இழக்கப் போறாய் நீ அவளை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 6 of 10 in the series 1 அக்டோபர் 2017

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
unnamed (2)

இழக்கப் போறாய் நீ அவளை !

இழக்கப் போறாய் அவளை !

இன்றிரவு நீ அவளைக் கூட்டிச் செல்லாவிடில்

தன்மனதை மாற்றிக் கொள்வாள்;

நானவளை அழைத்துச் செல்வேன்

இன்றிரவு ! மேலும்

நானவளைக் கனிவுடன்

நடத்துவேன்;

நீ அவளை இழக்கப் போறாய் !

நீ அவளை இழக்கப் போறாய் !

கண்ணியமாய் நீ அவளை நடத்தா விடில்,

திண்ணமாய் காணப் போறாய்

அவள் இழந்து போவதை !

ஏனெனில் கண்ணிய மாய் நடத்துவேன்

நானவளை !

பிறகு நீதான் தனித்துக் கிடப்பாய் !

நீ அவளை இழந்தாய் ! இன்று

நீ அவளை இழந்தாய் !

உன்னை விட்டு நானவளைப் பிரிப்பதென

முடிவுக்கு வந்து விட்டென் !

நீ படுத்தும் கொடுமைக்கு

வேறென்ன செய்வது நான் ?

*************************

Series Navigationமெக்சிக்கோவில் இரண்டு வாரத்தில் அடுத்தடுத்து நேர்ந்த இருபெரும் பூகம்பங்கள்நெய்தல்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *