ஓவியக்கவி கலீல் கிப்ரான் கவிதை நூல் வெளியீடு

This entry is part 10 of 18 in the series 27 டிசம்பர் 2015

 

 image

(1883-1931)

 

மூலம் : கலீல் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

ஒற்றை இதயத்தால்
நான் இப்போது
உரைப்பவை எல்லாம்
நாளை ஆயிரம் இதயங்கள்
ஓதும் !

பிறக்க வில்லை நாளை
இறந்து விட்டது நேற்று
ஏன் அவலம் அவைமேல்
இன்று இனிக்கும் போது ?

கலில் கிப்ரான் 

 

 

திண்ணையில் பல மாதங்கள் வெளிவந்த ஓவியக்கவி கலீல் கிப்ரான் கவிதைகள் தொகுப்பை இப்போது தாரிணி பதிப்பகர் திரு. வையவன் ஒரு நூலாக வெளியிட்டுள்ளார்.

 

லெபனீஸ் அமெரிக்கக் கவிஞரான கலீல் கிப்ரான் ஓர் உயர்ந்த ஓவியக் கலைஞர், சிறந்த ஆன்மீகக் கட்டுரையாளர், ஒப்பற்ற கவிஞர், உன்னத வேதாந்த மேதை. கிறித்துவரான கலில் கிப்ரான் முதலில் அராபிக் மொழியிலும், பிறகு ஆங்கிலத் திலும் தன் கலைப் படைப்புகளை வடித்தார். 1923 இல் அவர் ஆங்கிலத்தில் எழுதியதீர்க்கதரிசி” (Prophet) என்னும் கவிதைத் தொகுப்பு மூலம் உலகப் புகழ் பெற்றார். 26 கவிதை வசனங்கள் கொண்ட அந்த நூல் 20 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. வறுமையில் வாழ்ந்த கலீல் கிப்ரான் முறையாகக் கல்வி கற்க முடியாமல், இளம் வயதில் ஒரு கிராமப் பாதிரியாரிடம் மதத்தின் உன்னதம் பற்றியும் பைபிளைப் பற்றியும் விளக்கமாக அறிந்து பிறகு அராபிக், சிரியா மொழி களை அவரிடம் கற்றுக் கொண்டார். பின்னர் தானே உலக வரலாறு களையும், விஞ்ஞான அறிவையும் பெற்றுக் கொண்டார். பத்து வயதாகும் போது கலீல் கிப்ரான் குன்றிலிருந்து தவறிக் கீழே விழுந்து வலது தோளைப் பலமாகக் காயப் படுத்திக் கொண்டார். அந்த உடற் பழுது அவரை வாழ்க்கை முழுவதிலும் பாதித்தது.

கலில் கிப்ரானின் ஆரம்ப காலப் படைப்புகள் அரேபிக் மொழியிலும், பிற்காலப் படைப்புகள் 1918 முதல் ஆங்கிலத் திலும் வடிக்கப் பட்டன. 1912 இல் அவர் நியூயார்க் நகரில் இடம்மாறி கவிதைப் படைப்புக்கும் ஓவியக் கலைக்கும் தன் ஆயுட் காலத்தை அர்ப்பணித்தார். தனது 48 ஆவது வயதில் (ஏப்ரல் 10, 1931) கலீல் கிப்ரான் நியூயார்க் நகரில் காலமானர். அவரது உடல் தாய் நாடான லெபனானுக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது

 

Series Navigationயார் இவர்கள்?ஞானத்தின் ஸ்தூல வடிவம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *