“முள்வேலிக்குப் பின்னால் “ – 6 நேர்ஸ் சாந்தி

author
0 minutes, 9 seconds Read
This entry is part 1 of 19 in the series 30 அக்டோபர் 2016

mulveli6பொன் குலேந்திரன் -கனடா

 

மஞ்சுளா காயப்பட்ட சுந்தரத்தோடு நெர்ஸ் சாந்தியைச் சந்திக்கப் புறப்பட்டாள். அவள் கூடவே சாந்தியைச் சந்திக்கத் தாங்களும்; அவள் கூடவே வருவதாக ஜோன், லலித், மகேஷ் சொன்னார்கள்.

“நீங்கள்  என்னோடு வருவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. உங்களை அவவுக்கு அறிமுகப்படுத்திவிட்டு நான் திரும்பிவந்துவிடுவேன்” மஞ்சுளா சொன்னாள்.

அவர்கள் சாந்தி இருக்கும் இடத்தை அணுகும் போது துர்நாற்றம் வந்ததை எல்லோரும்; உணர்ந்தார்கள்.

 

“ மஞ்சுளா எங்கருநது அநத துர்நாற்றம வருகிறது? இதை எப்படி சகித்துக் கொண்டு இங்கிருப்பவர்கள் இருக்கிறார்கள்”, ஜோன் கேட்டார்.

 

“ மலசல கூடம் இங்கிருத்து சிலமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்குதான எல்லோரும் மலசலம் கழிக்கப்போவார்கள். தண்ணீர் பற்றாதலால் மலசல கூடத்தைத் தினமும் துப்பரவு செய்வதில்லை. உணவு, உடல் நலம் ஆகியவையோடு அதுவும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. முகாமில் இருப்பவர்கள் மலசல கூடத்தைத் துப்பராவாகப் பாவிக்காததால் மலம் எல்லாம் சிதறிக் கிடக்கும். அதனால் தொற்று நோய்கள் வர ஏதுவாகிறது” என்றாள் மஞ்சுளா.

 

“ இவ்வளவு இளையான்களையும், கொசுக்களையும் நான் ஒரு போதும் கண்டதில்லை. அதோபாருங்கள் அந்த பிள்ளைகள. அவர்கள் சாப்பிடும்போது மலசலக் கூடத்தில் இருந்து வரும் இலையான்களை கையால் துறத்தாமல் உணவு உண்பதை”.

 

“இரவு வந்தததும் கொசுக்ளுக்;கு ஒரே கொண்டாட்டம். விதம் விதமான இரத்தங்களைச் சுவைக்க அவை கூடாரத்துக்குள் படையெடுக்கும். அகதிகளை கொசுக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க கொசு வலைகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டாலும், எலலோருக்கும் அது கிடைப்பதில்லை. நுளம்புகளின்  தாக்குதால் அகதிகளுக்கு போதிய தூக்கம் கிடைப்பதில்லை.

 

எதிர்பாராத விதமாக அகதிகள் பலர் சிற்றாற்றை நோக்கி ஓடுவதை நால்வரும் கண்டார்கள். மஞ்சளாவுக்கு அவர்கள் அப்படி ஏன் ஓடுகிறார்கள் என்பது தெரியவில்லை. அங்கு நின்ற பெண்ணொருத்தியிடம் எதற்காக அவர்கள் ஓடுகிறார்கள் என்று மஞ்சுளா கேட்டபோது,

 

“ தங்கச்சி, அந்த சிறு ஓடையில் மூன்று பிரேதங்கள மிதக்கின்றன. அவர்கள் ஒரு கிழமைக்கு முன் முகாமில் இருந்து புலிகளுக்கு எதிரான இயக்கமான தலையாட்டிகலால் அடையாளம் காணப்பட்டு,  கடத்தப்பட்டவர்கள். இது முகாமை பரிபாலனம் செய்வோருக்கும் தெரியும். அவ்வியக்கத்தில் உள்ளவர்கள் தான் தலையாட்டிகளாக செயற்பட்டு இராணுவத்துக்கு ஆட்களைக் காட்டி கொடுக்கிறார்கள்” என்றார்; அதில் நின்ற ஒருவர் தாழ்ந்த குரலில்.

 

“ மஞ்சுளா இது போன்று இங்கு அடிக்கடி நடப்பதுண்டா” ,ஜோன் கேட்டார்.

 

“இது போன்று பல உடல்கள் அந்த ஓடையில் அடிக்கடி மிதக்கும். அவர் சொன்ன மாதிரி இது தலையாட்டிகளின் வேலை என்று தான் நினைக்கிறேன்” என்றாள் மஞ்சுளா.

