வெற்றி

0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 10 in the series 1 அக்டோபர் 2017

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
vetri

”உன்னால் ஓடமுடியாது” என்கிறாய்;
”உன்னால் ஓடவே முடியாது” என்கிறாய்;
”உன்னால் அத்தனை தொலைவு ஓடமுடியாது” என்கிறாய்;
”உன்னால் அத்தனை வேகமாக ஓடவே முடியாது” என்கிறாய்;
”நீ முயலுமல்ல, நான் ஆமையுமல்ல” என்கிறாய்.
“உன் கால்கள் கால்களெனில் என்னுடையவை
சிறகுகள்” என்கிறாய்;
உன் மனத்துணிவு ஒரு கூடையெனில்
எனதோ கடற்கரைமணலளவு” என்கிறாய்…….
உன் என்னிடையேயான
தன்மை முன்னிலை மயக்கத்தை எண்ணியபடி
அன்போ வன்மமோ அற்றுச் சொன்னேன்:
என்னை நீ வெல்லவே யியலாது _
ஏனெனில் நான் பந்தயத்தில் இல்லவே யில்லை.

Series Navigationசிறகு விரிந்தது – சாந்தி மாரியப்பனின் கவிதைத் தொகுப்பு – ஒரு பார்வைஏன் இந்த நூல்? மனக்குருவி – வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017…
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *