ஆறாது சினம்

This entry is part 4 of 16 in the series 6 மார்ச் 2016

 

0

“மெமரீஸ்” தமிழ் பேசியிருக்கிறது. இன்னமும் மலையாள மெமரீஸ்/ நினைவுகள் தான் மறையாமல் ஈர்க்கிறது!

0

அன்பு மனைவி நீனா, செல்ல மகள் மீனுவுடன் வாத்சல்ய வாழ்வு வாழும் அரவிந்த்திற்கு மாட்டுத்தாவணி சேகரால் ஒரு சங்கடம். விளைவு? மனைவியையும் மகளையும் இழக்கிறான். குடியில் தன்னை மூழ்கடித்துக் கொள்கிறான். ஐந்து பெண்களால் அவமானப்படுத்தப்படும் சந்தோஷ் எனும் மாற்றுத்திறனாளி, அவர்களின் கணவர்களை குறி வைத்துச் செய்யும் சீரியல் கொலைகளை துப்பறிய முடியாமல் திணறும் காவல் துறை இணை கமிஷ்னர் செங்கோடன், அரவிந்தை மீண்டும் பணிக்கு திரும்பி, அந்த வழக்கை முடிக்கச் சொல்கீறார். கடைசி பலியாக அரவிந்த்தின் தம்பியே மாட்டிக் கொள்ள, அவனால் தன் தம்பியைக் காப்பாற்றி சந்தோஷை தீர்த்துக் கட்ட முடிகிறதா என்பதே ஜூத்து ஜோசப்பின் மூலக் கதை. தமிழில் அது ரத்த மூலமாக மாறியிருப்பது சோகம்.

பிரித்விராஜின் வசீகரக் கண்கள் அரவிந்தாக வரும் அருள்நிதிக்கு இல்லை. ‘மௌனகுரு’வின் பாதிப்பிலேயே கண்கள் செருக படம் முழுவதும் பவனி வருகிறார். மாண்டேஜ் காட்சிகளில் மட்டுமே நீனாவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் வீணடிக்கப்பட்டிருக்கீறார். அருள்நிதியைத் தாண்டி அசிஸ்டென்ட் கமிஷ்னர் சற்குணப்பாண்டியனாக வரும் ரோபோ சங்கரும், இணைக் கமிஷ்னராக தோன்றும் ராதா ரவியும் கவர்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு பளிச்சென்று நடிக்கீறார் காவலர் ஆரோக்கியமாக சார்லி. அம்மாவாக துளசி தன் பெரிய கண்களால் ஒரு காவியமே படைக்கீறார்.சபாஷ்!

தமனின் இசையில் “ தனிமையே தனிமையே உனக்கென்ன தாகம்” மலையாள வாசனையுடன் ஈர்க்கிறது. பின்னணி இசை பெரிதாக சொல்லிக் கொள்ள ஏதுமில்லை.

“ மெமரீஸ் “ படத்தில் பிரித்விராஜ் குடியால் அவமானப்படுத்தப்படும் இடம் வெகு அருமையாக இருக்கும். இங்கே அதை கோட்டை விட்டு விட்டார்கள். இமேஜ் பார்த்து இடறிய இடம் இது.

இயக்குனர் அறிவழகன், ஈரம் பாதிப்பு மறக்காமலிருக்க அதிக மழைக் காட்சிகளை கோர்த்திருக்கீறார். படத்தின் சாயம் அதில் கொஞ்சம் வெளுத்து விடுகிறது.

சக்தி வெங்கட்ராஜின் கலை திறமைக்கு, வில்லனின் க்ளைமேக்ஸ் மாவு மில் செட்டிங்க்ஸ் ஒரு சான்று. அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு குறையற்று இருக்கிறது.

134 நிமிடங்களே ஓடும் இப்படம், பல இடங்களில் கொட்டாவியை வரவழைக்கிறது. இதை விட நாலு நல்ல ஆவிகளை வைத்து அறிவழகன் ஈரம் 2 எடுத்திருக்கலாம்.

0

பார்வை : ஆறின சினம்.

0

மொழி : நெல்லை ஒரிஜினல் அல்வா என தலைப்பு வைத்திருக்கலாம் பங்காளி!

0

Series Navigationகணிதன்தங்கம் மூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து … ‘ தொகுப்பை முன் வைத்து …
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *