அன்புள்ள ஆசிரியருக்கு
சென்ற சில வாரங்களில் ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையா என்று தினமணி மதுரை பதிப்பில் நிகழ்ந்த கருத்துப் பறிமாற்றலில் சிலர் இவற்றை முழுமையும் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தமிழ் கிரந்தம் அல்லது பல்லவ கிரந்தம் ஏன் உருவாக்கப்பட்டது என்று அறியாதவர்கள் தான் இவ்வாறு கூறுவர். இதை ஏற்றுக் கொண்டால் ஜெயலலிதா,ஷண்முகம்,ஸரஸ்வதி,ஹரிஹரன்,லக்ஷ்மி,ஸ்ரீதேவி என்ற பெயருள்ளவர்கள் தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டுமா அல்லது தமிழ் நாட்டிலிருந்து வெளியேற வேண்டுமா? கருணாநிதி, தயாநிதி,கலாநிதி,உதயநிதி என்போர் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் இந்த ஸம்ஸ்க்ருதப் பெயர்களில் கிரந்த எழுத்துகள் இல்லையே.
தமிழில் 30 எழுத்துகள் உள்ளன. ஸம்ஸ்க்ருதத்திலும் அதைச்சார்ந்த வட இந்திய மொழிகளிலும் 51 எழுத்துகள் உள்ளன. ஆனால் அவற்றில் எ,ஒ, ழ இல்லை. ழ தமிழ் மலையாள மொழிகளில் மட்டுமே உள்ளது. தமிழில் க,ச,ட,த,ப, என்ற எழுத்துகளின் ஒலிகள் சொல்லின் இடத்திற்குத் தக மாறுகின்றன. மற்ற எல்லா இந்திய மொழிகளிலும் ஸ்ம்ஸ்க்ருதத்தில் உள்ளது போலவே மேற்காணும் 5 மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் நான்கு வரி/ஒலி வடிவங்கள் உள்ளன. மேலும் ஒப்பு நோக்கினால் தமிழில் கீழ்க்காணும் (அலங்கடைகள்) தவிர்ப்புகள், தடைகள் உள்ளன.
தமிழில் –
௧- மெய்யெழுத்துகள் மொழிக்கு முதலில் வாரா. தொல் காப்பியம் சூ 60: உயிர் மெய்யல்லன மொழிமுதலாகா.
௨- இரண்டு வெவ்வேறு மெய்யெழுத்துகள் சேர்ந்து வாரா. ஸம்ஸ்க்ருதத்தில் நான்கு வெவ்வேறு மெய்யெழுத்துகள் கூட சேர்ந்து வரும்.
௩- எல்லா மெய்யெழுத்துகளும் மொழிக்கு முதலில் வாரா. பத்து மெய்யெழுத்துகள் மட்டும் மொழிக்கு முதலில் வரும். அவற்றிலும் சில, எல்லா பன்னிரண்டு உயிரெழுத்துகளோடு மொழிக்கு முதலில் வாரா.
இதனால் மற்ற மொழிகளில் உள்ள பெரும்பாலான பெயர்களைத் தமிழில் சரியாக எழுதவோ பேசவோ இயலாது.
ஸம்ஸ்க்ருத எழுத்து அமைப்பை, தமிழ் தவிர எல்லா இந்திய மொழிகளும் ஏற்றுக்கொண்டன. ஸம்ஸ்க்ருதம் எழுத வட இந்தியாவில் நாகரி எழுத்துக்களும் தமிழ்நாட்டில் (பல்லவ) கிரந்த எழுத்துக்களும் உருவாக்கப்பட்டன. கிரந்த எழுத்துக்கள் வட்டெழுத்துகளாவும் பின்பு மலயாள எழுத்துகளாவும் மாறின.
தமிழ் நாட்டுக் கோவில்களில் உள்ள பெரும்பாலான கல்வெட்டுகளில் கிரந்த எழுத்தும் தமிழ் எழுத்தும் கலந்து உள்ளன. எல்லா இந்திய மொழிகளிலும் ஸம்ஸ்க்ருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் உள்ள ஒலிகளை சரியாக எழுதி (transliteration) பேச முடியும். தமிழர்கள் , தமிழ் வானொலி, தொலைக்காட்சி அறிவி்ப்பாளர்கள் வேற்று மொழிப்பெயர்களைத் தவறாகவே கூறுகின்றனர். இருபத்தியாறே எழுத்துகள் கொண்ட ஆங்கிலச் சொற்களையும் தமிழில் எழுத/ஒலிக்க இயலாது. இந்த குறைபாட்டிற்கு என்ன தீர்வு.
1. வழக்கிலுள்ள ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் எழுத்துக்களை முழுவதும் ஏற்றுக்கொள்ளவேண்டும்’
2. வேற்று மொழிச்சொற்கள் வருமிடத்து ka,kha,ga,gha,ca,cha,ja,jha போன்ற ஒலிகளுக்கேற்ப தேவையானவிடங்களில் க1, க2, க3, க4 , ச1,ச2,ஜ1,ஜ2 என்று எழுதவேண்டும்.
3. நாகரியையோ கிரந்தத்தையோ கற்றுக்கொள்ளவேண்டும். வேண்டாமெனில் சில நுற்றாண்டுகளுக்கு முன்பே தமிழிலிருந்து பிரிந்து சென்ற மலையாளத்திலிருந்து ക,ഖ,ഗ,ഘ, ച,ഛ,ജ,ഝ போன்ற எழுத்துக்களை எடுத்துக்கொள்ளவேண்டும்.
1. (நான் மலையாளம் படிக்க பதினைந்தே நாட்களில் கற்றுக்கொண்டேன். என் தாய்மொழி தெலுங்கு.)
ஸு.கோவிந்தஸ்வாமி
- ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையா ?
- ஓநாய்கள்
- திருக்குறளில் இல்லறம்
- சுந்தரி காண்டம் ( தொடர் கதைகள் ) 2. திரிலோக சுந்தரி
- டிசைன்
- Jawaharlal Nehru’s biography retold in rhyming couplets
- ஊறுகாய் பாட்டில்
- திரை விமர்சனம் வாலு
- யாப்பு உறுப்பு: கூன்
- மாயமனிதன்
- டெங்கூஸ் மரம்
- காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம்( 4 )
- உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழாவும், முதல் கலந்துரையாடல் கூட்டமும் நாள்: 27.09.2015 இடம்: பாரிசு(பிரான்சு)
- தொடுவானம் 81. ஓலைச்சுவடியில் ஒளிந்திருந்த தமிழ்
- சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 5
- கழுதை