பொன் குலேந்திரன் -கனடா
நடந்து போகும் போது முகாமில் ஒரு இடத்தில் சாக்கடை நீர் தேங்கி நின்றதைக் கண்டார்கள். இளையான்களும், கொசுக்களும் ஆக்கிரமித்த நீர் தேக்கம் அது. சேற்று நிறமுடைய நீர். அந்த அழுக்கு நீரில் நான்கு சிறுவர்களும் இரு சிறுமிகளும் காகிதத்தில் ஓடங்கள் செய்து மிதக்கவிட்டு விளாயாடிக் கொண்டிருந்தார்கள்;. அவ்விளையாட்டால் ஏற்படும் ஆபத்தை அறியாத பிஞ்சு உள்ளங்கள். அதைக் கண்ட ஜோன் சிறுவர்களுக்கு வர இருக்கும் ஆபத்தை உணர்ந்தார். உடனே மகேஷிடம் ”மகேஷ் இந்த பிள்ளைகளுக்கு விளையாட இடமில்லாமல் இந்த அசுத்த நீரிலா விளையாட வேண்டும். இதனால் வரும் ஆபத்தைத் தெரியாத பிள்ளைகள். நீர் போய் அவர்களுக்கு இந்த நீரில் விiயாடுவுது ஆபத்து என்று விளங்கப்படுத்தி அவர்கள் சாக்கடை நீரில் விளையாடுவதை நிற்பாட்டும் “ என்றார் ஜோன். மகேசுக்கு ஜோன் சொன்னதை அருகில் நின்ற இளம்பெண்ணொருத்தி கேட்டுவிட்டு ஜோனிடம் வந்தாள்.
“ சேர் அந்தப் பிள்ளைகளுக்கு விiயாட போதிய வசதிகள் முகாமில் இல்லை. அதனால் அவர்கள் அந்தச் சாக்கடை நீரில் விளையாடுகிறார்கள். தயவு செய்து அவர்களைத் தடுக்காதீர்க்ள்”, என்று ஆங்கிலத்தில் ஜோனுக்கு அப்பெண் சொன்னாள்.
ஜோனுக்கு அந்தப் பெண் நல்ல ஆங்கில உச்சரிப்போடு பேசியது ஆச்சரியமாக இருந்தது.
“அது சரி நீர் நல்லாக ஆங்கிலம் பேசுகிறீரே. ஸ்கூலில் ஆங்கிலம் கற்றீரா? உம் பெயர் என்ன?” ஜோன் அந்தப் பெண்ணைக் கேட்டார்.
“ என் பெயர் மஞ்சுளா. இந்த முகாமிலை என்னை எல்லோரும்; மஞ்சு என்று கூப்பிடுவார்கள். நான் முல்லைததீவு அரசினர் ஸ்கூலில் படித்த போது எனக்கு பிடித்தமான பாடம் ஆங்கிலம். படிக்கும் போதே ஆங்கில நூல்கள் வாசிப்பேன். எனக்கு அகத்தா கிறிஸ்டியின் நாவல்கள் என்றாலே விரும்பி வாசிப்பேன். ஆங்கிலத்தில் கட்டுரைகள் கூட எழுதியிருக்கிறன். இந்த முகாமில் தான் ஆங்கிலப் புத்தகங்கள் கிடைக்காதே”, அவள் சொன்னாள்.
“ உமது பெற்றோர் உம்முடன் இந்த முகாமிலா இருக்கிறார்கள்”?
“இல்லை சேர். 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சுனாமியில் என் தாய் தந்தையரையும் இரு தங்கைமாரையும் இழந்துவிட்டேன். நான் தப்பியது கடவுள் புண்ணியம்”, அழுகையொடு பதில் சொன்னாள் மஞசுளா.
“ அது எப்படி நீர் மட்டும் தப்பினீர்”?
“ நான் ஸ்கூல் லீவின் போது நெடுங்கேணியில் உள்ள என் சித்தாப்பா வீட்டுக்குப் போயிருந்தேன். ஆதனால் என் உயிர் தப்பியது”
“ முல்லைத்தீவில் எத்னையாம் வகுப’பு வரை படித்தனீர்”?
“ நான் ஏ லெவல் முதலாம் ஆண்டு மட்டும் படித்தனான். யுத்தம் முடிந்தபின், நான் விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தேன் என்ற சந்தேத்தினால் என்னை இங்கு கொண்டு வந்து விசாரணைக்காக வைத்திருக்கிறார்கள். அது சரி நீங்கள் கனடாவைச் சேர்நத ஜேர்னலிஸ’ட்டா சேர்?” மஞ்சுளா ஜோனைப் பார்த்துக் கேட்டாள்.
“ அது எப்படி உமக்குத் தெரியும்:?
“ உங்கள் ஆங்கில உச்சரிப்பு பிரிட்டிஷ்; உச்சரிப்புப்போல் இல்லை. அதோடு உங்களிடம் இருக்கும் கமெராவும், கையில் உள்ள நோட் புத்தகமும் காடடிக் கொடுத்துவிட்டது நீங்கள் ஜேர்னலிஸ்ட என்று”, மஞ்சுளா சொன்னாள்.
“மஞ்சுளா, உமக்கு ஏற்கனவே கனடாவைப் பற்றி தெரியமா”?, ஜோன் மஞ்சுளாவைக் கேட்டார்.
“ஏன் தெரியாது. எனது பேனா நண்பர் பீட்டர் வோட்டர்லூ யூனிவர்சிட்டியில் சொப்ட்வெயர் என்ஜினியரிங் கடைசி ஆண்டு படிக்கிறார். அவர் பெற்றோர் இருப்பது மிசிசாகாவில். எனக்கு கனடா ஒன்றாரியொ மகாணத்தில் உள்ள சில ஊர்களைப் பற்றி பீட்டர் எழுதுவார். அப்பெயர்களை வாசித்தபோது அதிகமானவை இங்கிலாந்தில் உள்ள லண்டன் , கேம்பிரிட்ஜ், பிரம்டன், பாத், மன்செஸ்டர் நியூமார்க்கட் போன்ற ஊர்களின் பெயர்களைக கொண்டவையாக இருக்கிறது”
“ கனடா கொமன்வெல்த்த நாடுகளில் ஒன்று என்று உமக்குத் தெரியும் தானே. 1763 ஆண்டு முதல் 1867 வரை கனடா பிரிட்டிஷ்; ஆட்சிக்குக் கீழ் இருந்தது. அதனால் பிரிட்டிஷ் ஊர்களின் பெயர்கள் கனடாவில் எல்ல மகாணங்களிலும் இருக்கிறது. அதில் ஒன்றாரியோ மாகாணத்தில் தான் அப்பெயர்கள் அதிகம் உள்ளது. அது சரி மஞ்சுளா உமது பேனா நண்பர பீட்டர் என்ன படிக்கிறார்?”, ஜோன் கேட்டார்.
“ சொபட்வெயர் என்ஜினியரிங் கடைசி ஆண்டு”
“ எவ்வளவு காலமாக அவர் உமக்கு அறிமுகமானவர்”?
“ சுமார் மூன்று வருடங்கள். நான் இந்தக் காம்புக்கு வரமுன்பு இருந்தே தெரியும்”.
“ மஞ்சுளா நீர் காம்பில் இருந்து வெளியே வந்தபின் நீர் உமது படிcபைத் தொடரவேண்டும்” , மகேஷ் சொன்னார்.
“படிப்பை நான் தொடருவதா இல்லயா என்பதை நான் சிந்திக்க வேண்டும்” மஞ்சுளா விரக்தியொடு பதில் அளித்தாள்.
“ஏன் அப்படி சொல்லுகிறீர் மஞ்சுளா:” ஜோன் கேட்டார்.
“இல்லை சேர், நான் படித்துப் பட்டம் பெற்றாலும் எனக்கு உத்தியோகம் கிடைக்குமா என்பது சந்தேகம். பல்கலைக்கழகத்துக்கு போவதென்றால் அதிலும் தரப் படுத்தல் என்று சொல்லி தமிழ் மாணவர்களுக்குள் பாகுபாடு காட்டுகிறது அரசு. ஒரு காலத்தில் இந்த பாகுபாடு இல்லாத போது பல தமிழ்மாணவர்கள் படித்து டாக்டராக, என்ஜினியராக, எக்கௌண்டனாக ஆசிரியராக வந்திருக்கிறார்கள். அனால் இப்போ நிலமை வேறு. தமிழ் இளைஞர்களின் முன்னேற்றத்தைக் கண்டு சிங்கள அரசுக்கு வயிற்றெரிச்சல். அதுவே தரப்படுத்தும் திட்டம் வரக்காரணம். இப்போ அரச சேவையில் தமிழர்கள் குறைவு. இதுவும் விடுதலைப் புலிகளின் போராட்டத்;துக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
“இல்லை மஞ்சு காலத்தோடு நிலமை மாறி வருகிறது. நீர் பாசிட்டிவ்வாகச் சிந்தித்துச் செயல்படும். வேற்றி பெறுவீர். அரசில் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பதில்லை. திறமை இருந்தால் தனியார் துறையிலும் வேலை செய்யலாம். அதோடு மட்டுமல்லாமல் சொந்தமாகத் தொழிலும் ஆரம்பிக்கலாம். எனக்கு உமது பேனா நண்பர் பீட்டரின் விலாசத்தையும், போன் நம்பரையும் தாரும். கனடா போனவுடன் நான் அவரோடு தொடர்பு கொண்டு உமது நிலமையை விளக்கி, உமக்கு ஏதாவது வழியில் அவரை உதவி செய்யச் சொல்லுகிறன்” , ஜோன் சொன்னார்.
“ மிஸ்டர் ஜோன் உங்களோடு தமிழ் இளைஞர்களின் பிரச்சனைகளைப் பற்றி என் கருத்தைச் சொன்னதுக்கு என்னை மன்னிக்கவும். உங்களிடம் ஒரு வேண்டுகோள்”.
“ என்ன அது? சொல்லும். என்னால். முடிந்தால் செய்கிறேன்”.
“ தமிழ் இளைஞர்களின் விரக்திகளைப் பற்றி போனதும் உங்கள் பத்திரிகையில் விபரமாய் எழுதுங்கள். இந்தக் காம்பிலும் மற்ற மூன்று காம்புகளிலும் ஏராளமான அப்பாவி இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் துன்புறுத்தப்படுகிறார்கள்;. பலர் தலையாட்டிகளால் அடையாளம் காணப்பட்டு சாவைத் தழுவியுள்ளார்கள்.”.
“ யார் இநத தலையாட்டிகள?. பொன்னம்மாவும் சொன்னவர்களா அவர்கள்”, ஜோன் கேடடார்.
“ விடுதலைப் புலிகளின் இயக்கத்துக் எதிராக இயக்கங்களை சார்ந்தவர்கள். பழி வாங்கும்; என்னத்தோடு ஆர்மியோடு சேர்ந்து ஒற்றர்களாக செயல் படுகிறார்கள். சந்தேகப்படும் இளைஞர்களைத் தலையாட்டிகள் முன் நிறுத்தி இவர்கள் விடுதலைப் புலிகள் இயகத்தவர்களா இல்லையா என்று ஆர்மி அதிகாரிகள் கேட்கிறார்கள். அவர்கள் தலையாட்டுவதன் மூலம் தம் தீரப்பை சொல்லுகிறார்கள். தமிழனே தமிழனைக் காட்டிக் கொடுக்கிறான. வீரபாண்டிய கட்டபபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டப்பன்னைப் போல்;” மஞ்சுளா நடப்பதை தமிழர் வரலாற்றோடு ஒப்பிட்டு பதில் சொன்னாள்.
அவளின் பதிலை மூவரும் எதிரபார்கவில்லை. “நன்றாக தமிழர் வரவாற்றை அறிந்து வைத்திருக்கிறாள்” என்றார் மகேஷ். ஜோனும் அவர் சொன்னதை ஆமோதித்தார்.
“மன்னிக்கவும். தொடரந்து காம்புக்குள் அரசியல் பேச நான் விரும்பவில்லை.” என்றார் ஜோன்.
“ நீங்கள் என்னோடு பேசியதற்கு மிகவும் நன்றி. நீங்கள் எழுதப் பொகும் அறிக்கை எதாவது ஒரு வகையில் தமிழர்ளுக்கு உதவினால் பெரும் நான் உங்ளைப் பாராட்டுவேன்” மஞ்சுளா சொன்னாள்.
“இன்னம் பலரை நாம் சந்திக் வேண்டும். நேரம் போய் கொண்டிருக்கிறது:” என்று ஜோனுக்கு நினைவூட்டினார் லலித்.
அப்போது நடுத்தர வயதுடைய ஒருவர் நொண்டியபடி அழுது கொண்டே கையில் பையொன்றோடு மஞ்சுளாவை நோக்கி வருவதை மூவரும் கண்டார்கள். வந்தவர் முகத்தில் காலிலும் ஒரே இரத்தம்.
மஞ்சுளா வந்தவரிடம் தமிழில் கேட்டாள். ”சுந்தரம் எதற்காக அழுகிறீர. என்ன உமக்கு நடந்தது?. முகத்திலும் காலிலும் ஒரே இரத்தமாக இருக்கிறதே. அதோடு வரும்போது ஏன் நொணடிக் கொண்டு வந்தனீர்”. மஞ்சுளா தமிழில் சுந்தரத்திடம் கேட்டதை ஆங்கிலத்தில ஜோனுக்கு மொழிபெயர்த்து மகேஷ் சொன்னார்.
“ மஞ்சுளா நான் ஓபீடி (OPD) கிளினிக்கில் இருந்து மருந்துகளை பையுக்குள் வைத்து குறுக்குவழியில் இந்த காம்புக்குள் ஒரு குடுமபத்துக்கு எடுத்துச் சென்றபோது இரு ஆர்மிக்கார்கள் கண்டுவிட்டார்கள். அவர்கள் நினைத்தார்கள் நான் பையுக்குள் ஏதோ போதை மருந்துகள் விற்பதற்கு எடுத்து செல்கிறேன் என்று. இப்படி சந்தேகப்பட்டவர்களைச் சரிவர விசாரணை செய்யாமல் உடனே குற்றவாளி என்று முடிவுக்கு வந்தது மட்டுமல்லாமல் காலிலும் கண்னத்திலும் அடி போட்டார்கள். நான் எவ்வளவோ மன்றாடிச் சொல்லியும் அவர்களுக்கு நான் சொன்னது விளங்கவில்லை. தொடர்ந்து எனக்கு அடித்தார்கள். எனக்கு தமிழ் மட்டுமே பேசத்தெரியும். அவர்கள் சிங்களவர்கள். சிங்களம் மட்டுமே தெரியும். நான் சொன்னது அவர்களுக்கு விளங்கியிருக்காது. அவர்கள் சிங்களத்தில் சொன்னது எனக்கு விளங்கவில்லை. அதன் விளைவே இந்தக் கோலம் எனக்கு” அழுதபடி சுந்தரம் சொன்னார்.
“ பிறகு என்ன நடந்தது சுந்தரம்”?:
“என்னை அடித்துவிட்டு என் பையுக்குள் இருந்ததை பரிசோதித்துப் பார்த்தார்கள். பையுக்குள் மருந்துகள் இருப்பதைக் கண்டார்கள். தாங்கள் தவறு செய்து விட்டோம் என்று அவர்களுக்குப் புரிந்துவிட்டது. மருந்துகளையும் என் பையையும் என்னிடம் திருப்பித் தந்து விட்டு தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கூட சொல்லாமல் அதிகாரத் தொரணையில் தங்களுக்குத் தெரிந்த அரை குறைத் தமிழில்.
“ சரி சரி. நீ இப்படி இனி குறுக்குப் பாதையில் போகாதே. நீ பார்த்த பார்வை எங்களை உன்னை சந்தேகிக்க வைத்துவிட்து. அதனால் தான் அடித்தோம். இதைப்பற்றி கெப்டனிடம் முறையிடாதே. அப்படி நீ செய்தால் உனக்குத்தான் ஆபத்து”: என்ற சொல்லிவிட்டு இருவரும் போய்விட்டார்கள்”. சுந்தரம் மஞ்சுளாவுக்கு நடந்த விபரத்தை சொன்னார். அவர்கள் இருவரும் பேசியதை மகேஷ் ஜோனுக்கு மொழியெயர்த்துச் சொன்னார்.
“ சுந்தரம் நடந்ததை ஒபிசில் போய் கெப்டனுக்கு ஏன் நீ முறையிடக் கூடாது” மஞ்சுளா சுந்தரத்தைக் கேட்டாள்.
“ ஐயோ வேண்டாம் பிள்ளை. இந்த சம்பவத்தைப் பெரிதுபடுத்த எனக்கு விருப்பம் இல்லை. அப்படி நான் முறைபாடு செய்தால் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எனக்குத் தெரியும்” என்றார் சுந்தரம்.
ஜோன் மகேஷின் உதவியோடு சம்பவத்தைப் பற்றி குறிப்பு எடுத்துக்; கொண்டார்.
“பிள்ளை, என்னை நேர்ஸ் சாந்தியிடம்; கூட்டிப்போம்;. அவவுடைய கை பட்டாளே காயம் மாறிவிடும். அவ்வளவுக்கு கைராசிக்காரி”, சுந்தரம் சொன்னார்.
ஜோன், மகேஷ், லலித் ஆகியோர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொணடார்கள.;.
“மஞ்சுளா, யார் அந்த நேர்ஸ் சாந்தி. உமக்கு அவவைத் தெரியுமா”? ஜோன் கேட்டார்.
“ நேர்ஸ் சாந்தியை இந்தக் காம்பில் இருப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும். நல்ல மனிதபிமானம் உள்ளவ. கைராசிக்காரி. அவ கை வைத்தால் உடனே நோய் சுகமாகி விடும். அவவின் தகப்பன் டாக்டர் இராஜதுரை கூட இந்த முகாமில் தான் இருக்கிறார். சாந்தி தந்தையைப் போல மூன்று மொழிகளும் சரளமாகப் பேசுவா. அவ முகாமில் இருப்பவர்களுக்கு உதவுவது பல இராணுவ சிப்பாய்களுக்கு பிடிக்காது. ஆனால் அவவை அவர்கள் ஒன்றும் செய்யமுடியாது.” மஞ்சுளா சொன்னாள்.
“ ஏன் அப்படி”, ஜோன்’ கேட்டார்.
“ மேஜர் வினசன்ட் பெரெராவுக்கு நேர்ஸ் சாந்தி மேலும், டாக்டர் ராஜதுரை மேல் நல்ல மதிப்பு. தனக்கு எதாவது வருத்தம் என்றால் அவர்களைத் தான் நாடுவார். இந்த மேஜர் வின்சென்ட்டின் நட்பால் அவர்கள் இருவரையும் ஒருவராலும் ஒன்றும் செய்யமுடியாது. ஒருநாள் ஒரு இராணுவ சிப்பாய்; சாந்தியை கட்டி அணைத்து முத்தமிடப் பார்த்தார். அந்தச் சம்பவம் மேஜர் காதுகளுக்கு எட்டியது. அவர் அந்த இராணுவச் சிப்பாயை தன் ஒபீசுக்கு அழைத்து கடும் எச்சரிக்கை செய்து அனுப்பினார். நேர்ஸ் சாந்தியை புளொரன்ஸ் நைட்டிங்கேலோடு ஒப்பிடுவேன் ” என்றாள் மஞ்சுளா.
“யார் என்று நீர் சொல்லும் புளொரன்ஸ் நைட்டிங்கேல் என்ற பெண்?” தனக்குத் தெரியாத மாதரி ஜோன் மஞ்சுளாவைக் கேட்டார்
“ என்ன சேர் நீஙகள் இப்படிக் கேட்கிறீர்கள். “லேடி வித் த லாம்ப”; என்ற வசனத்தை பலர் அறிந்ததே. 1853 முதல் 1856 வரை நடந்த கிரிமியன் போரில் காயமடைந்தோரை மனிதபிமானத்தோடு கவனித்து சிகிச்சை அளித்தவர். இரவில் வைத்தியர்கள் தூங்கியபின,; கையில் ஒரு சிறு விளக்கோடு காயமடைந்தவர்கள் படுத்திருக்கும் கட்டில்களுக்கு சென்று அவர்கள்; எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்து, தேவைப்பட்டால் சிகிட்;சையும் செய்துவந்தவ” என்றாள் மஞ்சுளா. மஞ்சுளாவின் அறிவை வியந்து மூவரும் அவளைப் பாராட்டினார்கள்..
ஜோன், மகேசையும் லலித்தையும் கேள்விக் குறியொடு பார்த்தார். அவரின் புன்முறுவல் சுந்தரத்தை தான் சந்திக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியது. லலித்தும் சாந்தியைச் சந்தித்து அவருடைய சேவையைப் பற்றி தன பத்திரிகையில் எழுத வேண்டும் என்று முடிவெடுத்தார்.
“ மஞ்சுளா, நாங்கள் சுந்தரத்தை சாந்தியிடம் அழைத்துச் செல்வோம். அவவை நாங்களும்; சந்தித்தாகவும் இருக்கும். உங்களுக்கு அவவை நன்கு தெரிந்தால் எங்களைச் சாந்திக்கு அறிமுகப்படுத்துவது உங்கள் பொறுப்பு” ஜோன சொன்னார்.
மகேஷ் ஜோனுக்கு எதோ சொல்ல வாயெடுத்தவர், பிறகு தன் பேச்சை நிறுத்திவிட்டார்.
“ ஓகே ஜோன். உங்கள் விருப்பப்படியே செய்வோம். நான் அதிக நேரம் அங்கிருக்க முடியாது. எனக்கு சிறுவர்களுக்கு பாடம் சொலிக் கொடுக்கும் வேலை இருக்கிறது. நான் போகவேண்டும். சாந்தி அக்கா சுந்தரத்துக்கு சிகிட்சை செய்த பின் உங்களோடு பேசுவா”இ மஞ்சுளா சொன்ளாள்.
“உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி மஞ்சுளா, என்று; மஞ்சுளாவுக்கு மூவரும் நன்றி தெரிவித்துவிட்டு அவர்கள் நேர்ஸ் சாந்தியைச் சந்திக்கப் போனார்கள்.;
******
- கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்
- ஈர்மிப் பெருந்திணை
- சத்யஜித்ரேயின் சிறுகதைகள்
- அமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்
- வண்ணதாசனுக்கு வணக்கம்
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 4 – மஞ்சுளா
- எளிய மனிதர்களின் தன் முனைப்பு
- தொடுவானம் 140. நாடி வந்த நண்பன் .
- பசி
- பாசத்தின் விலை
- படித்தோம் சொல்கின்றோம் செய்தி மடலுக்குள் நீலாவணனின் இலக்கியவாசம்
- கள்வன் பத்து
- உன் முகம்
- குட்டி (லிட்டில்) இந்தியா
- மாயாண்டியும் முனியாண்டியும்
- வதந்திகளை பரப்புபவர்கள்!!
- வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்?
- றெக்க – விமர்சனம்
- மீண்டும் நீ பிறந்து வா…!
- கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- “திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” – எளிய தமிழில் அரிய உரை