உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 6 of 12 in the series 29 ஜனவரி 2017

பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

++++++++++++++
umarkayam

22. வா என் கண்மணி, வந்தென் குவளை நிரப்பு
கடந்த கவலை, எதிர்கால அச்சம் இன்று நீங்கும்
மறுநாள் ஏன்? நான் வாழ்வேன் நானாக நாளை,
கடந்து போன பல்லாயிர வருடத் தொடர்போடு.

22. Ah, my Beloved, fill the Cup that clears
To-day of past Regrets and future Fears –
To-morrow? – Why, To-morrow I may be
Myself with Yesterday’s Sev’n Thousand Years.

23. மேலான, மிகச்சிறந்த சிலரை நேசித்தோம்;
காலமும் விதியும் திராட்சைக் கொத்தைச் சிதைத்திட
ஓரிரு முறை குவளை மதுவைப் பருகினர் முன்பு ;
அடுத்தடுத்துப் போனார் மௌன ஓய்வுக்குப் பின்பு.

23. Lo! some we loved, the loveliest and best
That Time and Fate of all their Vintage prest,
Have drunk their Cup a Round or two before,
And one by one crept silently to Rest.

24. நாமிப்போ அறைக்குள் குடித்துக் கூத்தடிப்போம்
பூரிப்பில் போனர் அவரெலாம் வேனிற் துகிலோடு;
பூமிக்குக் கீழ் துயிலில் கிடக்கிறோம், இனிமேல்
இறங்குவோம் படுக்கை தர – அவை யாருக்கு?

24. And we, that now make merry in the Room
They left, and Summer dresses in new Bloom,
Ourselves must we beneath the Couch of Earth
Descend, ourselves to make a Couch – for whom?

++++++++++++++++++++++++++++++++++++++

Series Navigationதொடுவானம் 155. பல்லவர் தமிழர் அல்லர்.பிசுபிசுப்பு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *