பூக்கும் மனிதநேயம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 18 in the series 12 பெப்ருவரி 2017
மீனாட்சி சுந்தரமூர்த்தி
பூக்கள் சிரிக்கும் கூடையிலே,
மத்தாப்பூ
மலரும் முகத்தினிலே.
கூடை சுமக்கும் இடுப்பு
பூக்களைக்
கூவி விற்கும் அழைப்பு.
நெற்றியிலே திருநாமம் நெஞ்சில்
திருமாலின்
நாமம்,சபரியோ இவள்
வாய்சிவக்கும் வெற்றிலை.
கைகுலுங்கும்
கண்ணாடி வளையல் மூதாட்டி.
விடியலில் இவள் வந்தால்
மணியேழு.
மாலைக்கிவள் வரவு ஆறு.
 கொல்லையில் சந்தன முல்லை,
ரோஜா,
குண்டுமல்லி வீடுதோறும் உண்டு.
ஆனாலும் நாங்கள் காத்திருப்போம்
இவளின்
விடியல் அந்தி வரவுக்காக.
ஒருநாளும் சரியாய் முழம்போட
மாட்டாள்,
ஒருமுழம் எப்போதும் ஒன்றரைதான்.
குழந்தைகளுக்கு வைத்தியம் சொல்வாள்.
மங்கையர்க்கு,
கனிவான பேச்சில் அன்னை.
வயதொன்றும் அதிகம் இல்லையாம்
எழுபதோடு
ஐந்துதானாம் சுறுசுறுப்போ இருபதாய்.
ஆண்டாள் சூடிக் கொடுத்தாள்
பெருமாளுக்கு,
இவளோ சூடாமல் தருகிறாள்.
விழாக்கள் இவளால் மணக்கும்
வராதநாள்
எங்கள் நெஞ்சம் கனக்கும்.
யார் சொன்னார் பணக்காரரே
வள்ளல் என்று,
பூக்காரியும் வள்ளலே ஏனென்றால்,
வருடந் தவறாமல் ஒவ்வொன்றிலும்
பன்னிரண்டு என
வேட்டியும் சேலையும் எடுக்கிறாள்.
எங்கோ தொலைவில் இருக்கும்
வசதியில்லாத
முதியோர் இல்லம்சென்று தருகிறாள்.
புற்றீசலாய்ப் பெருகும் முதியோர்
இல்லங்களை,
நிரப்பும் பிள்ளைகளின் கவனத்திற்கு.
                            .
Series Navigation14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்” சேவ் “ வெளியிட்ட இரு நூல்கள்மாமா வருவாரா?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *