விதிகள் செய்வது

This entry is part 16 of 17 in the series 6 டிசம்பர் 2015

 

 

எந்த​ ஒரு விவாதமும்

நிறைவடைவதில்லை

முற்றுப் பெறுகிறது அவ்வளவே

 

எந்த​ இடத் தில் அது நிறுத்தப் பட்டது

பின்

எந்த​ வடிவில் மேலெடுக்கப்பட்டது

என்னும் புரிதலில்

நான் பலமடைந்தேன்

 

இந்த​ பலத் தைப்

பிரயோகிக்கும்

தருணத்தை ஆளை சூழலைத்

தேர்ந்தெடுப்பதில்

நான்

அரசியல் புரிந்தேன்

 

அரசியல் என்பது

விதிகளை வகுப்பதில்

மேற்கை ஓங்குதல்

என்னும் தெளிவுடன்

 

அதனாலேயே

விளையாடத் துவங்கும்

முன் குழந்தைகள்

விதிகள் வகுக்கும் போது

அவதானிக்கிறேன்

 

சத்யானந்தன்

Series Navigationபத்திரம்சென்னை- கடலூர் வெள்ளம் சில புகைப்படங்கள்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *