குடிப்பழக்கம்: மாணவர்களின் கதறல்

This entry is part 15 of 29 in the series 9 அக்டோபர் 2016

tasmac__2819184g

குடிக்க வேண்டாம் என்று அப்பாக்களை கேட்டு காலைப்பிடித்து மாணவர்களை
கதறச் சொல்லி ஒரு பள்ளி அறிவுறுத்துவது பற்றி அறிந்த போது அதிர்ந்து
விட்டேன். பள்ளி மாணவர்களுக்கான “ கதை சொல்லி.. “ சிறுவர் கதை எழுதும்
போட்டியில் அப்பள்ளியின் 4  மாணவர்கள் பரிசு பெற்றிருந்ததையொட்டி
பரிசளிக்க அப்பள்ளிக்குச் சென்றிருந்தேன். ( சில தனிப்பட்ட காரணங்களால்
அப்பள்ளியின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை )ஆண்டுதோறும் ” கனவு “
அமைப்பு  பள்ளி மாணவர்களுக்கு கதை எழுதும் போட்டியை நடத்திப் பரிசளித்து
வருகிறது என்பது ஒரு செய்தி.

பரிசளிப்பு முடிந்த பின் அன்றைய நிகழ்ச்சியில் மது ஒழிப்பு பற்றி
அந்தப்பள்ளி நிர்வாகி 5 -8ம் வகுப்பு மாணவர்களிடம் பேசினார். இது மாதம்
ஒரு முறை பேசுகிற விசயம்தான் என்றார். குடிக்கிற அப்பாக்களின் கால்களை
காலையில் பிடித்து மாணவர்கள் அப்பாவை குடிக்க வேண்டாம் என்று
வலியுறுத்துவது பற்றிச் சொன்னார். இரவு என்றால் குடிக்கும் அப்பாக்கள்
தாமதமாக வருவர். காலையில் போதையில் தெரிந்து நிதானமாகியிருப்பர் என்றார்.
ஹேங்காவரில் சிலரும் இருப்பர். சனாதன பள்ளிகளின் நடைமுறையில் இருக்கும் –
காலையில் பள்ளிக்குக் கிளம்பும் போது பெற்றோரின் கால்களில் விழுந்து
நமஸ்கரிப்பதன் இன்னொரு பகுதியாகவும் இது இருக்கிறது. நண்பர்களிடம்
அப்பாக்கள் குடிப்பதைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது. பக்கத்து
வீட்டினரிடமும் சொல்லக் கூடாது. நாலு சுவர்களுக்குள் இருக்கும் விசயமாக
இருக்கவேண்டும். ஆனால் அப்படி செய்யும் போது அப்பாக்கள் மனதில்
அந்தக்கூக்குரல் கேட்கும் என்கிறார்கள்.

குடிப்பதால் என்ன விளைவு  ஏற்படும் என்பதை அவர் சொல்ல ஒரு சில
மாணவர்கள் எழுந்து வந்து அதை நடித்துக் காட்டுகிறார்கள்.மூளையை ,
கல்லீரலை இதயத்தை , கணையத்தை, உடமபை பாதித்து , வார்த்தைகள் குழறி
மயக்கம், வாந்தி வரைக்கும் நடித்தார்கள். “ பெரியவர்கள் கெட்டுத்
திருந்தியிருக்கிறார்கள். அவர்களின் அம்மாக்கள் வந்து விபரம்
சொல்லியிருக்கிறார்கள், அப்படி இல்லாத பட்சத்தில் குடிக்கும் எண்ணம் உள்ள
மாணவர்கள் திருந்தவும் இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.” என்றார்கள்.
மாணவர்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற இது பரவாயில்லை என்கிறார்கள்.
மேல் வகுப்புக் குழந்தைகளிடம் சொல்வதை விட இங்கிருந்து
ஆரம்பிக்கிறார்.அவர்கள் எதிர்த்துப் பேசுகிறவர்களா, பழக்கத்துக்கு
அடிமையானவர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகத்தில் இந்த வகுப்புகளிலே
ஆரம்பித்து விடுகிறது இப்பாடம்.      பாடம் தேவையானதாக உணர்கிறார்கள்.

அதிர்ச்சியாக இருந்தாலும் விளைவை பற்றிதான் யோசிக்க வேண்டும்.

மாணவர்களும்  மதுவுக்கு அடிமையாகி இருப்பதை சமீபத்திய செய்திகள்
அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. அவர்களுக்கு வெகு சுலபமாக்க் கிடைத்து
விடுகிறது என்பது தான் அபாயகரமானது. இதில் மாணவிகள் கூட
உள்ளாகியிருக்கிறார்கள் என்பதும் இன்னும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
தரக்கூடியது. பள்ளி மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை மதுபான சாலைக்குள்
அனுமதிமறுக்கிற அறம் கட்டாயம் பின்பற்றப்பட்டால்   நல்ல விளைவுகள்
இருக்கும்.அவர்களுக்கு கைக்கெட்டும் தூரத்தில் கிடைப்பது அபாயகரமானது.
எல்லா விழாக்களிலும் மது உபச்சாரம் என்பது சாதாரணமாகிவிட்டது . திரையரங்க
வாசல்களுக்கு அப்படியே போய் விடும் பழக்கம் தொடர்ச்சியாக வந்து
விடுகிறது.குடி சாவைக் கொண்டுவருவதைக்கூட மாணவர்கள் கவனத்தில் எடுத்துக்
கொள்ளாமல் அது இறப்பிற்கெல்லாம் கொண்டு போகாது. அதற்கெல்லாம் வௌயது
இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறர்கள். குடியால் அழிந்த மாணவர்களின்
குடும்பங்களிலிருந்து அது ஒரு பரமபரைத் தொற்று நோய் என்பது போல் எப்படியோ
சிலர் வந்டு விடுகிறார்கள். ” சும்மா ஜாலிக்குக் குடிக்கிறேன். அதுவும்
இப்பத்திக்குத்தா ..” என்பது போன்ற சமாதான்ங்கள் கேட்டுக் கொண்டே
இருக்கின்றன. மாண்வப்பருவத்திலிர்நுது ஒருவனுக்கு இது ஆரம்பமாகிற போது
வேலைக்குப் போனபின்பு அவனின் பொழுதுபோக்கிற்கு பத்திரிக்கை, புத்தக
வாசிப்பு, விளயாட்டு, அரசியல் ஆர்வம் என்பதேல்லாம் இல்லாமல் போய்
மதுவின் பிடிக்குள் தொடர்ந்ஹ்டு இருந்து கொண்டே இருகிறார்கள். வாகன
விபத்துக்கள், பாலியல் ரீதியான தொந்தரவுகள் என்று வேறு ரூபங்களிலும் இவை
தொடர்கின்றன. மரபணுவில் வந்தது. பரம்பரையாக ரத்தத்தில் வந்த்து என்று
வாதங்களும் அவர்கள் தரப்பிலிருந்து சமாதான்ங்களாய் வருகின்றன.
பள்ளிமுற்றங்களிலிருந்து , வீட்டிலிருந்து குடி பிசாசு கிளம்பினால் சரி.
சனி விலகும் ஞாயிறும் பிறக்கும்.

Series Navigationகவர்ச்சிகாமிக்ஸ் – பியூர் சினிமா புத்தக அங்காடி
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *