“முள்வேலிக்குப் பின்னால் “ – 9 விடுதலை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 5 of 23 in the series 27 நவம்பர் 2016

பொன் குலேந்திரன் -கனடா

மெனிக் முகாமில் இருந்து அனுராதபுரம், புத்தளம் ஊடாக கொழும்புக்குத் திரும்பிய ஜோன் டொரண்டே திரும்ப முன் தனக்கு உதவியோருக்கு ஒரு இரவு விருந்து போசனத்தை கலதாரி ஹொட்டலில் கொடுக்க தீர்மானித்தார். அவரது அழைத்தவர்களின் பட்டியலில் கணவன்மாரும், மனைவிமாரும் அடங்கினர்.

கனேடிய ஊடகவியலாளர் ஜோன் தான் வநத பணியைத் திருப்தியாகச் செய்து முடித்து, டொரண்டோ திரும்பியவுடன்  நீண்ட மூன்று நாள் தொடர் கட்டுரையை படங்களோடு “முல்வேலி; முகாமுக்குள்;” என்ற தலைப்பில் பத்திரிகையில் வெளியிட்டார் அதை பல மனித உரிமைமீறல்களைக் கண்காணிக்கும் ஸ்தாபனங்கள் பாராட்டி கருத்து தெரிவித்தது. அக்கட்டுரை சிறிலங்கா அரசின் கவனத்தை ஈர்ந்தது. அதனால் முகாம்களில் அகதிகளின் சுதந்திரமில்லாத நிலையை மேலும் தொடராமல், 2009 ஆண்டு மே மாதம் போர் முடிந்து  3 வருடங்களுக்குப் பின் 2012 ஆம் ஆண்டு செப்டம்பரில் அகதிகள் பொரும்பாலோரை விடுதலை செய்து 1750 ஏக்கர்கள் பரப்புள்ள முகாம்களை மூடியது. இவர்கள் பலர் முல்லைத்தீவு பிரதேசத்தில் குடியேறினர்

அரசின் முடிவை ஐநா சபை மனித ஊரிமைமீறல்களுக்கு பொறுப்பான ஸ்தாபனம் வரவேற்றது. விடுதலை கிடைத்த 110 குடும்பங்கள் தங்களது சொந்த காணிகளுக்குப் போகமுடியாது இருந்தது  கண்ணி வெடிகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை என்பதை காரணம் காட்டினார்கள். அவர்களைச் சொந்தக் காணிகளில் குடியமர்த்தாமல் வேறு காணிகளில் குடியமரத்தியது அரசு. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் அப்பகுதியில்  இயங்கிய தனது செயலகத்தின் செயற்பாடுகளை குறைத்தது.

2013 ஆகஸ்ட்டில் எதிர்பாராத விதமாக தனக்கு வந்திருந்த திருமண அழைப்பிதலை பார்த்தபோது, ஜோனுக்கு பெரும் மகிழ்ச்சி. அது இராமசாமி-சாந்தியின் திருமண அழைப்பிதல். விலாசம் புதுக்குடியிருப்பு என எழுதப்பட்டிருந்தது. அதை அடுத்து சில தினங்களில் ஜோனுக்கு ஒரு தொலைபெசி வந்தது,

“ மிஸ்டர் ஜோன,; நான் மனிக் முகாமில் நீங்கள் சந்தித்த  மஞ்சுளா பேசுகிறன். என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா”?; போனில் பேசிய  பெண் குரல் கேட்டது.

“உம்மை எனக்கு நல்லாக நினைவு இருக்கறது. அது சரி எங்கிருந்து பேசுகிறர் மஞ்சுளா? டோராண்டோ நம்பர் போனில் விழுந்திருக்கிறதே. நீர் டோராண்டோவுக்கு வந்துவிட்டீரா?”

“ நான் கனடா வந்து சில நாட்கள் ஆகிறது ஜோன்” பதில் வந்தது.

“ அது சரி இப்போ எங்கு இருக்கிறீர. நான் உம்மைச் சந்திக்க விரும்புகிறேன்”.

“ மிசிசாகாவில் உள்ள என் பேனா நண்பர், மன்னிக்கவும் எனது வருங்காலக் கணவர் பீட்டரின் வீட்டில் இருந்து பேசுகிறன்;. பீட்டரின் பெற்றோரின் சம்மதத்தோடு எங்கள் திருமணம் இரு கிழைமக்குள் மிசிசாகாவில் நடவிருக்கிறது. பீட்டரும் அவரின் பெற்றோரும் என்னை கனடா வர ஸ்பொன்சர் செய்தவர்கள். நான் அகதியாக மெனிக் முகாமில் இருந்த படியால், அது எனக்கு கனடா வர உதவியது; திருமணத்தின் பின் நான் என்படிப்பைத் தொடர பீட்டர் சம்மதித்து விட்டார். அவர் இப்போ பெல் கனடாவில் பொறியியலராக வேலை செய்கிறார்” என்று தன் நிலையைப் பற்றிய விபரத்தை மஞ்சுளா சொன்னாள்.

ஜோனுக்கு அவள் சொன்னதைக் கேட்டவுடன் மட்டற்ற மகிழ்ச்சி.

“ மஞ்சுளா, நான் எழுதிய கட்டுரையை வாசித்தீரா?”

“ ஓம் வாசித்தேன். நான் மட்டுமல்ல டாக்டர் ராஜா, சாந்தி, ராம் எல்லோருமே வாசித்து நீங்கள் எங்களின் விடுதலைக்காக செய்த சேவையைப் பாராட்டினார்கள். சாந்தி அக்கா ராமைத் திருமணம் செய்யப்போகிறா. அது தெரியுமா உங்களுக்கு ஜோன்”

“ தெரியும் மஞ்சுளா. எனக்கு அவர்களின் திருமண அழைப்பிதழ் வந்திருக்கு. சந்தர்ப்பம் கிடைத்தால்  அவர்களின்  திருமணத்துக்குப்  போகப் பார்க்கிறேன்

“ நன்றி மிஸ்டர் ஜோன். நான் கனடாவுக்கு வந்ததை, உங்களோடு முகாமுக்கு வந்த இரு ஊடகவியலாளரகளுக்கும் அறிவித்து விட்டேன். எங்கள் விடுதலைக்கு உங்களோடு  அவர்களும் சேர்ந்து பங்கு  கொண்டுள்ளார்கள். அவர்கள் செய்த உதவியையும் என்னால் மறக்கமுடியாது” என்றாள் மஞ்சுளா. அவள் பேச்சில் உணரச்சி காரணமாக விம்மல் தொனித்தது.

(இக் குறுநாவல் உண்மையையும் கற்பனையும் கலந்து எழுதப்பட்டது. கதையில் வரும் பெயர்கள் எவரையும் குறிப்பிடுபவையல்ல)

********.

10

முடிவுரை

இக்குறுநாவல் உண்மையும், கற்பனையும் கலந்து எழுதப்பட்டது. ஒரு பாவமும் அறியாத ஈழத் தமிழர்கள்.; அகதிகள் முகாமில் பட்ட அவலங்களை இக்கதை ஓரளவுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது. இந்நூல் அவ்வகதிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும்  என் சமர்ப்பணம்.

( முற்றும்)

Series Navigationவிளையும் பயிர் (நிக்கோலா டெஸ்லா)“முள்வேலிக்குப் பின்னால் “ – 7 இராமசாமி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *