வெளியேற டிக்கட் வாங்கி விட்டாள் !

This entry is part 5 of 5 in the series 8 அக்டோபர் 2017

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++

 

கவலைப் படுறேன் நானின்று

காதலி என்னைப் பித்தனாக்கி விட்டாள் !

வெளியேறப் போகிறாள் !

டிக்கட் வாங்கி விட்டாள் !

அவள் வெளியேறப் போகும் டிக்கட் !

கவலைப் படவில்லை அவள் !

என்னோடு வாழ்வது அவளுக்கு

இன்னல் கொடுக்குதாம் !

அடைபட்டுக் கிடக்கும் அவளுக்கு

விடுதலை இல்லையாம்,

நானவளைச் சுற்றி நின்றால் !

டிக்கட் எடுத்து விட்டாள்,

என்னிட மிருந்து வெளியேற !

எனக்குப் புரிய வில்லை

ஏனவள் பறக்கப் போறாள் என்று !

விடைபெறும் முன்பவள்

சிந்திக்க வேண்டும் இருமுறை !

நியாயமாய்த் தெரிய வில்லை எனக்கு !

கவலைப் படுவது நான் !

கவலைப் படவில்லை அவள் !

பித்தனாய் ஆக்கி விட்டாள் என்னை !

 

++++++++++++++++

Series Navigationவிவாகரத்து?
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *