பியூர் சினிமாவில் – உலக புத்தக நாள் – கொண்டாட்டம்

author
0 minutes, 12 seconds Read
This entry is part 18 of 22 in the series 22 ஏப்ரல் 2018

 

22-04-2018 & 23-04-2018 (ஞாயிறு மற்றும் திங்கள்)
 
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண் 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600026. விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கே அருகில்.
நண்பர்களே ஏப்ரல் 23 உலக புத்தக நாளாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பியூர் சினிமாவில் ஞாயிறு மற்றும் திங்கள் இரண்டு நாட்களும் பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகள் நடக்கவிருக்கிறது. அதில் ஒன்று நண்பர்கள் தங்களிடம் இருக்கிற வாசித்து முடித்த புத்தகங்களை பியூர் சினிமாவில் இருக்கும் பெட்டியில் போட்டுவிட்டு இன்னொரு பெட்டியில் இருக்கும் வேறு சில புத்தகங்களை எடுத்துக்கொள்ளலாம். ஞாயிறு மற்றும் திங்கள் இரண்டு நாட்களும் காலை பத்து மணி முதல் இரவு பத்து மணி வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இலக்கியம், அரசியல், காமிக்ஸ், கலை என எந்த பிரிவை சேர்ந்த புத்தகமாகவும் இருக்கலாம்.
இரண்டாவது கொண்டாட்டம்:
ஞாயிறு முழு நாள் நிகழ்வாக உலகின் மிக சிறந்த நாவல்களில் இருந்து சினிமாவாக மாறிய படங்கள் திரையிடப்படுகிறது.
ஞாயிறு திரைப்படங்கள்:
 
10 AM – The Grapes of Wrath – இயக்கம்: ஜான் போர்ட் (ஜான் ஸ்டெயின்பெக் எழுதிய இந்த நாவல் புலிட்சர் பரிசு பெற்றது) 
 
12.20 PM – 1 PM – உணவு இடைவேளை
 
1 PM – Reader – இயக்கம்: Stephen Daldry – நாவல் ஆசிரியர்: Bernhard Schlink (புத்தக ஆர்வலர்கள், சினிமா ஆர்வலர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய மிக முக்கியமான படம்)
 
3:20 PM – Anna Karenina – இயக்கம்: Joe Wrigh (லியோ டால்ஸ்டாய் எழுதிய இதே பெயரிலான நாவல் உலகின் அதிசிறந்த நாவல்களில் ஒன்று. இந்த நாவலை வாசிக்காதவர்கள் கூட இந்த படத்தை பார்க்கலாம். படம் இன்னொரு நாவல்)
 
6 PM – பரிசுப்போட்டி – வாசகர்கள், பார்வையாளர்கள் தாங்கள் படித்த மிக முக்கியமான புத்தகம் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளலாம். சிறந்த கருத்துப்பகிர்விற்க்கு இரண்டாயிரம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும். இதனை பணமாகவோ அல்லது புத்தகமாகவோ பெறலாம். 
எந்த பிரபலங்களும் இல்லாத இது போன்ற நிகழ்வுகளை தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நடத்தி வருகிறது. பிரபலங்கள் இல்லாமல் போனாலும், நடக்கும் நிகழ்வுகளே முக்கியம் என்பதை ஒரு செயல்பாடாக தொடர்ந்து செய்து வருகிறோம். எனவே திரளாக நண்பர்கள் பங்கேற்று நாங்கள் பிரபலங்களுக்காக வருவதில்லை. நடக்கும் நிகழ்வுகளே முக்கியம் என்பதை உணர்த்த வேண்டும்.
திங்கள்:
திங்கள் முழுக்க உங்களிடம் இருக்கும் நீங்கள் வாசித்த புத்தகங்களை கொடுத்துவிட்டு, அதற்கு மாற்றாக வேறு புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். இலக்கியம், அரசியல், காமிக்ஸ், கலை என எந்த பிரிவை சேர்ந்த புத்தகமாகவும் இருக்கலாம்.
இரவு 7 மணிக்கு: Doctor Zhivago – இயக்கம்: டேவிட் லீன் (Boris Pasternak எழுதிய நாவலிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட படம். மிக முக்கியமான படம். போர் பின்னணியிலான இந்த திரைப்படம் அவசியம் பார்க்க வேண்டிய படம்)
மிக முக்கிய குறிப்பு: இரண்டு நாட்களும் பியூர் சினிமாவில் புத்தகங்கள் வாங்கலாம். ஆனால் தள்ளுபடி கிடையாது. உலக புத்தக நாள் என்பது புத்தக வாசிப்பையும், எழுத்தையும் கொண்டாடுவது மட்டுமின்றி, புத்தகங்களை பதிப்பிக்கும் பதிப்பாளர்களை, விற்கும் விற்பனையாளர்களையம் கொண்டாடுவது. தமிழ்நாட்டில் புத்தகங்கள் பதிப்பிப்பதும், விற்பனை செய்வதும் மிக பெரிய களப்பணி. இந்த களப்பணியை மேற்கொண்டிருக்கும் நண்பர்களை இந்த உலக புத்தக நாளன்று கொண்டாடுங்கள். புத்தகங்களை தள்ளுபடி விலையில் கேட்காதீர்கள். 
Series Navigationநாசாவின் எதிர்கால நிலவுக் குடியிருப்புக் கூடம் 2023 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும்மாமனார் நட்ட மாதுளை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *