பெண்(பொம்)மை

author
0 minutes, 2 seconds Read

     “ ஸ்ரீ: “

 

 

விற்பனைக்கு அறிமுகமானது

புது டிசைன் புடவை;

வழக்கமாக

வாசலில் நிற்கும் பொம்மைக்குப்

புடவை கட்டிவிடும்

புண்ணியகோடித்தாத்தா

வேலையை விட்டுப் போயாச்சு.

புதிதாக வந்த இளந்தாரியிடம் வந்தது

சேலைகட்டும் வேலை.

சென்ற வாரம்தான் கல்யாணம் கட்டிய

இளந்தாரி இளமுருகு

பொம்மையின் இடுப்பைச் சுற்றிப்

புதுப் புடவையைக் கட்டி

கொசுவத்தைச் சொருகவும்

 

 

2

செல்லமாய்ச் சிலிர்த்து

இலேசாக மேனி சிணுங்க

“பேட் டச்” (bad touch) என்றது

துணிக்கடைப் பெண் பொம்மை.

**** **** **** **** ****

மின்னஞ்சல் : sriduraiwriter@gmail.com

author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *