நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 8

This entry is part 11 of 21 in the series 31 மே 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி

காலையில் விழித்த யாழினிக்கு அதிசயம் காத்திருந்தது. இரவு பயம் காட்டிய அந்த பேய் பங்களா தெய்வீக கன்னிகையாய் நிமிர்ந்து நின்றிருந்தது. கீதா மணக்கமணக்க காஃபி யோடு வந்து யாழினியை எழுப்பினாள். காஃபியோடு வெளியே வந்த யாழினிக்கு மற்றும் மொரு ஆச்சர்யம், இரவு சுருண்டு கிடந்த வயோதிக மூதாட்டி கோட் மிடியுடன் கழுத்தில் முத்துமாலை அணிந்து நாற்காலியில் மிடுக்குடன் அமர்ந்து எதிர்சாரியில் தெரிந்த வயல்களில் பறந்துக்கொண்டிருந்த கொக்குகளை

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். இல்லை இல்லை வேடிக்கைப் பார்ப்பதை போல் அவள் உட்கார்ந்திருந்த தோரணைத் தோன்றினாலும் பார்வை இல்லை என்பதுஅவளருகில் வைக்கப்பட்ட ஆறிபோன தேநீர் உணர்த்தியது. அல்லது அந்த தேநீரை அவள் விரும்பாமல் இருந்திருக்கலாம்.

யாரு யாழினியா என்றாள் நடை ஓசையை வைத்து,

எப்படி பாட்டிமா கண்டுபிடிச்சீங்க ?

இப்படி நிதான நடை இங்கிருப்பவர்களுக்கு இல்லை யாழினி என்றாள் கிழவி்

தேவகி என்று அழைக்காமல் யாழினி என்கிறீர்களே என்றாள் யாழினி

இருப்பதை அப்படியே எந்த திரிபும் இல்லாமல் ஏற்பது தான் ஆரோக்கிய மனதின் அடையாளம் யாழினி.

தேவகி வேற யாழினி வேற உருவத்துல ஒத்து வந்தாலும் குணம் வேறதான் என்றாள் கிழவி. எல்லாரலயும் ஒண்ணுபோல நிச்சயமா இருக்கவும் முடியாதுசிந்திக்கவும் முடியாது. நம்ம சிந்தனைகள் தான் நம்மை உருவாக்குது யாழினி. நீ யோசிக்கும் போது உறுதிபாட்டோடு யோசிச்சா அது தான் உன் குணங்களை உருவாக்கும், உன் சிந்தனையே செயல்களாகவும் வெளிப்படும்.

யாழினி ம்ம் கொட்டிக்கொண்டிருக்கும் போதே, டேவிட் வந்து சேர்ந்தான்.

எப்படி தூங்கனீங்க தேவகி ?

நல்லா தூங்கினேன்அண்ணா. பாட்டி அதிக சிரமம் கொடுக்கவில்லையே

இல்லையே நன்றாக உறங்கிவிட்டேன் அண்ணா அவர்களுக்கு ஏதும் தேவை இருந்திருக்குமோ என்று எனக்கு கவலையாக இருந்தது. பாட்டிக்கு மாலைக் கண்நோய்தேவகி. இரவில் மட்டுமே தடுமாறுவாள். பகலில் அவள் வேலையை அவளே செய்துக்கொள்வாள். இது தெரியாமல் அநேகர் பகலிலும் கண் தெரியாது என்றுஎண்ணிக்கொண்டு சுதந்திரம் எடுத்துக்கொள்வார்கள் போல என்றான் டேவிட் சிரித்தவாறு

அந்த வாட்ச்மேனையும் கீதாவையும் வேலையை விட்டு எடுத்துவிடலாம் என்றிருக்கிறேன் பாட்டிம்மா என்றான்.

எதுக்குப்பா ஏதோ சின்னஞ்சிறுசுங்க கட்டி அவுட் அவுசுல வச்சுடு, அவங்க லீலையை அங்க வச்சுக்கட்டும் என்ன நான் சொல்றது என்று ஹக் ஹக் ஹக் என்றுசிரித்தாள்.

வயோதிகம் அவள் இளமைக்கு மாற்றாக வேறு ஒரு கவர்ச்சியை அவளுக்குக் கொடுத்திருந்தது. நீ எப்ப லண்டன் போற டேவிட் ?

இன்னும் சில தினங்கள் கழித்து என்றான்.

உன் மனைவி ?

அவளுக்கு விசா கிடைக்க தாமதம் பாட்டிம்மா அதோடு உங்களுக்கும் பாஸ்போட் விண்ணப்பிததிருக்கிறேன் என்றான்.

நானா? கண்கள் இடுங்கி பார்த்தாள் கிழவி

யார் இருக்காங்க பாட்டிம்மா உங்கள பார்த்துக்க, எங்க கூட வந்துடுங்க, இந்தியால உங்க ஒருத்தருக்காகத்தான் ஓடி வரவேண்டியதா இருக்கு என்றான் டேவிட்.

பிறகு யாழினியை என்னதுக்குப்பா கூட்டிட்டு வந்த, என்று வினா எழுப்பினாள் கிழவி

அது பெரிய கதை பாட்டிம்மா, வேண்டுமானால் யாழினிக்கும் பாஸ்போட் அப்ளே பண்ணலாம் என்றான் டேவிட்.

இவ்வளவு பெரிய இடத்ததை விட்டுட்டு லண்டன் எதுக்குன்ணா போறீங்க ?

இது எங்கள் மூதாதையரின் சொத்து தேவகி. கடைசியாய் இங்கே என் தங்கையின் மரணத்திற்கு பிறகு பேய் உலவுவதாய் வதந்தி பரவ, யாரும் இவ்விடத்தை வாங்கமுன் வரவில்லை. நேற்று நீயே கூட இந்த பங்களாவைப் பார்த்து பயந்தாய் தானே!

செத்தவங்க ஆவி ஒண்ணும் பண்ணாதண்ணா, என்றவள் வெளியே இருந்த வேம்பு மரத்தைப் பார்த்தாள் அது பச்சு பசேலென்று வளர்ந்திருந்தது.

உங்க தங்கச்சி எங்கசெத்தாங்க என்றாள் டேவிட்டைப் பார்த்து. அந்த அறைதான் தான் என்று கடைசியில் இருந்த ஒரு அறையை காண்பித்தான். அந்த ரூம் அவளுக்கு ரொம்ப பிடிக்கும்தேவகி என்றான்.

அவ பேரும்தேவகி தான் என்றான் தன்னை மறந்து, உங்க கிளாஸ் மெட் ப்ரண்ட் பேருன்னு சொன்னீங்க. ஏன் ரெண்டு தேவகி நம்ம வாழ்க்கையில இருக்கக் கூடாதாதேவகி என்றான் டேவிட்.

மூணாவதா என்னையும் தேவகின்னு இல்ல கூப்பிடறீங்க என்றவள். கீதா இங்க சாணம் கிடைக்குமா என்றாள். கூடவே செம்மண் கொஞ்சம் குங்குமம் என்றாள்.

கீதா தலையை சொரிந்துக்கொண்டே சென்று சிறிது நேரத்திற்கெல்லாம் அவள் சொன்ன சாணம் குங்குமம் செம்மண்ணோடு வந்து சேர்ந்தாள்.

இன்னைக்கு தேவகிக்கு படையல் போடனும், முருங்கை கீரை பூசணிக்காய் கத்தரிக்காய் சாம்பார், சாதம் சமைச்சுடு. என்று கீதாவைப் பணித்தவள் ஒரு இனிப்பும்புதுத்துணியும் வாங்கி வந்துடுண்ணா என்றாள் யாழினி.

தேவகி போட்டோ இருக்கா என்றும் கேட்டாள்.

ரொம்ப நாளாச்சும்மா அவ நினைவாவே இருக்குன்னு எல்லாத்தையும் தூக்கி பரண்ல போட்டுட்டோம் என்றான்.

எங்க இருக்கு பரண் என்றாள் யாழினி ?

அதோ அவ ரூம் மேல தான் என்றான் டேவிட்

சாணத்தைக் எடுத்துக்கொண்டு அந்த அறையினுள் நுழைந்தாள் யாழினி. அந்த அறையோடு அவளுக்கு ஒரு நெருக்க உணர்வு ஏற்பட்டது. பின்னாலே வந்த டேவிட்என் தங்கை கலெக்டர் ஆகனும்ன்னு விரும்பினா யாழினி என்றான் அந்த அறைக்குள் அவள் யாழினி என்று அழைத்தது அவன் தங்கைக்கு தரும் மரியாதை என்று எண்ணிக் கொண்டாள் யாழினி.

அந்த அறை முழுவதும் ஐஏஎஸ் தேர்வுக்கான புத்தகங்கள் நிறைய அடுக்கப்பட்டிருந்தன.

அந்த சன்னல் அவளுக்கு நிரம்ப பிடிக்கும் என்றான். அந்த சன்னல் கிழக்கு நோக்கி விசாலமாய் இருந்ததால், தூரத்தில் தெரிந்த மலைகள் பெண்களின் மார்பகங்களை நினைவுப் படுத்தியது. அதில் தக தகக்கும் சூரியனை காலையில் காணலாம் என்றெண்ணிக்கொண்டாள் யாழினி.

தூரத்து விளை நிலங்கள் வரண்டு, செம்மண் கோலம் போட்டிருந்தது. ஏர் ஓட்டியிருக்கு, விளைச்சல் இல்லேன்னாலும் ஏர் ஓட்டி வச்சுடறது வாட்ச் மேனு என்றாள்கீதா.

சுவரில் டெயில்ஸ் ஒட்டப்பட்டிருப்பதால் சாணம் பூசமுடியாதே என்று யோசித்தவள் அங்கிருந்த சதுர அட்டை ஒன்றை எடுத்து அதில் சாணத்தை கரைக்காமல்அப்படியே எடுத்து பூசினாள். அதில் செம்மண் கொண்டு தேவகி நீ எங்களோடு தெய்வமாய் இருக்கிறாய் என்று எழுதினாள். தேவகியின் பெயர் பெரியதாய் தனித்துஎழுதப்பட்டிருக்க, அந்த பெயரின் மேல் குங்குமப் பொட்டை வைத்தாள்.

டேவிட் வாய்விட்டுப் படித்தான் தேவகி நீ எங்களோடு தெய்வமாய் இருக்கிறாய். பேய் என்று பயந்துக்கொண்டிருந்த ஒரு ஆத்மாவை தெய்வமாக்கிவிட்டாளே என்றுஅவன் யோசித்துக்கொண்டிருக்க.

நேத்து வர்ற வழியில சாமியார் தோப்பாண்ட கனி கேட்டோம் கீதா, தேவகி தெய்வமா கடவுள் கிட்ட கன்னி தேவதையா இருக்காளாம் இன்னும் கொஞ்ச நாள்லபிரின்சி வயித்துல பொறந்துடுவாளாம்.

பிரின்சி அப்படியா என்பது போல் டேவிட்டை பார்க்க ஆம் என்பதாய் வேறு வழியின்றி தலையசைத்து வைத்தான்.

108 சாமந்தி மலர்களை கொண்டு வரச் சொல்லி. எழுதப்பட்டிருந்த அந்த அட்டைப் படத்தில் இருந்து ஒவ்வொரு மலராய் வைத்து தேவகி என்னோடு வரவேண்டும்என்று சொல்லிககொண்டே பின்னோக்கி நகர்ந்தாள்.

108 மலர்கள் முடிந்த இடம் அந்த வேப்பமரமாய் இருக்க. அங்கிருந்த முக்கோண வடிவ கல் ஒன்றை தேடி அந்தமரத்திற்கு கீழே நட்டு மூன்று குங்குமத்தீட்டல்களை தீட்டி நடுவில் மஞ்சள் சந்தனம் குங்குமத்தை ஒருசேர பொட்டிட்டாள்.

அங்கு வந்த பாட்டியும் கூட அந்த கல்லை கையெடுத்து கும்பிட வேறு வழி இல்லாமல் கீதா, வாட்ச்மேன்,பிரின்சி டேவிட் அனைவரும் கும்பிட, இந்த பெண் எதற்குஇப்படி பொய் சொல்கிறாள் என்று யோசித்தான் டேவிட்.

இப்போது தேவகி வாழுமிடம் மரத்தடி என்றானதால் அட்டையையும் எடுத்துக்கொண்டு வந்து மரத்தில் கட்டிவிட்டாள்.

உண்மையில் அந்த பங்களாவை விட்டு ஒரு அனுமாஷ்யச் சக்தி விலகிவிட்டதைப் போன்றே தோன்றியது டேவிட்டிற்கு.

தேவகிக்கா என் வயதுத்துல தான் வரப்போறாளா என்று ஆசையாய் வயிற்றைத் தடவிக்கொண்டாள் பிரின்சியும். அந்த குடும்பத்தில் இருந்து பேய் பயம் அகல இந்தசெயல் காரணமாகியிருந்ததோடு. கீதா மூலம் தேவகி தேவக்கன்னி ஆனா சங்கதி அந்த கிராமம் முழுவதும் பரவிக்கொண்டிருந்தது.

[தொடரும்]

Series Navigationஆறுசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 3
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *