பொன்னியின் செல்வன் படக்கதை – 7

This entry is part 16 of 23 in the series 4 அக்டோபர் 2015

Ponniyin Selvan -16Ponniyin Selvan -17

Series Navigationமக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின் நினைவுநாள் பாட்டரங்கம் – 10 அக்டோபர் 2015பெரியபுராணத்தில் – மெய்பொருள் நாயனாரின் கருணையுள்ளம்
author

வையவன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    ராஜன் குறை says:

    கந்தமாறனை அந்த இளைஞனாக கடைசியில் மாற்ற வேண்டிய தேவை என்ன? சம்புவரையர் ஏன் ஏதோ போருக்கு குரல் கொடுப்பது போல பாவனை கொள்கிறார்? கோட்டை வாயிலில் கலவரம் செய்யும் வந்தியத்தேவனின் பின்னால் உள்ள கதவு என்ன? கந்தமாறன் எங்கிருந்து வருகிறான்? ஊகும். நிறைய வேலை செய்யவேண்டும்; ரொம்பவும் சொதப்பலாகிவிடும்.

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    வையவன் பதில் :-

    முகக்கயிற்றை விட்டார்கள்.

    குதிரையின் அடிவயிற்றில் வந்தியத்தேவன் தன் இரு கால்களினாலும் ஒரு அழுத்து அழுத்தினான். அதே நேரத்தில் உடைவாளை உறையிலிருந்து உருவி எடுத்தான். மின்னல் ஒளியுடன் கண்ணைப் பறித்த அந்த வாள் சுழன்ற வேகத்தினால் அவனுடைய கையில் திருமாலின் சக்கராயுதத்தை வைத்துக் கொண்டு சுழற்றுவது போல் தோன்றியது. குதிரை முன்னோக்கிக் கோட்டைக்குள்ளே பாய்ந்து சென்றது. வழியிலிருந்த வீரர்கள் திடீர் திடீரென்று கீழே விழுந்தார்கள். வேல்கள் சடசடவென்று அடித்துக் கொண்டு விழுந்தன. வம்பு பேசிய பழுவூர் வீரர்களின் பேரில் குதிரை பாய்ந்தது. இந்த மின்னல் தாக்குதலைச் சிறிதும் எதிர்பாராத வீரர்கள் நாற்புறமும் சிதறிச் சென்றார்கள்.

    இதற்குள் வேறு பல காரியங்கள் நிகழ்ந்து விட்டன. கோட்டைக் கதவுகள் தடால், தடால் என்று சாத்தப்பட்டன. “பிடி! பிடி!” என்ற கூக்குரல்கள் எழுந்தன. வேல்களும் வாள்களும் உராய்ந்து ‘கிளாங்’ ‘கிளாங்’ என்று ஒலித்தன. திடீரென்று அபாயம் அறிவிக்கும் முரசு ‘டடம்!’ ‘டடம்!’ என்று முழங்கிற்று.

    வந்தியத்தேவன் குதிரையைச் சுற்றிலும் வீரர்கள் வந்து சூழ்ந்து கொண்டார்கள். இருபது, முப்பது, ஐம்பது பேருக்கு மேலேயே இருக்கும். குதிரையின் மேலிருந்த வந்தியத்தேவன் பாய்ந்து தரையில் குதித்தான். கையிலிருந்த வாளைச் சுழற்றிக் கொண்டே, “கந்தமாறா! கந்தமாறா! உன் ஆட்கள் என்னைக் கொல்லுகிறார்கள்!” என்று கத்தினான்.

    இதைக் கேட்டதும் அவனைச் சூழ்ந்திருந்த வீரர்கள் திடுக்கிட்டுச் சிறிது தயங்கி விலகி நின்றார்கள்.

    அச்சமயம் மாளிகையின் மேல்மாட முகப்பிலிருந்து, “அங்கே என்ன கூச்சல்? நிறுத்துங்கள்!” என்ற ஒரு இடி முழக்கக் குரல் கேட்டது. அந்தக் குரல் கேட்ட இடத்தில் ஏழெட்டுப் பேர் நின்று கீழே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    “எஜமான்! யாரோ ஒரு ஆள் காவலை மீறிப் புகுந்து விட்டான். சின்ன எஜமான் பெயரைச் சொல்லிக் கூவுகிறான்!” என்று கீழேயிருந்த ஒருவன் சொன்னான்.

    “கந்தமாறா! நீ போய்க் கலவரம் என்னவென்று பார்!” – இவ்விதம் மேல் மாடத்திலிருந்து அதே இடிமுழக்கக் குரல் சொல்லிற்று. அந்தக் குரலுக்கு உடையவர்தான் செங்கண்ணர் சம்புவரையர் போலும் என்று வந்தியத்தேவன் எண்ணினான்.

    The above is the original text from Kalki. We can’t make a graphic story for portraying inch and inch of Kalki’s sentence. This graphic story gives a overall picture of Ponniyin Selvan. I request the reader to wait still further to get the full grasp.

    வையவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *