காதலிக்கச்சொல்லும் வள்ளுவர் 1

This entry is part 6 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

(வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (7)
அதிகாரம் 115: அலர் அறிவுறுத்தல்)

“நெய்யூற்றி நெருப்பணையுமா”

தூற்றுதல் தவிருங்கள்
தூற்ற தூற்ற
காமம்
ஊற்றெனப்பெருகும் இரகசியம்
உணருங்கள்
இதைக் காதலரே விரும்புவர்
ஊர்தூற்றும் எம்காதலும்
அப்படித்தான்

என் மலர்விழியாளின் அருமை.
யாவரும் அறியாத காரணத்தால்
எளியவள் என
எல்லோரும் எள்ளியதால்
எல்லோரும் எண்ணியதால்
அவள் எனக்கு எளிதானாள்

அவளை அடையாமலேயே
அடைந்தநிலை நானடைந்தேன்
நான் பெற்றேன்

மது அருந்த அருந்த
மயக்கம் கூடும்
மதுவின்மீது
விருப்பம் கூடும்
கதலைத்தூற்ற தூற்ற
காமம் எளிதாய்
வெளிப்படலாயிற்று

நான் அவளைக்
கண்டது என்னவோ
ஒரு கணம்தான்;
ஒரு நொடிதான்;
ஒரு நாள்தான்.

நிலவைப் பாம்பு
கவ்விய செய்தியாய்
ஊரின் தூற்றலை உரமாக்கி
தாயின் சுடுசொல்லை நீராக்கி
காமப்பயிர்
சீராக வளர்கிறது

அஞ்சாதே என
ஆறுதல் கூறி
கொஞ்சியவர்
இன்று
ஊர்தூற்றலுக்கு அஞ்சினாரோ?
எங்கு அவரென
அவளெண்ணக்கூடும்!

ஊரார் சேர்ந்து
ஒருசேரத்தூற்றினால்
காமம்
குறையுமா என்ன?

ஊர்
தூற்ற தூற்ற
காமம்
ஊற்றென ஆயிற்று
நொடிதொறும்
நொடிதொறும்
அது ஊறிற்று
இல்லையேல் அது
அற்றுப்போயிருக்கும்

என் உயிர்
நிலைபெற்றிருக்க
இந்த
ஊர் தூற்றுதல்
ஒரு காரணம்

இந்த இரகசியம்
பலரும்
அறியாத ரகசியம்
வள்ளுவர் சொல்கிறார்
‘நெய்யையை ஊற்றி
நெருப்பை அணைக்க முடியுமா?’

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)(16.09.2013)

Series Navigationஇருதலைக்கொள்ளிமிதிலாவிலாஸ்-29 (நிறைவு)
author

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *