பண்பாட்டுக் கருவூலம்
பயன்பாட்டுப் பொருளகம்
நாளும் செல்கின்ற திருத்தலம்-நம்
நாவிற்கும் கண்ணுக்கும் விருந்தகம்
உணவென்றால் அறுஞ்சுவை
உடையென்றால் வகைவகை
அங்கேதான் மனம்போல கிடைக்கும்-போய்
வந்தாதான் மனம்கூட நடக்கும்
தரமான நகைக்கூட்டம்
வரமான கலைக்கோட்டம்
வருவோரை ஈர்ப்பதுவே நாட்டம்-சென்று
வருவோரின் முகத்திலில்லை வாட்டம்
நாடுவிட்டு நாடுவந்து
ஓடாகிப் போனாலும்
வாரத்தில் ஒருநாளே போதும்-மனத்தின்
தீராத சோகங்கள் போகும்
ஊரோடு இருப்பதுபோல்
உறவோடு வாழ்வதுபோல்
பேருணர்வு ஊற்றாகப் பொங்கும்-புதுப்
பேரின்பம் தானாகத் தங்கும்
பயணமெனில் முகவர்களும்
பணியமர்த்தும் முகவர்களும்
ஒருசேர பெருஞ்சேவை வழங்கும்-தேவை
ஓரிடத்தில் தீருமென முழங்கும்
ஒருமாதம் ஒளியூட்டி
ஒருசேர மகிழ்வூட்டி
கொண்டாட வைக்கின்ற நாடு-என்றும்
திண்டாட வைத்ததில்லை பாடு
பூசைப் பொருளுக்கும்
பூமாலைத் தேவைக்கும்
தையலார் கூடுமிடம் தேக்காதான்-துணி
தையலுக்கும் கூடுமிடம் தேக்காதான்
பச்சைக் காய்கறிகள்
பல்வகை மீனினங்கள்
இச்சையுடன் வாங்குதற்குத் தேக்காதான்-பணம்
மிச்சமின்றி ஆக்குவதும் தேக்காதான்
உறவாடி மகிழவும்
உரையாடி நெகிழவும்
சரியான ஓரிடம்தான் வேண்டாமா?-சிராங்கூன்
சாலைபோல் ஓரிடம்தான் உண்டாமா?
- கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்
- ஈர்மிப் பெருந்திணை
- சத்யஜித்ரேயின் சிறுகதைகள்
- அமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்
- வண்ணதாசனுக்கு வணக்கம்
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 4 – மஞ்சுளா
- எளிய மனிதர்களின் தன் முனைப்பு
- தொடுவானம் 140. நாடி வந்த நண்பன் .
- பசி
- பாசத்தின் விலை
- படித்தோம் சொல்கின்றோம் செய்தி மடலுக்குள் நீலாவணனின் இலக்கியவாசம்
- கள்வன் பத்து
- உன் முகம்
- குட்டி (லிட்டில்) இந்தியா
- மாயாண்டியும் முனியாண்டியும்
- வதந்திகளை பரப்புபவர்கள்!!
- வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்?
- றெக்க – விமர்சனம்
- மீண்டும் நீ பிறந்து வா…!
- கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- “திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” – எளிய தமிழில் அரிய உரை