அன்புள்ள திண்ணை வாசகர்களே !
எனது புதிய நூல் “பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” முதல் தொகுப்பு இப்போது தாரிணி பதிப்பக வெளியீடாக அதிபர் திரு வையவன் வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரம்மாண்டமான, மகத்தான, மர்மமான, பெரும் புதிரான நமது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ? எப்படித் துவங்கியது ? அது எத்தனை பெரியது ? பிரபஞ்சத் தோற்றத்துக்கு முன்பு எதுவும் இருந்ததா ? எப்போது தோன்றியது பிரபஞ்சம் ? எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது ? காலம் எப்போது ஆரம்பித்தது ? காலக் கடிகாரத்தின் வயதென்ன ? சூரியனின் வயதென்ன ? பூமியின் வயதென்ன ? நிலவு எப்போது, எப்படித் தோன்றியது ? கோடான கோடி விண்மீன்கள் கொண்ட காலக்ஸி என்னும் ஒளிமந்தைகள் எப்படி உருவாயின ? நமது சூரிய மண்டலத்தின் கோள்கள் ஒன்பதா அல்லது பத்தா ?
பிரபஞ்சம் எதிலிருந்து, எப்படி உருவானது என்னும் கேள்விக்கு விஞ்ஞானிகள் இன்னும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடையைக் கூற முடியவில்லை என்பது என் கருத்து. படைப்பா அல்லது பரிணாமமா ? திட்டமிட்ட படைப்பா ? அல்லது தாறுமாறாய் உண்டான சுயத் தோற்றமா ? டார்வின் எழுதிய பரிணாமக் கோட்பாடு உயிரினத் தோற்றத்தையோ அதன் விருத்தியையோ, மாற்றத்தையோ ஆரம்பம் முதல் முழுமையாக விளக்கவில்லை. டார்வின் விஞ்ஞானம் உயிர் என்பது என்ன வென்று எங்கும் கூற வில்லை. உயிரற்ற வெற்றுக் கூடுகளைப் பற்றியும் அவற்றின் வளர்ச்சி, விருத்தியைப் பற்றியும் அவரது பரிணாமம் சிறப்பாக விளக்குகிறது.
பிரபஞ்சம் தானாய்த் தோன்றி மாறி வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறினாலும், கடவுள் படைத்தது என்று ஆன்மீக மதவாதிகள் கூறினாலும் இரண்டு கோட்பாடுகளும் ஒன்றுதான். விஞ்ஞானிகள் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று விளக்கி, இதுவரை எழுதிய யூகிப்புக் கோட்பாடுகள் எல்லாம், நாளுக்கு நாள் மாறி வருகின்றன. பிரபஞ்சம் எப்படி இறுதியில் முடிவாகப் போகிறது என்பதும் யூகிப்புக் கோட்பாடாகவே இருக்கிறது. பிரபஞ்சத்தின் பல புதிர்களில் ஒரு புதிரை விடுவிக்கப் போனால் ஒன்பது புதிர்கள் முளைக்கின்றன.
இப்புதிர்களுக்கு எனது கட்டுரைகளில் விடை பூரணமாகக் கிடைக்கலாம். அரைகுறையாகக் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். வானியல் விஞ்ஞானம் வளர்ச்சி அடையும் ஒரு விஞ்ஞானத் துறை. பெருவாரியான புதிர்களுக்கு விடை கிடைக்க இன்னும் நெடுங்காலம் ஆகலாம். புதிய கருவிகள் படைக்கப் பட்டு, கண்டுபிடிப்புகளும் உண்டாகி முன்பு மெய்யாகத் தோன்றியவைப் பின்னால் பொய்யாக நிரூபிக்கப் படலாம். குறிப்பாக இப்போது விண்வெளியைச் சுற்றிவரும் ஹப்பிள் தொலைநோக்கி பல அரிய விண்வெளிக் காட்சிகளைத் தொடர்ந்து ஆராயத் தந்திருக்கிறது.
எனது அண்டவெளி நிகழ்ச்சி விஞ்ஞானக் கட்டுரைகள் 2002 முதல் 2017 வரை திண்ணை.காம், வல்லமை.காம் வலையிதழ்களில் வெளிவந்தவை. திண்ணை.காம் வலை அதிபர்கள் ராஜாராம், துக்கராம், வல்லமை நிர்வாகிகள் அண்ணாகண்ணன், பவளசங்கரி ஆகியோருக்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். அடுத்து பிரபஞ்ச மர்ம நூல் முதற்தொகுப்புக்கு மதிப்புரை எழுதிய விஞ்ஞானிகள், வ. வண்ணன், மகாதேவன், நா. கணேசன், ஆகியோருக்கு என் நன்றியைக் கூறிக் கொள்கிறேன். இந்த விஞ்ஞான நூலைப் பேரார்வத்துடன் சிறப்பாக வெளியிட்ட நண்பர் வையவனுக்கு எனதினிய நன்றி உரியதாகுக.
சி. ஜெயபாரதன்,
கின்கார்டின், அண்டாரியோ
கனடா
நூலின் பக்கங்கள் : 428
விலை : ரூ 450.
கிடைக்குமிடம் :
Dharini Pathippagam,
32/79 Gandhi Nagar,
4th Main Road
Adyar, Chennai : 600020
Mobile : 99401 2034
- திரைவானில் நானோர் தாரகை !
- ” மணிவிழா நாயகர் திருநந்தகுமார் “
- குடும்பவிளக்கு
- ஐங்குறுநூற்றில் திருமண நிகழ்வுகள்
- மருத்துவக் கட்டுரை – சிறுநீர் கிருமித் தொற்று
- நமக்கு மட்டுமான ரகசியங்கள்…..
- கடிதம்
- பிரபஞ்சம் திட்டமிட்ட படைப்பா ? தாறுமாறான சுயத்தோற்றமா ?
- மீண்டும் நான்
- “பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” முதல் தொகுப்பு
- தொடுவானம் 196. மனிதாபிமான தொழுநோய் சேவை
- உங்கள் எண் என்ன? – தமிழில் முதல் கணிதப்புனைவு நாவல்
- வானத்தில் ஒரு…
- மொழிவது சுகம் 2017 நவம்பர் 18 : ரஷ்யப் புரட்சி ஒரு நூற்றாண்டு