அறிவியல் கதை – எனக்கு ஒரு மகன் பிறந்தான்

author
0 minutes, 17 seconds Read
This entry is part 9 of 17 in the series 11 டிசம்பர் 2016

  பொன் குலேந்திரன் –கனடா

 

நானும் என் கணவன் நாதனும் பார்க்காத சாத்திரக்காரர்கள் இல்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. எல்லாம் எதற்காக? எங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலுக்காகத் தான். என் வழியிலும், என் கணவர் வழியிலும் பிறந்தது எல்லாம் பெண்கள். எனக்கு நான்கு சகோதரிகள் மட்டுமே. நான் முத்தவள் அவருக்கு இரண்டு சகோதரிகள். அண்ணா அல்லது தம்பி என்று கூப்பிட அவரைத் தவிர வேறு ஆண்கள் அவர் கூட பிறக்கவில்லை. எனது மாமனாருக்கும், மாமியாருக்கும் கூட  சகோதரன்கள் இல்லை. சகோதரிகள் மட்டுமே இருந்தார்கள். என் பெற்றோரும் என் மாமனார் குடும்பம்; தங்கள் பெண் பிள்ளைகளைக் கரை சேர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்று எனக்கும், நாதனுக்கும் மட்டுமே தெரியும்.

 

எங்களுக்குப் பிறந்தது மூன்று பெண் குழந்தைகள். முத்தவள் கங்கா. வாக்குக் கண். யரை அவள் பார்க்கிறாள் என்று அறிவது கடினம் இரண்டாவது ஜமுனாவுக்கு. திக்குவாய். வார்த்தைகள் அவள் வாயில் இருந்து வெளி வர கஷ்டப்படும். மூன்றாவது சரஸ்வதி, உடற் பருமன் கூடியவள். யானை அசைவது போல் நடப்பாள்.  இப்படி முன்று பெண்களும் ஏதாவது ஒரு குறையோடு இருந்தாலும்; படிப்பில் மட்டும் கெட்டிக்காரர்கள். மூத்தவள் கணிதப் பட்டதாரி ஆசிரியை. இரண்டாமவள் பொளதிகவியல் பட்டதாரி. கடைசிப்பெண் சரஸ்வதி மருத்துவக் கல்லாரியில் முதலாவது ஆண்டு. சரஸ்வதிக்கு பியானோ வாசிப்பதில் ஆர்வம். அவள் ஆசைப்பட்டதால் செலவு பாராமல் ஒரு பியானொ வாங்கிக் கொடுத்தோம். நேரம் கிடைத்த போது பியானோவில் சினிமா பாடல்களை வாசிப்பாள்.

 

நாங்கள் இல்லாத காலத்தில் மூன்று பெண்களும் தங்களைக் கவனித்துக் கொள்வார்கள் என்ற தைரியம் எங்களுக்கு இருந்தது. நான் நான்காவது தடவையாக, நாற்பத்தைந்து  வயதில் கருவுற்ற போது என் மாமியார் எனக்கு சொன்ன வார்த்தைகள் என் காதில் இன்னும் ஒலித்தபடி இருந்தது.

 

“எடியே சுந்தரி இதொடு நிறுத்திக் கொள.; உனக்கு கிடைக்ப்போகிறது கடைசி குழந்தையாக இருக்கட்டும். இந்தக்; குழந்தையாவது ஆணாக பிறக்கட்டும். உங்களுக்கு கொள்ளி வைக்க ஒரு ஆண் வாரிசை ஆவது பெத்துவிடு”.

 

“ மாமி நிட்சயம் இந்த முறை பிறக்கப்போவது ஆண் குழந்தை தான்” நான் அவளுக்கு சிரித்தபடி சொன்னேன்.”

 

“ அதப்படி சுந்தரி சொல்லுறாய்”? மாமி கேட்டா.

 

“ நானும், அவரும் ஹொஸ்பிடலுக்குப்; போய், ஸ்கான் செய்து பார்த்து, ஆண் குழந்தை என்று உறுதிசெய்தாச்சு”.

 

“ அப்படியா. நல்ல செய்திதான். அவனை நல்லபடியாக வளர்த்து டாக்டருக்கோ அல்லது என்ஜினியருக்கோ படிப்பித்தவிடுங்கோ”,  என்றாள் மாமி தன் மகனைப் பார்த்து.

 

“ என்ன பெயர் வைக்க யோசிச்சிருக்கிறியள்’? என்னை அப்பா கேட்டார்.

 

“ ஆதித்தியா என்று பெயர் வைக்க யோசித்திருக்கிறோம் அப்பா”.

 

“ நல்லபெயர் தான் அறிவில் சூரியனை போல் பிரகாசமாக அவன் வளரட்டும்” என் அம்மா வாழ்த்தினாள்.

 

எங்கள் மகனின் வரவை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம.; என் மூன்று பெண்களுக்கும் தங்களுக்கு ஒரு தம்பி வரப்போகிறான் என்ற மட்டற்ற மகிழ்ச்சி.

 

நான் எதிரபார்க்காவாறு அவன் குறிப்பிட்ட காலத்துக்கு முதல், குறை மாதக் குழந்தையாக , எட்டு மாதத்திலேயே, திருகோண நட்சத்திரத்தில பிறந்தான் ;. ஏன் பிரசவம் முதல் மூன்று  பிரசவங்களைப் போல் சுகப் பிரசவம் இல்லை.

 

“ திருகோண நடசத்திரம் எனற படியால ஒரு கோணத்தை உன் மகன் ஆளுவான்” என்றாள் அம்மா.

 

“அம்மா உன் வாக்கு பொன் வாக்காக இருக்கட்டும் “ என்றேன் நான்.

 

பிறந்ததும் ஆதித்தன் அழவில்லை. சில நிமிடங்களுக்கு பின்னரே அவன் அழுகைக் குரல் கேட்டது. என்னருகே அவன் படத்திருந்த போது திரும்பி அவனைப் பார்த்தேன். பெயருக்கு ஏற்ற பிரகாசமான முகம். நாதனைப்போல் கொழுத்த கன்னங்களும,; நிறமும். என்னைப்போன்ற அகண்ட விழிகள். தலை நிறைய கறுத்த மயிர். குழந்தையின் அங்க  அசைவு சற்று குறைவாக எனக்குத் தெரி;ந்தது.

 

நாட்கள் போகப்போக  அவன் வளர்ச்சியில் ஒரு வித வித்தியாசம் இருந்ததைக் கண்டேன். அவன் பார்வையில் ஒரு ஏக்கம் தெரிந்தது. அங்க அசைவுகளில் ஒரு சிறு நடுக்கம். அழுகையில் கூட தொடர்ச்சி இருக்கவில்லை. எதாவது பொம்மையை கையில் கொடுத்தால், உடனே அதை மற்ற குழந்தைகள் போல் ஆசையொடு வாங்கமாட்டான். போத்தலில் பால் கொடுக்கும் போது, உறிஞ்சிக் குடிக்கமாட்டான். அதிக நேரம் எடுக்கும். எனக்கும் நாதனுக்கும் அவன் வளரும் போது தாமதித்த அவனின் அங்க அசைவுகளை காணக்கூடியதாக இருந்தது. எனக்கு பிறக்கும் மகன் குறைவற்றவனாக பிறக்க வேண்டும் என நாம் இருவரும்; எதிர்பார்த்ததுபோல்  என் மகன் இருக்கவில்லை என்பதை ஆதித்தனுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது கண்டோம். எதோ ஒரு கிரகணம் சூரியனை மறைத்து விட்டது போல் எனக்குப் பட்டது. என் அம்மாவும், அப்பாவும் ஆதித்தனின் போக்கில இருந்து, சாதாரணக் குழந்தை போல் அவன் இல்லை என்பதை கவனித்துவிட்டார்கள்.

 

“ சுந்தரி, ஆதித்தனில் ஏதோ குறையிருக்கறது போல எனக்குத் தெரிகிறது.; ஆதித்தனை நீங்கள் அவசியம் டாக்டரிடம் கொண்டு போய் காட்டு. தாமதிக்காதே “ என்றாள் என் அம்மா. என் மாமியும் அவளோடு சேர்நது கொண்டாள்.

.

“ பரவாயில்லை அம்மா, அவன் வளர்ந்ததும்; அவனில் மாற்றம் ஏற்படலாம். அவனுக்கு ஒரு பிரச்சனயும் இல்ல. டாக்டரைப் போய்  பார்க்க தேவையில்லை. பிறகு வெறு எதையும் பரிசோதனையில்  கண்டு பிடித்து சொல்லக் கூடாததை டாக்டர் சொன்னால், எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது அம்மா. எங்களுக்கு இவன்தான் ஒரே மகன். இனி எனக்கு குழந்தைகள் வேண்டாம்”இ நான் உறுதியோடு அம்மாவுக்குச் சொன்னேன்.

 

வயது ஏற ஏற, அவனின் அட்டகாசம் கூடியது. வீட்டு மதிலிலும், தோட்டத்தில் இருந்த மரங்களிலும் ஏறத் தொடங்கினான். சோபாவில் ஏறி குதித்து விளையாடுவான். மேசையில் இருநத விலை உயர்ந்த கடிகாரத்தை புத்தகத்தை வீசி உடைத்துவிட்டான். நான் பொறுத்துக்கோண்டேன். எங்களுக்கு அவன் ஒரே மகன் அல்லவா?

 

சிலரின் ஆலோசனை படி, குழந்தைகளை பராமரிக்கும் இடத்தில் கொண்டு போய் சேர்த்தேன். மற்ற குழந்தைகளோடு ஆதித்தன் சேர்ந்து விளையாடினால், சில வேலை அவனில் மாற்றம் எற்படலாம் என்று  நான் நினைத்தேன். அந்த நிலையத்தில் அவன் போய் சேர்ந்து ஒரு மாதததுக்குள் எங்களுக்கு அவனைப்பற்றி; வந்த முறைபட்பாடுகள் பல.

 

“உங்கடை மகன் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுகிறான் இல்லை. நாங்கள் சொல்வதை கேட்கிறான் இல்லை. அடம் பிடிக்கிறான். சில சமயம் மற்ற பிள்ளைகளைக் கிள்ளுகிறான். அவர்கள் அழுவதைப் பார்த்து கை தட்டிச் சிரிக்கிறான். உங்கடை மகனுக்கு “ஓட்டிசம்” என்ற மன இறுக்க நோய் இருக்கிறது போல் எனக்குத் தெரிகிறது. உங்கள் மகனை ஒரு மனநோய் ஸ்பெசலிஸ்ட்டிடம் கொண்டு போய் காட்டினால் நல்லது. அப்படி ஓட்டிசம் நோயாக இருந்தால் அதற்கான நிவாரணத்தை அவர் சொல்லலாம்”இ என்றாள் சிறுவர்களை பராமரிக்கும் நிலையத்தி;ன் தலமை ஆசிரியை. அவள் தனது அனுபவத்தை வைத்து  சொன்னாள். மற்ற சிறுவர்கள் உங்கள் மகனோடு சேர்ந்து விளையாட பயப்படுகிறார்கள். சில சமயம் ஒருவரோடும் பேசாது ஒரு முலையில் போய் பேசாமல் அமர்ந்திருப்பான் உங்கள் மகன,; உணவு உண்ண அடம் பிடிப்பான்., இப்படி அவனைப் பற்றி பல தரப்பட்ட முறைப்பாடுகள்.

 

இறுதியில் நானும,; நாதனும் ஒரு பிரபல மனோவைத்தியரிடம் ஆதித்தனை கொண்டு பொய் கட்டினோம். டாக்டர் என்ன சொல்லப் பேகிறாரோ என்ற பயம் எங்களுககு; இருந்தது. ஆதித்தனுக்கு ஒரு பொம்மையை டாக்டர் கொடுத்தார்;. அவன் அதைவாங்;கி சுழட்டி எறிந்தான். சித்திரம் வரைய பேப்பரும் வர்ணப்பென்சில்களை டாக்டர் கொடுத் போது ஆதித்தன் அதை வாங்கி சுழட்டி எறிந்தான். பேப்பரில் சித்திரம் வரையாமல் தாறுமாறாக கிறுக்கி பேப்பரை கிழித்தெறிந்தான். டாக்டர் அவன் செயல்களை  அவதானித்தவிட்டு ,என்னைப் பார்த்து.

 

“அம்மா இந்த சிறுவன் உங்கள் வயிற்றில் கருவாக இருக்கும் போது ஏதூவது பொக்களிப்பான, சின்ன முத்து போன்ற தொற்று நோயேதும் உங்களுக்கு வந்ததா”?

 

“இல்லை டாக்டர”,; என்றேன்.

 

“ எப்போதாவது  நீஙகள் விழுந்து, பாரதூரமாக உங்கள் வயிற்றில் அடி ஏதம் பட்டதா”?

 

“ இல்லையே டாக்டர்.”

 

“ உங்கள் அல்லது,  உங்கள் கணவனின் பரம்பரையில் யாராவாத மனநோயால் பாதிக்கப்பட்டிருக் கிறார்களா”.

 

“ இல்வே இல்லை டாகடர்”

 

“ நீங்கள் இச்சிறுவனை கருவில் வைத்திருக்கும் போது கொழுப்பு நிறைந்த மாமிசம் அதிகமாக உண்டீர்களா”?

 

“ இல்லை டாக்டர். நாங்கள் வெஜிட்டேரியன்”

 

“ உங்களுக்கு சர்க்கரை வியாதி உண்டா”?

 

“ அதுவும் இல்லை டாக்டர்”

 

டாக்டர் சற்று நேரம் யோசித்தார். இன்னும் சில இரத்தப்;பரிசோதனை, பிரெயின் ஸ்கான் செய்த பின் என் முடிவை சில தினங்களில் சொல்லுகிறன் என்றார் டாகடர். அவர் எழுதிக் கொடுத்த  பரிசோனைகள் எல்லாவற்றையும்  ஆதித்தனுக்கு செய்தோம்.

 

*******

 

அன்று வெள்ளிக்கழமை. ஆதித்தஆனாடு கோவிலுக்குப் போய் அவன் பெயரில் அரச்சனை செய்து வடுட திரும்பிய போது டாக்டரின் ஒபிசில் இருநது தன்னை வந்து சந்திக்கும் படி கோல வந்தது.

 

அவரை நாஙகள் இருவரும் போய் சந்தித்த போது அவர் சொன்னது எமக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

 

“ மன்னிக்கவும.; உங்கள் மகனுக்கு மன இறுக்கம் என்ற ஓட்டிசம் (Autism) என்ற நோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. பலகுழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். கவலை வேண்டாம். சிலநேரம், காலம் போக உங்கடை மகனின் நிலமை மாறலாம். அவன் வாழும் சுழ்நிலையை பொறுத்தது. அவனோடு எதிர்த்து நிற்காதீர்கள். கண்டித்து பேசாதீரகள். பொறுமையாக, விடடுக்கோடுங்கள். அன்பாக இருஙகள். அவன் விரும்பியதை செய்யுங்கள். அவனில் சில வேலை மாற்றம் ஏற்படலாம். நல்லாக தூங்க விடுங்கள். மனதில் அமைதி ஏற்பட்டால், அதுவே உங்கள் மகனுக்கு இருக்கும் நோய் போக உதவும்,”

 

“மருந்து ஏதும் தேவையில்லையா டாக்டர்’? என் கணவர் கேட்டார்.

 

“ இப்போதைக்கு தேவையில்லை. இயற்கை தான் மருந்து. கடவுளின் மேல் நம்பிக்கை வையுஙகள். என்னை மூன்று மாதங்களில் மகனோடு; வந்து பாருங்கள். திரும்பவும் பரிசோதித்து உங்கள் மகனில் மாற்றம் இருக்கிறதா என்று பார்க்கிறேன்”.; என்றார் டாக்டர்.

 

நாங்கள் வீடு திரும்பியதும் டாக்டர் சொன்னதை என் மாமன் மாமியாருக்கும் என் பெற்றோருக்கும் சொன்னோம். ஏன் மூன்று மகள்மாரும் தங்கள் தம்பியின் நோய் தீர எங்களோடு ஒத்துழைப்பதாக சொன்னார்கள்.

 

ஆதித்தனை டாக்டர் பரிசொதித்த போது அவனுக்கு வயது ஏழு. காலில் சில சமயம் சப்பாத்துக்ளை மாற்றி போட்டபடி நடப்பான். லேஸ்; கட்டத் தெரியாது. யாராவது அவனுக்கு உதவ வேண்டும் ஆதித்தனின் சகோதரிகள் அவனின் செயல்களைப் பொறுமையோடு ஏற்றுக்;கொண்டனர்.

*******

 

அன்று சமையல் செய்து கொண்டிருந்த என் காதில் ஒரு ஆங்கில இசை பியானொவில் கேட்டது. என்ன சரஸ்வதி புதுமையாக என்றுமில்லாதவாறு ஆங்கில டியூன் வாசிக்றாள் என நான் நினைத்தேன்.

 

“ என்ன சரஸ்வதி புதுமையாக ஆங்கில டியூன் வாசிக்கிறாய்”? நான் என் கடைசி மகளைக் கேட்டேன்.

 

“ அம்மா நான் இல்லை பியானோ வாசிக்கிறது. ஓடி வந்து இங்கை பாரேன் யார் பியானோ வாசிக்கிறது என்று”இ என்றாள் சரஸ்வதி.

 

நான ஹாலுக்குப் போய் பார்த்த போது நான் கண்ட காட்சி என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது.  அந்த பியானோ இசையைக் கேட்டு என் கணவரும் ஹாலுக்குள் வந்தார். பியானோவில் இசையை மீட்டியது வேறு யாரும் இல்லை, எங்கள் மகன் ஆதித்தன் தான். அவன் பார்வை  முழுவதும் கீ போர்ட்டில் இருந்ததைக் கவனித்தோம்.

 

நடக்கும் அதிசயத்தால் நாம் இருவரும் உறைந்து போய் நின்றோம். ஆதித்தன் டியூனை வாசித்து முடித்து, ஒன்றுமே தெரியாதவன் போல் எழும்பிப்போய் சோபாவில் அமர்ந்தான். அவன் முகத்தில் அமைதி தெரிந்தது. நாங்கள் இருவரும் ஒன்றுமே பேசவில்லை. அவன் செயலைக் காணாதவர்கள் போல் இருந்தோம்.

 

“ அம்மா தம்பி பியானோவில் வாசித்த டியூன் நான் ஒரு போதும் கேட்காத டியூன். இவன் பியானோ விளையாட எப்ப படித்தவன்’? சரஸ்வதி என்னைக் கேட்டாள்.

 

“ எனக்குத் தெரியாது மகள். சில நேரம் நீ;P இல்லாத போது பியானோவை தட்டி;க கொண்டே இருப்பான். நான் தடுப்பதில்லை. நான் நினைக்கிறேன் இவனுக்கு நீ பியானோ வாசிப்பதைக் கண்டு தானும் வாசிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது போலத் தெரிகிறது. இந்த இசைமேல் ஆர்வம் கடவுள் கொடுத்த வரம் என்று நான் நினைக்கிறேன் சரஸ்வதி”.

 

நானும் நாதனும் கலந்து அலோசித்து அவனிடம் இருந்த இசைத் திறனை விருத்தி செய்வதால் அவனுக்கு இருக்கும் ஓட்டிசம் நோயை இல்லாமல் செய்து விடலாம் எனறு தீர்மானித்து ஒரு பியானோ டீச்சரை அவனுக்கு முறைப்படி பியானோ வாசிக்க ஒழுங்கு செய்தோம்.

 

டீச்சர் வந்து மூன்று நாட்களில் அவ சொன்னது எம்மை ஆச்சரியப்பட வைத்தது

 

“ உங்கள் மகன் இந்த வயதில்  ஒரு அதிசயத்தக்க திறமை உள்ளவன். இதைத் தான் புரொடிஜி என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். உங்கள் மகனுக்கு இசை தானாகவே வருகிறது. நான் அறியாத டியூன்களை எல்லாம் வாசிக்கிறான். இவனுக்கு பியோனோ டிரெயினிங் தேவையில்லை. அவன் போக்கில் வாசிக்க விடுங்கள்”இ  என்றாள் பியானோ டிச்சர்.

 

ஆதித்தனில் ஏற்பட்ட தீடிர் மாற்றததைப் பற்றி டாக்டருக்கு சொன்னோம்..

 

“ நீங்கள் சொல்வதை கேட்க எனக்கு சந்தோஷமாக இருக்கு. உங்கள் மகன் ஒரு புரொடிஜி போல் எனக்குத் தெரிகிறது. நான் அறிந்த பல புரொடிஜிகளுக் ஓட்டிசம் இருந்ததாக கேள்விப்பட்டேன். இது மரபணுவோடு தொடர்புள்ளதாக இருக்கலாம்.. மோர்சாட் என்ற இசை மேதை ஐந்து வயதில்; இசை அமைக்கத் தொடங்கினவர். பேத்தோவனும் அப்படியே.  யார் கண்டது ஆதவனும் வருங்காலத்தில் ஒரு இசை மேதை ஆகலாம். இசையில் இருந்து வெளியாகும் ஒலி அலைகளின் அதிர்வுகள்;, சக்தி வாயந்தவை. அதனால் தான் பிராமணர்கள் கோவிலில் மந்திரம் சொல்லும் போது தோன்றும் அதிர்வுகளுக்கு மனதைச் சாந்தப்படுத்தும் சக்தியிருக்கிறது  எனக்குத் தெரியும் ஒரு கேஸ்;.  பாடகியான ஒரு பெண்; தன் வயற்றில் குழந்தையை கருவில் வைத்திருக்கும் போது வயலின் வாசித்து பக்தி கீர்த்தனைகள் பாடுவது வழக்கம். குழந்தை பிறந்து, அழும்போது தாய் வயலின் வாசித்துப் பாடினால் குழந்தை அழுகையை நிறுத்தி தாயைப் பாரத்தபடியே இருக்கும். அந்தப் பெண் குழந்தை மூன்று வயதிலேயே இனிமையாகப் பாடத்தொடங்கியது என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்”இ என்றார் டாக்டர்.

 

“ அப்போ டாக்டர் ஒலி அலைகள் ஓட்டிசத்தை போக்கி விடுமா”.

 

“இருக்கலாம். ஒலி அலைகளில் உள்ள சக்தியை மருத்துவத்துக்கு அல்டிரா சவுண்ட் என்று பாவிக்கிறார்கள். எதற்கும் சில காலம் பொறுத்திருந்து பார்ப்போமே. இப்பத்தான் ஓட்டிசத்தைப் போக்க மேலை நாடுகளில் ஆராச்சி செய்து வருகிறார்கள்.” என்றார் டாக்டர்.

 

********

Series Navigationகடன் அட்டை, ஏடிம் அட்டை ஹேக்கிங்கனவு : இலக்கிய நிகழ்வு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *