பிஞ்சு.

This entry is part 12 of 14 in the series 6 நவம்பர் 2016

இரா.ஜெயானந்தன்.

தொட்டிலுக்கு வெளியே – உன்
பிஞ்சுக் கால்களில்தான் – என்
உலகம் கண் விழிக்கும்.

விதைகளின் கலப்பில்தான் – நீ
பிறப்பெடுத்தாய் – உன்
குழி விழுந்த கன்னத்தில் – யார்
புன்னகையை தவழ விட்டான் !

கம்பளி பூச்சிப்போல் – என் அன்பு
உன் மேனியெங்கும் தவழும்
நீ நெளியும் போது – நான்
வண்ணத்துப் பூச்சியாய் பறந்து விடுவேன் !

என்னையே சுமந்து சென்று – மீண்டும்
குழந்தையாக்கினாய் என்னை !

உனது ஒவ்வொரு அசைவிலும்
யார் அன்பை விதைத்தார்கள் !

இரா.ஜெயானந்தன்.

Series Navigationகிளியாகிப் பறக்கும் கனிதெலுங்கு   மரபிலக்கணங்களில் வாய்பாடுகள்
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *