 23 அன்று மாலை புதுச்சேரியில் “காப்காவின் நாய்க்குட்டி” என்ற எனது நாவலின் வெளியீட்டு விழா
- அந்தக் காலத்தில்
- வயசு
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ் – அத்தியாயம் 6
- கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு
- சவுதி அரேபியாவின் ஷியாக்கள்- ரியாத்தின் இன்னொரு போர்- “வெறுப்பின் மொழி வலுவடைகிறது”
- சும்மா ஊதுங்க பாஸ் – 2