சூழல் மாசு குறித்த கவிதைகள் சில

This entry is part 8 of 20 in the series 4 செப்டம்பர் 2016

 

ரிஷி

 

1.

 

டற்கரை மனலெங்கும் கட்டெறும்புகள்”

போகிறபோக்கில் பிரகடனம் செய்தவர்

சட்டைப்பையிலிருந்து நான்கைந்தை எடுத்துக்காட்டி

இவைபோல் இன்னுமின்னும் ஏராளமாய்

என்று கூவிக்கொண்டே போனார்கள்.

அவர்களுடைய கைகளில் அசைவின்றி உறைந்திருந்த அந்தக் கட்டெறும்புகளைப் பார்த்ததும்

கடற்கரையில் தஞ்சமடைந்திருந்த சிலருக்குச்

சட்டெனக் கேட்கத் தோன்றுகிறது:

”சிறிதும் தாமதியாமல் அவற்றைக் கண்காட்சிப்படுத்த

பிரமாதமா யோர்  காகித மலரைத் தயாரித்துத்  தரலாமே

கிளிஞ்சல்களைப் பொட்டலம் கட்டி

யெடுத்துச் செல்லவாவது பயன்படும்”.

 

 

2.

சிறிதும் மனசாட்சியின்றி மரங்களை வெட்டிவீழ்த்தும் அரக்கர்கள்

தல விருட்சங்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்

பலமாய்

நலமாய் நாம் வாழ

காட்டுவழியெங்கும் திரிந்தலைந்தோர்

ஆதிவாசிப்பெண் திரட்டிய  மூலிகையிலைகளைக்

கவர்ந்துசெல்லத் திட்டம் தீட்டுபவர்கள்

அவளை வெருட்டப் பார்க்கிறார்கள்;

விரட்டப் பார்க்கிறார்கள்.

முழுமூச்சா யவள் எதிர்க்க

மண்டையில் குண்டாந்தடியால் தாக்கி

போகும் வழியில் அவளைத் தட்டுக்கெட்டவளாகக்

கதைகட்டிவிட்டால் போயிற்று

என்று கைதட்டிச் சிரிக்கிறார்கள்.

கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளும் பரபரப்பில் அவர்கள்

அறவே மறந்துபோய்விடுகிறார்கள் –

வழியெங்கும் வனதேவதையின் கண்கள் கனன்றுகொண்டிருப்பதை.

 

3.

த்தியால் கீறித் தீர்த்த பின்னும்

சிறிதுகூட முனகாமலிருப்பவரைக் கண்டு

சஞ்சலமும் வெஞ்சினமுமாய்

சித்தங்களங்கியவர்களென்று கத்தித் தீர்க்கிறார்கள்;

அழு, கெஞ்சு, மண்டியிடு, பிழைத்துப்போவாய்

என்று கடகடக்கின்றன காலிப் பாத்திரங்கள்.

தன் விளிம்புவரை நிரம்பியிருக்கும் நன்னீரே தன் நியாயமாய்

நிறைகுடம் தாகமாற்றியவண்ணம் .

”பதிலியற்ற கதிரோனைப் பார்த்துக்

குலைக்க நாம் என்ன மனிதர்களா” என்று

சொல்லியபடி தம் வழியே சென்றுகொண்டிருக்கும்  நாய்கள்.

 

ரு மலைமுகட்டில் நின்றவண்ணம்

தாமே யந்த மலையாய்

நம்பத் தொடங்கும்

தம்பட்டமடித்துக்கொள்ளும்

சிறுமதியாளர்களுக்கு

அறிவுபுகட்டுவதாய்

உருவாகும் நிலநடுக்கம்…..

 

உண்மை _

நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும்.

 

5.

யாருமறியாமல்

கொல்லைப்புறமாய் எகிறிக் குதித்து

பின்பக்கக் கதவின் பூட்டை

மெல்லக் கன்னக்கோலிட்டுத் திறந்து

அலமாரியிருக்கும் அறையடைந்து

ஒரு கையில் இருந்த ‘டார்ச்’ஐ  கக்கத்திலிடுக்கியபடி

மறுகையால்

கையோடு கொண்டுவந்திருந்த கோணிப்பையில்

அள்ளியள்ளிப் போட்டுக்கொண்டிருந்தபோது

அரவம் கேட்டு அங்கே வரும்

வீட்டுரிமையாளர்

அதிர்ந்து தடுக்க முயல

கேட்டானே யொரு கேள்வி யந்த

கள்ளர்க்கெல்லாம் கள்ளன்:

“காட்டு உன் salary certificate”ஐ

 

 

Series Navigationதொடுவானம் 134. கண்ணியல்‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ 4
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *