உதவிடலாம் !

author
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் …. அவுஸ்த்திரேலியா

பார்வையை இழந்தவர்கள்
பலபேர்கள் இருக்கின்றார்
பார்வையுடன் இருப்பவர்நாம்
பலவழியில் உதவிடலாம் !

கல்விதனைக் காணாமல்
கணக்கற்றோர் நாட்டிலுள்ளார்
கற்றுநிற்கும் நாமவர்க்கு
கற்பதற்கு உதவிடலாம் !

அன்னைதந்தை தெரியாது
அலமந்து நிற்பார்க்கு
ஆதரவுக் கரங்கொடுத்து
அரவணைத்து உதவிடலாம் !

ஓலைக் குடிசைதனில்
ஒழுக்குவீட்டில் வாழ்பவர்க்கு
ஒழுங்கான வாழ்வுவர
உள்ளத்தால் உதவிடலாம் !

நீர்கூடக் கிடைக்காமல்
நிம்மதியைத் தொலைத்துநிற்கும்
ஊரெல்லாம் தனையெண்ணி
உணர்வோடு உதவிடலாம் !

மருத்துவ வசதியின்றி
மனம்நொந்து நிற்பார்க்கு
மருத்துவத்தைத் தெரிந்தவர்கள்
மனதார உதவிடலாம் !

ஏமாற்றிப் பிழைப்பவரின்
இடருக்குள் புகுந்தவர்கள்
இன்னலின்றி வெளியில்வர
இயன்றவரை உதவிடலாம் !

மூடத்தனம் என்னும்
மூட்டைக்குள் இருப்பவர்கள்
முன்னேறி வருவதற்கு
முயற்சியுடன் உதவிடலாம் !

அன்புதனைக் காணாமல்
அநேகரிங்கு இருக்கின்றார்
அவரிடத்து நாம்சென்று
அன்புகாட்டி உதவிடலாம் !

Series Navigationகாற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3பயன்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *