மனோரமா- தமிழ் சினிமாவின் அடையாள பெண்ணிய வடிவம்

This entry is part 23 of 23 in the series 11 அக்டோபர் 2015

manoramaa
ஆச்சி என்று அன்புடன் அழைக்கப்பட்ட மனோரமா மறைந்துவிட்டார். ஆழ்ந்த இரங்கல்களை அவர்தம் குடும்பத்தினருக்கும் பர்ந்த தமிழ் சமூகத்துக்கும் தெரிவித்துகொள்கிறேன்.
தமிழ் சினிமா பார்க்க ஆரம்பித்த அனைவரும் அறிந்த முகம் மனோரமா. சுமார் 1300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா வரலாற்றின் இன்றியமையாத அங்கமாகவே மாறிப்போனவர் அவர்.

 
அவரது தமிழ் சினிமா பங்களிப்பு வெறுமே நகைச்சுவை காட்சிகளில் வந்து சென்றது மட்டுமல்ல. அவரது கலாச்சார பங்களிப்பும், அதன் விளைவுகளும் தமிழ் கலாச்சார சூழலில் நாம் பிரித்தறிய முடியாத அளவுக்கு ஆழமாக பதிந்துள்ளதை ஆராய முற்படுகிறேன்.
பெண்கள் போது வாழ்வில் இடம் பெற முடியும், இடம் பெறவேண்டும் என்ற நம்பிக்கையையும், துணிவையும் அளித்தது காந்தியும், காந்தி தலைமையிலான காங்கிரசும். அதை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றது திராவிட இயக்ககத்தின் நாடகப் பங்களிப்பு. ஸ்த்ரீ பார்ட்டைத் தாண்டி பெண்களுக்கு நாடகங்களில்  ,சுயமும் அளித்தது நாடக இயக்கம். பெண் விடுதலை குறிக்கோளை நோக்கிய ஒரு பயணத்தில் மிக முக்கியமான மைல்கல் இது.
 
பெண்கள் மிக அதிகமாக நாடகத்திலும், பிறகு சினிமாவிலும் பங்கு கொண்டது, பெண்களை விடுவித்தது.
 
தமிழ் சினிமாவின் ஆரம்பகால படங்களில் அதன் மையக்  கதையும், நகைச்சுவையாக வரும் உப கதையும் பெண்களைப்பற்றிய பொதுவான ஆண் மைய பார்வையை கொண்டவை.  மனைவிக்கு கட்டளை இடும் ஆண், உடனே கீழ்ப் படிந்து கேட்கும் மனைவி என்பது சாதாரணமான எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யக்கூடிய காட்சிகள் அமைந்திருப்பதை பார்க்கலாம்.  கதாநாயகரின் தந்தை தன் மனைவியை அதட்டுவதும், அவர் உடனே அடிபணிந்து கேட்பதும் சாதாரணமான காட்சிகள்.  இதே நகைச்சுவை உப கதைகளிலும் உண்டு. என் எஸ் கே – மதுரம் உருவாக்கிய நகைச்சுவை காட்சிகளிலும் முட்டாள் மனைவி, புத்திசாலி புருஷன் என்பது உண்டு.  தங்கவேல்-சரோஜா நகைச்சுவையில் “அதுதான் எனக்கு தெரியுமே” என்ற பிரபல வசனமும் இதே வகையையே முன்னுக்கு வைத்தன.என் எஸ் கே – மதுரம் ஜோடி நகைச்சுவை காட்சிகளுக்கும் பின்னர் வந்த மனோரமாவின் நகைச்சுவை காட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.
 
ஆண் மைய பார்வையை கொண்ட திரைப்படங்கள் இன்றும் கூட  வந்துகொண்டிருக்கின்றன.  ஆனால், மனோரமாவின் நகைச்சுவை காட்சிகளில் அவரது அசால்ட்டான தன்னம்பிக்கையான மனைவியும், அசட்டுக்  கணவனும் இருப்பார்கள்.  தன்னுடைய தனித்துவத்தை தக்க வைத்துக் கொள்கிற பெண் கதா பாத்திரங்கள் நகைச்சுவை நடிகைகளே இருந்தனர். அந்த வரிசையில் மனோரமாவிற்கு மிக முக்கிய இடம் உண்டு. இதன் நீட்சியே வடிவேலுவை துவம்சம் செய்யும் கோவை சரளா காட்சிகள்.
 
இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் நீட்சியாகக்கூட காணலாம்.  அவர் காட்சி படுத்திய பெண்களில், சுதந்திரமான தன் முனைப்பு கொண்ட தன முடிவுகளை தானே எடுக்கிற , தன்னம்பிக்கை கொண்ட பெண்ணை காட்டியவர் மனோரமா.
 
தமிழ் சினிமாவின் தோற்றம் முதற்கொண்டு பெண்களுக்கான இடம் தாராளமாகவே இருந்துள்ளது. பத்மினி, பானுமதி, சாவித்திரி  போன்றவர்கள் அன்றைய ஸ்டார் நடிகர்களான சிவாஜி எம்ஜியார் போன்றோருக்கு இணையான ஸ்டார் அந்தஸ்துடனேயே இருந்துள்ளார்கள்.
சொல்லப்போனால், கதாநாயகர்கள் தம் வீர-ஆவேச  பிம்பத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தினால் இறுக்கத்துடன் இருந்தபோதும், நடிகைகள் விடுபட்டு தனித்த அடையாளம் கொண்டனர். மனோரமா பல படங்களில் தனித்தே இயங்கினார் என்பதையும் காணலாம்.
மனோரமாவின் தோற்றமும், வளர்ச்சியும் தமிழ் சினிமா மட்டுமல்ல தமிழ் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியின் வரலாற்றுக் கண்ணிகள் .
அவருக்கு நம் அஞ்சலி. நினைவு கூரும் வகையில் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

Series Navigationசெங்கண் விழியாவோ
author

கோபால் ராஜாராம்

Similar Posts

10 Comments

 1. Avatar
  BS says:

  மனோரமாவின் நகைச்சுவை காட்சிகளில் அவரது அசால்ட்டான தன்னம்பிக்கையான மனைவியும், அசட்டுக் கணவனும் இருப்பார்கள்//

  சோ, தேங்காய் சீனிவாசனோடு நடித்த படங்களில் இப்படி அடங்கிய அல்லது அடக்கப்பட்ட அசட்டுக் கணவன்கள். இவர் டாமினேட்டிங்க் மனைவியாக வரும் காட்சிகள் நினைவு.

 2. Avatar
  Dr.G.Johnson says:

  திரைப்படங்கள் நமக்கு பொழுதுபோக்கு ஊடகமாகவே தொடங்கியபோதிலும், காலப்போக்கில் அதுவே சமுதாய சீர்திருத்தப் பணியின் ஆணிவேராகவும் ஆனது. மக்களிடையே குடிகொண்டிருந்த பல்வேறு மூட பழக்கவழக்கங்களை ஓரளவுக்கு தகர்த்தெறிய உதவியது சினிமா. அது திராவிட இயக்கத்தினரின் பிரவேசத்தால் உச்ச கட்டத்தையே எட்டியது என்பது கண்கூடு. நடிகவேள் எம்.ஆர். ராதா இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. தனக்கேயுரிய நகைச்சுவைப் பாணியில் பகுத்தறிவுக் கொள்கைகளை பாமர மக்களின் மனதிலே பதியவைத்தவர் அவர். அதுபோன்றுதான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் ஜோடியும். அவருடைய ” கிந்தன் ” கதாக்காலாட்சேபம் சுலபத்தில் மறக்கக்கூடியதா? திரைப்படங்களின் மூலமாக சமுதாய சீர்திருத்தப் பிரச்சாரமும் அரசியல் விழிப்புணர்வும் உண்டுபண்ணினார்கள் அண்ணா , கலைஞர், எம்.ஜ. ஆர். போன்ற திராவிடத் தலைவர்கள். இவர்கள் அதன்மூலமகவே ஆட்சிக்கு வரமுடிந்ததோடு தமிழக முதல்வர்களும் ஆனார்கள்!
  திரைப்படத்துறையில் பெண்களுக்கும் சம வாய்ப்பு உள்ளது என்பதை நிரூபிக்கும் வண்ணமாக திரைப்படங்களில் கலகலப்பூட்டியவர் நடிகை மனோரமா அவர்கள். நகைச்சுவை நடிகையாகவே வாழ்ந்து சென்றாலும் அந்த நகைச்சுவைகளில் பெண்கள் முன்னேற்றம், குடும்பநலம், பெண் விடுதலை , பகுத்தறிவு, தன்முனைப்பு, போன்ற பலதரப்பட்ட செய்திகளை மக்கள் மத்தியிலே பரப்ப உதவியவர் மனோரமா.
  நம்மையெல்லாம் அரை நூற்றாண்டாக மகிழவைத்த மனோரமா இன்று நம்மிடையே இல்லை. அவரை தமிழ் மக்கள் எளிதில் மறந்துவிடமாட்டார்கள்.அவருடைய ஆத்மா சாந்தி அடைவதாக ……டாக்டர் ஜி. ஜான்சன்.

 3. Avatar
  arun says:

  She belongs to a rare breed of great artists that the Tamil Cinema has seen. A genuinely all-rounder who brought laurel not only to herself but to the whole cinema. a LEGEND has passed away but her memories would never.

 4. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  ஸ்ரீமதி மனோரமா அவர்கள் தமிழ்த் திரையுலகின் மறக்கவியலாத் தாரகைகளுள் ஒருவர்.

  மனோரமா அவர்கள் நகைச்சுவைத் தாரகையாக அறிமுகமாகி அதில் முத்திரை பதித்து பின்னர் தலைசிறந்த குணச்சித்திர தாரகையாகவும் ஒளிவீசியவர்.

  அதுமட்டுமல்ல தமிழ் சினிமாவின் பெருமை வாய்ந்த பாடகிகளிலும் ஒருவர்.

  வா வாத்யாரே வூட்டாண்டே நீ வராங்காட்டி நா வுடமாட்டேன்
  ஜாம் பஜார் ஜக்கு நா சைதாப்பேட்டே கொக்கு

  இந்த பாட்டுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது.

  அதே போல தில்லானா மோகனாம்பாளில்

  தில்லாலங்கடி கிரிகிரி நா ஆட்டமாடுவேன்
  ஜோரா பாட்டு பாடுவேன்

  பாடலும் கூட.

  ஆச்சி என்று அன்புடன் விளிக்கப்பட்ட ஸ்ரீமதி மனோரமா அவர்கள் தமிழக மக்களின் நீங்காத நினைவுகளில் நிறைந்திருப்பார்.

 5. Avatar
  BS says:

  திரு கிருட்டிணக்குமாரின் அஞ்சலியைப்படித்து சிரித்தேன்.

  மனோரமா ஒரு திராவிடக்கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் பண்ணியவர். பின்னர் அரசியல் தனக்கு சரிப்படாது என்று வடிவேலைப்போல விலகி விட்டார்.

  திரையுலகை வாழ்க்கையாகக் கொண்டோர் கட்சி அரசியலில் இறங்கினால் அவ்வளவுதான். சான்ஸ் போய்விடும் என்று வடிவேலு காட்டிவிட்டார். மனோரமா அன்றே உணர்ந்தார்.

  திராவிடகட்சிகளைத் தீராவிட விஷம் என்று திண்ணையில் எல்லாபதிவுகளிலும் தொடர்பேயில்லாமல் எழுதிவரும் இவர் எப்படி மனோராமாவை நினைத்து உருகுகிறார்.

  திரு கிருட்டிணக்குமார் கட்டுரையைப் படிக்காமலே எழுதுபவர். கட்டுரை சொல்வது, மனோராமாவின் தொடக்க சினிமா மற்றும் நாட்க வாழ்க்கை, அண்ணா, கருநாநிதி போன்ற திராவிடத்தலைவர்களின் கொள்கைகளைப் பரப்புவதன் மூலமே வெளித்தெரிந்தார். எப்படி ஒரு திராவிடப்பாரம்பரியத்திலிருந்து வந்தவரைப்புகழ முடிகிற்து எனப்து ஞானவேல் முருகனுக்குத்தான் தெரியும்.

  1. Avatar
   BS says:

   அண்ணாவின் நாடகங்களிலும் கலைஞர் வசனமெழுதிய நாடகங்களிலும் திராவிட இயக்கக் கொள்கைகளை பரப்புரை செய்ய தன் தொடக்க கால வாழ்க்கையில் மேடையேறியவர் மனோரமா என்பது இக்கட்டுரையில் எழதப்பட்டிருப்பதாகவும் அதை திரு கிரூட்டிணக்குமார் படிக்கவில்லை எனறு யான் எழுதியது தவறு.

   இக்கட்டுரை அவரின் தொடக்க கால நாடக வாழ்க்கை பற்றிப் பேசவே இல்லை. ஓர் அஞ்சலி அதைச் சொல்லிவிட்டுத்தொடங்கியிருக்க வேண்டும். இன்னொரு இடத்தில் அப்படி செய்தார்கள். அப்படி யான் படித்ததது வேறொரு தளத்தில் படித்ததே.

   மனோரமாவைப்பற்றி நிறைய சொல்லலாம். இக்கட்டுரை ஒன்றையே முன் வைக்கிறது: அதாவது அவரின் பிற்கால வாழ்க்கை…சினிமா நடிகை. அதில் அவர் எப்படி ஜென்டர் இஷ்யூவைக்கடந்தார் என்பதை மட்டுமே சொல்கிறது. அது சிறப்பான கருத்தென்பதில் இரு கருத்துக்கள் இருக்க முடியா.

   தொடக்க காலத்தில் திராவிட இயக்கத்தலைவர்களோடு தொடர்பு கொண்டு அவர்களின் ஆதரவைப் பெற்று வளரந்தவர். பின்னர் சமீபத்தில் ஒரு தேர்தலில் திராவிட கட்சியொன்றிற்காக பிரச்சாரம் செய்தவர் ; பின்னர் அதற்காக வருந்தியவர்; ஏ திராவிடக்கட்சியை வெறுத்தாரென்பதற்காகன்று. இரு திராவிட கட்சிகளும் மோதும் களத்தில் ஒருவருக்காக மேடையேறும்போது இன்னொருவரை நாம் புறந்தள்ளுகிறோமோ; அவரும் நமக்கு வேண்டியவர்தானே? என்ற உணர்வினால். இவை. நாமறிந்ததே.

   ஆக, அவருக்கும் திராவிட இயக்கத்துக்கும் தொடர்புண்டு. மாலையிட்ட மஙகையில் முதல் முதலாக இவர் நகைச்சுவை வேடமேற்க ஊக்குவித்தவர் அப்படத்தில் தயாரிப்பாளரான கண்ணதாசன். அப்போது பாவலர் திராவிட இயக்கத்தில்தான் இருந்தார்.

   தீரா…விட இயக்கம் (அதாவது தொடர்ந்து விஷம் கக்கும் இயக்கும்) என்று இங்கெழுதி வரும் திரு கிருட்டிணக்குமார் என்னை வியப்பிலாழ்த்துகிறார்.

 6. Avatar
  Jyothirllata Girija says:

  ஆழ்ந்த உணர்வுகளைத் தெரிவிக்கும் அற்புதமான கட்டுரை.
  மனோரமா ஒரு பல்கலைக் கழகம்.
  ஜோதிர்லதா கிரிஜா

 7. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்புடையீர்

  \\ திரு கிருட்டிணக்குமார் கட்டுரையைப் படிக்காமலே எழுதுபவர். கட்டுரை சொல்வது, மனோராமாவின் தொடக்க சினிமா மற்றும் நாட்க வாழ்க்கை, அண்ணா, கருநாநிதி போன்ற திராவிடத்தலைவர்களின் கொள்கைகளைப் பரப்புவதன் மூலமே வெளித்தெரிந்தார். எப்படி ஒரு திராவிடப்பாரம்பரியத்திலிருந்து வந்தவரைப்புகழ முடிகிற்து எனப்து ஞானவேல் முருகனுக்குத்தான் தெரியும். \\

  வ்யாசத்தில் சொல்லாத விஷயங்களை வ்யாசத்தில் சொல்லியதாக அட்ச்சுவுடுதல்………… அடுத்தவர் சொல்லாத விஷயங்களை அடுத்தவர் சொல்லியதாக அட்ச்சு வுடுதல்…….. ஆகிய அனந்த கல்யாண குணங்களுக்கு சொந்தக்காரராகிய தேவரீர் இப்படி கலாய்க்கலாமா?

  வ்யாசம் சொல்வது :-

  \\ பெண்கள் போது வாழ்வில் இடம் பெற முடியும், இடம் பெறவேண்டும் என்ற நம்பிக்கையையும், துணிவையும் அளித்தது காந்தியும், காந்தி தலைமையிலான காங்கிரசும். அதை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றது திராவிட இயக்ககத்தின் நாடகப் பங்களிப்பு. ஸ்த்ரீ பார்ட்டைத் தாண்டி பெண்களுக்கு நாடகங்களில் ,சுயமும் அளித்தது நாடக இயக்கம். பெண் விடுதலை குறிக்கோளை நோக்கிய ஒரு பயணத்தில் மிக முக்கியமான மைல்கல் இது. \\

  பூர்வ அவதாராதிகளில் எந்த வ்யாசத்தில் எந்த விஷயத்தைப் பற்றி ப்ரஸ்தாபித்திருந்தாலும் அதையெல்லாம் மூட்ட கட்டி வெச்சு உங்களுடைய ஒரே உருட்டு மந்த்ரமாகிய ஜாதிக்காழ்ப்பு என்ற ஒரே பாட்டைப் பாடுவீர்கள். அப்புறம் வேப்பல அடிச்சு அடிச்சு அது கொஞ்சம் கொறஞ்சது.

  இப்போது தீரா விட பஜனையை எடுத்துக்கொண்டு விட்டீர்கள் போலும்.

  இந்த வ்யாசம் ஸ்ரீமதி மனோரமா என்ற தமிழ்த் திரைத் தாரகையின் திரைப்பங்களிப்பைப் பற்றிப் பேசுகிறது. அதையெல்லாம் பொடக்காலில போட்டுட்டு தீரா விட பஜனையை எடுத்துக்கொண்டாச்சா.

  ஆங்க்லத்தில் “”Throw the baby out with the bathwater “”” என்று ஒரு வசனம் உண்டு. எத்தையாவது எதிர்க்கணும்னா கண்மூடித்தனமா ஸப்ஜாடா lock, stock and barrel என்று கடாசுவது என்பது தீரா விட இயக்க சிறுமை.

  அது தீரா விட இயக்கமாகவே இருந்தாலும் சரி அந்த இயக்கத்தைச் சார்ந்த அன்பர்களாகவே இருந்தாலும் சரி, அதில் உள்ள நல்லதை உள்ள படி பஹுமானிப்பது மெய்யாலுமே பகுத்தறிவு உள்ளவர்கள் செய்ய வேண்டிய செயல்………..

  தீரா விட இயக்கத்தினரின் ச்லாகிக்கத் தகுந்த செயற்பாடுகளை நான் இதே தளத்தில் உள்ளபடி ச்லாகித்திருக்கிறேன். ஸ்ரீமதி மனோரமா அவர்கள் தீரா விட இயக்கத்தின் நாடகங்களில் தன் ஆரம்ப காலத்தில் நடித்திருக்கிறார் என்ற ஒற்றை விஷயத்தை மட்டிலும் உள்வாங்கி…………… அந்த தாரகையின் ஒட்டு மொத்த பங்களிப்பினையும் புறக்கணித்தல் என்பது தீரா விட பஹூத் அறிவினை உள்வாங்கியவர்கள் மட்டிலும் செய்யத்தகுந்த செயற்பாடு.

  வ்யாசம் ஸ்ரீமதி மனோரமா அவர்களின் பங்களிப்பாகிய நடிப்பை ச்லாகித்திருந்தாலும் அவருடைய இன்னொரு ப்ரகாசமான செயற்பாடான பாடகி என்ற கோணத்தை பேசப்படாது விட்டு விட்டது. அதை என்னுடைய உத்தரம் பூர்த்தி செய்திருந்தது.

  வ்யாசத்திற்கும் ஸ்ரீமதி மனோரமா அம்மையார் அவர்களது நினைவிற்கும் தாங்கள் பஹுமானம் செய்ய விழைந்தால் அது சம்பந்தமாக மட்டிலும் பேசுதல் தகும்.

 8. Avatar
  sanjay says:

  BS is wrong again.

  Manorama was never for any political party. She was compelled to campaign for Jayalalitha in the 1996 assy elections since her son was caught in a rape case & she needed JJ’s help to bail him out which JJ did.

  She bad mouthed rajinikanth in her election campaign.

  ADMK lost the elections & producers removed manorama from their films. She kept mum during this period.

  After a brief hiatus, rajini cast her in his film “Arunachalam” & thus her last innings began.

  After that she refrained from making any political comments, save for one function organized by Sasikala’s (ex) husband, wherein she said that she would like to be referred to be “Veera maraththi” & not “aachchi”.

  However, this comment did not get noticed.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *