Articles Posted by the Author:

 •       பிழைத்திருப்போம் !

        பிழைத்திருப்போம் !

                                                                     சோம. அழகு             சமூக வலைதளங்களின் இரைச்சல், அலுத்து உளுத்துப் போன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் (intolerable mindless TV shows) ஓலம் – இவற்றைச் சிலாகிக்கும் வேடிக்கை விந்தை மனிதர்களால் ஆன புறச் சூழல், அன்றாடம் ஒரு மாற்றமும் இல்லாமல் நகரும் வாழ்க்கை, மிகச் சாதாரண விஷயத்தையும் பெரிய போராட்டம் நடத்திப் பெற வேண்டிய கட்டாயம், மீண்டும் மீண்டும் நம் வெளியில் அத்துமீறி நுழைபவர்கள், வழமையான ஆர்வம் பொங்கி வழியும் உசாவல்கள், நம்மீது […] • குவிகம் இணையவழி அளவளாவல்

  குவிகம் இணையவழி அளவளாவல்

                    ஒவ்வொரு வாரமும் புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு 27/11/2022   மாலை    6.30 மணிஅளவளாவல்  தொடர்ந்து  புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு  நிகழ்வில் இணையZoom  Meeting ID: 6191579931 –  passcode kuvikam123 அல்லது இணைப்பு    https://bit.ly/3wgJCib    youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38  குவிகம் இதழ் படிக்க முந்தைய நிகழ்வுகளின் காணொளிகள்    


 • மக்கள் படும் பாடு

  மக்கள் படும் பாடு

      சோ_தாசன்( les miserables டைட்டில் இன்ஸ்பிரேஷன் }..இடியாப்பச் சிக்கலில் எப்போதும் தமிழகம்.தமிழகத்தின் பூர்வ குடிகள் யார் என்பதே தெரியாமல் போன ஒரு சூழல் சபிக்கப்பட்ட இனமான தமிழர்களுக்கு ஏனோ. மொழி:மெத்தபடித்த தமிழ்நாட்டில் பிறந்த தமிழைத் தாய்மொழியாக பல தலைமுறை கொண்ட தமிழன் முதலில் செய்வது,தமிழ் பேசும் எல்லோரும் தமிழரே.அட அறிவாளியே, அப்ப வறண்ட கத்தாளம் காட்டுப் பள்ளிகூடத்தில், கடன் ஒடன வாங்கி சேர்த்து விடும் பள்ளியில்“ரெயின் ரெயின் கோ அவே” என்றும்“மம்மி, டாடி,  ஐயம் […]


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ்

    அன்புடையீர்,                                                                               27 நவம்பர் 2022 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ் இன்று (27 நவம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. சிறுகதைகள்: அந்துப் பூச்சி – சார்பினோ டாலி தியேட்டர் இல்லாத ஊரில் – ஜிஃப்ரி ஹாசன் திருக்கூத்து – ஆதித்ய ஸ்ரீநிவாஸ் ஏகபோகம் – (1958-1)  அமர்நாத் சில்லறைகள் – வி. விக்னேஷ் மருந்து – உலகளந்த பெருமாள் நாவல்கள்: […]


 • <strong>மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய</strong>

  மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய

  “ அது ஒரு அழகிய நிலாக்காலம் “        படித்தோம் சொல்கின்றோம்:   மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய            “ அது ஒரு அழகிய நிலாக்காலம் “ வன்னியில்  வாழ்ந்த மூன்று தலைமுறைகளின் கதை !                                                                             முருகபூபதி   ருஷ்ய இலக்கிய மேதைகள் மாக்ஸிம் கோர்க்கி எழுதிய மூன்று தலைமுறைகள், ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி  எழுதிய கரமசோவ் சகோதரர்கள் முதலான நாவல்களை படித்திருப்பீர்கள். மேற்கு ஐரோப்பாவில்  ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் கதையை பேசிய  புதினங்கள் […]


 • மழை

  மழை

    ம.செ காட்சி-1    “நல்ல மழை பெய்ய போகுது வெளியே வந்து பாரேன்”- காயத்ரியின் அம்மா      காயத்ரி வெளியே வந்து கார் பார்க்கிங்கில் நின்று வானத்தை பார்த்தாள், நல்ல கருமேகம் மழை வந்தால் அடை மழை தான் என்று நினைத்துக் கொண்டு      “அம்மா நான் மாடிக்கு போறேன் நீயும் வா” என்று விரைந்தாள்      காயத்ரி நல்ல வடிவான, அழகான எழிலான, மாடர்னான பி. காம். இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி. அவளை விட வடிவு அவளது […]


 • கனவு

  கனவு

    ஆதியோகி முன்பொரு இரவில் முரட்டுக் கொசுவொன்றின் மூர்க்கமான கடியில்பாதியிலேயே நின்று போனது,சுவாரஸ்யமான அந்த கனவு. அதன் தொடர்ச்சியையும் முடிவையும்அறிந்து கொள்ளும் ஆவலுடனேஉறங்கப் போகிறேன்,அதற்குப் பிந்தையஒவ்வொரு இரவிலும்… மீண்டும்  ஒரு முறைவருவதும் தொடர்வதும்கிடையவே கிடையாதாஇடையிலேயே கலைந்து போன கனவுகள்…?                          – ஆதியோகி +++++++++++++++++++++++++


 • கவிதைத் தொகுப்பு நூல்கள் 3

      அழ          சி.சு செல்லப்பாவின் புதுக்குரல்கள் என்ற தொகுப்பு நூலைத்  தேடிக்கொண்டிருந்தேன்.  கிடைத்து விட்டது.  ஆனால் செல்லப்பா பதிப்பித்த புத்தகம் இல்லை.  கி. அ. சச்சிதானந்தம் கொண்டு வந்த புத்தகம்.           புதுக்கவிதையில் தொகுப்பு நூல் கொண்டு வந்ததில் சி.சு செல்லப்பா முன்னோடி என்று நினைக்கிறேன்.  மரபுக் கவிதைகளில் யாராவது தொகுப்பு நூல்கள் கொண்டு வந்துள்ளார்களா என்பது தெரியவில்லை.          கவிதை என்றாலே பாரதிக்கு முன் பாரதிக்குப் பின் என்ற இரு பிரிவுகள் உருவாகி உள்ளன என்று தோன்றுகிறது.சி சு செல்லப்பாவின் ‘புதுக்குரல்கள்’ […]


 • அய்யனார் ஈடாடி கவிதைகள்

  அய்யனார் ஈடாடி 1.குழிமேடு   திறந்திருக்கும் வாசல் சுழட்டிப் பெய்யும் மழை கட்டற்ற வெளியில் கட்டியணைக்கும் இருள் யானைக் காதின் மடல் அது போல வீசும் காற்றில் வருடும் மேனியில் முளைவிடும் வித்துக்கள் வேர்களை ஆழ ஊன்றுகிறது ஒத்த வீட்டின் மேவிய குழிமேட்டில்…         2.ஆளாங்குளத்தி   எத்தனிக்கும் களைந்த மதியத்தில் இளைப்பாறும் கனத்தில் கிணத்து மேட்டில் கீற்றசைக்கும் தென்னை விரித்துகாயும் அவள் நரையை அள்ளி வருடியது   புற்றிலிருந்து தப்பிவந்து அசந்துறங்கும் […]