J.P. தக்சணாமூர்த்தி
“நான்கு வேளை சாப்பிடுபவன் நாசமாப் போவான்
மூன்று வேளை சாப்பிடுபவன் நோயாலேயே அழிவான்
இரண்டு வேளை சாப்பிடுபவன் யோகியாவான்
ஒரு வேளை சாப்பிடுபவன் ஞானியாவான்
ஒரு வேளை கூட சாப்பிடாதவன் உடல் காய சித்தியாகும்”
என்று முன்னோர்கள் பாடி வைத்துள்ளனர்.
தினமும் பல்வகை உணவுகளை அளவில்லாமல் உண்பதால் உடலில் பல்வோறு உபாதைகள் ஏற்படுகின்றன். தினமும் உணவைக் கட்டுப்பாட்டுடன் உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு உண்ணும் உணவின் எடை தோராயமாக ஒரு கிலோ என்று வைத்துக் கொளவோம், அதாவது, சாப்பாடு (ஒரு நாளைக்கு) 1/4 கிலோ காய்கறி (குழம்பு) டீ, உள்ளிட்ட நோறுக்குத் தீனி மற்ற உணவுப் பொருட்கள் ஆக மொத்தம் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவின் எடை 1 கிலோ
ஒரு மாதத்திற்கு வேண்டிய உணவு (30×1) = 30 கிலோ ஒரு வருடத்திற்கு தேவையான உணவின் எடை = 365 கிலோ பத்து வருடத்திற்கு தேவையான உணவின் எடை (60×365) = 21900 கிலோ டன்னில் குறிப்பிட்டால் 21900/1000 = 21.9 டன்கள்
இதனை தோராயாமாகத் தான் கொடுத்துள்ளோம. நடைமுறையில் உணவின் அளவு மாறுபடும்.
ஆக ஒரு மனிதன் சாராசரி 60 வருடங்களில் 21.9 டன் அளவை உட்கொள்கின்றான். 21.9 டன் எடையுள்ள உணவுப் பொருட்களை ஒரு அரவை இயந்திரத்தில் அரைக்கக் கொடுத்தால் அதனை அரைக்க எத்தனை நாட்கள் ஆகும். அவ்வாறு அரைக்கும் பொழுது அவ்வியந்திரத்தின் ஏற்படும் தேய்மானம் எவ்வளவு இருக்கும். இரும்பால் ஆன அந்தகைய இயந்திரங்களுக்கே இவ்வளவு பக்குவம் தேவைப்படும் பொழுது, கிள்ளினால் புண்ணாகும் தோலினால் ஆன மனித உடலும். குடலும் 21.9 டன் எடையுள்ள உணவை அரைக்கும் பொழுது அவற்றிற்கு எவ்வளவு பக்குவம் தேவைப்படும். 21.9 டன் எடையுள்ள உணவை அரைக்க தோராயமாக 60 வருடங்கள் தேவை. தினமும் உடல் உறுப்புகள் ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கின்ருக்கின்றன. உடலுக்கு ஒய்வு என்பது வேண்டாமா? சற்று சிந்தித்துப் பருங்கள். காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு வரையும் 24 மணி நேரமும் மனிதனின் உடல் உறுப்புகள் ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன். உடலுக்கு எப்போது எப்படி நாம் ஓய்வு கொடுக்கப் போகிறோம்? நம் முன்னோர்கள் நன்கு ஆழமாக சிந்தித்து செயல்படுத்தியதே “விரதம்“ என்ற முறை. விரதம் என்ற பெயரில் உணவு உண்ணாமலும், பத்தியம் இருந்தும் வந்தனர். இதனால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தது. மாதம் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் விரதம் இருப்பதால் உடல் உறுப்புகளுக்கு அதிக ஓய்வு கிடைக்கும். ஒரு நாள் விரதம் இருந்தால் 48 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை ஆயுள் நாட்களில் அதிகரிக்கும் என்று முன்னோர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.
உணவின் கலோரி
ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை 1 டிகிரி செல்ஷியஸ் உயர்த்தும் போது அல்லது குறைககும் போது வெளிவிடும் வெப்பத்தின் அளவு 1 கலோரி எனப்படும். நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட் ஆகிய சத்துப் பொருட்களே நம் உடலின் தேவைக்குரிய சக்தியைக் கொடுக்கின்றன். இந்த சக்தியின் அலகு கலோரி. இந்த சக்தி சுவாசித்தல், இரத்த ஒட்டம், ஜீரணம் ஆகிய வேலைக்களுக்கு பயன்படுகிறது. நம் உடலை இயக்குவதற்குத் தேவையான சக்தி அநேகமாக எல்லா மனிதர்களுக்கும் ஒரே அளவுதான் தேவைப்படும். ஆனால் அவரவர் செய்யும் வேலைக்கு ஏற்ப, ஒருவருக்குத் தேவைப்படும் கூடுதல் சக்தி மாறுபடும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், ஒருவரின் வயது, எடை, உயரம் இவற்றை மனதில் கொண்டுதான் ஒருவருக்குத் தேவையான சக்தியும் உணவின் கலோரி மதிப்பீடும் நிர்ணயிக்கப்படுகிறது.
மனிதரின் ஒரு நாளைய தேவை
| வயது | கலோரிகள் |
| 50 | 1500 |
| 30 – 50 | 2000 |
| 30 | 2500 |
எடையும் கலோரியும் 50 கலோரிக்கும் குறைவான உணவுகள்
| பொருட்கள் | கலோரிகள் |
| டீ 150 மிலி | 25 |
| காபி 150 மிலி (30 மிலி பாலுடன், சர்க்கரை இல்லாமல் ) | 30 |
| மோர் | 15 |
| இளநீர் | 24 |
| தண்டுக்கீரை | 45 |
| கீரைத்தண்டு | 19 |
| சிறுகீரை | 33 |
| முளைக்கீரை | 43 |
| அரைக்கீரை | 44 |
| குப்பக்கீரை | 38 |
| முட்ட கோஸ் | 27 |
| கொத்தமல்லி | 44 |
| வெந்தயக்கீரை | 49 |
| புதினா | 48 |
| பருப்புகீரை | 27 |
| பசலைகீரை | 26 |
| வெள்ள பூசணி | 10 |
| பீன்ஸ் | 48 |
| பாகற்க்காய் | 25 |
| சுரைக்காய் | 12 |
| அவரைக்காய் | 48 |
| காலிபிளவர் | 30 |
| வெண்டைக்காய் | 35 |
| மேரக்காய் | 27 |
| கொத்தவரக்காய் | 16 |
| வெள்ளிரிக்காய் | 13 |
| முருங்கைக்காய் | 26 |
| பீர்க்கங்காய் | 17 |
| புடலங்காய் | 18 |
| தக்காளிக்காய் | 23 |
| தக்காளிப்பழம் | 20 |
| பீட்ருட் | 43 |
| கேரட் | 48 |
| பெரிய வெங்காயம் | 50 |
| முள்ளங்கி (சிவப்பு) | 32 |
| முள்ளங்கி (வெள்ளை) | 17 |
| குடைமிளகாய் | 24 |
| கோவைக்காய் | 18 |
| நூககோல் | 21 |
| வெங்காயத்தாள் | 11 |
| பூசணி (மஞ்சள்) | 25 |
| வாழைத்தண்டு | 42 |
| வாழைப்பூ | 34 |
| மாங்காய் | 44 |
| பச்சை மிளகாய் | 29 |
| கொய்யாப்பழம் | 38 |
| சாத்துக்குடி | 43 |
| தர்பூசணி | 16 |
| ஆரஞ்சுபழம் | 48 |
| பப்பாளிப்பழம் | 32 |
| அன்னாசிப்பழம் | 46 |
| பச்சைபயிறு சுண்டல் | 33 |
| பட்டாணி சுண்டல் | 33 |
50 முதல் 100 கலோரி உள்ள உணவுகள்
| பொருட்கள் | கலோரிகள் |
| பால் 100 மிலி | 100 |
| தயிர் 1/2 கப் | 60 |
| சாம்பார் | 65 |
| தக்காளி சட்னி | 52 |
| வெங்காய சட்னி | 65 |
| புதினா சட்னி | 64 |
| சிறிய வெங்காயம் | 59 |
| பச்சைப் பட்டாணி | 93 |
| உருளைக்கிழங்கு | 93 |
| சேனைக்கிழங்கு | 79 |
| கொடிக்கிழங்கு | 97 |
| வாழைக்காய் | 64 |
| ஆப்பிள் | 59 |
| திராட்சை | 58 |
| பலாப்பழம் | 88 |
| எலுமிச்சை பழம் | 57 |
| மாம்பழம் | 74 |
| மாதுளை | 65 |
| சப்போட்டா | 98 |
| அகத்திக்கிரை | 93 |
| ராஜகீரை | 67 |
| சக்கரவர்த்திக்கீரை | 57 |
| முருங்கைக்கீரை | 92 |
| மணத்தக்காளிக்கீரை | 68 |
| பொன்னாங்கண்ணிக்கீரை | 73 |
| டபிள் பீனஸ் | 85 |
| இஞ்சி | 67 |
| நெல்லிக்காய் | 58 |
| கொண்டைக்கடலை சுண்டல் | 63 |
| ராஜ்மா சுண்டல் | 67 |
| தட்டப்பயிறு சுண்டல் | 75-80 |
| முளைகட்டிய பச்சைப்பயிறு சுண்டல் | 62 |
101 முதல் 200 கலோரி உள்ள உணவுகள்
| பொருட்கள் | கலோரிகள் |
| தோசை | 200 |
| சப்பாத்தி | 100 |
| உப்புமா | 200 |
| பொங்கல் | 138 |
| இடியாப்பம் | 100 |
| அரிசி சாதம் | 113 |
| கோதுமை சாதம் | 114 |
| சாம்பார் சாதம் | 136 |
| புளி சாதம் | 125 |
| எலுமிச்சை சாதம் | 124 |
| மீன் குழம்பு | 141 |
| வேகவைத்த முட்டை | 170 |
| ஆம்லெட் | 190 |
| வாழைப்பழம் | 116 |
| சீதாபழம் | 104 |
| மரவள்ளிக்கிழங்கு | 157 |
| ஓவல் | 125 |
| போன்விட்டா | 125 |
| கிச்சடி | 168 |
| கருணைக்கிழங்கு | 111 |
| சக்கரைவள்ளிக்கிழங்கு | 120 |
| பூண்டு | 145 |
| கருவேப்பில்லை | 108 |
| இட்லி | 140 |
| ஆப்பம் | 100 |
201 முதல் 400 கலோரி உள்ள உணவுகள்
| பொருட்கள் | கலோரிகள் |
| மசால்தோசை | 220 |
| ஊத்தாப்பம் | 220 |
| தேங்காய் சட்னி | 325 |
| பூரி | 318 |
| பூரி மசால் | 209 |
| பரோட்டா | 310 |
| வெஜிடபிள் பிரியாணி | 382 |
| நூடுல்ஸ் | 375 |
| பிரைடு ரைஸ் | 374 |
| கோழிக்கறி | 205 |
| வறுத்த மீன் | 256 |
| ஆட்டு இறைச்சி | 374 |
| பன்றி இறைச்சி | 375 |
| பேரிச்சம்பழம் | 317 |
| ஐஸ்கிரீம் | 217 |
| பர்பி | 296 |
| சமோசா | 256 |
| வடை | 243 |
| போண்டா | 223 |
| லட்டு | 387 |
| மைசூர்பாக் | 387 |
| குலாப் ஜாமூன் | 400 |
| ரசகுல்லா | 340 |
| கோதுமை பிரட் | 244 |
| சாதா பிரட் | 245 |
| சக்கரை | 398 |
| தேன் | 319 |
| வெல்லம் | 383 |
| ஜவ்வரிசி | 351 |
| கடலைப்பருப்பு | 372 |
| பொட்டுக்கடலை | 396 |
| கொள்ளு | 321 |
| சுண்டைக்காய் உலர்ந்தது | 269 |
| பன்னீர் | 264 |
| ஏலக்காய் | 229 |
| வரமிளகாய் | 246 |
| கிராம்பு | 286 |
| மல்லி | 288 |
| சீரகம் | 356 |
| வெந்தயம் | 333 |
| மிளகு | 304 |
| மஞ்சள் துள் | 349 |
| பஃப்ஸ் | 356 |
| புளி | 283 |
400 கலோரிக்கு மேல் உள்ள உணவுகள்
| பொருட்கள் | கலோரிகள் |
| ஓட்டு பக்கோடா | 475 |
| முறுக்கு | 529 |
| தட்டவடை | 521 |
| உருளைக்கிழங்கு சிப்ஸ் | 569 |
| மிக்சர் | 500 |
| பாதாம் | 655 |
| முந்தரி | 596 |
| வெண்ணைய் | 729 |
| நெய் | 900 |
| டால்டா | 900 |
| சமையல் எண்ணெய் | 900 |
| இறைச்சி உறுப்பு பகுதிகள் | 406 |
| மாட்டிறைச்சி | 413 |
| பாதாம் அல்வா | 570 |
| கேக் | 460 |
| ஜிலேபி | 412 |
| சாக்லேட் | 499 |
| எள்ளு | 563 |
| நிலக்கடலை | 570 |
| பிஸ்தா | 625 |
| கசகசா | 408 |
| காய்ந்த தேங்காய் | 662 |
| தேங்காய் பால் | 430 |
| தேங்காய் | 444 |
| பர்கர் | 540 |
| சோயா பீன்ஸ் | 432 |
நாம் அன்றாடம் செய்யும் சில பணிகள் மூலம் உடலில் எத்தனை கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்ற அட்டவணை (ஒரு மணி நேரம் செய்தால்)
| பொருட்கள் | கலோரிகள் |
| தொலைபேசியில் பேசுவது | 50 |
| குளிப்பது | 100 |
| படுக்கை சுத்தம் செய்வது | 300 |
| பல் விளக்குவது | 100 |
| தலைவாருதல் | 100 |
| உடை உடுத்தும்போது | 150 |
| பர்னிச்சர்களை துடைப்பது | 150 |
| ஆபிஸில் ஃபைல் செய்வது | 200 |
| துணிக்கு இஸ்திரி போடுவது | 100 |
| தறையை மெழுகுவது | 200 |
| உணவு சமைப்பது | 100 |
| படிப்பது | 25 |
| தைப்பது | 50 |
| டைப் அடிப்பது | 50 |
| துரிதமாக சைக்கிள் ஓட்டுவது | 600 |
| மெதுவாக சைக்கிள் ஓட்டுவது | 300 |
| மலை ஏறுவது | 400 |
| பெயிண்ட் செய்வது | 150 |
| பாடுவது | 50 |
| வேகமாக ஓடுவது | 900 |
| மெதுவாக ஓடுவது | 600 |
| மாடிப்படி ஏறி இறங்குவது | 800 |
| பாத்திரங்கள் தேய்ப்பது | 75 |
| கூடைப் பந்து விளையாடுவது | 550 |
| பாட்மின்ட்டன் விளையாடுவது | 400 |
| உடற்பயிற்சி செய்தல் | 600 |
| தோட்ட வேலை செய்தல் | 250 |
| துணிதுவைத்தல் | 75 |
இவ்வாறு நாம் உண்ணும் உணவில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதன் மூலம் நாம் உடலை சீரான எடை இருக்கும்படி வைத்துக் கொள்ள முடியும். பல்வேறு உணவுகளின் கலோரி கணக்கு.
குறிப்பு… இந்தப் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள கலோரி அளவுகளள் தோராயமானதே. மூலப்பொருட்களைப் பொருத்தும் கலோரி அளவுகள் மாறுபடலாம்.
எனவே உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வீர்கள் என்று நம்புகிறேன்.
J.P. தக்சணாமூர்த்தி
- ரெமோ – விமர்சனம்
- திரும்பிப்பார்க்கின்றேன் சுஜாதாவிடம் நான் கற்றதும் பெற்றதும் ஈழத்தமிழர்கள் மீது ஆழ்ந்த அனுதாபம் கொண்டிருந்த சுஜாதா
- 21ஆம் நூற்றாண்டு நவீனக்கவிதைகளில் புதியப் போக்குகள் (ஆய்வு கட்டுரை நூல்) ஆசிரியர் : முனைவர் பூ மு அன்பு சிவா
- ஒரு நாள் விரதமிரு 48 நாட்கள் ஆயுள் நாட்களில் அதிகரிக்கும்
- கவிநுகர் பொழுது-10 – (கவிஞர் கனிமொழி.ஜி யின், ’கோடை நகர்ந்த கதை’, கவிதை நூலினை முன்வைத்து)
- எரிமலை, பூகம்பம் தூண்டும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 3 பொன்னம்மாவும் அன்னம்மாவும்
- நீள்கவிதை – பராக் பராக் பராக்..!
- ஒரு நாளின் முடிவில்…..
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 2
- தொடுவானம் 139.உலகத் தொழுநோய் தின விழா
- தொடு நல் வாடை
- கார்த்திகா மகேந்திரனின் ‘Subramanya bharathi and other Legends of Carnatic Music’ எனும் நூலின் அறிமுகமும், இன்னிசை நிகழ்வும்
- கவர்ச்சி
- குடிப்பழக்கம்: மாணவர்களின் கதறல்
- காமிக்ஸ் – பியூர் சினிமா புத்தக அங்காடி
- எலி வளைகள்
- கதை சொல்லி (சென்றவாரத் தொடர்ச்சி) – 3
- வண்டுகள் மட்டும்
- புரிந்து கொள்வோம்
- அழகு
- ஆழி …..
- கவிதைகள்
- கவிநுகர் பொழுது (நேசமித்ரனின் ,’மண் புழுவின் நான்காவது இதயம்’, நூலினை முன்வைத்து)
- தொடரி – விமர்சனம்
- மிதவையும் எறும்பும் – கவிதை
- திருப்பூர் : ” களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடு
- கதை சொல்லி (சென்ற வாரத் தொடர்ச்சி) -2
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 10