தமிழ் இலக்கிய உலகில் சில தப்பபிப்பிராயங்கள் தலை நிமிர்ந்து உலா
வருகின்றன:
- ஏழ்மையைப் பற்றி எழுதுபவர்கள் ரியலிச எழுத்தாளர்கள்.
- செக்ஸ் பற்றி எழுதுபவர் மரபை உடைக்கும் தைரியசாலி.
- ஆண்களைத் தூக்கியெறிந்து எழுதினால் பெண்ணியப்போராளி.
- நாலைந்து தலையணைகளின் உயரத்திற்குப் போட்டி போட்டு
எழுதும் நாவல்கள் தமிழின் தலை சிறந்த நாவல்கள்.
- சிறு பத்திரிகைகளில் எழுதுபவன் தீவிர இலக்கியவாதி.
இன்னும் இத்யாதி இத்யாதி.
இத்தகைய கோட்பாடுகளில் அடைந்து கிடக்கும் எழுத்தாளன் அக்
கோட்பாடுகளின் கைதியாக வாழ்ந்து வருவதுதான் குரூரமான நகைச்
சுவை.
சொற்செட்டு என்பது இப்போது தமிழில் ஒரு கெட்ட வார்த்தையாகி
விட்டது என்று பயப்படுகிறேன். பராங்குசம் கிருத்திகா போன்ற
வர்களின் எழுத்துக்களைத் தேடிப் பிடித்து படிக்கின்ற வாசகனுக்கு சொற்செட்டின் தாத்பரியம் புலப்படும்.
அசோகமித்திரனின் கதைகளில் உள்ள “in between the lines”ன் சாரத்தைப்
பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதும் இன்றைய இலக்கிய ஞான சூரியன்கள
யாரும் தத்தம் எழுத்தில் அசோகமித்திரனின் சிக்கன எழுத்துத் திறனை
உள்வாங்கிக் கொள்ளாமல் தாம் எழுப்பும் சத்தத்தின் இரைச்சலில்(?)
தாமே மயங்கிக் கிடப்பதுதான் தமிழின் துர்ப்பாக்கியம். (அசோகமித்திரனின் கதைகளை “ஊடுருவி” புதுப் புது அர்த்தங்களைக் கண்டு பிடித்துக் கொண்டு வரும் வேறு சிலரின் திறமை பற்றிமற்றொரு
சந்தர்ப்பத்தில்)
சில வாரங்களுக்கு முன்பு மறுபடியும் தேடி எடுத்துப் படித்தேன் ‘பதாகை’யில் வந்த சு.வேணுகோபாலின் நேர்காணலை. எழுத்துலகில் நுழைய விரும்பும்இளைஞர்களும் ( ஏன் முதியவர்களும் கூட) சீரியஸ் லிட்டரேச்சரைப் பரிச்சயம் கொள்ள விரும்பும் வாசகர்களும் இந்த நேர்காணலைப் படித்தால் they will fall in love with su. venugopal. தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளைப் பற்றி அவர் கூறும் கருத்துக்கள் ஆடம்பரம் தவிர்த்த எளிமையான வார்த்தைகளில். ஆனால் அவ் வார்த்தைகளின் வழியே நாம் உணரும் கருத்துக்களின் கனம் நூதனமான வாசக அனுபவம்.
பாரிஸ் ரிவ்யூவில் படித்த ஃபாக்னர் ஹெமிங்வே பேட்டிகளை நினைவுறுத்தும் நேர்காணல்.
சுட்டி இங்கே :
https://padhaakai.com/2015/09/07/interview-with-su-venugopal/#comments
மதுரையில் நான் ஏழாம் வகுப்பு படித்த போது நா.பார்த்தசாரதி
எனக்குத் தமிழ் ஆசிரியர் !. அது புதிதாக /சற்று தாமதமாக ஆகஸ்ட்டில்
ஆரம்பிக்கப் பட்ட பள்ளி. என் வகுப்பில் என்னையும் சேர்த்து மொத்தம்
மூன்று மாணவர்கள்.
நா. பா. என் தந்தைக்கும் பழக்கமானது அப்போதுதான். அங்கு
இருக்கும்போதுதான் குறிஞ்சி மலரை எழுத ஆரம்பித்திருந்தார்.
சிவந்த நிறமும், நல்ல உயரமும் கொண்டிருந்த அவர் வெள்ளை
வெளேரென்று வேஷ்டியும், ஜிப்பாவும் அணிந்து நடந்து வருவது
இப்போதும் நினைவில் தெளிவாக இருக்கிறது. . குறிஞ்சி மலரில்
அவர் சித்தரித்த அரவிந்தனின் தோற்றம் அவருடையது என்று பல தடவைகள் நான் நினைத்திருக்கிறேன் அப்போது பிறந்திருந்த
அவர் பெண்ணுக்குப் பூரணி என்று பெயரிட்டதும் அப்போது
தான்.
இன்றைய மிக மங்கலான நினைவில் இளைப்பாற முயலும் போது
அந்தக் குழந்தையைப் பார்க்க என் பெற்றோருடன்சென்ற
சிறுவனாக நான் இருந்தேன், ஸ்வீட் சாப்பிட்டது மட்டும் ஞாபக
மிருக்கிறது.பின்னாளில் அவர் தீபம் ஆசிரியராக ஆன பிறகு
சொற்பொழிவு, பட்டி மன்றம் என்று மதுரைக்கும் அதைத் தாண்டி
தெற்கே மற்ற ஊர்களுக்கும் போகும் போது, அவரை ரயில்வே
ஸ்டேஷனில் போய்ப் பார்ப்பேன். மதுரையில் தங்கினால்
ஹோட்டலில்உடுப்பி ஹோட்டல் என்று ஞாபகம் , போய்ப்
பார்ப்பேன். காப்பி சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்திக்
குடிக்க வைப்பார்.
திரு நா. பா. வுடன் மனஸ்தாபம் ஏற்பட்ட நாட்களும் உண்டு.
But its not worth talking about.
- பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி ,ரமேஷ் கல்யாண் உரை
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 6
- இயற்கையின் பிழை
- தொடுவானம் 163. மறக்க முடியாத மருத்துவப் பயிற்சி
- ஏகாதசி கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஹைக்கூ தோப்பு ‘ தொகுப்பை முன் வைத்து …
- இரண்டு பூதக்கருந்துளைகள் மோதும் போது எழுந்திடும் ஈர்ப்பலை கள் காலக்ஸி மையக் கருந்துளையை வெளியேற்று கின்றன.
- காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
- புனலாட்டுப் பத்து
- பாக்கத்தான போறேன்…….
- அசோகமித்திரனைக் கொண்டாடிய பொன்மாலைப்பொழுது
- அம்பலம் – 2
- பூமராங் இணைய இதழ்
- மொழிவது சுகம் – ஏப்ரல்1, 2017