கவிதைத் தேர்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 10 in the series 17 ஏப்ரல் 2016

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

புறப்பட்டுவிட்டேன்

கவிதைத் தேர் ஏறி

காலச்சக்கரம் பூட்டி

இலக்கணக் கடையாணி

கழற்றி

கற்  பனைக் குதிரை கட்டி

சக்கரத்தில் ஒன்று

முன்னோக்கியும்

இன்னொன்று

பின்னோக்கியும் ஓட

நாற்றிசையும்

சுழல்கிறது என் தேர்

நின்றது நின்றபடி!

 

Series Navigationநல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல்மலேசியத் தமிழ் எழுத்தாளர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *