கூடுவிட்டுக் கூடு

This entry is part 15 of 22 in the series 27 செப்டம்பர் 2015
 
தன் கடும் பயிற்சியில்
கைகூடியது அவனுக்கு
கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை..
கைகூடியக் கலையை
சோதிக்க நினைத்தவன்
உயிரிழந்த வெற்றுடம்பைத்
தேடியபோது.. எதிரில்
நின்றிருந்தது வளர்ப்புப் பூனை
கழுத்தை நெரித்து பூனயைக்
கொன்றான்.. பூனையின் உடலுள்
தன்னுயிர் நுழைத்தான்..
பூனையின் உயிர்
உடல்விட்டலைந்தது..
பிணமாய்க் கிடந்த
தன்னுடல் அசைவை
கண்டதும் பூனை…
தன்னுயிர் கொண்டு
அவனுடல் நுழைந்து
எழுந்து அமர்ந்தது..
அவனது குரலில்
பூனை சொன்னது
பூனையாய் இருந்த
அவனை நோக்கி,
” நீ வித்தை கற்கும் போதெல்லாம்
 உடனிருந்து உன்னித்தவனடா நான்..
இனி நீ பூனை… நான் நீ.”என்று

 

Series Navigationகுரு அரவிந்தன் பாராட்டு விழாவும் நூல் வெளியீடும்The Deity of Puttaparthi in India
author

பத்மநாபபுரம் அரவிந்தன்

Similar Posts

Comments

  1. Avatar
    Rajesh says:

    நல்ல கற்பனை .. பூனை மனிதனாகவும் தன் பரிசோதனைக்காக பூனையைக் கொன்றவன் பூனையாகவும் கூடு மாறியது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *