This entry is part 6 of 15 in the series 5 நவம்பர் 2017

ஆதியோகி

இடைவிடாது கொட்டுகிறது அடை மழை.

‘விளைச்சலுக்கு குறைச்சலிருக்காது’ என்ற
மகிழ்ச்சியில் விவசாயிகள்.

ஏரிகளும் நீர்நிலைகளும் நிரம்பி,
நிலத்தடி நீர் கணிசமாய் உயர்ந்து

குடிநீர் விநியோகத்தில் இனி

குறையிருக்காது என்ற

மகிழ்ச்சியில் அரசும் பொதுஜனமும்.

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பில்

குதூகலமாய் குழந்தைகள்.

“இரவில் எங்கே ஒதுங்குவது” என்று

நடுங்கும் குளிரில்

நனைந்த ஆடைகளோடு நிற்கும்

இந்த நடைபாதைவாசிகளின்

கவலை குறித்துக் கவலை கொள்ளத்தான்

யாருமில்லை..பாவம் ..!

 

 –  ஆதியோகி

Series Navigation‘ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்) யின் 2 கவிதைகள்சனிக்கோளின் முதல் வளையம் அரணுக்குள் அடைபடுவது, அதன் ஏழு துணைக்கோளின் சுற்று ஒருங்கிணைப்பால்.