தேர்தல் சூடு பிடித்தது.
இதற்கு முன் நடந்த தேர்தல்களைவிட இது முற்றிலும் மாறுபட்டது என்பது கண்கூடு. இப்போது மக்கள் மத்தியில் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு அதிகமானது. ஒவ்வொரு வாக்கும் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யவல்லது என்பதை மக்கள் உணரலாயினர்.
பட்டணங்களில் வாழும் படித்தவர் முதல் பட்டித் தொட்டிகளில் வாழும் பாமரர்கள் வரை அரசியலில் அதிகம் ஆர்வம் கொள்ளத் தொடங்கினர்.இதற்குக் காரணம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரம். மேடைப் பேச்சுகளுடன் அது நின்றுவிடவில்லை. மக்களைப் பெரிதும் கவர்ந்திடும் திரைப்படங்களும் முக்கிய காரணம் எனலாம்.
நாடு முழுதும் உள்ள மக்களை எளிதில் சென்றடையும் தொலைத் தொடர்புச் சாதனமாக திரைப்படங்கள் அமைந்து விட்டதை திராவிட முன்னேற்றக் கழகம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. அதற்கேற்றாற்போல் அண்ணாவும் கலைஞரும் திரைப்பட கதை வசனம் எழுதும் ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். அதுவரை பக்திப் படங்களையே பார்த்துப் பழகிய தமிழக மக்கள் புதிதாக சமூகப் படங்களைப் பார்க்கலாயினர். எம்.கே. தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, கிட்டப்பா போன்ற கதாநாயகர்களைப் பார்த்து இரசித்தவர்கள் இப்போது எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோரை கதாநாயகர்களாகக் கண்டு இரசித்தனர். அதோடு கவிஞர் கண்ணதாசனின் பாடல்களைகளைக் கேட்டு .மகிழ்ந்தனர். நகைச்சுவைக்கு என்.எஸ்.கிருஷ்ணன், டி.எ .மதுரம், மனோரமா, சந்திரபாபு, நாகேஷ் இருந்தனர். மந்திரிக்குமாரி, மலைக்கள்ளன், பராசக்தி, வேலைக்காரி, ஓர் இரவு, மனோகரா, தாய் சொல்லைத் தட்டாதே, தாய்க்குப் பின் தாரம், தொழலாளி, அலிபாபாவும் நாற்பது ,திருடர்களும், குலேபகாவலி, நாடோடி மன்னன், காஞ்சித் தலைவன், பூம்புகார் போன்ற வெற்றிப் படங்களை வெளியிட்டு அவற்றில் முழுக்க முழுக்க பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொண்டனர்! இதில் நடிக்கும் கதாநாயகர்கள் எப்போதுமே நல்லவர்களாக, ஏழைகளுக்கு உதவுபவர்களாக, நீதியை நிலைநாட்டப் போராடி வெற்றி பெறுபவர்களாகச் சித்தரிக்கப்படுவார்கள். அதைக் காணும் மக்கள் அது வெறும் நடிப்பு என்பதை மறந்து, உண்மையில் கதாநாயகர்கள் அப்படிப்பட்டவர்களே என்று நம்பலாயினர்.
நடிகர்களில் எம்.ஜி. ஆர். புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, பொன்மனச் செம்மலாகப் போற்றப்பட்டார். சண்டை காட்சிகளில் அவர் குத்துக் சண்டை, சிலம்பம், வாள் சண்டை ஆகியவற்றில் மிகவும் இயல்பாக நடிக்கும் ஆற்றல் பெற்றவர் என்பதால் அவரை உண்மையில் பெரிய வீரனாகவும் எண்ணிப் போற்றினர். அவர் மக்கள் நெஞ்சங்களில் உன்னதமான இடத்தைப் பெற்றார். இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம். காஞ்சித் தலைவன், ஆயிரத்தில் ஒருவன், எங்கள் வீட்டுப் பிள்ளை, அன்பே வா, நான் ஆணையிட்டால், விவசாயி, அரச கட்டளை போன்ற எம்.ஜி.ஆர். படங்களா தேர்தல பிரச்சாரத்துக்குப் பெரிதும் உதவின,
உலகிலேயே திரைப்படங்கள் மூலம் பகுத்தறிவுச் சிந்தனையையும், அரசியல் விழிப்புணர்வையும் உண்டுபண்ணியதொடு, தேர்தல் பிரச்சாரமும் செய்த ஓர் அரசியல் கட்சி உண்டெனில் அது திராவிட முன்னேற்றக் கழகமே! இது ஓர் அதிசயமான உண்மை! இதற்குக் காரணமாக இருந்தவர்கள் அண்ணாவும் கலைஞருமே! எம்.ஜி.ஆர். சிவாஜி போன்ற ஜாம்பவான்களை உருவாக்கியவர்களும் இவர்களே! பராசக்தி ( 1952 ) இல்லையெனில் சிவாஜி இல்லை. மந்திரி குமாரி (1950 ) இல்லையெனில் எம்.ஜி.ஆர். இல்லை. இந்த இரண்டு படங்களுக்கும் கதை வசனம் எழுதியவர் கலைஞர்!
- உலகிலே பிரமிக்கத் தக்க ஜப்பானின் மிகப்பெரும் ஊஞ்சல் பாலம்
- இந்த வார்த்தைகளின் மீது
- கணிதன்
- ஆறாது சினம்
- தங்கம் மூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து … ‘ தொகுப்பை முன் வைத்து …
- அவுஸ்திரேலியாவில் அனைத்துலகப் பெண்கள் தின விழா
- தொடுவானம் 110. தமிழகத்தில் திராவிட ஆட்சி.
- கனவு நீங்கிய தருணங்கள்
- பால்
- “போந்தாக்குழி”
- தமிழினியின் சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “
- சொல்வது
- நீருக்குள் சென்னை காருக்குள் என்னை…(32மணிநேரம்)
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் படத்தொகுப்பு பயிற்சிப் பட்டறை
- இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 156 நாள் : 20-3-2016, ஞாயிறு காலை 9. 30 மணி
- செல்லுலாயிட் மேன் திரையிடல் – பி.கே.நாயர் நினைவாக… நாள்: 12-03-2016, சனிக்கிழமை