 

சுந்தரம் ஒரு பெண்ணைக சுட்டிக்காட்டி, “ மஞ்சுளா, அதோ நேர்ஸ் சாந்தி, ஒருவருக்கு வைத்தியம் செய்து கொண்டு இருக்கிறா”,  என்றார். அப்பெண்ணுக்குச் சுமார் இருபத்தைந்து வயதிருக்கும்.

சுந்தரம் சுட்டிக் காட்டியத் திசையில் மகேஷ்; பார்த்த போது தன் பெரியப்பாவின் மகள் சாந்தி நிற்பதைக் கண்டார். சாந்தியை முகாமில் மகேஷ் எதிர்பாரக்கவில்லை.

 

உடனே மகஷே; ஜோனைப் பாரத்து, “ஜோன் நிட்சயமாக அது என் பெரியப்பா டாகடர் இராஜதுரையின் மகள் சாந்தி தான்” என்றார்.

 

“ சாந்தி உமக்கு இனத்தவளா?” ஜோன் கேட்டார். அவர் அதை மகேஷிடம் இருந்து எதிர்பார்கவில்லை.

 

மௌனமாக ஆம் என்று தலையாட்டினார் மகேஷ்.

 

“ அதை ஏன் எனக்கு முன்பே சொல்லவில்லை மகேஷ்” ஜோன் கேட்டார்.

 

“ எனக்கு சாந்தி இவரது பெரியப்பா மகள் என்பது ஏற்கனவே தெரியும். மகேஷ் எனக்கு முகாமுக்கு வரமுன்பே சொன்னவர்” என்றார் லலித்.

 

“ ஜோன் நாங்கள் நேரடியாக சாந்தியைச் சந்திக்கும்; போது சொல்லுவோம்  என்று இருந்தனான்” என்றார் மகேஷ்.

 

தான கவனித்தவருக்கு காயத்துக்கு சிகிச்சையை முடித்த பின்னர் சாந்தி தலை நிமிர்ந்து பார்த்தாள். அவளுககு மகேஷைக் கண்டதும் அதிர்ச்சி.

 

“ மகேஷ் நீர் எப்ப காம்புக்கு என்ன விஷயமாக வந்தனீர். உம்மோடு நிற்கும் இவர்கள் இருவர் யார்”? சாந்தி  கேட்டாள்.

 

“ மன்னிக்கவும் சாந்தி. வேலை நிமித்தம் ஊடகவியலாளர்களான இவர்களோடு வந்தனான். என் நண்பர் லலித்தின் உதவியால் முகாமைச் சுற்றிப் பார்க்க அனுமதி கிடைத்தது” என்று சொல்லி ஜோனையும் லலித்தையும் சாந்திக்கு அறிமுகம் செய்து வைத்து, தாங்கள் அகதிகள் முகாமுக்கு வந்த காரணத்தையும் மகேஷ். சாந்திக்கு விளக்கினார்.;

 

பதிலுக்குத் தான் யார் என்பதையும், மகேஷ் தன் தந்தை டாக்டர் ராஜாவின் இரண்டாவது சகோதரனின் மகன் என்றும் சாந்தி சொன்னாள்.

 

“ஹலோ சாந்தி உம்மை சந்தித்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி. எப்படி இருக்கிறது முகாமில் உமது வாழ்க்கை. உமது சேவையைப் பற்றி மஞ்சுளா எற்கனவே எங்களுக்கு சொன்னவ. உம்மைபோல் சுயநலம் பாராது பொதுசனச் சேவையில் ஈடுபடும் பெண்கள் மிகக் குறைவு. நீர் புளொரன்ஸ நைட்டிங்கேர்ல் போன்றவர். பலனை எதிர்பாராது உறுதியோடு செயல் புரிகிறீர். உமது தந்தை டாக்டர் ராஜாவை ஏற்கனவே சந்தித்தோம்; ” என்றார் ஜோன்.

 

“ மிகவும் நன்றி ஜோன்.  நான் பலனை எதிர்பார்த்து சேவை புரிபவள் அல்ல . இந்த சேவையில இன்பம் காண்கிறேன். மனித உரிமை மிறல்களால் பாதிகப்பட்டவர்களுக்கு என்னால் இயன்ற சேவை செய்கிறேன். பல பெண்கள் தற்கொலை செய்யும் நிலைக்குக் கூடப் போயிருக்கிறார்கள். அவர்களுக்கு அலோசனை கொடுத்து அவர்கள் விரக்தியை மாற்றவேணடும். அதோ பாருங்கள், அந்த மூலையில் தலையில் கைவைத்துக் கொண்டு அழும் பெண்ணை. அப்பெண் பெற்றோரை இழந்தவள். அவளுடைய தந்தை விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இருந்து, தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர். தாய் குண்டு வீச்சில் பலியானவள். புதினெட்டு வயதான அந்தப் பெண் விடுதலைபுலிகளின் இயக்கத்துக்கு எதிரான இயக்கத்தினாரல் கடத்தச் செல்லப்பட்டு கற்பழிக்கப் பட்டவள். இது போன்று பலர் என்னிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். ஜோன் உங்களைப்போல் பல வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் வந்து பேட்டி கண்டு போய் பக்கம் பக்கமாக தமது பத்திரிகைகளில் எழுதியும் ஒரு வித பயனும்  இல்லை. அரசு தான் நினைத்ததை தான் செய்யும். இரு வாரங்களுக்கு முன் ஐநா சபை செயலாளர் நாயகம் முகாமுக்கு வந்து பதினைந்து நிமிடங்கள் மட்டுமே ஒரு சிலரோடு பேசிவிட்டு போனார். ஏன் இநத கண்ணாம் மூஞ்சி ஆட்டமோ தெரியாது. அப்பாவி அகதிகளோடு அரசியல் விளையாடுகிறார்கள்”, என்றாள் சாந்தி விரக்தியான தொனியோடு.

 

“ சாந்தி இப்பொ எனக்கு புரிகிறது எவ்வளவுக்கு அகதிகளின் நிலமையைப்; பற்றி நீங்கள்; கவலைப்படுகிறீர்கள் என்று. இவர்களுக்கு விடுதலைகிடைத்து, தேவையான நிவாரணம் கிடைத்து, திரும்பவும் புது வாழ்வு வாழ என்னால் இயன்றதை எனது அறிக்கை மூலம் நிட்சயம் செய்வேன்”, ஜோன் சாந்திக்கு உறுதியளித்தார்.

 

“ மிகவும் நன்றி ஜோன். ஒவ்வொரு அகதிககுப் பின்னால் ஒரு பரிதாபப் படக்கூடிய கதையுண்டு. அகதிகல் பலரில், படித்தவர்களும், திறமைசாலிகளும் இருக்கிறார்கள்;. அதோ பாருங்கள் அந்த ஒரு கால் இல்லாது கைககோலுடன் பேசிக் கொண்டிருக்கும் இளைஞனை. அவர் பெயர் இராமசாமி. ராம் என்று கூப்பிடுவார்கள். மலைநாட்டுத் தமிழரான அவர் டிக்ஒயாவில் உள்ள ஒரு பெரிய தெயிலைத்தோட்டத்து தொழிற்சாலயில் எலக்ட்ரீசனாய் வேலைசெய்தவர். மூன்று மொழிகளும் பேசக் கூடியவர். தமிழ்மேல் அளவற்ற பற்றுக் கொண்டவர். கவிதைகள் கூட எழுதுவார். தமிழ் இனத்தின் உரிமைக்காக தான் ஏதாவது ஒன்று செய்தாக வேண்டும் என்று முடிவு செய்து விடுதலைப்புலிகள் இயகத்தில் சேர்ந்து இயங்கியவர். பாவம் ஒரு விபத்தினால்  இந்த நிலைக்கு உள்ளானார். அவரோடு பேசி பாருங்கள் அப்போது தெரியும்” சாந்தி சொன்னாள்.

 

“ நிட்சயம் அவரைச் சந்தித்துப் பேசுவோம். உங்கள் மனதில் உள்ள ஆதங்கத்தை எங்களோடு பகிர்ந்ததுக்கு நன்றி. நீங்கள் இங்கிருந்து விடுதலையானதும் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தாவது நீங்கள் திருமணம் செய்து குடும்ப வாழ்வு வாழ  வேண்டும்”, என்றார் ஜோன்.

 

“ அதைப் பற்றி விடுதலையாகி வெளியேறிய பிறகு சிந்திக்கிறேன்”. என்றாள் சாந்தி சிரித்தபடி.

 

சாந்தியின் அனுமதியோடு அவள் அகதிக்கு சிகிட்சை செய்யும் காட்சியைப் படம் எடுத்தார் ஜோன்.  அதன் பின்னர் மூவரும் இராமசாமியை சந்திக்கச் சென்றார்கள்

 

******

 

 

Series Navigationஅதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் – 2.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *