நகுலன் கவிதைகள்

author
0 minutes, 7 seconds Read
This entry is part 4 of 23 in the series 4 அக்டோபர் 2015

விக்ரமாதித்யன் நம்பி

பாஷையைக் கையாள்பவன் எவனும் சங்ககாலத்திலிருந்து இன்று வருகின்ற புதுக்கவிதை வரையில் தொடர்ந்து வரும் மொழியைத் தனது சொத்தாகத்தான் கருதுகிறான். இந்தமாதிரி ரஸôனுபவமாக வந்த இலக்கிய சரித்திர – மொழி ஞானத்தினால் அவன் லாபமடைகிறான். அவனால் இந்த நூற்றாண்டின் அனுபவத்தை வெளியிடக்கூட சங்க கால இலக்கிய மொழி பயன்படலாம்; பயன்படக்கூடாது என்று ஒரு விதியுமில்லை. அது அவன் பக்குவத்தையும் ஈடுபாட்டையும் பயிற்சியையும் பொறுத்தது. மேலும் சங்க இலக்கியத்தில் காணப்படும் விளிச்சொற்கள், ஓசை அமைதி, சொல்முடிவுகள், அர்த்த வேறுபாடுகள் இவையெல்லாமே ஒரு இலக்கிய ஆசிரியனுக்குச் சில சந்தர்ப்பங்களில் பயன்படலாம்.

கவிதைக்கு ஓசையுடன் உள்ள தொடர்பை-எப்படி வேண்டுமானாலும் அதை வரையறுத்துக் கொள்-என்னால் புறக்கணிக்க முடிவதில்லை. கவிதை என்பது, “கவிஞனின் உணர்ச்சி (அதாவது, கவிஞனின் தனிமனித உணர்ச்சிப்பீறிடல் அன்று) உணர்வாக வெளிப்பட்டு உருவமும் உள்ளடக்கமும் பிணைய ஒரு கவிதை மாத்திரமில்லை, பொதுவாக எல்லாக் கலைப்படைப்புகளுமே அனுபவத்தை மொழியாக மாற்றும் ஆற்றல்; இதனாலேயே தனிப்பட்டவன் அனுபவத்திற்கு ஒரு ஆழம், ஒரு நுணுக்கம், ஒரு பரிணாமம் எல்லாமும் வந்து சேர்ந்து விடுகின்றன.

எல்லாக் கவிதைகளுமே-ஏன் எந்த ஒரு கலைப்படைப்புமே – ஒரு அனுபவ-புனர் சிருஷ்டி என்று சொல்லலாம். ஒரு கவிஞன் எந்த விஷயத்தைப் பற்றியும் அனுபவபூர்வமாகவும் கலாபூர்வமாகவும் எழுத வேண்டும்.

‘நகுலன் கட்டுரைகள்’ நூலிலிருந்து

நான் என் கவிதையில் எழுதியிருக்கிறமாதிரி, ஒரு புதுக்கவிஞன் இல்லை. நான் ஐரோப்பிய இலக்கியங்களைப் படிக்கலாம், ஆங்கில ஆசிரியனாக இருக்கலாம், ஆனால் ஒரு சம்பிரதாயத்தில் வந்தவன். ஒரு சூழ்நிலையில் வாழ்பவன். இவையெல்லாம் தவிர்க்கப்படவேண்டிய குறைபாடுகள் என்றால், உண்மையாகவே சொல்கிறேன்; என்னால்  அவற்றிலிருந்து மீறமுடியாது. அதைப் போலவேதான் என்னால் ஒரு அனுபவத்தை  ( அதை  எப்படி  வேண்டுமானாலும்   வரையறை செய்து கொள்ளுங்கள்) வைத்துக்கொண்டுதான்  ஒரு எழுத்தாளனுக்கு அவன் உணர்வும் அனுபவமும்தான் கட்டளைக்கல்.

அனுபவத்தைச் சொற்சிக்கனத்துடன் மிகவும் நுட்பமாகவும் ஆழமாகவும் வெளியிடும் புதுக்கவிதையில் பிரதான அம்சமாகக் கருதப்படும். ‘புரியாத்தன்மை‘ கூட சற்று ஆலோசிக்கப்பட வேண்டிய விஷயம்; அனுபவச்செறிவினால், வெளியீட்டு இறுக்கத்தால் வருவது ஒரு ‘புரியாத்தன்மை‘ என்றால் வெறும் ஒரு கெட்டிக்காரத்தன்மையால்  ஒரு மேல்பாங்கான ‘புரியாத்தன்மை‘யை சிருஷ்டிப்பது என்பதை என்னவென்று சொல்வது?

இல்லாவிட்டாலும், என் அனுபவத்தில் எந்த உயர்ந்த கவிதையிலும் உச்சகட்டம் என்பதில் ஒரு அபூர்வ எளிமை, ஆழம், தெளிவு இருக்கின்றன. அடிப்படையாக இரு விஷயங்கள்: அனுபவம், உருவம் ( வெளிப்பாடு மூலம் எழுதுவது) எங்கு அனுபவம்-வெளிப்பாடு மூர்த்தன்யம் அடைகிறதோ அங்கு இலக்கியம் இலக்கியம் எவ்வளவுக்கெவ்வளவு அனுபவ வெளிப்பாடோ அவ்வளவுக்கு அவ்வளவு அனுபவ பரிவர்த்தனையும் ஆம். எனவே, வாசகன்-அவனும் ஒரு சிருஷ்டிகர்த்தா என்ற நிலையில்.

ஒரு எழுத்தாளன் தன் எழுத்துக்கு வேறு எதையும்விடக் கட்டுப்பட்டவன். அவனுக்கு அவ்வளவாகத் திருப்திதராத படைப்புகள்கூட அவன் வளர்ச்சிக்கு உதவும். கவிதையில் ஒலி ஒரு முக்கியமான அம்சம் என்று நான் கருதுகிறேன்.

ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் என் பேனா தானாகவே ஓட ஆரம்பிக்கிறது. அதை நான் சாக்ஷிபூதமாகப் பின்தொடர்கிறேன். இந்தமாதிரி என் பேனா ஓடுகிறவரையில் நான் எழுதிக்கொண்டிருப்பதில் மாத்திரம் ஒரு சுவர்க்க அனுபவம் ஒவ்வொருவனுக்கும்

‘நகுலன் கவிதைகள்‘ நூலிலிருந்து

‘இல்லாது இருத்தல் தொகுப்பு  (பக்கம்:10)

பூடகமாகச் சொல்லும் பொருளென்ன. அதுதான் கவிதைவிஷயம்.  ‘வாசகன்- அவனும் ஒரு சிருஷ்டிகர்த்தா‘ இல்லையா. யோசிக்கும்வேளையில் புலப்படாமல் நான்.                 (பக்கம்: 11)

நகுலனை நினைவுபடுத்தும் நகுலன் கவிதை. அபூர்வமான எளிமை. நகுலனின் ஆளுமையே உள்ளடக்கமாக – கவிதைப்பொருளாக; வெள்ளைக் கவிதை- எதிர்கவிதை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்; வாழ்வே விஷயம்; மனமே கவிதை. ஒரு காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது. (பக்கம்:19)

உருவாகியிருக்கிற காற்றழுத்தத் தாழ்வுநிலை, அதனால் நேரும் விளைவுகள், தற்காப்பு  நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாமும் செய்திசொல்லல் போலவே.  “ ஆனாலும் கடல்/ பலிவாங்கியே தீர்கிறது “ என்பதுதான் கவிதையின் மையமே, விஷயமே.

இயற்கையைக் கட்டுப்படுத்த முடியாது?

முதல் மூன்று வரிகளில் கவிதை ஆரம்பிக்கிறது. இறுதியில், முடிப்பாக- நான்கடிகளில். ‘ தாழ்வுநிலை ‘ எனத் தனிச் சொல்லாக. மூன்றடியே நான்காக. ஏன். நகுலன் வரிகளைப் பிரிப்பதில் வேறு ஒரு பொருள் உண்டாக்கிவிடுவார்; முக்கியமான கவிதை – நகுலன் உள் உலகை விட்டு, ஒரு சொல். (பக்கம்:24) என்பேன்     (பக்கம்:25)

சொல்தான்; வார்த்தைகள்தாம்; பொருளென்ன. மனம்; வாழ்வியல்; நகுலனால் மட்டுமே இதுபோல எழுதமுடியும்; அது கவிதையாகும்.
போதுமடா சாமி. (பக்கம்:24)

எப்படி என்று சொல்லப்படவில்லை, எது அல்லது யார் என்பதும்; தாளமுடியாதது என்பது பெறப்படுகிறது- அடுத்தாற்போலவே ; நகுலன் கவிதை புரியாமல் போகாது- கவிதையியல் தெரிந்தாக்கால். எழுப்புகின்றன. (பக்கம்:27)

மனம், நுணுக்கமானது; சன்னமானது; கூருணர்வுகொண்டது. அதுவும் கவிமனம் இன்னும் நுண்ணியது; கடிதங்கள், உறைகள் கொண்டவைதாமே கடிதங்கள், பத்திரமாய்; உறைகள்? செய்யவில்லை. ( பக்கம் : 29)

ஜென் கவிதைபோலத் தோற்றமளிக்கிறது; எளிமைதான், சொல்வதில் ; ‘’கற்பனையானாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ‘’ ; மறைபொருள் உண்டோ; இரு வேறு வர்க்கம். வலிந்து பொருள்கொள்ள வேண்டியதில்லை;‘’கற்பனையின் சூழ்ச்சி‘’ ; நற்கவிதை.

பள்ளத்தாக்கை வைத்துத்தானே மலையே; அதாவது,மலை இருப்புக்கே பள்ளத்தாக்குதான் அடிப்படை; இப்படி விளக்கலாம், மலையும் பள்ளதாக்கும் சாஸ்வதம் / நிரந்தரம்-ஒன்றையொன்று சார்ந்து; ஓஷோ ஓரிடத்தில் அழகாகச் சொல்லியிருப்பார்;

அறியாமல் ‘பேதம்‘  பார்ப்பது சரியாகாது; இவ்வளவு இருக்கிறது; இதைத்தான் சொல்கிறதா கவிதை. அவரவர் உளப்பாங்கிற்கேற்பக் கொள்க. வரவில்லை. (பக்கம்:32)

பிறிதுமொழிதலணியொப்ப  ;  அங்கதமாக ; ஒப்புக்குச் சொல்லி இருப்பான் போல- உண்மையாக இல்லை ; அவன் வராததுதான் இவ்வாறு கூறப்படுகிறது; நகுலன் சொல்முறை என்றொரு வகை உண்டு;  அதில் இஃது ஓர் விதம். சீறலாய். (பக்கம்:36)

‘’பாம்பின்/சீறலாய்‘’ என்றிருப்பதுதான் கவித்துவம்; தகிக்கும் வேட்கை? சொல்முறையே இருப்பதில்லை. (பக்கம்:37)

சொல்லின் வரையறை; ”இதைப்போல” என்றால் ஓர் ஒப்பீட்டளவுக்குத் தான்; உண்மையில், ஒன்றைப்போல வேறொன்று உண்டோ உலகில் ; சொல்லுக்குச் சொல்கிறோம்; இதுதான் கவிப்பொருள்; நகுலன் சொல்வது வேறென்ன. விரல்கள். (பக்கம்:38)

‘’ எரிந்து / போகும் / என் / விரல்கள் ‘’ என்றால் ; ஏன் ; என்ன மொழிகிறது இந்த வாசகம்; இதுபோன்ற கவிதைகள் உணர்தலை நம்பியிருப்பன ; வியாக்யானம், குறுக்கிவிடும் / ‘’ பாட்டைக் கெடுத்ததா‘’கிப்போகும். காத்திருக்கிறது (பக்கம்:44)

பொறுமையோடு (பக்கம்:44)

சாதாரண வார்த்தைகளால் ஆனவைதாம்; த்வனி? பொருள்?. அசாதாரணமானவை ; கவியின் பார்வை விசேஷமே இந்தக் கவிதைகள் ; நகுலனின் ஆகச்சிறந்த கவிதைகள் விடை எழுதுவது! (பக்கம்:52)

நகுலன் சொன்னால் சரிதான் ; ஏனெனில், அவரே ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்; சுய அனுபவம்? பின் நவீனத்துவ பண்டிதர்கள் பாஷையில், ‘வாழ்ந்துபெற்ற அனுபவம்‘

வீட்டிற்குள் ஒரு பறவை வந்தது

இங்கும் அங்குமாகப் பறந்தது

பயங்கரமாக அடித்துக்கொண்டது

பறந்து திரிந்தபோது அங்கே

விரிந்து வளைந்த ஆகாசம்

தம்பி அப்படியே செய்தான்

பறந்து போய்விட்டது. (பக்கம்:15)

வெளியிலிருந்து- வழிதவறிப்போய்- வீட்டுக்குள் வந்த பறவை ; அதன் அவஸ்தைகள்- இடம் தப்பி வந்துவிட்டதில் ; வெளிபற்றிய கவி விவரிப்பு ; ஆறு ‘ இல்லை‘ கள். அம்மாவின் வார்த்தைகள்; அவை, அனுபவத்தில் வந்தவை ; தம்பி வெளியேவிடுவதும் பறவை பறந்துபோய்விடுவதுமாக கவிதை முடிவு.

ஒரு நிகழ்வு / தருணம்; அந்த அனுபவம் அப்படியே விவரிப்பாக, சித்தரிப்பாக. அது அது, அதன் அதன் இடத்தில்தான் வாழமுடியும்; கவிதை, எதையும் சொல்லவில்லை,

பெறப்படுகிறது ; வீடு வெளி ; பறவை  மனிதர்கள்; நகுலனை இந்த விஷயம் பாதித்திருக்கிறது,

எழுதியிருக்கிறார்; நகுலன் கவிதையாகவே விளங்குகிறது.

வீட்டுக்கு இடதுபுறம்

துண்டுத்தோட்டம் இருந்தது

கொத்துக்கொத்தாக

பார்க்கும்போது எல்லாம்

தாழத் தொங்குவதைக்

அப்படியே தரையைத்

அந்தக்  காட்சி என்னை

துயரப்படுத்தியது. (பக்கம்:16)

மனிதனின் இயல்பு, எதையும் பயன்படுத்திக்கொள்வது; எலுமிச்சைமரம், தரையைத் தொடுகிறமாதிரி ஆனது – கவிமனசைத்
துயரப்படுத்துகிறது; நேரடியாக – எந்த விமர்சனமும் இல்லை, புகாரும் இல்லை ; அதுதான் உயர்கவிதையின் அழகே ; மனிதர்களின் பேராசை, மரத்தையும் விட்டுவைக்கவில்லை ; மரம், தன் இயல்பைத் தொலைக்கும்படிக் கொண்டுபோய் விடுகிறது; நுட்பமான கூறல்; நுட்பமான விஷயம்; நுட்பமான கவிதை. சீரே) இருப்பதை அவதானிக்க வேண்டும்; தாக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

குறுங்கவிதைகள் அனைத்துமே ஒரு சீராக நகுலன், அனுபவங்கள் – உணர்வுகளையே கவிதையாக்குகிறார்; சொல்முறையில் தனித்தன்மைகொண்டு திகழ்கிறார். உண்மையிலேயே, நகுலன் கவிதைகளைப் படிப்பது ஒரு நுட்பமான அனுபவம்தான். அவற்றை உணரவும் முடிந்தால் பேரனுபவமாக மாறிவிடும்;

நவீன தமிழ்க்கவிதையில் நின்று நிலைத்திருக்கக்கூடிய கவிதைகள், நகுலன் கவிதைகள்; நிலைபேறு கொண்ட கவிஞர், நகுலன். இவையெல்லாம் ஆகச்சிறந்த கவிஞர்களுக்கும்  ஆகச்சிறந்த கவிதைகளுக்கும் மட்டுமே வாய்க்கும்.

-விக்ரமாதித்யன் நம்பி

22.11.2014

ஆசிரியர் : நகுலன் ( ஆங்கில மூலம்)

மொழிபெயர்ப்பு : தஞ்சாவூர்க்கவிராயர்

( குழந்தை இயேசுகோயில் அருகில் )

10

விக்ரமாதித்யன் நம்பி

22.11.2014

Series Navigationஇந்தியா புவியைச் சுற்றி ஆராயும் விண்ணோக்கி ஆய்வகத்தை முதன்முதல் அண்டவெளிக்கு ஏவியுள்ளதுமழைக்குப்பின் பூக்கும் சித்திரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *