Posted in

கொதிக்கிறது மக்கள் வெள்ளம்

This entry is part 5 of 12 in the series 8 ஜனவரி 2017

சூரியப்பெண்ணின்

ஆட்சியில்…….

 

ஒளி யருவியில்

குளித்தனர் மக்கள்

பிரகாச வெளியில்

பறந்தன குருவிகள்

வெளிச்சம் பார்த்தன

குஞ்சுகள்

 

சூரியப்பெண்ணுக் கஞ்சி

பொய்க்காமல் பெய்தது மழை

மறக்காமல் மாறின பருவங்கள்

 

ஆட்சி சூரியப்பெண்ணிடம்

ஆதிக்கமோ சந்திரப்பெண்ணிடம்

 

சூரியப்பெண்ணின்

காலடிச் சுவட்டில்

தடம் பதித்தார்

சந்திரப்பெண்

சூரியப்பெண் இருக்குமிடம்

சந்திரப்பெண்ணின் இருப்பிடம்

சுய ஒளியில் சூரியர்

இரவலில் சந்திரர்

 

ஒரு நாள்

 

தோல்வி அறியா சூரியப்பெண்

மரணத்திடம் தோற்றார்

எப்படி?????

 

அடுத்த நாளே

அரண்மனைக் ‘கொலு’ மண்டபத்தின்

அரசியானார் சந்திரப்பெண்

 

முதல் நாள் மரணாபிஷேகம்

மறுநாள் பட்டாபிஷேகம்

 

‘நீதியே நீ இன்னும்

இருக்கின்றாயா?

அல்லது

நீயும் அக்கொலைக் களத்தில்

உயிர் விட்டாயா?’

 

கொதிக்கிறது

மக்கள் வெள்ளம்

 

அமீதாம்மாள்

Series Navigationஎனது மூன்றாவது நாவல் “உங்கள் எண் என்ன?”திருப்பூர் திரைப்படவிழா :சுப்ரபாரதிமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *