காத்திரு ! வருகிறேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 14 of 19 in the series 31 டிசம்பர் 2017

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++

நீண்ட காலம் கடந்த பிறகு,

மீண்டும் இல்லம் நோக்கி வருகிறேன் !

தற்போது நான்

வெகு தூரம் போய் விட்டேன் !

தனிமையில்

தவிக்கிறேன் எப்படி தெரியுமா ?

காத்திருப்பாய் எனக்கு

மறுபடி உன்னருகே வரும்வரை ;

மறப்போம் நாம்

கண்ணீர் விட்டழுத காட்சியை !

காத்திருக் காதே,

உன்னிதயம் உடைந்தி ருந்தால் !

என்னை விட்டுப்

போய்விடு !

உறுதியாய் இதயம் இருந்தால்

பொறுத்திரு !

தாமதிக்க மாட்டேன் !

காத்திரு நான்

திரும்பி உன் பக்கம் வரும்வரை !

மறப்போம் நாம்

கண்ணீர் விட்டழுத காட்சியை !

உணர்கிறேன் நான்,

உனக்கும் தெரிய வேண்டும்

நல்லவனாய்

நானிருந்தேன் கூடிய வரை;

நீயும் உணர்ந்தால்

நானும் உன்னை நம்பிடுவேன்,

காத்திருப் பாய் நீ யெனக்கென

களிப்படைவேன்;

நீண்ட காலம் கடந்து, இன்று

மீண்டும் இல்லம் நோக்கி வருகிறேன் !

வெகு தூரம் போய் விட்டேன் !

தனிமையில்

தவிக்கிறேன் எப்படி தெரியுமா ?

+++++++++++++++

Series Navigationதொடுவானம் 202. மருத்துவமனையில் முதல் பிரச்னைகவிஞர் நீலமணியின் குறுங்காவியம் ! — ஒரு பார்வை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *