மெக்காவை தேடி -1

This entry is part 19 of 19 in the series 7 பெப்ருவரி 2016

பக்கீர் ராஜா   மெக்கா பற்றி குரான் மற்றும் இஸ்லாமிய வரலாற்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்களும் இன்றைய மெக்காவும் ஒத்துப்போகிறதா என ஆராயும் புத்தகம், Quranic Geography , ஆசிரியர் Dan Gibson முதலில் மெக்காவை பற்றி குரானில் சொல்லப்பட்டிருப்பதும் இஸ்லாமியர்கள் நம்புவதும் என்ன என பார்த்தால் இன்றைய மெக்கா குரானில் சொல்லப்பட்டிருக்கிறது, சொல்லப்பட்டிருப்பது மட்டுமல்ல புகழப்பட்டுள்ளது. புகழ்ச்சி என்றால் நகரங்களின் தாய் எனவும் உலகின் எல்லா காய்,கனிகளும் கொண்டு வரப்படும் எனவும் மிகவும் புகழப்பட்டுள்ளது. ஆனால் […]

நான் ஒரு பிராமணன்?

This entry is part 1 of 19 in the series 7 பெப்ருவரி 2016

ஆம். நானும் ஒரு பிராமணன் தான். உச்சிக்குடுமி வைத்திருக்கவில்லை. பஞ்சக்கச்சம் உடுத்த வில்லை. பூணூல் போடவில்லை. கோத்திரம் இல்லாத ஒரு கோத்திரம் எனக்கு உண்டு. கோவில்களில் யாகம் நடத்தி அதி ருத்ர ஹோமங்களுக்காக‌ ஸ்ரீ ருத்ரம் சமகம் சொல்லி பூர்ண ஆகுதிக்கு அந்த நீண்ட மர அகப்பையில் எல்லாவற்றையும் பொசுக்கப்போகிறேன் என்று அடையாளமாய் சில தானியங்களையும் தனங்களையும் தீயின் நாக்குகளுக்கு கொடுக்க வில்லை தான். ஆனாலும் நான் பிராமணன் தான். பண்ணிக்குட்டிகளை மேய்ப்பவன் நான். பிணங்களைச் சுடுகிறவன் […]

அ. கல்யாண சுந்தரம் என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -ஆவணப்படம்

This entry is part 3 of 19 in the series 7 பெப்ருவரி 2016

                      கோவையில்  நடைபெற்ற பஞ்சாலைத் தொழிலாளர் மத்தியிலான ஒரு கூட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பேசுவதற்கு முன்னால் “ மக்கள் கவிஞன் வாழ்க”  என்று முழக்கமிடுகையில் பேச முடியாமல்   நெகிழ்வடைந்து விடுகிறார். அவரின் 29 ம் வயதில் அக்கூட்டம் கோவை பீளமேட்டில் நடைபெற்றது. அது முதலேதான் அவர் மக்கள் கவிஞர் ஆனார்.” காலம் தெரிந்து கூவும் குயிலாய் “ இருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை ஜனத்திரள் அங்கீகரித்து பட்டம் வழங்கிய அதே […]

தொடுவானம் 106. சோக கீதம்

This entry is part 2 of 19 in the series 7 பெப்ருவரி 2016

தெரு முனையில் நின்று பார்த்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம்  வரையில் வயல்கள் பச்சைப் பசேலென்று வரைந்த ஓவியம் போன்று காட்சி தந்தன. அவற்றை மூடியிருந்த இளம் நாற்றுகள் காலைக் காற்றில் சீராக ஒரு பக்கம் சாய்ந்தபடி அசைந்தாடின. சிறிது நேரம் அப்படியே நின்று இயற்கையுடன் செயற்கை கலந்த அழகில் லயித்துப்போனேன். வயல்வெளி வேலைகளெல்லாம் முடிந்து விட்டதால் ஆள் நடமாட்டம் அறவே இல்லை. தூரத்தில் வரப்பின் மீது ஒரு பெண் உருவம் மட்டும் தெரிந்தது. அவள் கோகிலம்தான்  அவள் […]

கானல் வரிகள்

This entry is part 4 of 19 in the series 7 பெப்ருவரி 2016

  அழகர்சாமி சக்திவேல்   கோவலனும் மாதவனும் கடைசியில் பிரிந்தே போனார்கள்… அவர்தம் கானல் வரிகளால் காதல்…கானல் நீர் ஆனது   கடலை ஒட்டிய ஹோட்டல் அறை… அலைகள் ஆர்ப்பரித்தது.. கோவலன் மாதவன் ஆசை மனங்களைப்போல.. முரட்டுத்தனமாய்.. ஒரு பேரலை இன்னொரு பேரலையை ஆரத் தழுவியது… ஒன்றை ஒன்று கடுமையாய் மோதிக் கொண்டன.. ஆவேச முத்தங்கள்…சொச்சங்கள்… எல்லாம் முடிந்தது..அலைகள் அடங்கியது… கடல் கடைசியில் அமைதியானது…   மாதவன் இன்னும் படுக்கையில்.. கோவலன் எழுந்தான்… கடல் அலைகளைப் பார்த்தான்.. […]

ஒப்பற்ற பொறியியல் சாதனை பனாமா கடல் இணைப்புக் கால்வாய்

This entry is part 5 of 19 in the series 7 பெப்ருவரி 2016

   Panama Canal (1870-1914) [The Greatest Engineering Marvel] சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++ https://youtu.be/v4_yX_8HXig https://youtu.be/YzCULxAmkRU https://youtu.be/i5cFJ4j0qzw https://youtu.be/VF7cA6I3zGY https://youtu.be/VOu8aqE5GN0 +++++++++++++++++++++++   மனிதர் படைத்த கடல் இணைப்புக் கால்வாய்; மலை அடுக்கில் கட்டிய நீரணைக் கணவாய்; வட தென் அமெரிக்கக் கண்டங்கள் இடையில் புனைத்தொட்டி நிரப்பி ஏற்றி இறக்கும் கப்பலை.  மனிதர் கட்டிய மகத்தான பனாமாக் கால்வாய் கப்பல்கள் போய்வரும் ஒப்பிலா நீர் மார்க்கம்.    முன்னுரை: […]

இரு கவிதைகள்

This entry is part 6 of 19 in the series 7 பெப்ருவரி 2016

  முகநூலை நான் ‘லெவ் ‘ பண்ணுகிறேன்      எனக்கு முகநூல் மிகவும் பிடித்திருக்கிறது . அதை நான் ‘லெவ் ‘ பண்ணுகிறேன் .   எனக்குப் பிடிக்காதவர்களை மற்றவர்கள் திட்டித் தீர்க்கிறார்கள். மனதுக்கு ரொம்பவும் இதமாக இருக்கிறது .   பெண்களை நான் மிகவும் மதிப்பவன் . அவர்கள் வீர சக்ரா வாங்கும் அளவுக்குத் தைரியசாலிகளாக முகநூலில் வளைய வருகிறார்கள் . அவர்கள் பேட்டை ரௌடிகளை போலீசில் ஒப்படைப்பதும் எச்சில் ஒழுக எழுதுபவனை வார்த்தைகளால் கண்டதுண்டமாக்குவதும் […]

காதலர் தினம்

This entry is part 7 of 19 in the series 7 பெப்ருவரி 2016

    ஈடன் தோட்டத்தின் மிச்ச சொச்சம். வணிகப்பாம்பும் சைத்தான்கள் காட்டும் ப்ளாஸ்டிக் ஆப்பிளும் பதினாறுகளில் பாய்ச்சுகின்றன‌ தேனாறும் பாலாறும். வாய்க்கால் வரப்புப்புல்லின் பனித்துளியில் கண்ணாத்தாவின் விழி வர்ணம் அந்த முனியனின் நரம்பு புடைத்தலில் யாழ் மீட்டியது. ஒரு பேருந்தில் எச்சில் தொட்டுக்க்கொடுத்த‌ டிக்கட் வாங்குகையில் கண்ணுக்கே எச்சில் ஊற வைத்த ஒரு சுடிதார் பெண்ணின் கண்ணின் கருங்குழியில் விழுந்த‌ அந்தக்காளை ஒரு மௌன ஜல்லிக்கட்டுக்கு தயார் ஆகி கொம்பு சீறி கண் கொதித்து மண் தெறிக்கிறது. […]

‘நறுக்’ கவிதைகள்

This entry is part 8 of 19 in the series 7 பெப்ருவரி 2016

    பெட்ரோல் எரிகிறது பிஸ்டன் துடிக்கிறது சுகமான பயணம் மோட்டாரோட்டிக்கு   ******* பத்தாம் மாடி தொட்டிக் கள்ளி தரைத் தென்னையிடம் தம்பட்டம் அடித்தது தாமே உயரமாம் தென்னையை விட   *********   எவ்வளவு பழுத்தாலும் பாகைக்கு கசக்க மட்டுமே தெரியும்   *******   முகம் காட்டும் கண்ணாடி முதுகுக்குப் பின்னும் காட்டும் முக்கியக் கவனம் இருக்கட்டும் முதுகுக்குப் பின்னே அங்குதான் உங்களுக்கு குழி பறிக்கப்படுகிறது   ********   விசாலமான கூரைக் […]

இளமுருகு கவிதைகள் — ஒரு பார்வை ‘ கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் ‘ தொகுப்பை முன் வைத்து…

This entry is part 9 of 19 in the series 7 பெப்ருவரி 2016

  இளமுருகு யார் ? எங்கே இருக்கிறார் என்ற குறிப்பு எதுவும் இப்புத்தகத்தில் இல்லை. சில கவிதைகளுக்குத் தலைப்பு இல்லை ; சில தலைப்புடன்… காதல் ஒருவனிடம் என்னென்ன மாறுதல்களைத் தரும் எனப் பேசுகிறது முதல் கவிதை ‘ மாறுதல் ‘ ! உன் சுட்டு விரல் தொழுதலே மாறுதலின் தொடக்கம் என் துயரப் படிவுகளிடையே நகை அதிர்வுகள் எழும்பின —- என்னும் கவிதையின் தொடக்கத்திலேயே கவிமொழி அமைந்து கவனத்தை ஈர்க்கிறது. அவிந்த சினத்தீ நுனியில் அன்பு […]