அருணா சுப்ரமணியன்
தாழப் பறக்கும் ஊர்குருவிகள்
உயரப் பறக்க தொடங்கின…
வல்லூறுகளோடு ஊர்குருவிகளையும்
வரவேற்று கொண்டது வானம்…..
ஆனால் ,
ஊர்குருவியின் உயரம் சில
வல்லூறுகளுக்கு உறுத்துவதேன் ?
உயரப் பறக்கும் ஊர்குருவிகளால்
வல்லூறின் வலிமை குறைந்ததா என்ன ?
வல்லூறின் உயரம் நிர்ணயிக்கப் படுவது
வல்லூறின் சிறகுகளின் வலிமையிலா ?
தாழப் பறக்கும் ஊர்குருவிகளாலா ?
உயர்ந்தே இருக்க வேண்டுமெனில்
வல்லூறுகள் இன்னும் உயரம் பழகலாமே?
ஊர்குருவிகளை தாழத் தள்ளி தான்
தன் இருப்பை உணர்த்த வேண்டுமா?
ஊர்குருவிகளை உயர்த்திய
உன்னதமானவர்களே!
கொஞ்சம் வல்லூறுகளுக்கு சொல்லித் தாருங்கள் ..
உயரப் பறக்கும் ஊர்குருவிகளோடு
ஒத்து பறக்கும் வித்தையை ….
–
- கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்
- ஈர்மிப் பெருந்திணை
- சத்யஜித்ரேயின் சிறுகதைகள்
- அமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்
- வண்ணதாசனுக்கு வணக்கம்
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 4 – மஞ்சுளா
- எளிய மனிதர்களின் தன் முனைப்பு
- தொடுவானம் 140. நாடி வந்த நண்பன் .
- பசி
- பாசத்தின் விலை
- படித்தோம் சொல்கின்றோம் செய்தி மடலுக்குள் நீலாவணனின் இலக்கியவாசம்
- கள்வன் பத்து
- உன் முகம்
- குட்டி (லிட்டில்) இந்தியா
- மாயாண்டியும் முனியாண்டியும்
- வதந்திகளை பரப்புபவர்கள்!!
- வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்?
- றெக்க – விமர்சனம்
- மீண்டும் நீ பிறந்து வா…!
- கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- “திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” – எளிய தமிழில் அரிய உரை