கியூபா – 50 ஆண்டு – புரட்சியும் தொடரும் மக்களின் போராட்டமும்

author
0 minutes, 24 seconds Read
This entry is part 8 of 23 in the series 27 நவம்பர் 2016

துக்காராம் கோபால்ராவ்

புரட்சி அரசாங்கம், நாட்டு மக்களின் ஒப்புதலோடும், நமது அரசாங்க நிறுவனங்களில் உள்ள ஊழலையும், எதேச்சதிகார அதிகாரிகளையும் நீக்கி, நாட்டை முழு தொழில்மயப்படுத்தும். 1.5 பில்லியன் பீ§…¡க்கள் அளவுக்கு உறங்கிக்கிடக்கும் நாட்டின் மூலதன செல்வத்தை தேசிய வங்கி துணையோடு இயக்கத்தில் கொண்டு வரும். நிர்வாகத்தையும் திட்டமிடுதலையும், முழுமையாக அரசியலுக்கு வெளியே உள்ள மிகவும் திறம்வாய்ந்த மனிதர்களின் கையில்கொடுக்கும்.

– நவம்பர் 30, 1957ல் தி நேஷன் பத்திரிகையில் பிடல் காஸ்ட்ரோ ‘கியூபாவின் புரட்சியாளர்கள் எதனை செய்யப் போகிறார்கள்?’ என்ற கட்டுரையில் எழுதியது.

tlmd_raulyfideljpg_bimகியூபாவை ஆளும் கம்யூனிŠடு கட்சி, தனது புரட்சியின் 50ஆவது ஆண்டு விழாவை இந்த வருடம் கொண்டாடுகிறது. 1959ல் ƒஜனவரி மாதம் பிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் அமெரிக்க சார்பு பாட்டிஸ்Šடா அரசாங்கத்தை ஆயுதப்புரட்சி மூலம் வீழ்த்தியது. அன்றிலிருந்து இன்றுவரை பிடல் காஸ்ட்ரோவும் அவரது ஆயுதக்குழுவும் கியூபாவை ஆண்டுவருகின்றன. நோய்கள் காரணமாக ஆட்சிப்  பொறுப்பைத்தனது தம்பியிடம் 2006ல் பிடல் காஸ்ட்ரோ கொடுத்தார். பிப்ரவரி 2008ல் பிடல்காஸ்ட்ரோவின் தம்பி ரவுல்காஸ்ட்ரோ ஜƒனாதிபதி ஆனார்.

புரட்சிக்கு முன்னர் – ஒரு சுருக்கமான வரலாறு

கியூபாவின் வரலாறு எந்த ஒரு காலனிய ஆதிக்கத்தின் வரலாறு போலவே கொலம்பஸ் கியூபாவின் கரைகளை அடைந்ததிலிருந்து ஆரம்பிக்கிறது. அவர் அங்கே வருவதற்கு முன்னர் அப்பரப்பில் டைனோ, சிபோனி என்ற அமெரிக்கப் பழங்குடியினர் வசித்துவந்தனர்.

அவர்கள் அந்த நிலத்தில் விவசாயிகளாகவும், வேட்டையாடி உண்பவர்களாகவும் இருந்தனர். அங்கு அந்தக் காலத்திலேயே செம்பு வர்த்தகம் இருந்திருப்பது அங்கு கிடைத்திருக்கும் தொல்பொருட்கள் மூலம் தெரியவருகிறது. அங்கு கொலம்பŠஇறங்கியதும் அந்த நிலத்திற்குச் சொந்தக்காரராக Šஸ்Šபானிய அரசாங்கத்தை அறிவித்தார்.

பராகுவாவும் எதிர்காலத்தில் தலைநகரமாகப்போகும் †பானாவும் ஸ்Šபானியர்கள் தங்குமிடங்களாயின. கிறிŠதவ மதத்திற்கு மதம் மாற அமெரிக்கப் பழங்குடியினர் மறுத்தனர்.ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டஅமெரிக்கப் பழங்குடியினரை ஸ்Šபானியர்கள் அடிமைகளாக்கி அவர்களைத் தங்கத்தைத் தேடி வரும்படி பணித்தனர். ஒரு நூற்றாண்டுக்குள்அனைத்து அமெரிக்கப் பழங்குடியினர் ஸ்Šபானியர்களால் கொல்லப்பட்டனர்.

கியூபா Šஸ்பெயினின் ஆதிக்கத்தில் 1511லிருந்து 1898வரை இருந்தது. ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பின அடிமைகள் இங்கு கொண்டுவரப்பட்டு, அவர்களுடைய கட்டாய உழைப்பால் சர்க்கரை, காப்பி, புகையிலை ஆகியன உற்பத்தி செய்யப்பட்டு, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 1820ல் மற்ற Šஸ்Šபானிய காலனிகள் சுதந்திரத்துக்குப்போராடியபோதுகூட கியூபா Šஸ்பெயினுக்கு விசுவாசமாக இருந்தது.

அதனால், கியூபாவை Šஸ்பெயின் மன்னர் ‘La Siempre Fidelisima Isla’ அல்லது எப்போதும் விசுவாசமான தீவு என்று அழைத்தார். Fidel என்றால் விசுவாசம் என்று பொருள்.

அதற்குச் சில காரணங்களுண்டு. அவை – கியூபாவின் ஸ்Šபானியர்கள் தங்களது வியாபாரத்துக்கு Šஸ்பெயினை நம்பியிருந்ததும், கருப்பினஅடிமைகளின் கலவரங்களை ஒடுக்க Šஸ்பெயினின் துணை வேண்டியிருந்ததும்,அருகே இருந்த வலிமை பெற்றுவரும் அமெரிக்காவைக் கண்டு கியூப ஸ்Šபானியர்கள் கொண்ட அச்சம், Šஸ்Šபானியஆட்சி மீது அவர்களுக்கிருந்த வெறுப்பை விட அதிகமாக இருந்ததுமே.

ஆனாலும் 1868ல் கார்லோஸ் மானுவல் டி கெŠபடெஸ் என்பவர் தலைமையில் கியூபாவுக்கு சுதந்திரம் என்று ஒரு போர் வெடித்தது. இன்று இது ‘பத்து வருடப் போர்’ என்று அழைக்கப்படுகிறது. கியூபாவின் இந்த ஆயுதப்புரட்சி அரசை அமெரிக்கா அங்கீகரிக்க மறுத்தது. மற்ற ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்தன.

1878ல் இந்தப் போரின் முடிவில், Šஸ்பெயின் கியூபர்களுக்குப் பல ஆட்சி உரிமைகளை அளிக்க முன்வந்தது. 1879-80ல் காலிக்Šடோ கார்சியா என்பவர் இன்னொரு சுதந்திரப் போரை ஆரம்பித்தார். அதற்கு கியூபாவில் ஆதரவு கிடைக்கவில்லை.

1886ல் கியூபாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஆனாலும் அன்றிலிருந்து இன்று வரை கருப்பினத்தவர் சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பின்தங்கியே உள்ளனர். 1890களில் கியூபாவுக்கு எதிரான Šஸ்பெயினின் மோசமான நடவடிக்கைகள் மற்றுமொரு சுதந்திரப் போருக்கு வித்திட்டன.

josemarti1895ல் ஹோஸே… மார்ட்டி(Jose Marti)என்ற கவிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர், போர்வீரர் பத்து வருடங்களாக முயன்று போரை நிர்வகித்து கியூபாவை சுதந்திரக் குடியரசு என்று அறிவித்தார். அவர் தனது படையுடன் கியூபாவுக்கு நுழைந்ததுமே கொல்லப்பட்டார். அவரது மரணம் அவரை கியூபாவின் தேசியச் சின்னமாக்கியது. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட Šஸ்Šபானிய துருப்புகள் கியூபாவின் புரட்சிப் படையை வெகு எளிதில் வென்றன. Šஸ்Šபானிய துருப்புகள்கடுமையான அடக்குமுறையை மேற்கொள்ள ஆரம்பித்தன. கியூபாவின் கிராமப்புற மக்கள் எல்லோரும் முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்டு அடைக்கப் பட்டனர்.

சுமார் இரண்டு லட்சத்திலிருந்து நான்கு லட்சம் வரையிலான கியூப மக்கள் இப்படிப்பட்ட முகாம்களில் பசியாலும் வியாதிகளாலும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. Šஸ்பெயினுக்கு எதிராகக் கடும் கண்டனத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தெரிவித்தன.

1889ல் கியூபாவில் இருக்கும் 8000 அமெரிக்க குடிமக்களின் பாதுகாப்புக்காக அனுமதியின்றி கியூபாவுக்கு வந்த போர்க்கப்பல் கண்ணி வெடிகள் வெடித்துச் சிதறியது. இதிலிருந்த 266 அமெரிக்கப் போர்வீரர்களும் கொல்லப்பட்டனர். இதுஅமெரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. (இந்தக் கப்பல் எதனால் வெடித்தது என்று இன்னமும் சரியாக நிர்ணயிக்கப்படவில்லை.) இதன் காரணமாக ஏப்ரல் 1889ல் Šஸ்பெயினும் அமெரிக்காவும் ஒருவர் மீது ஒருவர் போரை அறிவித்தன.

ஸ்Šபெயின்-அமெரிக்கப் போரில் Šஸ்பெயின் தோற்றது. பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, 1898ல் கியூபா, புவர்ட்டோ ரீக்கோ (Puerto Rico), ·பிலிப்பைன்Š, க்வாம் ஆகியவற்றையும், 20 கோடி அமெரிக்க டாலர்களையும் Šஸ்பெயின் அமெரிக்காவுக்குக் கொடுத்தது. பிறகு அமெரிக்க ƒனாதிபதியாகப் பதவி ஏற்ற தியோடார் ரூŠவெல்ட் கியூபா சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவாளராக இருந்ததால், 1902, மே 20ல் கியூபாவுக்கு சட்டபூர்வமான சுதந்திரத்தை அறிவித்தார். ஆனால், கியூபாவின் நிதி நிர்வாகம், வெளியுறவு ஆகியவற்றை மேற்பார்வை பார்க்கும் உரிமையை அமெரிக்கா தக்கவைத்துக்கொண்டது. ப்ளாட் ஒப்பந்தத்தின்படி, குவாண்டனமோவில் உள்ள கடற்படை தளத்தை கியூபா அமெரிக்காவுக்கு நிரந்தரமாகக் குத்தகைக்கு விட்டது.

1912ல் Partido Independiente de Color என்ற கருப்பினத்தவர் கட்சி கியூபாவின் கிழக்கு பிராந்தியத்தில் கருப்பினத்தவரது குடியரசை உருவாக்க முயன்றது. போதுமான ஆயுதங்கள் இல்லாததால் போராளிகளை ¦ƒனரல் மாண்டேகுடோவின் படை ஏராளமானவர்களைக் கொன்று விரைவிலேயே முடிவுக்குக் கொண்டு வந்தது. அவ்வப்போது கலவரங்கள் நடந்தாலும், 1930 வரைக்கும் சட்டபூர்வமான முறையில் தேர்தல்கள்நடந்து ஆட்சி நடைபெற்றது என்றே கூற வேண்டும்.
1930ல் ¦ƒரார்டோ மாச்சாடோ மோராலஸ் அரசியலமைப்புச் சட்டத்தை உதறி சர்வாதிகாரியானார். அவரது காலத்திலேயே கியூபாவின் உள்கட்டுமானம் விரிவடைந்தது. ஆனால், வெகுவிரைவிலேயே அமெரிக்காகண்டம்முழுமையும் ஆக்கிரமித்த பஞ்சத்தால், மாச்சாடோவின் பலம் குறைந்தது.

தீவிரவாத பயங்கரவாத அமைப்புகள் தோன்றின. மாச்சாடோவுக்கு எதிராக பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டபோது கியூபா கம்யூனிŠடு கட்சி மாச்சாடோவை ஆதரித்தது. ஆனால் கியூபாவின் ராணுவத்தலைவர்கள் மாச்சாடோவை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு கார்லோஸ் மானுவலைத் தலைவராக்கினார்கள்.

தொடர்ந்து நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு ஆட்சிமாற்றங்களுக்குப் பிறகு 1940ல் சுதந்திரத் தேர்தல் நடைபெற்றது. இதில் ·புல்¦ƒனிகோ பாட்டிஸ்Šடா என்ற கருப்பின-வெள்ளை கலப்பினத் தலைவர் ƒனாதிபதியாகப்பொறுப்பேற்றார். கியூபா வரலாற்றிலேயே முதலும் கடைசியுமான கருப்பினக் கலப்புத் தலைவர் இவர் ஒருவரே.

710batistaஇந்தத் தேர்தலில், பலமற்ற கம்யூனிŠடு கட்சியும் இவருக்கு ஆதரவளித்தது. இவரதுஆட்சியிலும் பல கம்யூனிŠடு கட்சி உறுப்பினர்கள் பதவியிலிருந்தனர். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க சார்பு கூட்டணியில் கியூபா இருந்தது. 1944தேர்தலில் ரமோன்க்ரவ் வெற்றி பெற்றார். 1948ல் ரொபர்டோ அக்ராமோண்டே வெற்றி பெற்றார். 1952ல் தேர்தல் மும்முனைத் தேர்தலாக ஆனது.

மூவருமே போட்டியிட்டனர். ரொபர்டோ அக்ராமோண்டே வெற்றிபெற, பாட்டிஸ்டா மூன்றாவதாக வந்தார். தான் வெற்றி பெற முடியாது என்று அறிந்த பாட்டிஸ்Šடா சில ராணுவ அதிகாரிகள் துணையுடன் ஆட்சிக்கவிழ்ப்பு செய்து ஆட்சியைக் கைப்பற்றினார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு 1954ல் தேர்தலுக்கு ஒப்புக்கொண்டார் பாட்டிஸ்Šடா.
பாட்டிஸ்Šடா தேர்தல் முறைகேடுகள்செய்யத்திட்டமிட்டிருப்பதாகக் குறைகூறி எதிர்தரப்பு ரமோன்க்ரவ் தேர்தலிலிருந்து விலகினார்.

புரட்சியின் முன்னரும் புரட்சியும்

1956ல் ரமோன் பார்க்வின் என்பவரை கியூபா ராணுவ ஜெனரலாக பாட்டிஸ்டா ஆக்கினார். ஆனால், ரமோன் பார்க்வின் தன்னைத் தானே ஜƒனாதிபதி ஆக்கிக் கொள்ள ஒரு சில ராணுவ அதிகாரிகள் துணையுடன் ஆட்சிக் கவிழ்ப்பில் இறங்கினார். இந்த முயற்சி தோல்வியுற்றது.பாட்டிஸ்டாவின் காலத்தில் கியூபா பெரும் வளர்ச்சி அடைந்திருந்தது. அதன் தனிநபர் வருமானம் இத்தாலி அளவுக்கு இருந்தது. அப்போதைய ƒஜப்பானின் தனிநபர் வருமானத்தைவிட அதிகமாக கியூபாவின் தனிநபர் வருமானம் இருந்தது.
பெரும் நடுத்தரவர்க்கம் இருந்தது. ஆனால், 1933லிருந்து 1958 வரைக்கும் அரசாங்கத்தின் சட்டதிட்டங்கள் கடுமையாக ஆக, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. நடுத்தர வர்க்கம் கியூபாவை அமெரிக்காவுடன் ஒப்பிட்டு அதிருப்தி அடைந்தது. ஆனால், தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் பாட்டிஸ்Šடா அரசாங்கத்துக்கே இறுதிவரைஆதரவாளர்களாக இருந்தனர் என்பதையும் குறிப்பிடவேண்டும். டிசம்பர் 1956ல் பிடல் காஸ்ட்ரோ தலைமை வகித்து ஒரு ஆயுதப்புரட்சியை கியூபாவில் தொடங்கினார். 1958ல் அமெரிக்க அரசாங்கம் கியூப அரசாங்கத்துக்கு எந்த ஆயுத உதவியும் அளிக்கக்கூடாது என்று தடை விதித்தது. இதனால், சோவியத் ஆயுதங்களுடன் கியூபாவை வெற்றிகொள்வது பிடல் காஸ்ட்ரோவுக்கு எளிதாக ஆனது. பாட்டிஸ்டா போர்ச்சுகலுக்குத் தப்பியோடினார். 1959 ƒனவரி மாதம் 8 ஆ ம்தேதி காஸ்ட்ரோவின் படை தலைநகரில் நுழைந்தது. கியூபாவின் சுப்ரீம் கோர்ட், புரட்சி என்பது சட்டத்தின் மூலம் என்றும், புரட்சியின் பிரதிநிதிகள் ஆள்பவர்களாக ஆகலாம் என்றும் முடிவு செய்தது.
அமெரிக்க ஆதரவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பாட்டிஸ்டாவின் துணை ஜƒனாதிபதியாக இருந்த மானுவல் உர்ரேடியாவை பிடல் காŠஸ்ட்ரோ ƒனாதிபதியாக ஆக்கினார். கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னர் அவர் நீக்கப்பட்டார். மானுவல் உர்ரேடியா அமெரிக்காவுக்குச் சென்றார். அதன் பின், பிடல் காŠஸ்ட்ரோவுக்கும் அவரது போராளிகளுக்கும் பெரும் பணஉதவியும் ஆயுத உதவியும் செய்த பெரும் பணக்கார வக்கீலான க்Šவால்டோ டோர்ட்டிகோஸ் டோராடோ ƒனாதிபதியாக ஆக்கப்பட்டார்.
பிடல் காஸ்ட்ரோ பிரதமராக 1959பிப்ரவரியில் பதவியேற்றார்.
பிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியும் பனிப்போரும்
பிடல் காஸ்ட்ரோ ஆட்சிப்பொறுப்பேற்றதும், தனிச்சொத்தை அரசாங்கம் எடுத்துக்கொண்டது. அதற்காக எந்தவிதமான ஈட்டுப்பணத்தையும் தரவில்லை. பல தொழில்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வந்தன.
தனியார் தொழில்கள் மீது கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டன. இவற்றில் பல சியர்ரா மாŠட்ரா பிரகடனம் என்ற பிரகடனத்தில் ஏற்கெனவே கூறப்பட்டவை. தனியார் சொத்தை அரசாங்கம் எடுத்துக்கொண்ட அளவின் மதிப்பு 25 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டது.
1950ல் எல்லா எதிர்க்கட்சி பத்திரிகைகளும் மூடப்பட்டன. ரேடியோ, டெலிவி„ன் ஆகியவை அரசாங்கக் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. நடுநிலையாளர்கள், ஆசிரியர், பேராசிரியர்கள் போன்றோர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். எந்த ஒரு வருடத்திலும் சுமார் 20000க்கும்மேற்பட்ட எதிர்க்கட்சியாளர்கள் , சிந்தனையாளர்கள்,அரசியல் கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும் மனித உரிமைக் கழகங்களும், பிறரும் ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்கள். ஓரினப் பாலுறவாளர்கள் தனி முகாம்களில் அடைக்கப்பட்டு மருத்துவ-அரசியல் போதனையும் ‘மறுகல்வி’யும் அளிக்கப்பட்டார்கள்.
15000த்திலிருந்து 17000 வரையான எதிர்க்கட்சியினர் இவ்வாறு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறைகளில் இவ்வாறு வர்க்கஎதிரிகள் என்று பெயர் சூட்டி கொலைகளைச் செய்வதில் முக்கியமானவராக இருந்தவர் சே குவாரா. கம்யூனிŠடு கட்சி தனது ஒற்றை கட்சி ஆட்சிமுறையை இறுக்கியது. பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல்காஸ்ட்ரோ ராணுவத்தலைவராக ஆனார். செப்டம்பர் 1960ல் புரட்சியைக் காப்பாற்றுவதற்கான கமிட்டி என்ற அமைப்பை கியூபா கம்யூனிŠடு கட்சி உருவாக்கியது. இது பக்கத்து வீட்டுக்காரர்களை வேவு பார்த்து கம்யூனிŠடு கட்சிக்குத் தகவல் அளிக்க மக்களைத் தூண்டியது.

1961ல் லட்சக்கணக்கான கியூப மக்கள் (முக்கியமாக நடுத்தரவர்க்க வெள்ளையினத்தவர்) அமெரிக்காவுக்குத் தப்பியோடியிருந்தார்கள். ஏப்ரல் 1961ல் அமெரிக்க துருப்புகள் உதவியுடன் இவர்கள் கியூபாவை வெற்றிகொள்ள பன்றி வளைகுடா (Bay ofPigs)வழியாக கியூபாவுக்குள் நுழைய முயன்றனர்.
சோவியத் மற்றும் சோவியத் ஆதரவுநாடுகள் உதவியுடன் சிறப்பான ஆயுதப் பயிற்சி பெற்றிருந்த கியூபப்படையினர் இந்த முயற்சியை மூன்றே நாளில் வெற்றிகரமாக முறியடித்தனர். அப்போதுதான் ƒ¡ன் கென்னடி அமெரிக்க ƒனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார். துருக்கியிலும் மத்திய கிழக்கிலும் அமெரிக்க ஏவுகணைகளை அமெரிக்கா நிறுத்தியதற்குப் பதிலடியாக ர‰யசோவியத் அரசு கியூபாவில் ஏவுகணைகளை நிறுத்தியது.
இது கியூபா ஏவுகணை சிக்கலாக உருவெடுத்து ஏறத்தாழ மூன்றாம் உலகப்போராகவும் அணு ஆயுதப்போராகவும் ஆகும் நிலைக்கு வந்தது. இறுதியில் கியூபாவிலிருந்து தன் ஆயுதங்களை சோவியத் அரசு விலக்கிக் கொள்வதாகவும், ஈடாக, துருக்கி, மத்திய கிழக்கிலிருந்து ரகசியமாக அமெரிக்கா தன் ஏவுகணைகளை விலக்கிக் கொள்வதாகவும்ஒப்பந்தம்செய்யப்பட்டது.
கென்னடியும் இனி கியூபா மீது ஆக்கிரமிப்புத் தாக்குதலை அமெரிக்கா செய்யாது என்றும் உறுதிமொழி தந்தார்.
பன்றி வளைகுடாவில் கடலோரம் பிடிக்கப் பட்டவர்களைத் திருப்பித் தருவதற்கு ஈடாக அமெரிக்கா கப்பல் நிறைய தானியங்களைத் தருவதாகவும் ஒப்புக்கொண்டது. 1963ல் சோவியத் ர‰யா மாதிரியில் முழு கம்யூனிŠடு அமைப்பாக கியூபா உருக்கொண்டது.
கியூபாவுடன் வர்த்தக, ராƒரீக உறவுகளைத் துண்டித்துக்கொண்டது அமெரிக்கா. அதேநேரத்தில் முழுக்க முழுக்க சோவியத் ர‰யாவின் எடுபிடி நாடாக (client state) கியூபாஆனது.
1965ல் தனது அமைப்பை கம்யூனிŠடு கட்சியுடன் முழுமையாக இணைத்தார் பிடல்காஸ்ட்ரோ. சேகுவாரா தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் புரட்சியை ஏற்றுமதி செய்யக் கிளம்பியவுடன், பிடலின் தம்பி ரவுல் காஸ்ட்ரோ இன்னும் மிகுந்த வலிமை பெற்றவரானார்.
1970களில் அங்கோலா, எதியோப்பியா போன்ற நாடுகளில் உள்ள பிடல் காஸ்ட்ரோவின் நண்பர்களுக்கு உதவ தன் படைகளை அனுப்பித் தந்தார்.ஆனால், அதே நேரத்தில் மடத்தனமான கம்யூனி…க் கொள்கைகளால், நாட்டில் மக்களின் வாழ்வுத்தரம் படு மோசநிலையை அடைந்தது. அங்கங்கு உணவுக் கலவரங்கள் வெடித்தன. 1970ல் பிடல் காஸ்ட்ரோவே பொருளாதாரக் கொள்கைகளும் திட்டங்களும் தோல்வி அடைந்ததைத் தனது பேச்சில் ஒப்புக்கொண்டார். பொருளாதாரச் சீர்திருத்தங்களை காஸ்ட்ரோவே ஆரம்பித்தார்.

அமெரிக்காவின் அழுத்தத்தால், பல நாடுகள் கியூபாவை நிராகரித்திருந்தாலும் பின்னர் மெக்…¢கோ, கனடா போன்ற நாடுகள் கியூபாவுடன் உறவை வளர்த்துக்கொண்டன. 1975ல் அமெரிக்க கண்டத்து நாடுகள் அமைப்பு (OAS) கியூபாவின் மீதான வர்த்தகத் தடைகளை நீக்கியது. இருப்பினும் பிடல் காஸ்ட்ரோவின் அடக்குமுறையும், வறுமையும், கருத்துச் சுதந்திரமற்ற நிலையும் ஏராளமான கியூப மக்கள் நடுவே பெருத்த அதிருப்தியைவிளைவித்துள்ளது.
1980 ஆம் ஆண்டு, ஏப்ரல் 6ஆம் தேதி10000 க் கும் மேற்பட்ட கியூப மக்கள் பெரு நாட்டுத் தூதரகத்துக்குள் நுழைந்து தங்களுக்கு அடைக்கலம் வேண்டும் என்று கோரினர். அடுத்த நாள் பிடல் காஸ்ட்ரோ இவர்கள் கியூபாவை விட்டுப் போகலாம் என்று அனுமதி அளித்தார். ஏப்ரல்16ல் கோŠடோரீக்கா நாட்டுத் தூதரகத்தில் ஐந்நூறு கியூப மக்கள் அடைக்கலம் கோரி உள்ளே புகுந்தனர். யார் கியூபாவை விட்டு வெளியேற விரும்பினாலும் அவர்கள் மரியல் துறைமுகத்தில் பதிந்துவிட்டு வெளியேறலாம் என்று பிடல் காஸ்ட்ரோ அறிவித்தார்.
இது மரியல் படகு ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதன் வழியே சுமார் 125000 பேர்கள் வெளியேறியுள்ளனர். பெரும்பாலான கியூப மக்கள் படகுகளிலும், டயர்களின் உள்ளேயும் புகுந்து கடல் வழியே மியாமி கடற்கரைக்குவருகிறார்கள்.
அமெரிக்கக் கடற்படை இவர்களைத் தடுத்து நிறுத்தினாலும் கியூபாவை விட்டு மக்கள்க்டுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சுமார் 12 லட்சம் கியூப மக்கள் அமெரிக்காவுக்கு வந்திருக்கிறார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.

சோவியத் ர‰யாவின் உடைவுக்குப் பின்னர் கியூபா

சோவியத் யூனியன் உடைந்தது கியூபாவின் கம்யூனி…ஸ்ட் அரசுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. வடகொரியா அளவுக்கு கடுமையான உணவுப் பற்றாக்குறை உருவானது. ராணுவத்தில் உள்ளவர்களும் அரசில் உள்ளவர்களும் மட்டுமே உண்டார்கள் என்பதும் சாதாரண மக்களுக்குச் சாப்பிட எதுவுமே இல்லை என்பது சகƒமாயிற்று. என்றாலும் 1993வரைக்கும்அமெரிக்காவின் தானிய, பணம் மற்றும் மருத்துவ உதவியை ஏற்க மறுத்து வந்தது.
தற்போது சீனாவே கியூபாவின் முக்கியமான வர்த்தக பொருளாதாரத் துணையாக உள்ளது. கூடவே வெனிசூவெலாவின் ‹யூகோ சாவேŠ, பொலிவியாவின் எவோ மோராலெஸ் ஆகியோர் உதவியாக இருக்கிறார்கள். சோவியத்தின் ஆதரவுக் காலத்தில் கியூபா ஒரு ராணுவ தேசமாக இருந்தது. தென்னமெரிக்காவிலேயே பிரேசிலுக்குஅடுத்த பெரிய ராணுவம் கியூபாவிலேயே இருந்தது.
1994ல் 235000 பேர்கள் இருந்த கியூப ராணுவம், சோவியத்தின் உடைவுக்குப் பின்னர் 2003ல் வெறும் 60000மாகக் குறைக்கப்படவேண்டியதாயிற்று. கியூபாவில் மனித உரிமை 2003ல் கருப்பு வசந்தம் (Black Spring) எனப்படும் மக்கள் கலவரம் உருவானது. பலர் கியூபாவின் கம்யூனி… அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். அதிரடிப் படை (Rapid Action Brigades -Brigadas de Accion Rapida) என்னும் ஒரு அமைப்பு கியூபாவின் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு, எதிர் கருத்து சொல்பவர்களை அடக்க உபயோகப்படுத்தப்படுகிறது. கடுமையான விதிமுறைகள் இருந்தும் ஏராளமான ƒனநாயகப் போராளிகள் கியூபாவில் இருக்கிறார்கள். இவர்களில் பலர் சிறையில் இருக்கிறார்கள்.இவர்களில் முக்கியமானவர் பெட்ரோலூயி போட்டல் (Pedro Luis Boitel). இவர் பாட்டிஸ்Šடா அரசாங்கத்தை எதிர்த்து பிடல் காஸ்ட்ரோ ஆதரவாளராக இருந்தார். ஆனால், பல்கலைக்கழகத் தேர்தலில் அவர் நின்ற போது பிடல் காஸ்ட்ரோவின் ஆதரவை இ ழந்தார் .
இவரது கருத்துகளுக்காக, 1961ல் கம்யூனி… அரசாங்கம் இவருக்கும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. சிறைத் தண்டனை முடிவடைந்த பிறகும் அவர் தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்கப்பட்டார். அங்கும் அவர்மீது சித்திரவதை தொடர்ந்தது. கியூபாவை விட்டு வெளியேற அனுமதி வேண்டினார். அது மறுக்கப்பட்டது.
roquecabelloதொடர்ந்த சிறைவாசத்தில் பிடல் காஸ்ட்ரோ அரசாங்கத்தை எதிர்த்து 1972ல் 53 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மருத்துவ உதவியோ உணவோ இன்றி பட்டினியில் மரணமடைந்தார். அவரது உடல் கூட வெளியேகொடுக்கப் படவில்லை. மார்த்தா பீட்ரிஸ் Šரோக்( என்னும் கியூப பொருளாதார நிபுணர் கியூபாவில் மனித உரிமை நிலை மோசமாகஇருக்கிறது என்று கட்டுரை எழுதியதால் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு விடுதலை செய்யப்பட்ட அவர், கருப்பு வசந்தத்தின் போதும் மீண்டும்சிறையிலடைக்கப்பட்டார்.
கியர்மோ ஃபரினாஸ் (Guillermo Farinaas) ஒரு மருத்துவர், சுதந்திர பத்திரிகையாளர். இவர் கியூபாவின் கடுமையான தணிக்கை முறைக்கு எதிராக ஏழு மாதம் உண்ணாவிரதப் போராட்டமிருந்தார். அது 2006ல் முடிவுக்கு வந்தது. இவர் கம்யூனி… அரசாங்கத்தின் போலீஸால் கடுமையாக அடித்துத் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்.
jorge-luis-garcia-perez-antunezஹோர்கே  ˆலூயி கார்சியா பெரஸ் Š(Jorge LuisGarcia Perez) கியூபாவின் நெல்சன் மண்டேலா என்று அழைக்கப்படுகிறார். கியூபமக்களால் அவர் அண்டுனெஸ் (Antunez)என்று அழைக்கப்படுகிறார். 1990லிருந்து 2007 வரைக்கும்17வருடங்கள் சிறையில் இருந்தார்.
1990ல் ஒரு போராட்டத்தின் போது, கம்யூனி…ம் ஒரு தவறு, அது ஒரு உட்டோபியாஎன்று சொன்னதை ஒரு காவலாளி கேட்டு புகார் செய்ததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு யூனிபார்ம் போடுவதற்கும், கம்யூனி… மறு கல்வி (அதாவது கடுமையான அடித்தல் சித்ரவதை) க்கும் ஆட்பட மறுத்தார். அதனால் தனிச்சிறையில் ஒன்பது மாதங்களும் பிறகு பல வருடங்கள் சிறையிலும் கழித்தார்.
நோய்வாய்ப்பட்ட தன் தாயைப் பார்ப்பதற்காகச் சிறையிலிருந்து தப்பினார். இருப்பினும் அவரால் தன் தாயைப் பார்க்கமுடியவில்லை. ஒரே ஒரு நாள்தான் சுதந்திரமானவராக இருந்தார். ஒரு மாதத்தில் அவரது தாயும் மரணமடைந்தார். பிடல் காஸ்ட்ரோவை மதிக்கவில்லை என்ற குற்றத்தின்பேரில் அவரது சிறைத்தண்டனை நீடிக்கப்பட்டது. சிறைக்குள்ளும் அ†¢ம்சை வழி எதிர்ப்பைக் காட்டிவருகிறார்.
உண்ணாவிரதம் இருந்து மறைந்த பெட்ரோ லூயி போட்டலின் பெயரில் சிறையில் வாழும் அரசியல் கைதிகள் அமைப்பை உருவாக்கியிருக்கிறார். பலநாடுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 2007ல் விடுவிக்கப்பட்டார். 2009ல் அவரும் அவரது மனைவி ஐரிஸ் அவர்களும் ஒரு உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
கியூபா அவரை அவரது வீட்டிலிருந்து துரத்தப் போவதாகவும், அவர் மீதும் அவரது துணைபோராட்ட சிந்தனையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும்கூறியுள்ளது.

 

yoani_sanchezயோவானி சாஞ்செஸ் (Yoani Sanchez) என்ற பெண் எழுத்தாளர் கியூபாவிலிருந்து Šவிட்சர்லாந்து சென்று பல வருடங்கள் கழித்து மீண்டும் தன் கணவரோடு கியூபாவுக்கு வந்து தங்கியிருக்கிறார். நான் எப்போதும் எங்கேயும் சுதந்திரமானவள் என்ற கோ„த்துடன் தனது கட்டுரைகளை இணையத்தில் எழுதும் மிகப்பெரிய இணைய பதிவாளர் (blogger) ஆகியிருக்கிறார்.
இவரது இணையப் பக்கத்தை இங்கே பார்க்கலாம். http:// www.desdecuba.com/generationy/.
இவரது கட்டுரைகள் மின் அஞ்சலாக வெளியே அனுப்பப்படுகிறது.
அது அவரது நண்பர்களால் வலையேற்றப்படுகிறது. அவரது இணையப்பக்கம் கியூபாவில் தடைசெய்யப்பட்டிருக்கிறது என்பதால், அவரது இணையப் பக்கத்தை அவரே பார்க்கமுடியாது. இவரும் கடுமையானஅரசாங்கக் கண்காணிப்பில் இருக்கிறார்.

கியூபாவின் மக்கள்தொகையும் இனப்பிரச்சினைகளும்

கியூபாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பும் கம்யூனி…க்கட்டுப்பாட்டுக்குள்ளும் பொய்களுக்குள்ளும் மறைக்கப்பட்டு உள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பதை எல்லா கம்யூனி… அரசுகளும் கடும் கட்டுப்பாட்டில்தான் வைக்கின்றன, அல்லது அக்கணக்கெடுப்பை நடத்துவதே இல்லை. ர‰யாவோ, சீனாவோ, கிழக்கைரோப்பிய சோவியத் காலனி நாடுகளோ இந்தக் கணக்கெடுப்பை நடத்தினால் தம் வண்டவாளம் – மோசமான உணவு நிலை, பொது ஆரோக்கியச் சீரழிவு, அரசுக் கொடுமைகளால் மக்கள் இறப்பு போன்ற இழிவுகள் – உலகுக்குத் தெரிந்துவிடும் என்று அறிந்துதான் இப்படித் தகவலை மடக்குகின்றன.
கியூபாவிலும் இதே தகவல் அடைப்பும், பொய்ப் பிரசாரமும் தொடர்ந்து நடப்பவையே. அதிகாரபூர்வமாக கியூபாவின் மக்கள்தொகையில் 65 சதவிகிதத்தினர் வெள்ளையர்கள், 10 சதவிகிதத்தினர் கருப்பர்கள், 25 சதவிகிதத்தினர் கருப்பு வெள்ளை கலப்பினத்தவர்கள் என கம்யூனிŠடு கியூபா அறிவிக்கிறது. ஆனால், இது புரட்சிக்கு முந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பை ஒட்டியது.
புரட்சிக்குப் பிறகு ஏராளமான வெள்ளையின கியூப மக்கள் கியூபாவை விட்டு வெளியேறி விட்டார்கள். அமெரிக்காவில் மட்டுமேசுமார் 12 லட்சம் கியூப மக்கள் இருக்கிறார்கள். கியூபாவில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியே பத்து லட்சம் அளவே. கம்யூனி… கியூபாவில் மக்கள்தொகை வளர்ச்சி வெகுவாகக் குறைந்துவிட்டது.
உலகளாவிய சிறுபான்மையினர் உரிமை இயக்கம், கியூபாவில் உள்ள கருப்பினத்தவரின் எண்ணிக்கை 34 சதவிகிதத்திலிருந்து 65 சதவிகிதம்வரைக்கும் இருக்கும் என்று மதிப்பிடுகிறது. மேலும் கலப்பினத்தவர்கள் சுமாரான வெள்ளையாக இருந்தாலும் அவர்கள் கருப்பினத்தவர்களாகவே கருதப்படுகிறார்கள்.
ஆனால், கருப்பினத்தவர்களுக்கு அதிகாரத்தில் பங்களிக்க கியூபாவின் கம்யூனி… அரசாங்கம் தயாரில்லை.அதனால்,கலப்பினத்தவரை தனி இனமாக ஆக்கி, கருப்பினத்தவரை பத்து சதவிகிதமே என்று காட்டுகிறது. மேலும் கார்லோஸ் மூர் (CARLOS MOORE) போன்ற கருப்பின எழுத்தாளர்கள், இது பெரிய ஏமாற்றுவேலை என்றும், உண்மையில் கருப்பினத்தவர்கள் கியூபாவில் 60லிருந்து 72 சதவிகிதம் வரைக்கும் இருக்கிறார்கள் என்றும் ஆதாரபூர்வமாக எழுதுகிறார்கள். ஆனால், கியூபாவின் நிலங்க?? இன்றும் 98 சதவிகிதம் வெள்ளையர்கள் கையிலேயே உள்ளது.
கருப்பினத்தவர்கள் தாழ்மையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கியூபாவின் முக்கியமான வருமானம் அமெரிக்காவிலிருந்து வெள்ளையின கியூப மக்கள் கியூபாவுக்கு வருடத்துக்குஅனுப்பும் 2 பில்லியன் டாலர்கள். இதில் 20 சதவிகிதம் வரியாக கம்யூனிŠடு அரசாங்கம் தனக்கெனப் பெற்றுக்கொள்கிறது.இதனால் வெள்ளையின கியூப மக்கள் கியூபாவுக்குள்ளேயே வளமையாக வாழ்கிறார்கள். இதுவும் கருப்பின வெள்ளையின பாரபட்சத்துக்கு வழிவகுக்கிறது.
கியூபா கம்யூனிŠடு கட்சி மற்றும் அதிகார அமைப்பிலும் வெள்ளையர்களே மேலாட்சி செலுத்துகிறார்கள். பெரும்பாலானஅதிகாரிகளும் ராணுவத் தலைவர்களும் கட்சித்தலைவர்களும்அவர்களே. எந்தெந்த வி„யங்களையெல்லாம் ஒழிக்கப் போகிறோம் என்று சொன்னார்களோ அதனையே இப்போது கியூபாவின் புரட்சியாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு கசப்பான உண்மை.
கருப்பினத்தவருக்கு விடுதலை என்றார்கள்; அவர்கள்தான் நான்கு வருடங்கள் மட்டுமே கியூபாவின் தலைவராக இருந்த கருப்பினத் தலைவரான பாட்டிஸ்Šடாவைப் பதவியிறக்கி வெள்ளையின ஆட்சியைக் கடந்த ஐம்பது வருடங்களாக நிரந்தரமாக்கியிருக்கிறார்கள்.
8 மில்லியன் கருப்பினத்தவரை கியூபா என்னும் சிறையிலடைத்து 2 மில்லியன் வெள்ளையினத்தவர்களை அமெரிக்கா செல்ல வழிவகுத்தார்கள். மக்களுக்குச் சுதந்திரம் என்று சொன்னவர்களது நாட்டிலிருந்து ஏராளமான மக்கள் க்டினார்கள்,இன்னமும் வெளியேக்டத் துடிக்கிறார்கள்.
இதே அளவுக்கு பாட்டிஸ்Šடா அரசிலிருந்து மக்கள் ஓடினார்களா என்று தங்களைத் தாங்களே ஒரு கேள்வி கூட கேட்டுக்கொள்ள முடியவில்லை. முதலாளிகளை ஒழிப்போம் என்றவர்கள் நாட்டின் ஒரே முதலாளியாக ஆகி, எல்லோருக்கும் கூலி கொடுப்பவர்களாக ஆகியிருக்கிறார்கள். வேலைக்கேற்ற கூலி என்று சொன்னவர்களே இன்று எல்லோருக்கும் உலகத்திலேயே மிகக்குறைந்த கூலி கொடுக்கும் ஒரே முதலாளியாக ஆகியிருக்கிறார்கள்.
விபச்சார விடுதிகளையும் தரகர்களையும் ஒழிப்பதாகச் சொன்னவர்களது அரசாங்கமே சுற்றுலாத்துறை என்ற பெயரில் மாபெரும் விபச்சாரவிடுதியாக கியூபாவையே மாற்றி ஒரே தரகராக கம்யூனிŠடு கட்சியை ஆக்கியிருக்கிறார்கள்.
கடுமையான போர்கள் நடக்கும் முதலாளித்துவ நாட்டிலிருந்து ஓடும் மக்களின் எண்ணிக்கையைவிட அமைதியான கம்யூனி… நாட்டிலிருந்து ஓடும் மக்களின் எண்ணிக்கை ஏன் அதிகமாக இருக்கிறது என்பதை இந்திய கம்யூனி…ஸ்ட் ஆதரவாளர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்.

படிக்க வேண்டியவை:
1) Afro Cubans http: / /www.minorityrights.org/4116/cuba/afrocubans.html

2) Pichon: Race and Revolution in Castro’s Cuba by CarlosMoore (LawrenceHill Books, 2008) .

 

வார்த்தை 2009 செப்டம்பர் இதழில் வந்த கட்டுரையின் மீள் பதிப்பு.

Series Navigation“முள்வேலிக்குப் பின்னால் “ 8 -மார்க்கண்டுஸ்மார்ட் போன் இல்லையென்றாலும், சாதாரண போன் மூலமாகவே பணம் கொடுக்கல் வாங்கல் செய்யலாம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *