தீவிரவாத இஸ்லாமை நிரந்தரமாக தோற்கடிக்க ராணுவரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் இரண்டு முனைகளிலும் போரை நடத்தவேண்டும்
இஸ்லாமிய காலிபேட் (ISIS) பாரீஸில் நடத்திய தாக்குதல்களும், G20 உச்ச மாநாடு நடைபெறும் துருக்கியில் தடுக்கப்பட்ட தற்கொலைகுண்டு தாக்குதலும் இறுதியான தாக்குதல்கள் அல்ல. மேற்கத்திய நாடுகளின் தலைநகரங்களில் இது போல தாக்குதல்கள் நடைபெறும் என்று பிரிட்டனின் உளவுத்துறை தடயங்களை பெற்றுள்ளது. பிரிட்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் உச்சகட்ட தீவிரத்தை எட்டியதாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், பிரிட்டனின் சிறப்பு காவல்துறை லண்டனின் தெருக்களிலும், மற்ற இங்கிலாந்து நகரங்களின் தெருக்களிலும் ரோந்து செய்ய துவக்கியிருக்கிறது.
பிரஞ்சு ஜனாதிபதி ஃப்ரான்ஸ்வா ஓலந்த் , பாரீஸில் கொலைவெறியாடிய பயங்கரவாதிகளுக்கு எதிராக “இரக்கமற்ற போரை” நடத்தப்போவதாக சூளுரைத்திருக்கிறார். சிரியாவுக்கு பிரான்ஸின் துருப்புகளை அனுப்பி சிரிய நிலத்திலிருந்தே இஸ்லாமிய காலிபேட்டுக்கு எதிராக போரை துவக்கபோவதாக இருக்கிறார். ரக்கா என்ற இஸ்லாமிய காலிபேட்டின் தலைநகரத்தை பிரெஞ்ச் ஜெட் விமானங்கள் தாக்கியிருக்கின்றன. அங்கு சென்ற ஞாயிற்றுக்கிழமை, அந்த பயங்கரவாத குழுவின் தலைமை கட்டுப்பாடு நிலையத்தை தாக்கி அழித்திருக்கின்றன. அதே நேரத்தில், வரும் நாட்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் இஸ்லாமிய காலிபேட்டை எதிர்த்து போரிட தனது ஸ்பெட்ஸ்நாஸ் சிறப்புப்படைகளை ரஷ்யா சிரியாவுக்கு அனுப்பியிருக்கிறது. தரைப்படை உள்ளே புகுந்து இஸ்லாமிய காலிபேட்டுக்கு எதிராக போரில் இறங்கும் என்றும் அறிவித்திருக்கிறது.
ஆனல், இது முடிவற்ற போராக ஆகலாம்.
புவிஅரசியல் ரீதியாக, தீவிரவாத இஸ்லாமுக்கு எதிரான போரில் ஐந்து கூட்டணிகள் அமையலாம். முதலாவது அமெரிக்கா, ருஷ்யா, மேற்கு ஐரோப்பா. இரண்டாவது இந்தியா. மூன்றாவது சீனா. நான்காவது பாகிஸ்தான். ஐந்தாவது சவுதி அரேபியா தலைமைதாங்கும் வஹாபி இஸ்லாம்.
இந்த ஐந்து புவி பாகங்களில் அமெரிக்கா, ருஷ்யா, மேற்கு ஐரோப்பா என்ற குழுமமும் , இந்தியா என்ற தேசமும் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களால் மேலும் மேலும் தாக்கப்படும். பாகிஸ்தானு ம், சவுதி தலைமை தாங்கும், வஹாபி அரபு நாடுகளும் சேர்ந்த இரண்டு முனைகள் இந்த பயங்கரவாத இஸ்லாமின் ஆள் சேர்ப்பு மையங்களாக இயங்கும். ஐந்தாவது புவி பாகமான சீனா இங்கே நடுநிலையாக இருக்கும். ஆனால், க்ஸிங்சியாங் (என்னும் உய்குர்) முஸ்லீம் பெரும்பான்மை மாநிலத்தில் வளரும் தீவிரவாத்தின் காரணமாக முக்கிய பங்கு வகிக்கும்.
மருத்துவ சர்ஜரி போல இரக்கமற்று ராணுவரீதியாக இஸ்லாமிய தீவிரவாதம் வெட்டியெறியப்படவேண்டும் என்றாலும், அதன் மீது போரை நடத்துவதால் மட்டுமே இஸ்லாமிய பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கமுடியாது என்பது கசப்பான உண்மை. தீவிரவாத இஸ்லாம் கொள்கை ரீதியாகத் தோற்கடிக்கப்படவேண்டும். அதன் உரையாடல் மறுவடிவாக்கம் பெற வேண்டும். உலகம் முழுமையும் 160 கோடி மக்கள் முஸ்லீம்களாக இருக்கின்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள் அமைதிவிரும்பிகள். ஆனால் இந்த மிதவாத முஸ்லீம்களுக்குள்தான் பிரச்னையே இருக்கிறது.
எளிமையாகச் சொல்லப்போனால், இந்த மிதவாத முஸ்லீம்கள் குரானில் இருக்கும் சில வசனங்கள் வன்முறையை போதிக்கின்றன என்றே ஒத்துகொள்வதில்லை. அப்படிப்பட்ட வசனங்கள் குரானில் இருக்கின்றன. இந்த வசனங்கள் ஏழாம் நூற்றாண்டுக்கானவை. இருபத்தியொன்றாம் நூற்றாண்டுக்கானவை அல்ல.
அலி ரிஜ்வி என்னும் எழுத்தாளர் ஹப்பிங்க்டன் போஸ்டில் “மிதவாத முஸ்லீம்களுக்கு ஒரு திறந்த கடிதம்” என்று எழுதியதில் சொல்வது போல, குரானிலும் இன்னும் இதர ஆபிரஹாமிய மதப்புத்தகங்களில் உள்ள வரிகளை அப்படியே பொருள் கொள்ளக்கூடாது. யூதர்கள் இதனை புரிந்து வைத்திருக்கின்றனர். மிதவாத முஸ்லீம்களுக்கு அது புரியவில்லை. தனது கடுமையான கண்டனக்கடிதத்தில், இஸ்லாமுக்கு தேவை சீர்திருத்த வாதிகளே அன்றி, மிதவாதிகள் அல்ல என்று சொல்லுகிறார் அலி ரிஜ்வி.
“கொள்கை அடிப்படையில் ஒருமித்த கருத்தை உருவாக்குவது முடியாத காரியம். முஸ்லீம் உலகத்தில் வகுப்புவாத வன்முறை (ஷியா-சுன்னி-அஹ்மதியா) இன்னும் புரையோடிப்போன வியாதியாக தொடர்கிறது. இந்த வகுப்புவாதத்தின் காரணமாக இறந்த முஸ்லீம்களின் எண்ணிக்கை வேறெந்த வெளிநாட்டு ராணுவத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என்பதே இதற்கான நிரூபணம். சமூகரீதியாக உணர்வுப்பூர்வமாக இணைவதாலேயே ஒரு சமூகம் முன்னேறும். சீர்திருத்தங்களை மேற்கொண்ட மற்ற ஆபிரஹாமிய மதங்களைப் பாருங்கள். யூதமதமும், கிரிஸ்துவ மதமும் அவர்களுடைய வன்முறை மிகுந்த இருண்டகாலங்களைக் கொண்டிருந்தன என்பது உங்களுக்கு தெரியும். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அதனை குறிப்பிட தயங்குவதில்லை. அது சரியும் கூடத்தான். ஆனால், அவர்கள் எப்படி தங்களது வன்முறை மிகுந்த இருண்ட காலங்களைக் கடந்தார்கள்?
“போப்பாண்டவர், குடும்பக் கட்டுப்பாடுகளையும், கருத்தடையையும், திருமணத்துக்கு முந்திய பாலுறவையும் எதிர்த்தாலும், பெரும்பாலான கத்தோலிக்கர்கள் கருத்தடை செய்வதற்கு அஞ்சுவதில்லை. குடும்பக் கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள், திருமணத்துக்கு முந்திய பாலுறவுக்கும் அஞ்சுவதில்லை. பெரும்பாலான யூதர்கள் மதச் சார்பற்றவர்கள், பெரும்பாலானவர்கள் தங்களை யூதர் என்று அடையாளப்படுத்திகொண்டாலும், தங்களை நாத்திகவாதிகள் என்றும், அஞ்ஞேயக்காரர்கள் (agnositc – கடவுள் பற்றி கருத்து அற்றவர்கள் )என்றும் அடையாளப்படுத்திகொள்கிறார்கள். இந்த மதங்களைச் சார்ந்தவர்கள், இந்த மதங்களை எதிர்த்தாலும், இந்த மதங்களைத் துறந்தாலும், அங்கும் இங்கும் விமர்சனங்களும் திட்டுகளும் வந்தாலும், இவர்கள் தம்முடைய மதத்தை எதிர்ப்பதன் காரணத்தினாலேயே கொல்லப்படுவதில்லை.
“2013 ப்யூ அமைப்பின் உலகளாவிய ஆராய்ச்சியின்படி, முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான முஸ்லீம்கள், இஸ்லாமை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்படவேண்டும் என்று நம்புகிறார்கள் என்பது முஸ்லிம் உலகத்தை முற்றிலும் மாறுபட்டதாக காட்டுகிறது. யார் உண்மையான முஸ்லீம் யார் முஸ்லீமில்லை என்று விடாது விவாதித்துகொண்டே இருக்கிறார்கள். இஸ்லாமின் பெயரால் யார் அட்டூழியங்களை செய்கிறார்களோ அவர்களைக் கண்டிப்பதைவிட, தங்களது மதத்தை கார்ட்டூனிஸ்டுகளிடமிருந்தும் திரைப்படகர்த்தாக்களிடமிருந்தும் காப்பாற்றுவதை வெகுவேகமாக செய்கிறார்கள்.
“இஸ்லாமுக்கு சீர்திருத்தவாதிகள்தான் வேண்டும். மிதவாதிகள் அல்ல….. சீர்திருத்தத்தின் நோக்கம் மாற்றுவது. அமைப்பை சரிசெய்வது, இன்னொரு திசைக்கு இட்டுச்செல்வது.. எதையாவது சரி செய்யவேண்டுமென்றால், அது உடைந்திருக்கிறது என்பதை முதலில் ஒத்துகொள்ளவேண்டும். – அது பார்ப்பதற்குத்தான் உடைந்திருக்கிறது போல தெரிகிறது என்றோ, உடைந்திருக்கிறது என்று தவறான மக்களால் பேசப்படுகிறது என்றோ பம்மாத்து செய்யாமல், அது உடைந்திருக்கிறது என்று ஒத்துகொள்ளவேண்டும். அதுதான் சீர்திருத்தத்தின் முதலாவது படி.
“இது மிகவும் புரட்சிகரமானது என்று உங்களுக்கு தோன்றினால், முகம்மது நபியையே மறுபடி சிந்தித்து பாருங்கள். இவர் குரேய்ஷிகளை எதிர்த்ததால், மெக்காவிலிருந்து துரத்தப்பட்டார். யேசு கிறிஸ்து ஏன் சிலுவையில் அறையப்பட்டார் என்று யோசியுங்கள். அன்றைய எந்த புனிதமானதாக கருதப்பட்ட நிலைப்பாடுகளையும் எதிர்க்க தயங்கவில்லை. அவற்றுக்கு தலைசாய்க்கவில்லை. இவர்கள் புரட்சிகரமானவர்கள். சீர்திருத்தவாதிகள். இவ்வாறுதான் மாற்றம் நடைபெறுகிறது. எல்லா புரட்சிகளுமே, போராட்டங்களாகத்தான் துவங்குகின்றன. இஸ்லாமும் இப்படித்தான் துவங்கியது. சிக்கலான, பிரச்னையான எதிர்ப்பது மதவெறி அல்ல. அது மதநிந்தனையும் அல்ல. அதுதான் சுன்னா. (நபி வழிமுறை)
இஸ்லாமின் இருமை. (Duality of Islam)
பாரின் பாலிஸி பத்திரிக்கையில் ”இஸ்லாம் வன்முறையின் மதம்” என்ற தலைப்பில் அயான் ஹிர்ஸி அலி மிகச்சிறப்பான கட்டுரை எழுதியிருக்கிறார். ஏன் இஸ்லாம் முஸ்லீம் அறிஞர்களாலும், இமாம்களாலும் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது என்று எழுதியிருக்கிறார்.
”இஸ்லாமியக் கொள்கையில் வன்முறை ஒரு இன்றியமையாத அங்கமா என்று புரிந்துகொள்ள, நாம் இஸ்லாமை தோற்றுவித்த முகம்மதின் உதாரணத்தையும் குரானில் இருக்கும் வசனங்களையும், முஸ்லீம் நாடுகளில் நாம் பார்க்கும் வன்முறைகளை நியாயப்படுத்தும் இஸ்லாமிய நீதிமுறைகளையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். மெக்காவில், முகம்மது தனது ஜாதியினரை அவர்களது தெய்வங்களை வணங்குவதை நிறுத்திவிட்டு தனது தெய்வத்தை வணங்கவேண்டும் என்று வலியுறுத்தினார். தானங்கள் செய்வதையும், விதவைகளுக்கும் அனாதைகளுக்கும் உதவுவதை பற்றியும் பிரச்சாரம் செய்தார். (இப்படி பிரச்சாரம் செய்வது இன்றும் இஸ்லாமின் இன்றியமையாத அங்கமாக இருக்கிறது. இது அரபியில் தாவா என்று அழைக்கப்படுகிறது) இருப்பினும், மெக்காவில் இவரை பின்பற்றியவர்களாலும் இவராலும், பலரை தனது புதிய மதத்துக்கு திருப்பமுடியவில்லை. ஆகவே, முகம்மது தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து பத்தாண்டுகளுக்கு பிறகு, அவர் மெதீனாவுக்கு தப்பிச்சென்றார். அங்கு பலரை தனது ஆட்களாக சேர்த்துகொண்டு ஒரு ராணுவ அமைப்பை உருவாக்கி போர்நடத்த ஆரம்பிக்கிறார்.
”ஆயுதம் தாங்கிய வன்முறை ஜிஹாத் செய்ய விரும்பும் எவரும், முகம்மதின் மெதீனா காலத்தை பற்றிய ஹதீஸ்களிலும், குரானிலும் ஏராளமான ஆதரவைப் பெறலாம். உதாரணமாக 4.95 குரான் வசனம், “நம்பிக்கை கொண்டோரில் தக்க காரணமின்றி போருக்குச் செல்லாதோரும், தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். தமது பொருட்களாலும், உயிர்களாலும் போரிடுவோருக்கு, போரிடாதோரை விட ஒரு தகுதியை அல்லாஹ் சிறப்பாக வழங்கியிருக்கிறான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்திருக்கிறான். போருக்குச் செல்லாதோரை விட போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தனது மன்னிப்பாலும், அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான்.” என்கிறது. 8.60 குரான் வசனம், உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க்குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம்.” என்று முஸ்லீம்களுக்கு அறிவுரை அளிக்கிறது. இறுதியாக குரான் வசனம் 9:29, ”வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல், உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!” என்று முஸ்லீம்களுக்கு அறிவுரை அளிக்கிறது.
இந்த வாள் வசனங்கள் என்று அழைக்கப் படும் “sword verses” (9:5 and 9:29) ஆகியவை, குரானில் காணப்படும், சகிப்புத்தன்மை, கருணை, அமைதியை வலியுறுத்தும் வசனங்களை நீக்கி விட்டன என்று மையநீரோட்ட இஸ்லாமிய அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.
முகம்மதின் உதாரணங்களை எடுத்துகொண்டோமானால், ஆறு முக்கிய ஹதீஸ் தொகுப்புகளில் ஒன்றான சஹீ முஸ்லீம் என்னும் ஹதீஸ் தொகுப்பு சுமார் 19 ராணுவ படையெடுப்புகளை செய்தார் என்றும் அதில் எட்டு ராணுவ படையெடுப்புகளில் தானே கலந்துகொண்டார் என்றும் தெரிவிக்கிறது. கிபி 627இல் அகழிப்போரின் முடிவில், “பானு குரைஸா ஜாதியினரை கடுமையாக ஒடுக்க, அவர்களது ஆண்களையெல்லாம் கொன்று, அவர்களது பெண்களையும் சிறுவர் சிறுமிகளையும் அடிமைகளாக விற்றார்” என்று யேல் பல்கலைக்கழகத்தின் மத ஆய்வுப் பேராசிரியர் கெர்ஹார்ட் போவரிங் தனது இஸ்லாமிய அரசியல் சிந்தனை என்ற புத்தகத்தில் எழுதுகிறார். பிரின்ஸ்டன் ஆய்வாளர் மைக்கல் குக், தனது ”புராதன மதங்கள், நவீன அரசியல்” என்ற புத்தகத்தில் ”காபிர்களின் மீதான போர் என்பது இஸ்லாமின் அடிப்படை மத நூற்களில் எழுதப்பட்டுவிட்ட விஷயம்” என்று கூறுகிறார்.
இங்கேதான் இஸ்லாமில் இருமை இருக்கிறது. மெக்காவில் முகம்மதின் உதாரணங்களை வைத்து இஸ்லாம் ஒரு அமைதிமார்க்கம் என்று கோரவும் இடம் இருக்கிறது. அதே போல இன்றைய ஐ.எஸ்.ஐ.எஸ் செய்வது போல, மெதீனாவில் முகம்மதின் உதாரணங்களை பின்பற்றி, முஸ்லீம்கள் அனைவரும் உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் இஸ்லாமை ஏற்றுகொள்ளவேண்டும் அல்லது அடிமையாக வாழவே வேண்டும் என்று ஜிஹாத் தொடுக்கவேண்டும் என்று முகம்மதுவுக்கு அனுப்பப்பட்ட வெளிப்பாடு இருக்கிறது என்று கோரவும் இடம் இருக்கிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ்: மதத்தை உபயோகப்படுத்தி கொண்டு வழிப்பறி
அடிப்படையில், மதத்தையும் பயங்கரவாதத்தையும் உபயோகப்படுத்திகொண்டு, பணத்தையும் நிலத்தையும் பறிக்கும் ஒரு உலகலளாவிய குற்றக்கும்பலே இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தன்னைத்தானே காலிபேட் என்று கூறிகொண்டு அதன் மூலம் செச்னயா, பால்கன் பிரதேசங்கள், வட ஆப்பிரிக்கா, மேற்கு ஐரோப்பா போன்ற இடங்களில் வாழும் திருப்தி அற்ற முஸ்லீம் இளைஞர்களை தங்களுக்கு ஆள் பிடிக்க உபயோகித்துகொண்டிருக்கிறது. பலர் வெள்ளையினத்தவர்கள். பலர் பேராசையும், வெறுப்பும் இணைந்த உணர்வில் இதில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
ஐ.எஸ்.ஐ.எஸின் மாதாந்திர வருமானம் சுமார் 50 மில்லியன் டாலர்கள் (சுமார் 330 கோடிரூபாய்கள்) என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த வருமானம், இந்த அமைப்பு கட்டுக்குள் வைத்திருக்கும் எட்டு எண்ணெய் வயல்களிடமிருந்தும், இதன் கீழ் வாழும் மக்கள் மீது விதிக்கும் கடுமையான வரிகள் மூலமும் வருகீறது. இது தான் ஆளும் பிரதேசங்களில் ஒரு உண்மையான அரசாங்கம் போல ஆள முயற்சித்தாலும், தண்ணீர், மின்சாரம், இதர சமூக தேவைகள் உடைந்துகொண்டிருக்கின்றன. ருஷ்யர்களுடனும் அமெரிக்காவுடனும் இன்று பிரான்ஸும் இணைந்து எண்ணெய்வயல்களையும், எண்ணெய் குழாய்களையும், அதன் கட்டமைப்புகளையும் தாக்குவதாலும், இந்த பயங்கரவாத அமைப்பின் பண மற்றும் ராணுவ முதுகெலும்பு உடைக்கப்பட்டுவிடும்.
ஏற்கெனவே வட ஈராக்கில் சிஞ்ஜார் பிரதேசத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டு தோற்கடிப்பட்டுவிட்டது இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற இஸ்லாமிய காலிபேட்டு. அலெப்போவிலிருந்தும், எண்ணெய் அதிகம் கொண்ட ஹோல் நகரத்திலிருந்தும் இது தோற்கடிக்கப்பட்டுவிட்டது. குர்திஷ் பெஷ்மெர்கா அமைப்பும், ஈரானிய ஷியாக்களும், ஈராக்கின் ராணுவமும், அதற்குள் பணியாற்றும் அமெரிக்கர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை தோல்வியடையச்செய்துகொண்டிருக்கிறார்கள். ரமாதி என்ற நகரம் அடுத்த குறியாக இருக்கிறது. ஈராக்கில் மோஸுலும், சிரியாவில் ரக்கா நகரமும், ஐ.எஸ்.ஐ.எஸின் வலிமையான நகரங்கள். இவற்றை எடுப்பது கடினமானதாக இருக்கும்.
நூற்றாண்டுகால நாகரீகத்துக்கான போர்
ஐ.எஸ்.ஐ.எஸின் கருத்தே மேற்கு நாகரிகத்தின் இதயத்தை தாக்குவதே. இது இஸ்லாமுக்கும் மேற்குக்கும் இடையேயான நூற்றாண்டுகால போரின் தொடர்ச்சி. இஸ்லாமிய அடிப்படைவாதம் மேலெழுவதன் வரலாற்றுப்பின்னணியை ஆராய்ந்து நான் என்னுடைய சமீபத்திய புத்தகத்தில் “அமெரிக்கா சீனா, இந்தியா, இஸ்லாம் ஆகியவற்றுக்கிடையேயான நாகரிக போட்டியே நமது அடுத்த நூற்றாண்டை வடிவமைக்கும்”என்று எழுதினேன். இது நாம் அறிந்த உலகத்தை மாற்றியமைக்கும். இது ஒவ்வொரு வடிவத்திலும், புதிய நாகரிக மோதலாக இருக்கும்.
“இந்த நூற்றாண்டு துவக்கத்தில், நான்கு நாகரிகங்கள் போட்டிபோட்டு இந்த நூற்றாண்டை வடிவமைக்க முயல்கின்றன. பல தலைமுறைகளுக்கு இந்த போட்டியின் விளைவு எவ்வாறு பலம் பங்கிடப்படும் என்பதும், பிரதேசங்கள் சமநிலை கொள்ளும் என்பதும் நிர்ணயிக்கப்படும். மேற்குலகு நாகரிகம் கீழ் நோக்கி சென்றாலும், உலக கொள்கை, கலாச்சாரத்தை தொடர்ந்து பாதிக்கும். சீனா மேலெழும். கன்பூசியன் நாகரிகத்தை முன்னுக்கு கொண்டுவந்து வரலாற்றிலும் கால்பதித்து, பசிபிக் கடலிலிருந்து ஆப்பிரிக்காவரைக்கும் தனது செல்வாக்கை உருவாக்கிகொள்ளும். மூன்றாவது மிகப்பெரிய நாகரிகமான இந்தியா, வரலாற்றில் ஆழப்பதிந்து தனது வன்மை, மென்மை இணைந்த ஒரு செல்வாக்கு சக்தியை உலகத்தில் உருவாக்கிகொள்ளும். உலகம் முழுவதும் பரந்த அதன் இந்திய மக்கள் தொகை, உலகத்தின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம், ஆகியவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது போன்ற ஒரு பொற்காலத்தை இந்தியாவுக்கு பெற்றுத்தரும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், பொது யுககணக்கு ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னாலும், அதற்கு பின்னால் ஐந்தாம் நூற்றாண்டிலும், இடையே இந்திய துணைக்கண்டம் இரண்டு மிகப்பெரிய மத ஸ்தாபகர்களை உருவாக்கியது (புத்தர், மஹாவீரர்), இரண்டு மாபெரும் பேரரசர்கள் (அசோகர், சந்திரகுப்தர்) இரண்டு பெருங்காவியங்கள் (ராமாயணம் ,மஹாபாரதம்)
இந்த நூற்றாண்டில் போட்டி போடும் நான்காவது நாகரிக சக்தி என்றால் அது இஸ்லாம். ஆன்மீக ரீதியாக மெக்காவுடன் இணைந்திருந்தாலும், ஒட்டோமான் பேரரசின் வீழ்ச்சி 1917இல் நடந்த பின்னால், 1924இல் காலிபேட் ஒழிக்கப்பட்ட பின்னால், அதற்கு மையம் என்று ஒன்று இல்லாமல் ஆகியிருக்கிறது. மேற்குலகு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விழுமியங்களால் முன்னகர்த்தப்படுகிறது. சீனா அதன் இன ஒருமையால் முன்னகர்கிறது. இந்தியா தனது புராதன மதங்களாலும், தத்துவங்களாலும் முன்னகர்கிறது. ஒவ்வொன்றுக்கும் தெளிவான புவியியல் மையம் இருக்கிறது. ஆனால் இஸ்லாமிய நாகரிகமோ, உலகளாவிய செல்வாக்குடன் வளர்கிறது. அது கிழக்கு ஆசியாவிலும் (இந்தோனேஷியா, மலேசியா) அரபு நாடுகளுலும் அரபு அல்லாத துருக்கி ஈரானிலும், மத்திய ஆசிய குடியரசுகளான உஸ்பெக்கிஸ்தான், கஜக்ஸ்தானிலும், கிழக்கு ஐரோப்பாவான போஸ்னியா, அல்பேனியாவிலும், வடக்கு ஆப்பிரிக்காவான மொரோக்கோ, லிபியாவிலும் மேலும் இந்திய துணைகண்டத்திலும், நாடுகளை கடந்து செல்கிறது. இதுவே இதன் பலமும் பலவீனமும் ஆகும்.
சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ்.ஐ.எஸின் தோல்வி இஸ்லாமிய பயங்கரவாதத்தின் முடிவு அல்ல. மாறாக, வெட்ட வெட்ட முளைக்கும் ராட்சதர்கள் போல ஒரு தலையை வெட்டும்போது மற்றொரு தலை முளைக்கும். ஐ.எஸ்.ஐ.எஸ் அல்குவேதாவிடமிருந்து வளர்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் அழியும்போது அதன் சாம்பலிலிருந்து இன்னொரு குழு எழும்.
அதனால்தான் தீவிரவாத இஸ்லாம் கொள்கையை அழிக்க ஒரே வழி அதனை ராணுவம், கொள்கை என்ற இரண்டு முனைகளிலும் போரை வென்றெடுப்பது. ராணுவம், தீவிரவாத முஸ்லீமை தோற்கடிக்கும். ஆனால் கொள்கைரீதியான போரே மிதவாத முஸ்லீமை சீர்திருத்தும்.
அது இல்லையேல், இந்த போர் முடியவே முடியாது.
- முடிவற்ற போர்: மிதவாத முஸ்லீமாக இருந்தால் மட்டுமே போதாது.
- வெளி ரங்கராஜன் – இரு நூல்கள்
- Tamil novel Madiyil Neruppu
- பொன்னியின் செல்வன் படக்கதை – 13
- உலகெங்கும் மசூதிகளில் இமாம்கள், “காபிர்களை முஸ்லீம்கள் வென்றெடுக்க ” அல்லாவை வேண்டுகிறார்கள்
- நித்ய சைதன்யா கவிதை
- துல்லிய ஒப்பற்ற நவீனப் போலிப் பூதக் கணினி வடிவமைப்பு முறையில் பிரபஞ்சப் படிப்படித் தோற்ற வளர்ச்சி ஆய்வுகள்
- செந்தி கவிதைகள் — ஒரு பார்வை
- தொடுவானம் 95. இதமான பொழுது
- அவன் அவள் அது – 11
- “வானுயர்ந்து எழுந்துள்ள கட்டிடங்களின் அத்திவாரக்கற்கள் வெளியுலகிற்கு தெரிவதில்லை. “
- தீ, பந்தம்
- திரை விமர்சனம் ஸ்பெக்டர்
- மருத்துவக் கட்டுரை – தன்மைய நோய் ( Autism )
- ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2015 மாத இதழ்
- சூடகம் கரத்தில் ஆட ஆடிர் ஊசல்