‘நறுக்’ கவிதைகள்

This entry is part 8 of 19 in the series 7 பெப்ருவரி 2016

 

 

பெட்ரோல் எரிகிறது

பிஸ்டன் துடிக்கிறது

சுகமான பயணம்

மோட்டாரோட்டிக்கு

 

*******

பத்தாம் மாடி

தொட்டிக் கள்ளி

தரைத் தென்னையிடம்

தம்பட்டம் அடித்தது

தாமே உயரமாம்

தென்னையை விட

 

*********

 

எவ்வளவு பழுத்தாலும்

பாகைக்கு

கசக்க மட்டுமே தெரியும்

 

*******

 

முகம் காட்டும்

கண்ணாடி

முதுகுக்குப் பின்னும்

காட்டும்

முக்கியக் கவனம்

இருக்கட்டும்

முதுகுக்குப் பின்னே

அங்குதான் உங்களுக்கு

குழி பறிக்கப்படுகிறது

 

********

 

விசாலமான

கூரைக் கடியில்

சுவர்ப் பொந்தில் பல்லி

‘கூரையின் கீர்த்தி

நம் பொந்துக்கேது?’

ஏங்கியது பல்லி

ஒரு நாள்

சுற்றியடித்த சூறாவளியில்

சுக்கு நூறானது கூரை

பொந்தில் பல்லிக்கோ

சுகமான தூக்கம்

பல்லிக்குப் புரிந்தது

‘இருப்பதைக் கொண்டு

இன்பம் கொள்’

 

*******

 

சிக்கலை

நீக்கையில்

சில முடிகள்

பிடுங்கப்படலாம்

சீப்பில்

தவறில்லை

 

******

 

Series Navigationகாதலர் தினம்இளமுருகு கவிதைகள் — ஒரு பார்வை ‘ கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் ‘ தொகுப்பை முன் வைத்து…
author

அமீதாம்மாள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *