உன்னைக் காதலிப்பது சிரமம் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 5 of 11 in the series 15 அக்டோபர் 2017

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++

மெல்ல நீயென் அருகே சென்றால்

புல்லரிக்கும் எனக்கு ! நீ

பெருமூச்சு விட்டால்,

உட்புறம் காய்ந்து போகுது !

பட்டாம் பூச்சி போல், நெஞ்சு எனக்குப்

பட படக்குது !

நாணப் படுவது ஏன் நான், நீ அருகில்

காணப் படும் போது ?

காரணம் அதற்குக் காதலே !

நானிப்படி

மாறிப் போனது ஏனோ ?

காதலால் தான் !

கடினமாய் உள்ள தெனக்கு

காதலிப்ப துன்னை !

ஒவ்வோர் இரவிலும் விடாது

நீயும் நானும்

வாய்ப் போர் புரிதல் முறையா ?

ஆயினும்

உன்னை நான் தரிசித்த போது

ஒளி வீசிடும் இரவில்,

உன்னதப் பேரொளி !

பெண்ணே !

இழப்பை நிரப்ப வேண்டியது

என் கடமை யன்றோ ?

நேர்வ தெல்லாம் காதலால் !

ஆயினும்

பாரமாய் உள்ள தெனக்கு

காதலிப்ப துன்னை !

ஆமாம்

பாரமாய் உள்ளது !

++++++++++++++

Series Navigation2020 ஆண்டில் ஈரோப்பிய விண்சுற்றி, தளவுளவி செவ்வாய்க் கோளுக்குத் தூக்கிச் செல்லப் போகும் ரஷ்ய ராக்கெட்.”இயற்கையில் தோயும் வானம் பாடி” [கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தியின் “வனம் உலாவும் வானம்பாடி தொகுப்பை முன்வைத்து]
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *