எஸ். ஆல்பர்ட்
கீற்றுக்கூரை பிய்த்துக் கொண்டு ஓன்று வேறாக
காற்றிலசைய , கரிய குழலாட, அதுகண்டு
வெறிநாய் ஒரு நொடியில் தூர்ந்த ஒலியாக
நிசப்தம் குலைய , தொடர்ந்தன ஓன்று பலவாக
பற்றிப் படரும் தீயாக வேலையற்ற நாய்கள்,
விழித்திருக்கும் வீட்டு நாய்கள், உறங்கமுடியாச் சொறிநாய்கள்,
வீட்டுக்கு வீடு, தெருவுக்குத் தெரு பேதம் கெட்டுச்
சேர்ந்து குரைக்கக் குரைக்க, சத்த பிரம்மமாக
ஊர் நாசமானது. இரவு கெட்டது.
மஞ்ச மாளிகை மஞ்சமும் நாற்காலியும் ஆளின்றி அதிர்ந்தன.
“சனியன்கள் ” தூக்கம் “போச்”சென்று, கழன்று போன
மானங் கைப்பற்றி, பெண்டுகள் பின்னடுங்க
கதவுப் பக்கம் தவிர்த்து , ஜன்னல் வழியாக
உற்றுப் பார்க்க இருட்டு, தெருவிளக்கு எங்கே?
ஊராட்சியாம் ஊராட்சி, வேலை என்ன வேலை ?
திருட்டுப் பயல்கள் நடமாட்டமோ ? எமனோ ?
எருமைக் கடா ! பாசம் கையில் கட்டிக் கொண்டு போக !
பலவீனம் பயமானது …..நரக ஓலம் ….தர்மராஜா !
நாயக்கண்ணுக்குத்த் தானாம், நமக்குக் கிடையாதாம்
அத்தனையுமா ஓன்று சேர்ந்து கொல்லும்?
———–
- தொடுவானம் 218. தங்கைக்காக
- கூறுகெட்ட நாய்கள்
- உயிரைக் கழுவ
- பாரதி யார்? (நாடகம் குறித்து சில கருத்துகள்)
- பையன் அமெரிக்கன்
- குப்பையிலா வீழ்ச்சி
- மொழிவது சுகம் : எப்ரல் 2 – 2018
- திசைகாட்டி
- இந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர்
- வள்ளல்
- விழி
- உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 2 – தி இமிடேசன் கேம்
- மன்னித்துக்கொள் மானுடமே..
- அப்பா அடிச்சா அது தர்ம அடி
- சாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் – மே மாத திரையிடல் (திரையிடல் 3)
- மருத்துவக் கட்டுரை வாய்ப் புண்கள்
- நாசாவின் எதிர்கால நிலவுக் குடியிருப்புக் கூடம் 2023 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும்
- பியூர் சினிமாவில் – உலக புத்தக நாள் – கொண்டாட்டம்
- மாமனார் நட்ட மாதுளை
- உனக்குள்ளே !உனக்கு வெளியே !
- சுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து
- இருபது தோளினானும் இரண்டு சிறகினானும்