This entry is part 10 of 12 in the series 13 மார்ச் 2016

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

சொற்களின் சிற்பி

சிற்பியின் உளிச்சிதறல்களில்

புதுப்புது சொற்களைக் காண்கிறான்

 

சொற்களின் வேடன்

வேடனின் வித்தைகளில்

புதுப்புது சொற்களைக் கண்டெடுக்கிறான்

 

சொற்களின் கடவுள்

கடவுளின் மொழியில்

புதுப்புது சொற்களைச் சேர்க்கிறான்

 

சொற்களின் புத்தன்

புத்தனின் சொற்களில்

புத்தனைத் தேடித் தோற்கிறான்.

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationசமயவேல் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பறவைகள் நிரம்பிய முன்னிரவு ‘ தொகுப்பை முன் வைத்து…காரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு – 21.3.2016 முதல் 23.3.2016 வரை