சுசீந்திரனின் மாவீரன் கிட்டு – தலித்தின் வலி சொல்கிறதா ?

author
0 minutes, 21 seconds Read
This entry is part 21 of 22 in the series 4 டிசம்பர் 2016

 

கோவிந்த் கருப்

——————–

முன் தகவல்:

நான் உயர்குடி சேர்ந்தவனில்லை.

என் தாய், மதுரை தேனி பகுதி எரசையில் ஒரு பெரிய வேளான் குடும்பத்தில் பெண் வழி வாரிசு. என் தாயின் தாத்தா இரு தாரம் கொண்டவர்.

முதல் தாரத்திற்கு ஒரு ஆண், ஒரு பெண்

இரண்டாம் தாரத்திற்கு ஒரு ஆண்

 

இரண்டாம் தாரத்தின் மகன் தான், என் தாய் குடும்பம் முன்னேற தோள் கொடுத்தவர், பின் என் தந்தையும் பின்னர் தோள் கொடுத்தார்.

 

பிற்படுத்தப்பட்ட ஜாதி :  படிப்பால் மேல் வந்தவர்கள்

 

தந்தை தஞ்சைப் பகுதி சுவாமிலை பின்னுள்ள துரும்பூர்.

பிற்படுத்தப்பட்ட ஜாதி , மிக மிக ஏழை. உணவிற்கு வழியின்றி வாழ்திடுனும், படிப்பால் மேல் வந்தவர்..

 

என் தாயின் தாய்மாமன்  தேனி பகுதியில் இருந்து வந்த முதல் கலெக்டர். அரிஜன் வெல்பர் ஆபிசராகவும் இருந்தவர்.

 

மதுரைப் பக்கத்தில், 1960களில் கலெக்ட்ராவேன் எனும் லட்சிய வார்த்தை வரக் காரணமாக இருந்தவர்.

 

இதனால், இப்படத்தின் கதை மன நிலை எனக்குப் புரியக்கூடியதே.

 

ஆனால், படம் அவர்கள் வலி சொல்லியதா எனில்,

இல்லை என்றே சொல்ல முடியும்.

 

அதன், காரணம், சினிமா எடுக்கும் வித்தை கற்ற நிலை தாண்டி, கதை ஓட்டம், கதை காட்சியாகும் போது அது ஏற்படுத்தும் தாக்கம், அதற்காக வைக்கப்படும் காட்சிகள் மற்றும் காமிரா கோணங்கள், என எதுவும் அக்கறை கொள்ளப்படவில்லை.

 

அதிலும் அந்தப் பாம்ப்பு கடித்தவளை தூக்கிச் செல்லும் காட்சி. சாதாரண டேபிளைக் கூட பின் பக்கம் கைகள் நீட்டி தூக்கி முன் பக்கம் நடப்பதே கஷ்டம் , இதில் ஓடுவது முழுவதுமாக கஷ்டம்.

 

பின் கால் இணப்பில் இடித்தால் முன்னால் விழுந்து பல் போகும்.

பள்ளிக்கூட நாட்களில், நின்று கொண்டிருப்பவர் கால் முட்டிப் பின் இடித்து அவர் விழுவதை விளையாட்டாக பலர் செய்து வாத்தியரிடம் பிரம்படி படுவதுண்டு.

அதனால் தான் அந்தக் காட்சியெல்லாம், இயக்கப்பட்டதில் மேம்போக்குத் தனத்தை கூட்டுகிறது.

 

சினிமாத் தனம் என்பது போல், ஒரு ஜோடி குழப்ப துயர் முடிவுவை கம்பேர் செய்து இன்னொரு ஜோடி என்னாவர்கள் என்ற கிளிசே.

 

மேலும், இரண்டு ஜோடியிலும் பெண் தான் உயர்ஜாதி எனப்படும் ஜாதி.

 

இங்கு தான் குற்றச்சாட்டே வைக்கிறார்கள் , தலித் சம்பந்தப்பட்ட காதலுக்கு விமர்சனம் வைப்பவர்கள்.

 

ஒரு பெண் வீடு தாண்டி மறு வீடு போகும் போது, அவளுடன் சேர்த்து வைத்த ஐஸ்வர்யம், சொத்து என போகிறது.

 

கிட்டு கூட ஒரு லட்சிய மாந்தனாய் காட்டப்படுகிறார்.

இவனைப் போல் இரு மாப்பிள்ளை கிடைக்காது எனும் வசனம் பேசப்படும் நிலையில்,,

 

முதல் காதலில் அப் பையன் என்ன செய்கிறான், வேலைக்குப் போவானா? நல்லப் படிப்பவனா? அவன் வீட்டில் என்ன சொல்கிறார்கள் என்று எதுவும் கிடையாது.

பெண்ணின் தந்தையின் வெம்மி வெடிக்கும் இயலாமையின் உச்ச நிலை காட்சியமைப்பில் கூட , நடிப்பு கோணங்கள் ஒரு நய வஞ்சக கொலையாளி போல் தான் இருக்கிறது.

கத்தியால் குத்தி அவர் வெளி நடந்து செல்லும் காட்சி கூட, சசியின் சுப்ரமணியபுர காட்சியில் வரும் அந்த காட்சி தான் ஞாபகம் வருகிறது.

 

இன்னொன்று, மாநிலத்தின் முதல் மாணவன் போட்டோவுடன் வரும் முதல் பக்கச் செய்தி அவனுக்கேத் தெரியாதாம்.

என் நண்பன் வாங்கியுள்ளான்.

முதல் நாளே லோக்கல் பத்திரிக்கையாளர்கள் வந்து போட்டோ வாங்கிச் செல்வர்.

 

அவர் எருமை மாட்டைக் குளிப்பாட்டுவது போல் இண்ட்ரோ.

 

அப்புறம் பார்த்திபன்.

என்னைக்காவது ஒரு நாள் என் முன் கைகட்டி நிற்ப என்ற வசனம் கேட்டவுடன்,

கிட்டு கலெக்ட்ரா வருவார்

இல்லை இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவனாய் வருவார் என்று நினைத்து எதிர்பார்ப்புடன் இருந்தால்,

 

உயர் போலீச் அதிகாரி முன், அவர் போடும் அதட்டலில்

 

அந்த போலீஸ் கைகட்ட, இவர் அவர் முன் நின்று கொண்டு,

 

மைண்ட் வாய்சில் சந்தோஷிக்கிறார்.

 

எப்படி இப்படி ஒரு தாட்ஸ் ?

தேட்ஸ் ஆல் அவர் கொஸ்டின்.

 

வாழவைக்கும் வகையில் குணநலம் இருப்பின்

சமுதாய அந்தஸ்தில் உயரக் கூடிய வகையில் இருப்பின்

நல்ல லுக் இருப்பின்

பொறுப்பு இருப்பின்

தாழ்நிலை வியாக்கியானம்

குரோதம் பாராமல்

உயர்ஜாதிக்காரர் பெண் தருவார் என்பது காட்சியாகிறது

 

மேல் ஜாதிக்காரர்கள் காதல் விவகாரத்தில் கலகம் பண்ணுபவர்கள் அல்ல – தகுதியிருப்பின் எனக் காட்டுகிறது.

 

தனது ஜாதியினருக்கு நல்லது என்று ஒன்றைச் செய்ய வேண்டும் அதற்கு கட்டுக்கோப்புடன் அவர்கள் இருக்க வேண்டும் என்றும்

 

சூழ்ச்சியால் தான் போராட்டங்கள் தோற்றன எனத் திருப்பித் திருப்பிச் சொன்ன கதாபாத்திரமே,

 

தனது சூழ்ச்சியால் தன் இனத்தில் ஒரு ஆலமரம் அடியோடு சாய்ந்தழியக் காரணமாகிப் போகிறது.

 

அக் கேரக்டர் , சின்ராசு,  போட்ட முட்டாள்தன வியூகத்தில்,

 

மேள தாளமுடன் ஊரறிய சம்மத உற்சாகத்துடன் நடந்தேறி இந் நாநிலத்திற்கும் எடுத்துக்காட்டாக இருந்திருக்க வேண்டிய திருமணம் நாசமாகி போனது.

 

அது தான் என் வேதனை,

 

கிராமங்களில் வயல் சம்பந்தப்பட்ட வாழ்வு முறையால் வரும் ஒரு வேற்றுமையும் சொல்லப்படவில்லை.

 

80களில் காட்சியமைப்பு ஆனால் அப்போது சிற்றுந்து முறை கிடையாது.

அரசு வீடு கட்டும் முறை வேறு.

காவல் நிலைய அமைப்பு வேறு. போலீஸ் பேசும் முறை வேறு.

உடல் கட்டமைப்பு, ஸ்டிராய்ட் அமைப்பும் தின்னும் அந்த பிரியாணி விஷுவலும் அக்காலக் கட்டம் கிடையாது.

 

பெண்ணின் தாவணி வேண்டுமானால், தூறல் நின்னு போச்சு கலர் வகையறா, ஒத்துப் போகிறது.

 

அப்புறம், ரோட்டை மறிக்காத கூட்டத்தால், சாலையில் சிக்கல் என்பது.

 

இப்படம் முடிந்த போது.

 

எதிர்பார்க்காத டிவிஸ்ட் வைக்கிறேன் எனும் பெயரில் ,

 

இப்படம் தவறி பாதாளத்தில் விழுந்து தலித் சினிமா வந்து விட்டது எனும் நம்பிக்கையைச் சிதைக்கிறது.

 

இது மாதிரி திருமணமே நடக்காதா?

 

தேனி பக்கத்திலேயே நடந்திருக்கிறது.

 

அதுவும் நான் சொன்ன, என் தாய் குடும்பத்தில்,.

 

என் அன்னையுடன் உடன் பிறந்த தம்பி மகள் ,

ஆம் என் தாய்மாமன் மகள்,

 

ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தில் திருமணம் கண்டார்.

 

பொறுப்பான, படித்த, மத்திய அரசு பணியில்.

என் ஜாதியில் தேடியிருந்தாலும், அவர்களுக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே  ( படத்தில் வரும் பெண்ணின் தந்தை பேசும் அதே வசனம் நிஜத்தில் எனக்கும் இவர்தம் விஷயத்தில் தோன்றியது )

 

அவர் இருவரும் சந்தோஷமாக, தனது வாரிசுகளை அடுத்த நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்

 

அதில், அவர்களின் கலாச்சார , உணவு, பேச்சு மொழி என பல பழக்க வழக்கங்களை இருவரும் நல்லவற்றின் பக்கம் மாற்றி

சந்தோஷமாக இருக்கிறார்கள்.

 

அவையெல்லாம் டாகுமெண்ட் படுத்தப்பட வேண்டும்.

 

 

இயக்க ஆற்றல் உள்ள, இன்வஸ்டர் பணம் தரக்கூடிய வியாபார நிலையுள்ள சுசீந்திரன் போன்றோர்,

ஆழமான அனுபவம் மற்றும் விஷயஞான மற்றும் துவேஷமற்ற சிந்தனையுள்ளோரை கதை இலாகவிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நமது கோரிக்கை.

 

 

தலித் சினிமாவிற்குள், இன்னும் ஆழமான சிந்தனையாளர்கள் வர வேண்டும்.

 

ஆங்கில படங்களில் அடங்கி கிடந்த சமூகத்தின் உணர்வுகள் வெறும் ஆத்திரமாகவும், டிராமாகவும் இல்லாமல் எப்படி சிந்தனையையும் ஒருவருக்கொருவர்

வேற்றுமையில் ஒற்றுமை என வாழ்வுவது பற்றியும் சொல்லுகிறது , அத் தள நிலையில்.

 

அதீத நாள் சென்னைவாசிகளுக்கு,

மாவீரன் கிட்டு எனில் ஞாப்கம் வருவது,

 

சென்னை சுவர்களில்

கலைஞர் வாழ்க எனும் பெரிய பெரிய எழுத்தின் கீழ், இவண்.மாவீரன் சைதா கா. கிட்டு என்பது தான்.

மேலும், எத்துனை முறை சொன்னாலும் தமிழக பிரச்சனைகளை ஆழமாக அலசு, குறியூடுகளை இங்கிருந்தே எடுத்திருக்க வேண்டும்.

சாதித்த பல தலித்துகள் இங்கிருக்கிறார்கள்.

 

என்னைப் பொறுத்தவரை, அக் கதாபத்திரத்திற்கு,

இரட்டை மலை சீனுவாசன் அவர்கள் நினைவாக,

 

சீனு என்று வைத்து, தனிமனித குரோத சூழல்களை எப்படி வென்று, அத்திருமணம் நடந்தது,

 

பிணம் கூட செல்ல மறுக்கப்பட்ட பாதையில்,

 

அவர்கள் ஊரார் ஒன்று கூட ,

அவன் கலெக்ட்டராகி அவள் கை பிடிக்க,

 

அவள் எழுதிய ஆசை கடிதத்தைப் படித்த மாநில அமைச்சர் சூழ

 

அவர் தம் திருமண ஊர்வலம் நடந்தது என்று காட்டியிருக்கலாம்.

 

என் மாமன் மகளின் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருமண ஊர்வலம் போல்

———–

 

இன்று

விதைக்கப்படும்

நம்பிக்கை எனும்

 

விதைகளில் தான்

நாளைய தோட்டத்து பூக்களின்

 

வாசம் பொதிந்து இருக்கிறது.

 

துவேஷம் எனும்

துண்டாடும் விஷம் தாண்டி

 

அவை கிளை பரப்பி

சஞ்சீவி மருந்தாகும்.

 

அதற்கு

நாம் பங்காற்றுவோம்.

 

Series Navigationசோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்காமுதல்வர் ஜே ஜெயலலிதா மறைவு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *